Showing posts with label துப்பாக்கிச்சூடு. Show all posts
Showing posts with label துப்பாக்கிச்சூடு. Show all posts

Sunday, 27 October 2024

இன்னொரு அஞ்சலை

இன்னொரு அஞ்சலை

 கடலூர் அஞ்சலையம்மாள் கைக்குழந்தையுடன் சிறை சென்ற செயல் உயர்ந்தது தான். அதன் பிறகு அதற்கு பரிகாரமாக நீண்ட பதவிக் காலம் கிடைத்தது. 
 ஆனால் இவரை விடவும் ஒரு படி உயர்ந்து நிற்பவர் மொரீசியஸ் அஞ்சலை!
 ஆங்கிலேயர்களால் பல நாடுகளுக்கு தமிழர்கள் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட போது மொரீசியஸ் சென்றவர்களும் கணிசமானோர்!
 கரும்பு தோட்டங்களில் மிகவும் குறைந்த ஊதியத்தில் கசக்கி பிழியப்பட்ட இவர்கள் 1942 இல் கூலி உயர்வு கேட்டு போராடத் தொடங்கினர்.
 இந்த போராட்டம் உச்ச நிலையை அடைந்தபோது ஆங்கிலேயர் துப்பாக்கிச்சூடு நடத்தி 4 பேரைக் கொன்றனர்.
 இதில் இறந்த அஞ்சலை அப்போது கர்ப்பிணி! 
முனுசாமி என்கிற 14 வயது சிறுவனும் கொல்லப்பட்டான்!
 இவர்களின் இறுதிச் சடங்கில் 1500 பேர் கலந்துகொண்டனர். 
 வயிற்றில் குழந்தையுடன் போராட்ட களத்துக்கு வந்து முன்னணியில் நின்று தோட்டாவை நெஞ்சில் வாங்கிய அஞ்சலை பற்றியும் அறிந்துகொள்வோம்!
 
மொரீசியஸ் தமிழர்களின் மனதில் பதிந்துவிட்ட அஞ்சலைக்கு மிக நீண்டகாலம் கோரிக்கை வைத்து 2000 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிடச் செய்தனர்.
  2007 இல் மொரீசியஸ் உச்சநீதிமன்ற வளாகத்தில்  சிலை வைக்கப்பட்டு  விளையாட்டரங்கம் ஒன்றிற்கு Anjalay என்று பெயரும் வைக்கப்பட்டது!


 
 

Tuesday, 21 May 2024

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

ஸ்டெர்லைட் கொன்ற ஈழத்தமிழர்

  இலங்கையில் இந்திய அமைதிப்படையால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடிவந்த ஈழத்தமிழர் தூத்துக்குடியில் குடியேறிய பகுதி மில்லர்புரம்.
 இந்தப் பெயர் முதல் கரும்புலி கேப்டன் மில்லர் அவர்களின் பெயர் ஆகும்.
 இதில் சிலோன் காலனி எனும் பகுதி இப்போதும் முழுக்க ஈழத்தமிழர் வசிப்பது.
 இப்பகுதியைச் சேர்ந்த ஈழத்தமிழர் கந்தையா, இவரது மனைவி பெயர் செல்வமணி. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன் என்கிற மகன் உண்டு. ஜெகதீஸ்வரன் மனநலம் குன்றியவர். இதற்கு காரணம் நாசகார ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்திய சூழலியல் பாதிப்பு. தூத்துக்குடி மக்கள் படும் துயரம் கண்டு மனம் உருகிய கந்தையா ஸ்டெர்லைட்டை மூடியே தீருவது என்று சபதம் எடுக்கிறார். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தீவிரமாக பங்கெடுத்தார் சாதாரண கூலித் தொழிலாளியான கந்தையா.
100 நாட்கள் அமைதியாகப் போராடி கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்த மக்கள் மீது அநியாயமாக துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது அன்றைய எடப்பாடி பழனிச்சாமி அரசு.
கந்தையா முன்னனியில் நின்ற போராளி அதனால் முதல் குண்டு அவர் நெஞ்சில் பாய்ந்தது. 
 அன்று இந்தி எதிர்ப்பில் முதல் குரல் ஈழத்தடிகள் எனும் ஈழத் தமிழர்.
தற்போது வரை தொடர்கிறது தமிழக-ஈழ போராட்ட கூட்டணி. 
 

Friday, 21 October 2022

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

ஐத்தாவது முறையாக மீனவரைச் சுட்ட ஹிந்தியர்

 ஹிந்திய கடற்படை இதுவரை தமிழக மீனவரை ஐந்துமுறை சுட்டுள்ளனர்.
அந்த தேதிகள் வருமாறு,
02.08.2013 , 
30.03.2017, 
09.10.2017, 
13.11.2017,
21.10.2022.

 ஒவ்வொரு முறையும் இந்தி பேசச் சொல்லியோ அல்லது இந்தி புரியாததாலோ இந்த கொலைமுயற்சி நடக்கிறது.
 மத்திய அரசு ஹிந்தி திணிப்பு செய்வதும் தமிழர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் அதைத் தொடர்ந்து இவ்வாறான நிகழ்வுகளும் நடக்கின்றன.
 2013 இல் பாஜக எழுச்சி பெற்ற வேகத்திலும் 2017 இந்தி தினம் திணிப்பும் தற்போது இந்தி பயிற்றுமொழி என்கிற திணிப்பும் இத்தகைய சம்பவங்களுக்கு காரணம்.