Showing posts with label ஐ.நா. Show all posts
Showing posts with label ஐ.நா. Show all posts

Monday, 22 July 2019

தனி நாடு கோரிக்கை சட்டப்படி குற்றம் ஆகாது

தனி நாடு கோரிக்கை அனைத்துலகச் சட்டப்படி குற்றமன்று

"அனைத்து நாடுகள் சட்டப்படியும் ,
உலக ஒன்றிய நாடுகள் (U.N.O) அமைப்புறுதிப்படியும்,
கூட்டுச்சேரா நாடுகளின் (1964) ஆம் ஆண்டு அறிவிப்புப் படியும்,
தமிழ் மக்கள் தனிநாடு கோருவதற்கு முற்றிலும் தகுதி படைத்தவர்கள்.

'சட்ட அடிப்படையான தன்னுரிமைக்காக, தன்மானமுள்ள தமிழர்கள் நடத்தும் தமிழக விடுதலைப் போராட்டத்தை இந்திய அரசு குற்றமாகக் கணிப்பது அடிப்படை மக்கள் உரிமையைப் பறிக்கும் சட்டப்புறம்பான செயலாகும்’ என ஈழத்தமிழ்நாடு அமைத்திட அரும்பாடுபட்டு வரும் தமிழர்களுக்கு உதவிகள் செய்து பெரும்புகழ் பெற்ற இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வழக்குரைஞர் இருவர், இந்தியத் துணைக்கண்ட அரசு கொணர்ந்த பிரிவினைத் தடைச்சட்டம் பற்றி பிரிட்டனில் உள்ள தமிழர் முன்னேற்றக் கழகம்’ (T.M.K) கேட்டிருந்த சட்ட விளக்கம் பற்றி ஆய்ந்து கருத்தறிவித்துள்ளதாக அங்கு நடந்து (Voice of Tamils Anti-official Newsletter Published by T.M.K) என்னும் செய்தியேடு தன் ஆகத்து 1977 இதழில் ஆசிரியவுரை எழுதியிருக்கின்றது.

அக்கட்டுரையில் அதன் ஆசிரியர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது,
தங்கள் சொந்த ஊதியம் (நன்மை) கருதி அதிகாரத்தில் உள்ள வடஇந்தியக் கட்சியினர் கொண்டு வந்த பிரிவினைத் தடைச்சட்டம் அம்பேத்கார் குழுவினர் வகுத்தளித்த இந்திய அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பாவதாகும்.

ஐம்பது ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டுப் பிரிவினை கோரும் தமிழர்களைக் கருத்தில் கொண்டு கொணர்ந்த தடைச்சட்டமாகையால், அதற்குத் தமிழ்மக்களின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே, அப்பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு சட்டவலு இருக்க முடியும்.

'இந்தியத் துணைக்கண்டம் முழுமையும் அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாகவும்,
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டம் நாடு முழுமைக்கும் பொருந்தும் எனவும் கூறுவதை அனைத்து நாடுகள் சட்டத்தின் அடிப்படையில் ஏற்றுக் கொள்ளுகின்ற அதேநேரத்தில்,
அதே அனைத்து நாடுகளின் சட்டத்தின் கீழ் தன்னாட்டு உரிமைக் கோரிக்கைகளும் அவற்றுக்கான போராட்டங்களும் சட்ட நிறைவானவை என்பதையும் எவரும் மறுத்தற்கியலாமற் போகும்.

எனவே தமிழன் - நிலப்பிரிவினைக்குக் குரல் கொடுக்கும் எவரும் அனைத்துநாட்டு சட்டப்படி குற்றவாளியல்லர்.

அம்பேத்கார் குழுவினர் ஆக்கிய இந்திய அரசியல் சட்டப்படி 'இந்திய ஒன்றியத்தில் (Union) சேர்ந்துள்ள நாடுகள் பிரிந்து போகும் உரிமை வரையறுக்கப்பட்டிருப்பதால்
இந்திய அடிப்படை அரசியல் சட்டப்படியும் தன்னாட்டு உரிமை கோருதல் குற்றமாகாது.

கூட்டுச்சேரா நாடுகளின் இரண்டாவது மாநாடு 1964ஆம் ஆண்டு கெய்ரோவில் நடைபெற்றபோது தங்கள் அரசியல் உரிமையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள ஒவ்வொரு தேசிய இனத்திற்கும் தன்னுரிமை உண்டு என்று தீர்மானம் அங்கு நிறைவேற்றப் பெற்றது.

அத்தீர்மானத்தை இந்தியாவும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

தங்களுக்கென ஒரு நாடும் அரசும் இல்லாத பாலத்தீனியர்களின் தன்னமைப்பு உரிமைக் கோரிக்கையை இந்தியா உட்படப்பெரும்பாலான நாடுகள் ஏற்றுக் கொண்டிருக்கும் பொழுது,
தங்களுக்கென ஒரு நாடு இருந்தும் அரசுரிமையற்றிருக்கும் தமிழர்களின் பிரிவினைக் கோரிக்கை எந்த வகையில் தவறானதாகும்?

இருநாடுகளின் சட்டமன்றங்கள் அல்லது மக்களால் தெரிவு செய்யப்பெற்றபடி நிகராளிகள் விரும்பிச் சட்டமியற்றி,
ஒரே நாடாக இணைவதற்கு அதிகாரம் அளிப்பதன் வழியும்,
ஒருநாடு மற்றநாட்டை வலிந்து (seized by violence or occupied by force) தனது அரசுரிமையை மற்றநாட்டிற்கு உரிமைப்படுத்திக் கொடுப்பதன் வழியும்,
இருநாட்டு மக்களின் விருப்பத்தின் வழியாகவும் தான்,
இருநாடுகள் ஒரு நாடாக ஆக முடியும்.

ஆனால் சேர, சோழ, பாண்டிய நாடு எனப் பண்டையக் காலத்தில் அழைக்கப் பெற்றுவந்த தமிழ்நாட்டு மக்களின் ஏற்பு ஒப்புதலை (acceptance) பெறாமலேயே இந்தியத் துணைக்கண்டத்தினுள் வந்தேறியவர்களாகிய ஆரிய ஆட்சியாளர்களால் பிரிவினைத் தடைச்சட்டம் அவர்களின் அடிமைகள் நிரம்பிய நாடாளுமன்றத்தில் தன் இன நலம் காத்திட இயற்றப்பட்டதாகும்.

அதனைத் தமிழ் மக்களின் தொண்டைக்குள் வலிந்து சட்டப் புறம்பாகத் (illegal) திணித்துள்ளனர்.

ஆங்கிலேயர்கள் 1947-ஆம் ஆண்டு இந்தியத் துணைக்கண்ட ஆட்சியுரிமையை ஆரியர்களிடம் ஒப்படைத்தமையால் தமிழர்கள் தமது நாட்டுரிமையை இழந்தார்களே தவிர ,
தமிழ்மக்களின் ஒப்புதல் படி அவர்கள் இந்திய ஒன்றியத்தில் (Indian Union) சட்டப்படி இணைக்கப்படவில்லை என்பது நமக்கு உதவ முன்வந்துள்ள சட்ட வல்லுநர்களின் (Q.C) கருத்தாகும்.

இக்கருத்துகளின் அடிப்படையில் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் தமிழர்களுக்குக் கீழ்வரும் வேண்டுகோளைக் கொடுத்துள்ளது.

'நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர். நாங்கள் அனைத்திந்திய கட்சியினர்’ எனக் கூறிவரும் திரைப்படக் கவர்ச்சியும் அறியாமையும் மிக்க மக்களும்;
தமிழர்கள் எனக் கூறிக்கொள்ள வெட்கப்பட்டு இந்தியத் தேசியம் பேசி அரசியல் ஊதியம் பெறும் வீடண அநுமன்களும்;
"நாங்கள் அன்று பிரிவினை கேட்டோம், இப்பொழுது உண்மையாகக் கேட்கவே இல்லை;
உறுதியிட்டுக் கூறுகிறோம். நாங்கள் பிரிவினையாளர்கள் அல்லர்’ என்று சொல்லுக்குச் சொல், கூட்டத்திற்குக் கூட்டம் இந்திய தேசியத் திருப்பாட்டுப் பாடித் தாம் வாழ வழிதேடிக்கொண்ட தமிழ்ப் பதடிகள் சிலரும்;
எக்கட்சியும் சாராத தன்மானமுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும்;
ஆசிரியப் பெருமக்களும், மாணவ மணிகளும் ஆங்கில வழக்குரைஞர்களின் பரிந்துரையை எண்ணிப்பார்க்க வேண்டுமெனவும்,
கட்சிக் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிக் கிடப்போர் இதுநாள் வரை தமிழ் இனத்திற்குச் செய்த மாபெரும் வஞ்சகத்திற்கு மன்னிப்புப் பெறும் வகையில்,
தாம் தமிழர் என்பதையுணர்ந்து தமிழ்த்தரையின் விடுதலைக்குப் போரிட வாருங்கள்'
எனவும் பிரிட்டன் தமிழர் முன்னேற்றக் கழகம் அறைகூவி அழைக்கிறது.

- தென்மொழி
(சுவடி : 14,
ஒலை 5-6,
1977)

நன்றி: அழகன் தமிழன்
--------------
மேற்கண்ட பதிவில் ஆரியர் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருப்பது இந்தோ-ஆரிய மொழி பேசுவோர் என்கிற அடிப்படையில் வடயிந்திரையே என்று ஊகிக்கலாம்

Wednesday, 13 September 2017

தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை

தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை

ஒரு முகாமில் நடக்கும் பல்வேறு கொடுமைகளை உலகத்திற்கு விரிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் யாஸ்மின் சூகா (Yasmin Sooka) அவர்கள்.

இலங்கை ராணுவ தளபதிகள் வன்னியில் உள்ள ஜோசப் (Joseph) முகாமில் தமிழ்க் கைதிகள் மீது பலவகையான கொடுமைகள் மற்றும் கற்பழிப்புகள் செய்து அதற்கேற்ப அரசிடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ராஜபக்ச ஆட்சி முடிந்த பிறகும் இது தொடர்கிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையிடமே சூகா கோரிக்கை வைத்தார் என்பதுதான் இங்கே வேதனையான நகைச்சுவை.

இதற்கு இலங்கை என்ன பதில் கூறியது தெரியுமா?

சாட்சிகளின் விபரங்களைத் தாருங்கள் விசாரிக்கிறோம் என்று.

நல்லவேளை 'சாட்சிகளுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பு கிடையாது, எனவே தரமுடியாது' என்று கூறிவிட்டார் சூக்கா.

இவ்வாறாக அனைத்துலகம் தமிழர்களுக்காக எழுப்பிய குரல் சிறுமுனங்கலாக முடிந்தது.

காணொளி: https://m.facebook.com/story.php?story_fbid=1036628333107486&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1036628333107486%3Atl_objid.1036628333107486%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-7673180923453744813&__tn__=%2AW-R

நன்றி: IBC Tamil

Thursday, 29 June 2017

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

தமிழ்தேசியம் இந்த உலகிற்கு வைக்கும் முழக்கம்தான் என்ன?

பொதுவாக தேசியவாதம் வைக்கும் அதே முழக்கம்தான்.

அதாவது இனம், மொழி, நாடு மூன்றும் ஒன்றாக இருக்கவேண்டும்.

தமிழ், தமிழர், தமிழர்நாடு !

மொழியால் தமிழன்!
இனத்தால் திராவிடன்!
தேசியத்தால் இந்தியன்!
என்று கூறுவது பச்சோந்தித்தனம் ஆகும்.

தமிழர்நாடு பச்சோந்திகளை ஒழித்துக்கட்டி ஒருநாள் விடுதலை அடையும்.
விடுதலை என்பது வல்லாதிக்கத்தின் அடிமை அமைப்பான ஐ.நா வழங்கும் அங்கீகாரம் கிடையாது.
ஐ.நா இனப்படுகொலைக்கு துணைபோகிறதே ஒழிய நியாயத்திற்காகப் போராடுவதில்லை.

விடுதலை என்பது வலிமையான இராணுவத்தால் பாதுகாக்கப்பட்ட நிலமும் அதில் மக்கள் விரும்பும் தலைமையும் ஆகும்.

பிற விடுதலையடைந்த நாடுகள்போல தமிழர்நாடானது
விடுதலை அடைந்து,
தன்னிறைவு பெற்று,
வல்லரசாக உயர்வதோடு நின்றுவிடக்கூடாது.

இந்த உலகத்தின் அடக்கப்பட்ட பூர்வகுடிகளை விழிப்படையச்செய்து மொழிவழி நாடுகளாக இந்த உலகையே மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பெரிய நாடுகளையெல்லாம் துண்டுதுண்டாக உடைக்கவேண்டும்.

தமிழர்நாட்டின் வழிநடத்துதலால் விடுதலை அடைந்த நாடுகள் தமிழர்நாட்டுடன் ஓரணியில் நின்று தன்னிறைவு பெற்று வல்லரசாகி இந்த உலகமாற்றத்திற்கு உதவவேண்டும்.

உலகில் அடக்கப்படும் தேசிய இனங்கள் அனைத்திற்கும் தமிழர்நாடும் அதன் கூட்டணி நாடுகளும் சேர்ந்து விடுதலை பெற்றுத்தரவேண்டும்.

  நாம் ஹிந்தியாவை உடைப்பதில் இருந்து தொடங்கலாம்.

உலகில் வல்லாதிக்கத்தால் அடக்கியாளப்பட்ட நாடுகள் விடுதலை அடைந்த பிறகும் எழமுடியாமல் கிடக்கின்றன.
ஆனால் சுரண்டிய இனங்கள் இன்றளவும் வாழ்வாங்கு வாழ்கின்றன.

இது தொடரக்கூடாது!

தமிழர் இராணுவம் இதைப் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்கக்கூடாது!

விடுதலை பெற்றுத்தருவதோடு நில்லாது நாம் சுரண்டப்பட்ட செல்வத்தையும் பறித்து நட்ட ஈடு பெற்றும் தரவேண்டும்.

முதலில் நாம் விடுதலை அடைவோம் பிறகு மற்றவை தன்னால் நடக்கும்.

Sunday, 12 March 2017

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி அருள் கிடைத்த வந்தேறிகளுக்கு வந்த வாழ்வு

மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் அவரிடம் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்திக்கொண்ட ரஜினி தன் மகளுக்கு ஐநாவின் நல்லெண்ணத் தூதர் பதவியை பெற்றுக்கொடுத்தார்.

"இதயம் நல்லெண்ணெய்" க்கு கூட தூதராக எவ்வித தகுதிகளும் இல்லாத ஐஸ்வர்யா
'ரஜினியின் மகள்' 'தனுஷின் மனைவி' என்பதைத் தவிற வேறு சிறப்பியல்புகள் எதுவும் இல்லை.
ஆனாலும் அவர் ஐநாவின் தூதர் ஆனது பற்றி சர்ச்சைகள் எதுவும் இல்லை காரணம் ஐநா என்பதே ஐஸ்வர்யாக்கள் தூதவராவதற்கான அமைப்புதான்.

ஐஸ்வர்யாவின் மாமனார் கஸ்தூரிராஜா ஐநாவின் மனித உரிமை ஆணையரே ஆகலாம்.
காரணம் ஐநாவின் மனித உரிமை ஆணையராக இருக்க அதவருக்கு இருக்கும்(?) தகுதியே போதும்.

'ஐநாவில் பரதநாட்டியம் ஆடப்போகும் தமிழ் பெண்' என்று கடந்த சில நாட்களாகவே பத்திரிகைகளில் பெரிய பெரிய விளம்பரச் செய்திகள் வந்தன.
யார் அந்த தமிழ் பெண் என்று பார்த்தால் ஐஸ்வர்யா தனுஷ்.
அடடா இவளல்லவா தமிழ்மகள்.
என்னவொன்று...
தந்தை மராத்தியர் கணவன் தெலுங்கர் அவ்வளவுதான்.

ஐநா கொண்டாடவிருந்த மார்ச் 8 மகளிர் தினத்தில் ஐஸ்வர்யா நடனம் ஆடுகிறார்.
அதாவது நல்லெண்ண தூதரே பரத நாட்டிய வாய்ப்பை வேறு யாருக்கும் வழங்காமல் எடுத்துக்கொண்டார்.
தன் நாட்டிய திறனைக் காட்ட.

டி.வி.எஸ். சுந்தரம் அய்யங்கார் குடும்பத்தில் இருந்து வந்தாலும் கூட அனிதா ரத்னம் பரதத்தில் குறிப்பிடத்தக்க பல சாதனைகளைச் செய்தவர்,
அது போல நர்த்தகி நட்ராஜ் போன்றோர்களும் மிகச்சிறந்த தமிழகம் அறிந்த நடனக்கலைஞர்கள்.

ஆனால் இவர்கள் போன்ற யாருக்கும் வாய்ப்பு சென்றுவிடாமல் தானே அந்த வாய்ப்பை எடுத்துக் கொண்டு ஐஸ்வர்யா அசைவேயின்றி ஆடிய ஆட்டம் இருக்கிறதே.
ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா படு மொக்கை.

நம்மூர் திருவிழாவில் பாம்பு டான்ஸ் ஆடுகிறவர்கள் கூட கை , கால் வளைத்து நெளிவுகளோடு அழகாக ஆடுவார்கள்.
பரதத்திற்கு ஏற்ற உடல் வாகோ பாவனைகளோ பயிற்சியோ கடுகளவும் இல்லாமல் மரக்கட்டை காற்றிலாடுவது போல அவர் 'போட்ட' நடனத்தை அதிர்ச்சியோடு அந்த அரங்கில் பார்த்துக் கொண்டிருந்தனர்.

குடும்பம் குடும்பாக வந்தேறி மண்ணின் மைந்தருக்குக் கிடைக்கவேண்டிய மொத்த வாய்ப்புகளையும் பதவிகளையும் கைப்பற்றிக் கொள்ளும் இவர்களுக்கும் கலைக்கும் உலகநாடுகளின் சமாதானத்துக்கும் என்னதான் தொடர்பு?

ஐநா நீதி பெற்றுத்தரும் என்று இன்னமும் நம்பும் ஈழத்தமிழரை நினைத்தால்தான் கவலையாக உள்ளது.

(புலனச்செய்தி)

Wednesday, 28 September 2016

பசுமைத் தாயகம் காவிரிக்கு குரல்கொடுக்குமா?

ஐயா இராமதாசு அவர்கள்,

தமது "பசுமைத் தாயகம்" மூலம் ஈழம் தொடர்பான முன்னெடுப்புகளை ஐ.நாவில் எடுப்பது போல

காவிரி பிரச்சனையை ஐ.நாவுக்கு கொண்டுசெல்ல முடியாதா?!

(ஜனநாயக வழியில் தமிழருக்கு நியாயம் கிடைக்க 99% வாய்ப்பில்லை என்பது வேறு விடயம்)