Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts
Showing posts with label ஸ்டெர்லைட். Show all posts

Tuesday, 21 May 2024

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

  இலங்கையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழர் தூத்துக்குடியில் குடியேறிய பகுதி மில்லர்புரம்.
 இந்தப் பெயர் முதல் கரும்புலி கேப்டன் மில்லர் அவர்களின் பெயர் ஆகும்.
 இதில் சிலோன் காலனி எனும் பகுதி இப்போதும் முழுக்க ஈழத்தமிழர் வசிப்பது.
 இப்பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா, இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்கிற மகன் உண்டு. ஜெகதீஸ்வரன் மனநலம் குன்றியவர். இதற்கு காரணம் நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சூழலியல் பாதிப்பு. தூத்துக்குடி மக்கள் படும் துயரம் கண்டு மனம் உருகிய கந்தையா ஸ்டெர்லைட்டை மூடியே தீருவது என்று சபதம் எடுக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தார் சாதாரண கூலித் தொழிலாளியான கந்தையா.
100 நாட்கள் அமைதியாகப் போராடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு.
கந்தையா முன்னனியில் நின்ற போராளி அதனால் முதல் குண்டு அவர் நெஞ்சில் பாய்ந்தது. 
 அன்று இந்தி எதிர்ப்பில் முதல் குரல் ஈழத்தடிகள் எனும் ஈழத் தமிழர்.
தற்போது வரை தொடர்கிறது தமிழக-ஈழ போராட்ட கூட்டணி. 
 

Wednesday, 28 November 2018

விடைதெரியாத கேள்விகள்

விடைதெரியாத கேள்விகள்

தீர்ப்பு வரும் முன்பே அதாவது ஆலை மூடப்பட்ட அடுத்தநாளே "விரைவில் ஆலை திறக்கப்படும்" என்று அனில் அகர்வால் உறுதியாகக் கூறியது எப்படி?

ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவில் ஒரு தமிழக உறுப்பினர் கூட இருக்கக்கூடாது என்று கேட்டு வாங்கிய அனில் அகர்வால் தரப்பு
சொந்த சாதிக்கார நீதிபதி தலைமையில் குழு அமைத்தது எப்படி?

"தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்" தடை விதித்தால் அதை நீக்க "தேசிய பசுமை தீர்ப்பாணையத்திற்கு" அதிகாரம் உள்ளது.
ஆனால் ஆலையை மூடியது தமிழக "அரசு".
இதை ஆய்வு செய்து "ஆலையை மூடியது தவறு" என்று கூட தே.ப.தீ. (NGT) க்கு என்ன அதிகாரம் உள்ளது?

துறை என்பதைத் தாண்டி அரசு என்கிற அதிகார மட்டத்திற்கு வந்துவிட்ட இந்த வழக்கை மத்திய மாநில அரசுகளைத் தாண்டிய அதிகாரமான உச்ச நீதிமன்றம்தான் தன்னிச்சையாக ஆய்வு செய்யவேண்டும்.
ஆனால் அப்படி நடக்கவில்லையே?!

என்றால் தமிழக "அரசு" என்பது மத்திய அரசின் ஒரு "துறை"யை விட கீழானதா?!

பல ஆதாரங்கள் இருந்தும் போராட்டத்தில் பலர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்துவரும் சிபிஐ  இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லையே ஏன்?!

சினிமாவில் வருவது போல போலீஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள், சிபிஐ என அனைத்துமே பணக்கார முதலாளிகளின் சட்டைப்பையில் உள்ளது உண்மைதானோ என்று ஸ்டெர்லைட் விவகாரத்தைப் பார்க்கும்போது தோன்றுகிறதே?!

என்றால் முப்பது ஆண்டுகளாக ஜனநாயக வழியிலும் சட்டரீதியாகவும் தூத்துக்குடி மக்கள் நடத்தும் போராட்டம் அனைத்தும் வீண்தானா?!

இத்தனை உயிரிழப்புகள் வீண்தானா?!

இதற்கு பேசாமல் தூத்துக்குடி இளைஞர்கள் ஆலைக்கு பாம் வைத்து தகர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறதே?!

என்றால் இங்கே ஜனநாயகம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தானா?

Friday, 8 June 2018

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

உதவாத ஸ்டெர்லைட்டின் உற்பத்தி

* ஸ்டெர்லைட் ஆலையின் தாமிர உற்பத்தியில் ஏறத்தாழ 80% சீனாவிற்கு செல்கிறது.

* மீதி 20% சதவீதத்தில் எந்த நாடுகளிலிருந்து தாமிரத் தாது எடுக்கப்பட்டதோ (பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் ஜாம்பியா) அதே நாட்டிற்கு அனுப்பபட்டு அங்கே வரிவிலக்கு பெறப்படுகிறது.

* மிச்சமீதி தாமிரம் தூத்துக்குடியின் தாமிரத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடிவதில்லை.
தேறாத கழிவு தாமிரமே உள்ளூர் சந்தைக்கு வருகிறது.
இந்த உள்ளூர் வணிகமும் ஸ்டெர்லைட் பெயரால் நடக்காமல் கள்ளச்சந்தை மூலம் நடக்கிறது.

* இதுபோக ஆனோடு வெளிநாடுகளுக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ஆனோடு வெறும் ஆனோடு கிடையாது; தங்கம், பிளாட்டினம், பல்லேடியம் போன்றவை திருட்டுத்தனமாக கலக்கப்பட்டது.
அதாவது ஆனோடில் மறைத்து கள்ளக்கடத்தல் செய்கிறார்கள்.

ஸ்டெர்லைட் உற்பத்தி நாட்டுக்கு தேவை என்போர் முதலில் அவர்கள் கட்டாமல் பாக்கிவைத்துள்ள 750கோடி சுங்கவரியை நாட்டுக்கு வாங்கி கொடுத்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மின்சாரம் வராது என்போர் அவர்கள் இதுவரை பாக்கி வைத்திருக்கும் மின்சாரக் கட்டணமான 10கோடி ரூபாயை வாங்கித் தந்துவிட்டு பேசலாம்.

ஸ்டெர்லைட் காப்பர் கம்பி இல்லாமல் மோட்டார் இயங்காது அதனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாது என்போர்,
ஆயிரம் லிட்டர் தண்ணீரை வெறும் 15ரூபாய்க்கு பெறும் ஸ்டெர்லைட் இதுவரை தண்ணீர் கட்டணமே கட்டியதில்லை என்பதையும் அந்த பாக்கித் தொகை 2011லேயே 82கோடி ரூபாய் என்பதையும் அறிந்து பேசவும்.

சான்று நூல்: ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்

Monday, 4 June 2018

ஸ்டெர்லைட் தரும் வேலைவாய்ப்பு

ஸ்டெர்லைட் தரும் வேலைவாய்ப்பு?

ஆலையின் ஆண்டுவருமானம் ஏறத்தாழ 20,000 கோடி
(கணக்கில் காண்பித்த வருமானம் உண்மை இதைவிட பலமடங்கு அதிகம்)

ஊழியர் மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர் ஊதியச் செலவு ஆண்டுக்கு ஏறத்தாழ 100 கோடி.
(உண்மை இதைவிட பலமடங்கு குறைவு)

அதாவது ஒரு ஸ்டெர்லைட் தொழிலாளி ஒரு ரூபாய் கூலி வாங்கிவிட்டு 200 ரூபாய் சம்பாதித்து கொடுக்கிறான்.

Saturday, 2 June 2018

ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை (மின்னூல் பக்கங்கள்)


ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை (மின்னூல் பக்கங்கள்) 

1995 ல் பூவுலகின் நண்பர்கள் ஸ்டெர்லைட் குறித்த முதல் நூலை வெளியிட்டது.."ஸ்டெர்லைட் தொழிற்சாலையும் அதனால் வரவிருக்கும் அபாயங்களும்,," இதனை எழுதியவர் வசீகரன்.

2000த்தில் “விரட்டப்பட வேண்டிய ஸ்டெர்லைட்” நூலை எதிர் பதிப்பகத்தோடு இணைந்து வெளியிட்டோம்...

பின்பு தோழர் தமிழ் மாந்தன் எழுதிய் "ஸ்டெர்லைட் வாழ்க மக்கள் ஒழிக" என்ற நூலை 2013ல் வெளியிட்டோம்..

இப்போது முழுமையான புத்தகமாக 2018ல் இலவசமாக வெளியிட்டுள்ளோம்,,,தமிழ் மாந்தன், பிரபாகர் கப்பிக்குளம், கஜேந்திரன் ஆகியோர் எழுதிய விரிவான கட்டுரைகளோடு
தூத்துக்குடி மக்களில் எண்ணற்ற தியாகத்தின் வரலாற்றை..
ஒரு ஆலையை மூட எவ்வளவு நிண்ட நெடிய காலம் போராடி வந்துள்ளார்கள் என்பதை அறிய இப்புத்தகத்தை ஒருமுறை வாசியுங்கள்....

பூவுலகின் நண்பர்களின் ஸ்டெர்லைட்டின் சூழலியல் படுகொலை நூல் -விலையில்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம்.�
நூலின் பெயர்: ஸ்டெரெலைட்டின் சூழலியல் படுகொலை
எழுதியவர்கள்: பி.மி.தமிழ்மாந்தன்
கப்பிகுளம் ஜெ.பிரபாகர்
மற்றும் வெ.கஜேந்திரன்

இந்தக் கட்டுரையை முழுவதும் படிக்க, இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்:
http://poovulagu.in/?p=1861



கொண்டுவந்த ஜெயலலிதா!


போராட்டங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.
பாத்திமா பாபு கைது போராட்டத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றது.


தூத்துக்குடி புற்றுநோயில் முதலிடம்.
தொழிலாளர் ஊதியம் போன்று 19,000 மடங்கு லாபம்.


 சுங்க வரி 750கோடி மோசடி.
10கோடி மின்சாரக் கட்டணம் பாக்கி.




மணல் கொள்ளை.
ஓடை நீர் மறிப்பு.
அணைக்குள்ளேயே குழாய் போட்டு உறிஞ்சல்.

நிலத்தடி நீர் கொள்ளை.

நீர் மற்றும் காற்றை விசமாக்குதல்.


 அடிக்கல் நாட்டிய ஜெயலலிதா
ஆரம்பித்து வைத்த கருணாநிதி


பாமக, புதிய தமிழகம் வாய்ச்சவடால்.

ம.தி.மு.க கடைசி நேரத்தில் ஒட்டிக்கொள்ளல்.


 1995 ல் முதல் நூல்.
ஆரம்பகால போராளிகள்.


பற்றி எரிந்த போராட்டம்.
கப்பலை விரட்டியடித்த மீனவர்கள்.


துறைமுக முற்றுகை.
முதல் தடை.
தேர்தல்.

சாதிக் கலவரம்.


ஸ்டெர்லைட் தந்திரம் வேலை செய்தது.
அதை முறியடித்த பசுபதி பாண்டியன்.
மீண்டும்

துறைமுக முற்றுகை.


 நடுவில் வந்தவரே வைகோ.
தடை தளர்ந்த்து.


வரி கட்டாதவனுக்கு சலுகை.
கட்டணம் கட்டாதவனுக்கு மின்சாரம்.


இப்போது மூன்றாவது தடை


 மூன்று முக்கிய விதிமீறல்கள்.



முதல் முற்றுகை நடந்தபோது...




இரண்டாவது கப்பல் முற்றுகையின்போது.. 


ஆரம்பகால போராளிகள்


காற்றில் மாசு



ஸ்டெர்லைட்டின் கூலிகளாக மாறிய செல்லப் பாண்டியன் மற்றும் கலெக்டர்




2013 ல் 71 அமைப்புகள் இணைந்து போராட்டம்


காற்று நீர் மாசு குறித்து



1 லிட்டர் தண்ணீர் பாட்டில் 15 ரூபாய்.
ஆனால் 15 ரூபாயில் 1000 லிட்டர் தண்ணீர் பெறுகிறது ஸ்டெர்லைட்.







Tuesday, 29 May 2018

ஸ்டெர்லைட் தடைகளை உடைத்த சுருக்கமான வரலாறு

ஸ்டெர்லைட் தடைகளை உடைத்த சுருக்கமான வரலாறு
>.< >.< >.< >.< >.< >.< >.< >.< >.< >.<

1998 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.

தேசிய சுற்றுச்சூழல் அமைப்பு (நீரி) தவறான ஆய்வு அறிக்கை கொடுத்து தடையை விலகவைத்தது.
--------
மீண்டும்

2010 இல் (சென்னை) உயர்நீதிமன்றம் தடைவிதித்து.

உச்சநீதிமன்றம் தடை விலக்கியது.
-------

பிறகு

2013 இல் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்தது

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தடை விலக்கியது
------

அதாவது மாநில அதிகாரம் மூட முயன்றபோதெல்லாம் மத்திய அதிகாரம் தடுத்தது.

எப்போதும் மாநில உரிமைகளை மத்தி நசுக்கியே வந்துள்ளது.

இதுதான் ஹிந்திய ஜனநாயகம்!

Monday, 28 May 2018

நவீன வெள்ளையர்கள்

நவீன வெள்ளையர்கள்

"ஸ்டெர்லைட் வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும்"
- நாகர்கோவில் சிவக்குமார்

"முடியாது!
கோடை விடுமுறை கொண்டாடிவிட்டுத்தான் விசாரிப்போம்"
- உச்சநீதிமன்றம்

தமிழக அரசு அந்த ஆலையை மூடியபோது அதை மீண்டும் திறந்துவைத்த புண்ணியவான்களே!
இந்த ரணகளத்திலயும் ஒங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதாடா?!

வெள்ளைக்காரன் நீதிபதியாக இருந்தபோதுதான் கோடை விடுமுறை போனான்.

அது அப்படியே இன்றுவரை தொடர்கிறது என்றால் நாம் சுதந்திரம் பெற்றோம் என்பது பொய்தானே?!

நாட்டு மக்கள் மீது அக்கறையில்லாத அரசும் சட்டமும் இன்றுவரை தொடர்வதாகத்தானே பொருள்?!

வேண்டும் விடுதலை!
தமிழர்நாடு தனிநாடு!

Friday, 25 May 2018

மும்பைவாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்

மும்பைவாழ் தமிழர்களே!

தமிழகத்தின் சார்பாக வேண்டுகோள்!

எண் 75, நேரு சாலையில் உள்ள அனில் அகர்வால் நிறுவனத்தின் (இந்திய) தலைமைச் செயலகத்தை முற்றையிடுங்கள்

இனம் காக்க வாருங்கள்!

Wednesday, 23 May 2018

தூத்துக்குடி மக்களுக்காக உயிர்நீத்த ஈழத்தமிழர் கந்தையா

தூத்துக்குடி சிலோன்காலணி எனும் ஈழத்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு வன்முறையில் உயிரை ஈந்தார்.

அன்னாருக்கு வீரவணக்கம்!

படம்: அவருக்கு பொதுமக்கள் வைத்துள்ள நினைவுப் பதாகை
(நன்றி: கவி அமுதன்)

தூத்துக்குடி! திருப்பியடி!

தூத்துக்குடி! திருப்பியடி!

1008 வது முறையாகச் சொல்கிறேன்.

அறவழி என்று பொட்டையாக அடிவாங்கி சாகாதீர்கள்!

திருப்பி அடியுங்கள்!

13 உயிர்கள் போய்விட்டன.
ஆனால் ஒரு போலீஸ்காரனுக்கும் சின்ன சிராய்ப்பு கூட இல்லை.

இது எத்தனை பெரிய கேவலம்!

தமிழகத்தின் பத்தாவது பெரிய நகரமான தூத்துக்குடி மாநகரின் மக்கட்தொகை மட்டுமே இரண்டரை லட்சம்!

அதில் ஓட்டுபோடும் வயது வந்தோர் ஒன்றரை லட்சம்!

இளைஞர்கள் எப்படியும் முக்கால் லட்சம் இருக்கிறார்கள்!

இதில் ஆண் இளைஞர்கள் 40,000 பேர்!

இத்தனை பெரிய பலம் கொண்ட நகரத்தை வெறும் 3000 போலீஸ் சொற்ப ஆயுதங்களைக் கொண்டு சில மணிநேரத்தில் அடக்கிவிட முடிகிறது என்றால்,

யாருக்கு அவமானம்?!

பல ஆயிரம்பேர் இருந்தீர்களே வெட்கமாக இல்லையா?!

ஏன் கையில் அரிவாள் கத்தி போன்ற ஆயுதங்கள் இல்லை?!

ஏன் குண்டுகளைத் தடுக்க கேடயம் போன்று எதுவும் இல்லை?!

ஏன் கனரக வாகனங்களை எடுத்துச் செல்லவில்லை?!

இப்போதும் கூறுகிறேன்.

நூறு உயிரைக் கொடுத்தேனும் ஒரு உயிரை எடுத்துவாருங்கள்!

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்கள் பின்னால் நிற்கவில்லை என்றால் நான் என் பெயரை கெட்டவார்த்தையாக மாற்றிக்கொள்கிறேன்.

அதை விட்டுவிட்டு நூறுநாள் குத்தவைத்து
பிறகு வெறுங்கையுடன் ஊர்வலம் போய் அடிவாங்கி செத்து
பிணத்தை காட்டி இரக்கத்தை சம்பாதித்து
சம்பந்தமே இல்லாத பிற மாவட்டத்தான் பிழைப்பை விட்டுவிட்டு போராட வருவான் என்று எதிர்பார்ப்பது மடத்தனமன்றி வேறென்ன?!

உணர்ச்சி வசப்படாமல் நடைமுறையைச் சிந்தியுங்கள்!

இனியும் அறவழி, அகிம்சை, உண்ணாவிரதம், கடையடைப்பு,  என்று தன்னக்குத்தானே தீங்கு செய்து இப்படி தாலியறுத்துக் கொள்ளாதீர்கள்!

நேரடியாக பாதிக்கப்படுவோரால் முடியாதபோதுதான் மற்றவர்கள் களத்திற்கு வருவார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தின் 18 லட்சம் மக்கட்தொகையில் உள்ள இரண்டேகால் லட்ச ஆண் இளைஞர்களும் சேர்ந்து நின்று ப்பூ என்று ஊதினால் போலீஸ் படையெல்லாம் பறந்து கடலில் போய் விழுந்துவிடாதா?!

தன் பலமறியாத தூத்துக்குடி.

Monday, 2 April 2018

தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு

உலகின் மறுமூலையில்...

தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739

Tuesday, 27 March 2018

வைகோ: போராளியும் நானே புரோக்கரும் நானே

போராளியும் நானே! புரோக்கரும் நானே! - வைகோ

மூன்று மாநிலங்கள் துரத்தியடித்த ஸ்டெர்லைட்டுக்கு கருணாநிதி அனுமதி அளித்து,
ஜெயலலிதா அடிக்கல் நாட்டியதில் இருந்தே மக்கள் தீவிரமாகப் போராடி வந்துள்ளனர்.

வழக்குரைஞர் வி.பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் அரசியல் தரகர் வைகோ பிற்பாடு வந்து செருகிக்கொண்டார்.

தமிழகத்தில் அவ்வப்போது போராட்டம் வெடிக்கும்போது தானே கலந்துகொண்டு முதல் வரிசையில் நின்று வாயாலேயே வடை சுட்டு தலைமை தாங்குவது போல காட்டிக்கொள்வார்.

ஊடகங்களும் இவரையே முன்னிலைப்படுத்தும்.

போராடும் மக்கள் சிறிது சோர்வடைந்த்தும் வைகோ பல படங்களில் வரும் யூனியன் லீடர் போல நிர்வாகத்திடம் தனியே டீல் பேசுவார்.

பிறகென்ன! கமிசன் அவருக்கும் வாக்குறுதி மக்களுக்கும் கிடைக்கும்.

இவ்வாறாக வைகோவின் மகன் வையாபுரி ஸ்டெர்லைட் நிறுவனத்தின் 2% பங்குதாரர் ஆனது அனைவருக்கும் தெரியும்.

(வைகோவின் மகன் ஒரு மாவட்டத்திற்கே புகையிலை சப்ளை செய்யும் டொபாக்கோ ஏஜன்ட் என்பதையும் பலர் அறிவீர்கள்)

மேலும் தம்பி ரவிசந்திரனின் மைத்துனன் ஜெகதீஸ் என்பவருக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கான எரிபொருள் ஏஜென்சியை வைகோ பிடித்துக் கொடுத்துள்ளார் என்பதையும் தற்போது அறிவோமாக.

ஏதோ ம.தி.மு.க மட்டும்தான் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருவதுபோல வைகோவின் எடுப்புகள் ஊடகங்களில் பரப்பிவருகின்றனர்.

அதை யாரும் நம்பவேண்டாம்.

ஸ்டெர்லைட் பிரச்சனை இழுத்துக்கொண்டே போவதற்கு வைகோதான் காரணம்.

Saturday, 24 March 2018

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

ஸ்டெர்லைட் முன்பு ஒரு லட்சம் தமிழர்கள்!

அதே நேரத்தில் லண்டனில் உள்ள அதன் முதலாளி அகர்வால் வீடு முன்பும் போராட்டம்!

ஜல்லிக்கட்டு போராட்டம் போல மீண்டும் ஒரு அதிர்ச்சி வைத்தியம்!

ட்விட்டர் மூலம் ஒருங்கிணைந்த இளைஞர்கள்!