Friday 15 June 2018

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

புலிகளிடம் சிக்கிய ஜோர்டான் கப்பல்

14.12.2006 இல் அந்த கப்பல் இலங்கை கடல்வழியாக செல்லும் போது 6 fiberglass மற்றும் Stealth boatகள் வழிமறித்து அழைத்துச் செல்லப்பட்டு முல்லைத்தீவில் நங்கூரம் பாய்ச்சப்பட்டு நிறுத்தப்படுகிறது.

கப்பலில் 25 பேர் இருந்தனர்.

கப்பலில் இருந்த 14000 metric ton அரிசியும் கொள்ளை அடிக்கப்பட்டு, அதில் இருந்த 25 மாலுமிகளை red crossடம் ஓப்படைத்துவிட்டு அந்த கப்பலை strip செய்து அந்த தங்கள் பயிற்சி கூடமாக மாற்றினர் அந்த கப்பலை கைப்பற்றியவர்கள்.

கைப்பற்றியவர்கள்: விடுதலைப்புலிகள்

கப்பலின் பெயர்: MV Farah III

கப்பல் register செய்யப்பட்ட நாடு : Jordan (இது மட்டும் தான் சீமான் தவறாக சொன்னது)

(தகவலுக்கு நன்றி: Vijay Kumar Thangappan)

மேற்கண்ட தகவல் அக்கப்பலின் கேப்டன் அப்துல்லா பின்னாட்களில் கூறியது ஆகும்.

ஆனால் புலிகள் தரப்போ பழுதாகி கரை ஒதுங்கிய கப்பலை காப்பாற்றி ஆட்களை செஞ்சிலுவை சங்கம் (Red cross) வசம் ஒப்படைத்துவிட்டு ஓடமுடியாத அளவு சேதமான கப்பலின் கூடை தாம் பயிற்சிக் கூடமாக வைத்துக்கொண்டதாகவும் கூறியுள்ளனர்.

புலிகள் ஆண்ட கடல் வழியே எத்தனையோ கப்பல்கள் போயுள்ளன.
எதையும் அவர்கள் கொள்ளையடித்ததில்லை.

அப்படியே கப்பலை நல்லநிலையில் புலிகள் கைப்பற்றி இருந்தாலும் அதை தமது கடற்படையுடன் சேர்த்து கப்பலாகவே புலிகள் பயன்படுத்தியிருக்கலாம்.
அதை உரித்து கூடாக ஆக்கவேண்டிய அவசியமில்லை.

புலிகள் உண்மையான கொள்ளையர்களாக இருந்திருந்தால் மாலுமிகளை உயிருடன் விட்டுருக்கவேண்டிய அவசியம்?!

No comments:

Post a Comment