Wednesday, 25 November 2026

திருப்பரங்குன்றம் தீபம் சுருக்கமாக

திருப்பரங்குன்றம் தீபம் சுருக்கமாக


* எந்த முருகன் கோவிலும் மலைத் தீபம் ஏற்றும் வழக்கம் இல்லை சிவன் கோவில்களில் ஏற்றப்படுவதே வழக்கம்

* மலை மீது இருக்கும் தர்கா சிக்கந்தர் எனும் சூஃபி ஞானியுடையது, சிக்கந்தர் எனும் அரசனுடையது இல்லை.
 தமிழகத்தில் எந்த முஸ்லிம் மன்னனுக்கும் தர்கா எழுப்ப படவில்லை.

* தர்கா வழிபாடு என்பது இந்துக்களும் சேர்ந்து செய்யும் ஒரு எளிய வழிபாட்டு முறை இது இசுலாமிய மதக் கோட்பாட்டுக்கு எதிரானதும் கூட!

* ஆங்கிலேயர் காலத்தில் மலையின் ஒரு பகுதியை சிக்கந்தர் மலை என்று பொதுமக்கள் அழைத்துவந்த குறிப்பு உள்ளது

* ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத் தகராறு ஏற்பட்டு (அன்றைய உச்ச நீதிமன்றமான) லண்டன் பிரிவி கவுன்சில் மூலம் தர்கா, கோவில் நில எல்லைகள் வரையறை செய்யப்பட்டுவிட்டது 

* அந்த தூண் நில அளவைக் கல் என்று அரசு கூறுவது ஏற்கும் வகையில் இல்லை. அது கோவில் எல்லையில் தர்கா அருகே இருக்கிறது!
அது மலை தீபம் ஏற்றும் அளவு பெரிய தூண் இல்லை. அதில் மலைத் தீபம் ஏற்றப்பட்ட எந்த சான்றும் இல்லை.

* உச்சிப்பிள்ளையார் தீபத்தூண் மலைத் தீபம் ஏற்றும் வகையில் ஆனது. அதில்தான் மலைத் தீபம் ஏற்றப்பட்ட சான்றுகள் உள்ளன.  

* குறிப்பிட்ட அந்த தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்துத்துவ இயக்கங்கள் தொடர்ந்த இரண்டு வழக்குகள் கோவில் நிர்வாகம் ஆதரவு இல்லாமல் தள்ளுபடி செய்யபட்டு விட்டன. 

* தர்காவில் வழக்கம்போல ஆடு பலியிடச் சென்ற ஒருவரை அரசு அதிகாரிகள் காரணமில்லாமல் தடுத்து திமுக அரசே இந்த பிரச்சனையை மீண்டும் தொடங்கியது. 

* ஆடு பலியிடும் உரிமைக்காக போராட்டம் நடத்திய இசுலாமியரை தீபம் ஏற்ற விடாமல் போராடுகின்றனர் என மடைமாற்றிய பாஜக வினர். தர்கா கொடுங்கோல் அரசனுடையது என்றும் அதை அகற்ற வேண்டும் என்றும் பேசி பிரச்சனையை வளர்த்தனர்

* திமுக அரசு அது தீபத் தூண் அல்ல நில அளவைக்காக கல் என்று அறிவித்து அதை இசுலாமிய இயக்கங்கள் பேசி பிரச்சனை பெரிதானது

* இது அத்தனையையும் திமுக அரசு வேடிக்கை பார்க்க ஆர்.எஸ்.எஸ் இல் பொறுப்பு வகித்த ஒரு நீதிபதி தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்து தீர்ப்பு அளித்தார்

* தீபம் ஏற்ற கூட்டமாக வரும் இந்துத்துவ வாதிகள் பாபர் மசூதி போல தர்காவை இடித்துவிடுவார்கள் என்று இசுலாமிய இயக்கங்கள் பரப்புரை செய்தன

* கடைசியாக 2025 இல் தான் தர்கா நிர்வாகம் புது இடத்தில் தீபம் ஏற்ற எதிர்ப்பு தெரிவித்தது. அதுவரை தர்கா நிர்வாகம் தீபம் ஏற்றுவது குறித்து எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
 (இப்படிச் செய்தது தவறு என்று கூறலாம்).

* அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில் நிர்வாகமும் புதிய இடத்தில் தீபம் ஏற்றும் எண்ணம் இல்லை என்றும் வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்படும் என்று அறிவிக்கிறது.

* இந்த நிலையில் இன்னொரு தீர்ப்பு வருகிறது அதாவது பல நிபந்தனைகளுடன் ஒரே ஒருமுறை மட்டும் கோவில் நிர்வாகம் அந்த தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிடுகிறது.

* இந்நிலையில் கோவில் நிர்வாகம் தீர்ப்பை மீறி வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றி நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளது (இப்படி செய்தது தவறு).

 ஆக ஒரு இந்துக் கோவில் அருகே ஒரு இசுலாமிய ஞானி அடக்கமான தலத்தில் தர்கா அமைத்து அங்கே இந்துக்களும் இசுலாமியரும் வழிபாடு செய்து வந்துள்ளனர்.

 தர்கா அருகே உள்ள ஒரு தூணை வைத்து இந்துத்துவ சக்திகள் மத மோதலை உருவாக்க முயற்சித்து அதை திமுக ஆதரவுடன் ஒரு நீதிபதி மூலம் செயல்படுத்தி அதை எதிர்கொள்ளத் தெரியாத தவெக அரசு சொதப்பி இருக்கிறது.

 ஆட்சியில் இருப்பவர்கள் மதக் கலவரத்தை விரும்பினால் பொதுமக்கள் எவ்வளவு முயன்றாலும் அதைத் தடுக்க முடியாது போலும்! 

No comments:

Post a Comment