Monday, 16 November 2026

தமிழ்நாடு தனிநாடாக பிரிந்துபோக உரிமை இருந்தது

 தமிழ்நாடு தனிநாடாக பிரிந்துபோக உரிமை இருந்தது

 பாகிஸ்தான் பிரிந்து போனது மாநில சுயாட்சி உரிமையை பயன்படுத்தி தான்!
 அன்று ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து போராடிய தலைவர்கள் எதிர்பார்த்த இந்தியா வேறு! 
 இன்றைய இந்தியா அதற்கு தலைகீழாக அமைந்துள்ளது!
 அதனாலேயே இந்தியாவை எதிர்க்கிறோம்!
 1947 க்கு முந்தைய மனநிலையில் இதை தேசத்துரோகம் என்று வரையறுப்பது அநியாயம்!

மாநில தன்னாட்சி உரிமைகள் பறிபோனது பற்றி ம.பொ.சி அவர்கள் விரிவாக எழுதியுள்ளார்.
 

02.04.1942 இல் புதுடில்லியில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி மாநிலங்களுக்குப் பிரிந்து வாழும் உரிமை உண்டென்று உறுதிகூறி நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு:
"ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் மக்களை அவர்கள் விருப்பத்திற்கு மாறாக, இந்திய யூனியனுள் இருக்கும்படிக் கட்டாயப்படுத்த காங்கிரஸ் விரும்பவில்லை..."

பாகிஸ்தான் பிரிவினையை ஏற்கும் தீர்மானத்தை முன்மொழிந்து டில்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நேருஜி பேசியபோது,
"விரும்பாத மாநிலம் அல்லது மாநிலங்களுக்கு இந்திய சமஷ்டியிலிருந்து பிரிந்து வாழும் உரிமை உண்டென்று காங்கிரஸ் மகாசபை ஏற்றுக் கொண்டுள்ளது. அதன்படித்தான் இப்போது பாகிஸ்தானிலுள்ள மாநிலங்கள் பிரிந்து செல்ல அனுமதிக்கப் பட்டிருக்கின்றன." என்று கூறினார்.

மாநில சுயாட்சி பற்றி காந்திஜி
காந்தியடிகள், மாநிலங்கள் விரும்பி விட்டுக் கொடுத்த அதிகாரங்கள் மட்டுமே மத்திய சமஷ்டி அரசிடம் இருக்கவேண்டும்; மற்ற வகையில் ஒவ்வொரு மாநிலமும் 'சுதந்திர அந்தஸ்து'டன் விளங்கவேண்டும் என்றே தமது வாழ்நாள் முழுவதும் வற்புறுத்தி வந்தார்.

சுதந்திரம் நெருங்கிக் கொண்டிருந்த தருணத்திலே சுதந்திர இந்தியாவில் மாநிலங்களின் அரசியல் அந்தஸ்தானது எவ்வாறு இருக்கவேண்டுமென்பது பற்றிச் செய்தி நிருபர்கள் எழுப்பிய வினாவுக்கு விடையாக அடிகள் கூறியது வருமாறு:
நிருபர் : மாநிலங்கள் தனித்தனியாகப் பிரிந்து சுயேச்சையுடன் வாழ விரும்பினால், அவை எவ்விதமான அரசியலை வகுத்துக்கொள்ள வேண்டும்?
காந்திஜி : இந்தியா முழுவதற்கும் எந்தவிதமான பரிபூரண சுயேச்சை அரசியல் வகுக்கப்படுமோ அதுபோன்ற அரசியல்தான். பரிபூரண சுயேச்சைக்கு நான் கூறும் இலக்கணப்படி பார்த்தால் அதில் தவறு ஒன்றும் கிடையாது.
(‘அரிஜன்’, 21.02.1947)

சுப்பிரமணிய பாரதியார் சுதந்திரக் கவிதை ஒன்றில், தாயின் மணிக்கொடி பறப்பதையும், அதன் கீழே இந்திய ராணுவம் மதம் அல்லது சாதிவாரியான அணிகளாக (இந்து, இஸ்லாமியர், சீக்கியர், கிறிஸ்தவர் அல்லது ஐயர், ஐயங்கார், முதலியார், நாடார் என) இல்லாமல் வேறுவிதமாக அணிவகுத்து நிற்பதாகக் கற்பனை செய்வதை விளக்குகிறார்.

( ம.பொ.சி அவர்கள் 1973 இல்எழுதிய மாநில சுயாட்சிக் கிளர்ச்சியின் வரலாறு’ நூலிலிருந்து)

காங்கிரஸ் தலைவர்கள் முதலில் 'கான்பெடரேஷன்' என்றார்கள். பின்னர் அதைக் கைவிட்டு, 'பெடரேஷன்' என்றார்கள். பிறகு அதையும் கைவிட்டு 'யூனியன்' அமைத்தார்கள்,

 1941ல் ஐ.நா சபையில் (யு.என்.ஓ வில்)
''காஷ்மீரம் இந்தியாவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதபடி அதன் ஒரு அங்கம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் இந்தியாவிலுள்ள வேறு மாநிலங்களுக்கு இல்லாதபடி காஷ்மீருக்கு மட்டும் தனியாக அரசியல் நிர்ணய மன்றம் அமைத்துக் கொடுத்ததேன்? அதற்குத் தனிக் கொடி கொடுத்தது எதற்காக? மற்ற மாநில
அமைச்சரவைத் தலைவர்கள் 'முதல்வர்' என்று அழைக்கப்படும் போது, காஷ்மீர் முதல்வர் மட்டும் 'பிரதமர்' என்று அழைக்கப்படுகிறாரே, ஏன்?"
என்று பாகிஸ்தான் பிரதிநிதி வினாவியபோது, அப்போது ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த சர். பி.என்.ராவ் என்ன சொன்னார்? ஆளுங் கட்சியாக இருந்த காங்கிரஸ் அரிபுரா-திரிபுரா மகா சபைகளின் தீர்மானத்தைப் படித்துக் காட்டி.
"காங்கிரஸ் கட்சியின் கொள்கை அனைத்து மாநிலங்களுக்குமே பிரிந்து வாழும் உரிமையுடன் சுயாட்சியளிப்பதுதான். முதலில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாளடைவில் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படும்," என்று பதில் கூறியிருக்கிறார்.


 ம.பொ.சி அவர்களின் ‘சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல்’ எனும் நூலிலிருந்து
 
 1947 க்கு முன் இந்திய மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட 'ஜனநாயக இந்தியா' வேறு! இன்று நடைமுறையில் இருக்கும் 'ஏகாதிப்பத்திய இந்தியா' வேறு!
 சுருங்கச் சொன்னால் அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் ஏறத்தாழ சம உரிமை பெற்று மன்னர்கள் நடத்திய சமஸ்தானம் பல இருந்தன!
 காத்தி இந்த சமஸ்தானங்களில் சுதந்திர போராட்டம் செய்யவே இல்லை!
 நேரடியாக ஆங்கிலேயர் ஆண்ட பகுதிகளுக்குத்தான் சுதந்திரம் கேட்டார்!
 அததகைய சமஸ்தானங்கள் போன்ற உரிமைகள் மாநிலங்களுக்கு கிடைக்கும் என்று ஒவ்வொரு இனத்திலும் தலைவர்கள் போராடினார்கள்! 
 ஆனால் அமைந்த இந்தியாவோ பிரிட்டிஷ் அரசாங்கத்தை அடியொற்றி அமைத்தது.
 சமஸ்தானங்கள் பல்வேறு போலி வாக்குறுதிகள் கொடுத்தும் வலுக்கட்டாயமாகவும் இணைக்கப்பட்டு பிறகு வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன.
 
 தேசிய இனங்களுக்கு வாக்களித்த அடிப்படை உரிமைகள் கூட தரப்படவில்லை! 
எல்லாமே மத்தியில் குவிக்கப்பட்டன! 
 எஞ்சிய அதிகாரங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு இன்று தேசிய இனங்கள் இந்தியா எனும் சிறைக்கூடத்தில் அடிமைகளாக அடைக்கப்பட்டு விட்டன! 

1963 இல் பிரிவினைவாத தடுப்புச் சட்டம் போடப்பட்டு ஜனநாயக கதவுகள் அடைக்கப்பட்டன!
 இதனால் பிரிவினை கேட்டு ஆயுதம் தாங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட இனங்களும் அரச பயங்கரவாதத்தால் அடக்கி ஒடுக்கப்பட்டன!

 இப்படி எல்லா உரிமைக் குரல்களையும் நசுக்கிவிட்டு இன்று ஒற்றை ஆட்சி ஒற்றை மொழி என்று ஹிந்தி இந்தியா தனது இலக்கை நெருங்கிவிட்டது! 

 இந்தியை ஒத்த மொழிகளை ஒழித்து இந்தி ஆக்கியும் மக்கட்தொகையைப் பெருக்கியும் வடக்கு வீங்கியது!
திட்டமிட்ட மக்கட்தொகைக் குறைப்பால் தெற்கு தேய்ந்தது!
 இப்போது மூலைமுடுக்கெங்கும் திட்டமிட்ட வடவர் குடியேற்றம் நடந்துவருகிறது! 

 இன உணர்வு மழுங்கடிக்கப்பட்டு மத உணர்வு ஊட்டப்பட்டு ஆங்கிலேயரின் அதே பிரித்தாளும் கொள்கை வழியில் நடந்துவரும் ஹிந்தியா வெற்றிமேல் வெற்றி குவித்து வருகிறது!

 இந்த போலி ஜனநாயகத்தில் தமிழர்கள் என்னதான் பெரும்பான்மை ஆட்சியைக் கொண்டுவந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகித்தாலும் பிரதமர் ஆனாலும் கூட இவற்றையெல்லாம் மாற்ற முடியாது!

 இந்தியாவின் சட்டத்தை மாற்ற மக்களவையில் குறைந்தபட்சம்  272 இடங்களுக்கும், மாநிலங்களவையில் 123 இடங்களுக்கும் குறையாமல் ஆதரவு இருக்க வேண்டும்.
 
 இது ஒட்டுமொத்த தமிழர்களும் ஓரணியில் திரண்டாலும் நடக்காத விடயம்! 

 இதிலும் மக்கட்தொகையைப் பொறுத்து மத்தியில் அதிகாரப் பங்கு குறையும் நிலையும் வரப் போகிறது!

 அப்படி ஆகிவிட்டால் இந்தியாவில் மாநில உரிமை வெறும் கனவுதான்!