பேரறிவாளன் செய்த தவறு
இதே பேரறிவாளன் ராஜீவ் காந்தியை உண்மையிலேயே கொலைசெய்தவர் என்றால்,
சிறையில் சகல உரிமைகளும் சலுகைகளும் பெற்று பத்தே ஆண்டுகளுக்குள் வெளிவந்திருப்பார்.
வேண்டுமானால் பிற அரசியல் கொலைகாரர்கள் அடைந்த தண்டனையை திருப்பிப் பாருங்கள்.
ஆனால், ஜனநாயக வழியில் போராடுவோர் மீதும் ஏதுமறியா அப்பாவிகள் மீதும் வன்முறையும், பொய்வழக்கும், குண்டர் சட்டமும், தேசத்துரோக வழக்கும், அரசுக்கெதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.
சிறையில் அடியும் உதையும் பல்வேறு அவமானங்களும் சட்ட சிக்கலும் வந்து வாய்க்கும்.
வெளியே வந்தால் மாவோயிஸ்ட், நக்சலைட், தீவிரவாதி, ரவுடி என்ற பட்டத்துடனே பல்வேறு தொந்தரவுகளுடன் வாழவும் வேண்டும்.
ஒரு ஆயுதப் போராளிக்கு கிடைக்கும் சலுகையும் உதவியும் அங்கீகாரமும் ஒரு ஜனநாயகப் போராளிக்கும் கிடைக்காது.
ஏதுமறியா அப்பாவிகளுக்கோ ஏறெடுத்துப் பார்க்க ஆளிருக்காது.
ஆயுதப் போராளிக்கோ ஊடகங்களும், மனித உரிமை அமைப்புகளும், வளர்ந்துவரும் கட்சிகளும், இளைஞர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.
வேண்டுமானால் பிடிபட்ட அல்லது சரசடைந்த ஆயுதப் போராளிகள் வரலாற்றினைப் புரட்டிப் பாருங்கள்.
இதுதான் நடைமுறை உண்மை!
ஆயுதம் தூக்கியவர்களை சுட்டுக் கொல்வார்கள் என்றால் அறவழி போராட்டம் நடத்துபவர்களும் அதற்கு விதிவிலக்கில்லை.
ஆக எது சிறந்த வழி என்பதை முடிவு செய்யுங்கள்.
unmaidhaan
ReplyDelete