Tuesday, 13 October 2026
மொக்க ராத்திரி
மொக்க ராத்திரி
அதாவது இந்த படத்தோட டைரக்டர் இந்த பாழாப்போன தமிழ்ச் சமூகத்துக்கு அதுலயும்
முக்கியமா திருநெல்வேலி காரங்களுக்கு சில முக்கியமான விஷயங்கள் சொல்லவரார்
அதை திருநெல்வேலி காரங்க யோசிக்கணும்னு நான் இங்க முன்மொழியுறேன்
அதாவது திருநெல்வேலியில் இருக்க எவனுக்குமே அறிவில்லையாம்மா!
எல்லாரும் ஜாதி வெறியோட இருக்கீங்களாம்மா!
பெண் அடிமைத்தனம் வேற இருக்குதாம்மா!
அடுத்தவனுக்கு கேடு செய்றதிலே குறியா இருக்கீங்களாம்மா!
இதுக்கு தீர்வு என்னன்னா ஜாதிவெறிய ஒழிக்கிறது தானாம்மா!
ஒரு ஊரே லூசு அதுல உருப்படினு காட்றது ரெண்டே பேரை!
ஜாதி தாண்டி காதலிச்ச ஹீரோவும் ஜாதி வெறி இருக்குனு தெரிஞ்சும் இக்கட்டான நிலைமையில் உதவிக்கு வர ஒரு பட்டியல் ஜாதி இளைஞனும் தான் அவங்க!
மத்த எல்லாரும் இப்பவும் தீண்டாமை பாக்குறீங்களாம்மா!
அதெல்லாம் கொஞ்சம் மாத்திருங்க!
அப்புறம் தேவை இல்லாம சண்டை போடுறத நிறுத்திடுவிங்கலாம்மா!
ஆம்பளைங்க எல்லாம் குடிகாரனா இருக்கீங்களாம்மா அத திருத்திக்கோங்க!
பொம்பளைங்க எல்லாம் புறணி பேசுறீங்களாம்மா அதையும் மாத்திக்கோங்கன்னு சொல்ல வராப்டி!
அதாவது ஹீரோ ஜாதி தாண்டி காதலிச்சதால ஊரே சேர்ந்து அந்த பொண்ணு தூக்குல தொங்குற மாதிரி பண்ணிடறாங்க!
அப்புறம் வெக்ஸான ஈரோ வெளிநாட்ல தனியா 6 வருசம் இருக்காப்டி அவரை கல்யாணம்னு சொல்லாமலேயே கூப்பிட்டு வராங்க
அப்புறம் கட்டாயப்படுத்தி கல்யாணத்துல உட்கார வைக்கிறாங்க!
இந்த பக்கம் ஹீரோயின் பொண்ணு ஒன்னு இருக்குறாங்க!
அவங்களுக்கு ஹீரோயினுக்கான எந்த ஒரு குவாலிட்டியுமே இல்லை, கலரா இருந்தா போதும்னு நெனச்சிட்டாப்டியோ?!
அவுங்க பிளாஷ்பேக் என்னன்னா அந்த புள்ள ஒரு பையன காதலிக்கறது தெரிஞ்சு அந்த பொண்ண கட்டாயப்படுத்தி அவங்க அம்மா அடிஅடினு அடிச்சு கல்யாணத்துல உட்கார வைக்கிறாங்க!
அதுவும் வாய மூடிட்டு இருக்குது!
தாலி கட்டுறதுக்கு முன்னாடி தப்பிக்க பாக்குது!
அதுவும் சொதப்ப மறுபடி வாய மூடிட்டு தாலி கட்டிட்டு அப்புறம் மொத ராத்திரி அப்ப தப்பிக்க பாக்குது!
இது லவ் பண்ண பையன் ஒரு அடிமுட்டாள்!
கல்யாணத்துக்கு முன்னாடியே வந்து கூட்டிட்டு போறதுக்கு காலைல எந்திக்க துப்பு இல்லாம குப்புறடிச்சு தூங்கிடறாப்படி!
அப்புறம் 5000 ரூபாயோட ஒரு ஓட்ட பைக்கை எடுத்துட்டு முதலிரவு முடிஞ்சாலும் பரவால்லனு பொண்ண கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ற பிளானோட வராப்படி!
வழியிலேயே பல வகையா மாட்டிட்டு முழிக்கிறாப்டி!
வழியிலயே அந்த 5000 ரூபாயும் காலியாயிடுது!
இவனை நம்பி இந்த பொண்ணு நடுராத்திரில ஊருக்கு வெளிய தனியா போகுது!
இது தெரிஞ்சு நம்ம ஹீரோ பாதுகாப்பா பின்னாடி போறாப்படி!
ஒரு கோயிலுக்கு போறாங்க அந்த எல்ல சாமி கோயில்ல லூசு புடிச்ச மாதிரி ஒரு சாமியார் இருக்காரு!
அவரு இந்த கல்யாணம் நாசமா போகணும்னு ஏற்கனவே சாபம் விட்டுட்டு இருக்காரு ஏன்னா பத்திரிக்கை வைக்கலையாம்மா!
அதுக்கப்புறம் அவர் சமூகத்துக்கு அறிவுரையா சொல்றாப்டி!
இது எதுவுமே தெரியாம கல்யாணவீட்டு ஆம்பளைங்க மொத்தமா போயி தண்ணி அடிச்சிட்டு தேவையில்லாம பேசி அடிச்சுகிட்டு கிடக்குறாங்க!
இந்த குழப்பாமான நேரத்துல முதலிரவு கட்டில் செஞ்சு எடுத்துக்கிட்டு வழிதெரியாம சுத்திட்டு இருக்க ஒருத்தன் தேவல்லாத காமெடி பண்ணிட்டு இருக்கான்!
இங்கிட்டு கல்யாணஜோடி நடுராத்திரில காணாம போனப்பிறகு பொம்பளைங்க ஆம்பளைங்க யாரும் இல்லாம உக்காந்து அழுதுட்டு இருக்காங்க!
இதுல ரெண்டு பொம்பளைக கோள் மூட்டி விட்டு வாய் சண்டையாகி அடிதடி வரை போகுது!
கடைசியா என்ன சொல்ல வராப்டின்னா தமிழ்நாட்டிலேயே இந்த டைரக்டர் மட்டும்தான் அறிவாளி மத்தவங்க எல்லாம் முட்டாள் எவனாவது ஜாதி தாண்டி யோசிக்கிறாங்கனா அவங்களும் அறிவாளி !
மேல்ஜாதிக்காரன் னு திரியறவன் எல்லாம் டம்மி பீசு!
அதனால அந்த பொண்ணுங்க பட்டியல் ஜாதி பசங்கள லுக் விடணும்!
ஏன்னா இவனுங்க போலீஸாகணும் னு முயற்சி பண்ண பெண்ணையும் நல்லா ரன்னிங் சாம்பியனா இருக்க ஒரு பெண்ணையும் நல்ல விளையாட்டுல ஆர்வம் உள்ள ஒரு பொன்னையும் பொட்ட புள்ளைக்கு எதுக்கு அதெல்லாம்னு கல்யாணம் பண்ணிவச்சு அடிமையாக்கி பாத்திரம் கழுவ விட்ருவானுகளாம்!
இப்டி அரிய பெரிய கருத்துகள் சொல்ல வராப்டி!
நானும் பாக்குறேன் இவனுகளும் ஒரு 40 வருஷமா சினிமாவுல ஜாதியை போட்டு ஒழி ஒழினு ஒழிக்கிறானுங்க அதனால ஒன்னும் நடந்த மாதிரியும் தெரியல!
அப்புறம் ஏன் அதே ரூட்ல போறாங்கன்னு மொதல்ல புரியல ஆனா இப்ப புரியுது!
இப்ப இந்த படத்த நாம விமர்சனம் பண்ணோம்னா நம்மள ஜாதிவெறியன்னு முத்திர குத்துவானுக னு நாம மூடிட்டு இருப்போம்!
அந்த கேப்ல படம் சமூக புர்ஜி பண்ணும் கும்பல் ப்ரமோசன் செஞ்சு கொஞ்சம் ஓடிடும்!
இதுதான் சினிமாவுல ஜாதிய சொருகி விமர்சனத்த காலி பண்ற ட்ரிக்!
இப்ப சினிமால ரெண்டு ட்ரென்டு போய்டடுருக்கு!
குடும்பமா சேந்து கொலை பண்றது கடத்தல் பண்றது னு ஒரு ட்ரெண்டு
விக்ரம்2, கோலமாவு கோகிலா, பிளாஸ்ட் மாதிரி பலது!
இன்னொன்னு இந்த படம் மாதிரி ட்ரென்டு!
அதாவது ஒருத்தன் ரெண்டுபேரை குறை சொல்லாம மொத்தமா ஒரு ஊரையே ஒரு சமூகத்தையே இழிவா காட்டி வன்மத்த கக்குறது!
தலைவர் தம்பி தலைமையில், தாய் கிழவி இதுல எல்லாம் பின்தங்கி இருக்குற ஒரு ஊர்ல எல்லாருமே முட்டாள் மாதிரி காமிச்சு அவங்க செய்ற மூடத்தனமான கொடூரமான செயல்களை காமெடின்னு காமிக்குறாங்க
அதாவது ஆ ஊ ன்னா கத்திக்கிட்டு அடிச்சிக்கிறதை நாம ரசிக்கணுமாம்
இந்த முட்டாபீசுங்க மத்தில ஒருத்தன் மாட்டிட்டு முழிக்கிறதை நாம பாத்து சிரிக்கணுமாம்!
கடைசில புள்ளகுட்டிகள படிக்க வைங்கனு முடிச்சிருவானுக!
இந்த படத்துல கடைசியில என்ன தீர்வு சொல்ல வர்றாருன்னா... தீர்வே சொல்லல!
இவங்க சேர்ந்து வாழனுமா இல்ல பிரிஞ்சி போகணுமா தனியா வாழணுமா அல்லது கல்யாணம் பண்ண பிறகும் பிரண்ட்ஸாவே இருக்கணுமா இந்த மாதிரி எதுவுமே சொல்லல!
இயக்குநர் ரொம்ப அப்பாவி!
காமெடி படம் எடுக்க மொதல்ல காமெடின்னா என்னனு தெரியணும்! அது இவருக்கு தெரியல போல!
இந்தியாவுலயே முதல் பெண் டாக்டர் பிறந்த ஊரை அயலி னு எதோ கருமத்த எடுத்து 'பொண்ணுங்கள படிக்கவே விடமாட்டானுக' னு புர்ஜிகரமா காட்டின மாதிரி...
1961 லயே தமிழ்நாட்டுல பெண் கல்வியில ரெண்டாவது இடத்துல இருந்த திருநெல்வேலியை இப்டி காட்டுமிராண்டித் தனமா காட்டினதுதா ஒருவேள காமெடினு நெனச்சிட்டாப்டியோ?!
Subscribe to:
Posts (Atom)