Showing posts with label போர்க் குற்றம். Show all posts
Showing posts with label போர்க் குற்றம். Show all posts

Wednesday, 13 September 2017

தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை

தமிழர்களுக்கும் இலங்கையில் இன்றும் தொடரும் சித்திரவதை

ஒரு முகாமில் நடக்கும் பல்வேறு கொடுமைகளை உலகத்திற்கு விரிவான ஆதாரங்களுடன் வெளிப்படுத்தினார் யாஸ்மின் சூகா (Yasmin Sooka) அவர்கள்.

இலங்கை ராணுவ தளபதிகள் வன்னியில் உள்ள ஜோசப் (Joseph) முகாமில் தமிழ்க் கைதிகள் மீது பலவகையான கொடுமைகள் மற்றும் கற்பழிப்புகள் செய்து அதற்கேற்ப அரசிடம் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ராஜபக்ச ஆட்சி முடிந்த பிறகும் இது தொடர்கிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இலங்கையிடமே சூகா கோரிக்கை வைத்தார் என்பதுதான் இங்கே வேதனையான நகைச்சுவை.

இதற்கு இலங்கை என்ன பதில் கூறியது தெரியுமா?

சாட்சிகளின் விபரங்களைத் தாருங்கள் விசாரிக்கிறோம் என்று.

நல்லவேளை 'சாட்சிகளுக்கு சிறிலங்காவில் பாதுகாப்பு கிடையாது, எனவே தரமுடியாது' என்று கூறிவிட்டார் சூக்கா.

இவ்வாறாக அனைத்துலகம் தமிழர்களுக்காக எழுப்பிய குரல் சிறுமுனங்கலாக முடிந்தது.

காணொளி: https://m.facebook.com/story.php?story_fbid=1036628333107486&id=100002809860739&refid=17&_ft_=top_level_post_id.1036628333107486%3Atl_objid.1036628333107486%3Athid.100002809860739%3A306061129499414%3A2%3A0%3A1506841199%3A-7673180923453744813&__tn__=%2AW-R

நன்றி: IBC Tamil

Saturday, 29 July 2017

ஏகாதிபத்திய இனம்

ஏகாதிபத்திய இனம்

ஆமாம்டா!
முதல் ஏகாதிபத்தியம் தமிழன் ஏற்படுத்தியதுதான்!

குமரிக்கண்டத்தில் உருவாகி அது தொட்டுக்கொண்டிருந்த ஆப்பிரிக்கா இந்தியா ஆஸ்திரேலியா என எல்லா இடத்திற்கும் பரவினோம்

குமரிக்கண்டம் மூழ்கும்போது கப்பலில் நெடியோன் தலைமையில் இங்கே வந்தோம்
ஏற்கனவே இங்கிருந்த தமிழர்களை போரிட்டு வென்று அடக்கி குடியேறினோம்.

ஏற்கனவே இருந்த சிற்றரசர்களை எல்லாவற்றையும் பறித்துக்கொண்டு சுடுகாட்டுக்கு வேலை செய்ய அனுப்பிறோம்.

இந்தோனேசியாவுக்கு படையோடு போய் அங்கிருந்த மக்களை விரட்டிவிட்டு நெல்வளம் மிக்க சாலியூரை கைப்பற்றி கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அங்கிருந்து குவியல் குவியலாக விதைநெல் கொண்டுவந்தோம்.

காடுகளை வெட்டி அழித்து எரித்து அதை விளைநிலமாக்கி உணவுக்கு பயன்படுத்தினோம்

மண்ணை தோண்டி உலோகம் எடுத்து உருக்கி ஆயுதங்கள் செய்தோம்.
காட்டு விலங்குகளை கொலை செய்தோம்.
எதிர்த்து நின்ற எல்லாரையும் கொன்றோம்.

மதுவைக் கண்டுபிடித்தோம்.
ஆண்பெண் எல்லாரும் பருகினோம்.

விழா கொண்டாடுவதை ஏற்படுத்தினோம்.
அன்று கண்ணில்படும் விலங்குகளையெல்லாம் பலியிட்டு சோறுடன் சமைத்து கள்ளுடன் வயிறு புடைக்க உண்டோம்.

விலங்குகளை வேட்டையாடி தின்றதோடு நில்லாமல் அவற்றை அடக்கி வேலை செய்ய பழக்கினோம்.

அவற்றின் குட்டிகளுக்கானப் பாலை கறந்து நாங்கள் எடுத்துக்கொண்டோம்.

யானைகளை பழக்கி போர்செய்வதை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச்சென்றோம்.

போரில் தோற்ற மன்னனின் தலையை வெட்டி அதை கவிழ்த்து சட்டி போல அடுப்பில் வைத்து மூளையை சமைத்து அவன் வெட்டுண்ட கையையே அகப்பையாக்கி கிண்டி எடுத்து பேய்களுக்கு விருந்து வைத்தோம்

ஆற்றில் விழுந்துவந்த காவல்மரத்தின் பழத்தை தின்ற குற்றத்துக்காக வடுகர் பெண்ணை கொன்றோம்

பலமுறை சுற்றுலா மாதிரி இமயம் வரை போய் எதிரே கண்ணில்பட்டவனையெல்லாம் தூக்கிப்போட்டு மிதித்து கொள்ளையடித்து பெரும்பொருள் கொண்டுவந்தோம்.

பல நாட்டிலிருந்தும் பெண்ணெடுத்து பெண்டாட்டியும் வைப்பாட்டியும் கணக்கில்லாமல் வைத்துக்கொண்டோம்.

ஆமைகளை பின்பற்றி கடலில் பயணம் செய்து பல நாடுகளிலும் குடியேறி அவர்களை அடக்கி ஆண்டோம்.
பேசுதல், எழுதுதல், வேளாண்மை, கட்டுமானம், கருவி செய்தல், திருமணம் செய்தல், கூட்டமாக வாழ்தல், விலங்குகளைப் பழக்குதல், போர் செய்தல் என எல்லாவற்றையும் உலகம் முழுவதும் கற்றுக்கொடுத்தோம்.

இந்த உலகத்தில் ஒரு விலங்காகத் திரிந்துகொண்டிருந்த மனிதனை நாகரீகமயமாக்கி மனிதனின் ஆக்கிரமிப்பை இந்த உலகில் உறுதிசெய்தோம்.

வெறும் துணியையும் மிளகையும் கொடுத்து ஐரோப்பாவிலிருந்து தங்கம் பாளம் பாளமாக அள்ளிவந்தோம்

சிங்களவன் மீது போர் தொடுத்து பௌத்த கோவில்களை கொள்ளையடித்து பலரை அடிமையாக பிடித்துக்கொண்டுவந்து அணையும் கோவில்களும் கட்டினோம்.

கன்னடன் மீது படையெடுத்து அவன் நாட்டு பிராமணரையும் பெண்களையும் குழந்தைகளையும் கொன்றோம்

தெலுங்கனை வகைதொகையில்லாமல் கொலை செய்து தெலிங்க குல காலன் என்று பட்டம் போட்டுக்கொண்டோம்

முதன்முதலாக கடல்கடந்து ஆக்கிரமித்து ஏகாதிபத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனோம்

நாங்கள் காட்டுமிராண்டிகளாகவும் அதே நேரத்தில் அடிப்படை மாந்தநேயத்துடனும் இருந்தோம்

  இன்றுவரை யாரையும் ஏமாற்றியதில்லை.
முதுகில் குத்தியதில்லை.
யாரையும் கொடுமைப்படுத்தியதும் கிடையாது.
நாடி வந்தவருக்கு இல்லை என்று கூறியது கிடையாது.
கீழ்த்தரமான செயல்களில் இறங்கியதும் கிடையாது.

என்றைக்கு நாங்கள் நியாயம் தர்மம் என்று சிந்தித்தோமோ அன்றுதான் வீழ்ந்தோம்

திரும்பியபோதெல்லாம் முதுகில் குத்தப்பட்டோம்.

நாங்கள் மீண்டும் காட்டுமிராண்டிகளாக மாறி மீண்டும் உலகையே ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து எங்கள் காலடியில் கொண்டுவர ரொம்பநேரம் ஆகாது.

இலுமினாட்டிகளுக்கெல்லாம் அப்பனுக்கப்பன் நாங்கள்!

ஒற்றுமை இல்லாதது மாதிரியும் துரோகிகள் நிறைந்திருப்பது போலவும் தெரியலாம்.

நாங்கள் திடீரென்று ஒன்றுசேர்ந்து அசுரபலத்துடன் திருப்பியடிப்போம்

எதிரிகள் அதிர்ச்சியிலிருந்து மீளுமுன் அவர்கள் கதை முடிந்திருக்கும்.

தமிழன் முன்பை விட அதிக ஆதிக்கவெறியுடன் மீண்டும் திடுமென எழுவான்!
தயாராக இருங்கள் வேற்றினத்தாரே!

Friday, 27 November 2015

வணங்காமண் விட்ட கண்ணீர்

தொண்டைகிழிய அழுதுசெத்த குழந்தைகளும்
வணங்கா மண் என்ற உணவுக் கப்பலின் கண்ணீரும்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்த உலகில் மனிதநேயம் இருப்பதாக இன்னும் நம்பிவரும் அப்பாவி முட்டாள்களுக்கு இந்தப்பதிவு

32 உலகநாடுகள் இலங்கைக்கு படையுதவி செய்து தமது செயற்கைகோள் வழியாக தமிழ்மக்கள் எப்படி எப்படியெல்லாம் கொல்லப்படுகிறார்கள் என்று இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

போரில் இனி புலிகள் வெல்வது கடினம் என்று உலகத் தமிழர்களுக்கு முன்பே புரிந்துவிட்டது.

பதறியபடி அவர்கள் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்திக்கொண்டே தமிழ்மக்களுக்கு உதவயாருமில்லை என்பது புரிந்தவர்களாக "கருணைத் தூதுவன்" என்றொரு குழுவை அமைத்து  போர்வளையத்தில் உள்ள தமது சொந்தங்களுக்கு உதவ நிதி திரட்டி சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884டன் (1டன்=1000கிலோ) உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு சொந்தமான 'கேப்டன் அலி' என்ற கப்பலை (மேலே படத்தில்)  ஏற்பாடு செய்து அதற்கு 'வணங்காமண்' என்று பெயரிடுட்டு 07-5-2009 அன்று இலங்கையை நோக்கி அனுப்பிவைத்தனர்.

அது இலங்கைக்கு அருகில் வந்ததும்  இலங்கை கடற்படையினரால் முற்றுகையிட்டு 111மணிநேரம் சோதனையிட்டப்படுகிறது.
கப்பலில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் இது விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறி அதைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டனர்.

ஆனால் இந்தக்கப்பலைக் கொண்டு சென்ற பிரித்தானியத் தமிழர் அதை திருப்பி எடுத்து செல்ல மறுத்துவிட்டார்.
சர்வதேச கடல் எல்லையில் இருந்தபடி எப்படியாவது தமிழ்மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்ப்பது என்ற உறுதியுடன் தமிழகத்தைத் தொடர்பு கொண்டார்.

சென்னையில் 'மனிதம்' என்ற தொண்டு அமைப்பு சென்னைத் துறைமுகத்தில் அந்தக் கப்பலின் பொருட்களை இறக்கி தமிழருக்கு அனுப்ப அனுமதி கேட்டது.

தமிழர்களைக் கொல்வதில் மும்முரமாக இருந்த இந்தியா அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
"கொன்றது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம்பேரைக் கொல்லலாமா"
என்று ஆலோசனை நடத்த இலங்கை உயர்மட்டக்குழு இந்தியா வந்தது.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வணங்காமண் பொருட்களை ஏற்றுக்கொள்ளும்படி இந்தியாவை ஒருவர் மாற்றி ஒருவர் கெஞ்சிக்கொண்டிருந்தனர்.
அவர்களால் முடிந்தது அதுதான்.

இலங்கை உயர்மட்டக்குழு இந்தியாவிடம் 'வணங்காமண் பொருட்களை நீங்களே எடுத்து அனுப்பிவையுங்கள் நேரமிருந்தால் யோசிக்கிறோம்'
என்று கட்டளை போட்டுவிட்டு வந்தனர்.

பிறகு சென்னைக்கு வணங்காமண் கொண்டுவரப்பட்டு "கேப் கலோராடா" என்ற கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு சென்று கொழும்பில் இறக்கப்பட்டன.

அங்கே அந்த நிவாரணப்பொருட்கள் பல மாதங்கள் கேட்பாரின்றி கிடந்தன.

இந்நிலையில் போர் முடிந்து பெரும்பாலான மக்கள் செத்துபோய்விட்டனர்.

செயற்கைக்கோள் வழியாகப் பார்த்து ரசித்தவர்கள்
'இந்தத் தாக்குதலில் ஒரு ஆயிரம்பேர்
இந்த தாக்குதலில் ஒரு இரண்டாயிரம்பேர்'
என்று குத்துமதிப்பாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

போர் முடிந்ததும் நாற்பதாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

தடைசெய்யப்பட்ட குண்டுகள் மூலமும் பலமுனை ஆயுதங்கள் மூலமும் நேரடியாகச் செத்தது நாற்பதாயிரம் அல்லது அறுபதாயிரம் பேர்தான்.

ஆனால், உணவு கிடைக்காமல் காயத்துக்கு மருந்து கிடைக்காமல் கதறிக்கதறி அணுஅணுவாகச் செத்தவர்கள் ஒரு இலட்சத்துக்கும் மேல்.

இதை வெளிக்கொண்டு வந்ததும் ஒரு தமிழரான மன்னார் பாதிரியார்தான்.

இந்த சமையத்தில் தமிழகத்திலிருந்து வந்தேறிக்குழு ஒன்று அதன் அடிபொடிகளுடன் இலங்கைக்குச் சென்று இராசபக்சவுடன் விருந்துண்டு இளைப்பாறி கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தனர்.

தெலுங்கன் கருணாநிதியிடம் வணங்காமண் பொருட்கள் பற்றி கேட்கப்பட்டபோது அவை தமிழருக்குப் போய்சேர்ந்துவிட்டதாக நாகூசாமல் புழுகினான்.

ஐந்து மாதங்கள் திறந்தவெளியில் அழுகிக்கொண்டிருந்தன அந்த நிவாரணப்பொருட்கள்.

அதன் பிறகு இலங்கை அந்த பொருட்களுக்கு விதித்திருந்த இருபது இலட்சம் வரியை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளை கட்டி (வழக்கமாக நிவாரணப்பொருட்களுக்கு பரம ஏழைநாடுகள் கூட வரிவிதிப்பதில்லை. அதையும் செய்தது இலங்கை) கெட்டுப்போன பொருட்களை நீக்கிவிட்டு 614டன் உணவு,மருந்து பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்க 23-10-2009 அன்று எடுத்துச்சென்றது.

மறுநாளே அந்தப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அதை விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து தாம் விலகிக்கொள்வவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.

வேறென்ன நடந்திருக்கும் உலகத்தமிழர் உழைத்து ஒன்றுதிரட்டிய பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் காயம்பட்ட சிங்கள இராணுத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அந்தக் கப்பலுக்கு உயிர் இருந்திருந்தால் கைக்கெட்டும் தூரத்தில் தாய்ப்பால் தீர்ந்துபோன அன்னை மார்பில் முட்டி பசிக்கு அழுது அழுது தொண்டை புண்ணாகி அந்த வலியும் பொறுக்காது மீண்டும் அழுது அழுது கோரமரணத்தைத் தழுவியக் குழந்தைகளுக்கு தான் சுமந்துவந்த உணவைத் தரமுடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி உயிரை விட்டிருக்கும்.

மறக்கக்கூடாது தமிழரே
மறக்கக்கூடாது.

http://nerudal.com/nerudal.11306.html
http://www.tamilolli.com/?p=9173
http://tamilwin.easyms.com/search.php?key=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&page=3

Friday, 18 July 2014

பழந்தமிழர் போர்க்குற்றம்

பழந்தமிழர் போர்க்குற்றம்
"""""""""""" """""""""""""""
தோற்ற மன்னர்களின் தலையே அடுப்பாக
வைத்து அவர் குருதியே உலைநெய்யாக
வார்த்து அவர்கள் வெட்டுண்ட
கைகளையே அகப்பையாக ஆக்கி போர்க்களத்தில்
தமிழ் மன்னர்கள் செய்த வேள்வி பற்றி சங்ககால
நூல்கள் கூறும் செய்யுள்கள்:-
ஆண்தலை - அடுப்பின் வய வேந்தர் ஒண்
குருதிசினத் தீயிற் பெயர்பு பொங்க...தொடித்
தோட்கை துடுப்பாக -
(மதுரைக் காஞ்சி.29-34)
முடித்தலை அடுப்பாக புனற்குருதி யுலைக்
கொளீஇத் தொடித் தோள் துடுப்பிற் றுழந்த
வல்சி
(புறநானூறு 26)
முடித்தலை யடுப்பில்
தொடித்தோள் துடுப்பில் (சிலப்பதிகாரம் 26
-242)
'அசுரர் சிரங்கள் அடுப்பா வைத்து'-
போர்க் களத் தலகை வகுப்பு -அடி 24. //
பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப்
பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார்
என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,
"பகைவர் நாட்டில் தேர்செல்லும் தெருக்களைக்
கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய்
. பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில்
குதிரைகள் பூட்டிய தேரைச்
செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்"(புறந
ானூறு 15).
இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர்
"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே" (புறம்6)
என்று வாழ்த்துகிறார்.
பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால்
எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும்
என்பது இதன் பொருளாகும்.
சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும்,
இரவும் கருதாது பகைவரது ஊரைத்
தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின்
புலம்பலோசையுடன்
கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,
"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"
என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம்.
சோழன் இராசசூயம் வேட்ட
பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும்
வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக்
கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.
பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல்
அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான்
பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய
பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன்
சிவந்திறுத்த புலம்போல" என்ற
உவமையைப் பயன்படுத்துகிறார்.
போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப்
பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.
நன்னன் என்ற குறுநிலமன்னன் தன்னுடைய
பகைவர்களை வென்ற பிறகு அவர்களின்
உரிமை மகளிரின்
தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத்
திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின்
யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).
வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன்
பழையன் என்ற மன்னனை வென்று அவன்
மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப்
பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில்
பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட
பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான்
(பதிற்றுப் பத்து 5ம் பத்து)
கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன்
மூவன் என்பவனைப் போரில்
வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித்
தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.
மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற
குறுநில மன்னனின் பற்களைப்
பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில்
பதித்து வைத்தான். (அகம் 211).//
ராஜ ராஜ சோழனின் மெய்கீர்த்திகளில்
அவனது.வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக
"இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று"
என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜராஜன் தன்
மகன் முதலாம்
இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப்
பெற்றான். முதலாம் இராசேந்திரன் தலைமையில்
சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற
மேலைச் சளுக்கர் மன்னனுடன்
போரிட்டு வென்று இரட்டைபாடியைக்
கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன்
மேற்கொண்ட
பழி செயல்களை சத்தியாசிரையனின் கிபி.1007ம்
ஆண்டு காலத்திய
கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது
(சாஸ்திரி 1989: 23940).
நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான்.
நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள்,
அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக்
கொன்றும் கன்னியரைக்
கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச்
சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக்
கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத்
திரும்பினான்.
இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின்
ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார்
கோவிலுக்கு வழங்கினான்//
இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின்
மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள்,
குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத்
தொகுதிகள்"
ஆகியனவற்றை சத்தியாசிரயனிடம
ிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக்
குறிப்பிடுகிறது (தந்தையாகிய
இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால்
இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ
இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுக
ிறது).
இராஜேந்திரன்
பட்டத்திற்கு வந்தபிறகு (1012-1044) நிகழ்த்திய
போர்களில்
கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப்போரில்
(ஈழம்=இலங்கை) ஈழமன்னனை இவன்
வெற்றிகண்டு கைப்பற்றிய பொருள்
குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச்
செப்பேடு (செய்யுள் 58-59)
பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"அவனுடைய நாட்டையும், அவனுடைய
முடியையும், அவனுடைய அரச
பத்தினியையும், அவளுடைய முடியையும்,
அவனுடைய மகளையும், மற்றப்
பொருட்குவியல்களையும் . . . கைப்பற்றினான்.
"
சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன்
காட்டுக்குள் ஓடிப்போனதாகவும்,
உடன்பாடு செய்து கொள்வதாகச் சொல்லிய
சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக்கொண்ட
ு, மேற்கொண்ட
செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.
"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள்
சிக்கிய கருவூலங்களையும்
உடனே சோழமன்னனுக்கு அனுப்பி வைத்தனர்.
பாதுகாப்பாக பல இடங்களில்
இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த
நினைவுச் சின்ன
அறைகளை உடைத்து அவற்றிலிருந்த
பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச்
சென்றனர். அவர்கள் கண்பட்ட
இடங்களிலெல்லாம் பெளத்த
சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும்
அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள்
அனைத்தையும் கொள்ளையடித்தனர்
" (சாஸ்திரி, 1989: 272).
வங்காள தேசத்து மன்னன்
மகிபாலனை வென்று யானைகள், பெண்கள்,
செல்வம் எல்லாவற்றையும் கைப்பற்றிக்கொண்
டான் (மேலது: 281).
முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான
ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின்
மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற
சிங்களமன்னனை வென்றான்.
சிங்கள மன்னன் ஓடி ஒளிய
அவனது தமக்கையையும், மனைவியையும்
சிறைபிடித்ததுடன் அவனது தாயின்
மூக்கை அறுத்தான் (ளு11111; 5056).
ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல்
நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில்
உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில
மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும்
சிறைபிடிக்கப்பட்டனர், பூண்டூர் நகர் அழித்துத்
தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய
ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது.
மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது.
1894ம் ஆண்டுக்கான
கல்வெட்டு ஆண்டறிக்கையில்(எண்.172).
சாளுக்கியர்களின் பழமையான நகரான
கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத்
தரைமட்டமாக்கி அங்கிருந்த
ஒரு தூவாரபாலகர்.உருவத்தைக்
கொண்டுவந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம்
கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில்
"ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம்
எரித்து கொண்டு வந்த துவார பாலர்"
என்று குறிக்கப்பட்டுள்ளது. முதல்
குலோத்துங்கச் சோழன் (1070---1120)
இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110)
வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள்
மற்றும் செல்வங்களுடன் மகளிரையும்
கைப்பற்றி.வந்தான். மூன்றாம்
குலோத்துங்கன் (கி.பி. 1178-1218) மதுரையின்
மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன்
செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள்
பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.
1. பெண்கள் அடிமைகளாகக்
கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின்
கூடமண்டபத்தை (முடிசூட்டும்
மண்டபம்).இடித்து கழுதை ஏரைப்
பூட்டி உழுதனர்.
திருவாரூர்த் தலைவனாக இருந்த
கங்கை கொண்டான்.உத்தம சோழராயனின்
படையதிகாரியான கூத்தன்
கணபதி என்பவனை "பகைவர்களின்
மனைவியர்க்குக் கணவன்"
என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE
1913 ப.97).//
கி.பி. 1219இல் சோழ நாட்டின்
மீது படையெடுத்த முதல் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் (1216 -1238)
தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான
மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான்
(I.P.S; 290,323)
புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்
மலையில் உள்ள அக்கல்வெட்டின்
உரைநடை வடிவம் வருமாறு:
கொடுங் கோபமுடைய குதிரைகளையும்,
யானைகளையும் செலுத்திச்
சென்று சோழர்களின் தஞ்சைநகரையும்
செந்தழலிட்டுக் கொளுத்தினான். அழகிய
குவளை மலர்களும், நீல மலர்களும் தம்
அழகை இழக்கும்படி குளங்களையும்.ஆற
ுகளையும் கலக்கினான்.கூடம், மதில்,
கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள்,
மாடமாளிகைகள், கருவூலங்கள்
ஆகியனவற்றை இடித்துத்
தள்ளினான்.தன்னை வந்து அடிபணியாத
பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுதகண்ணீர்
ஆறாக ஓடும்படிச் செய்தான்.
பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர்
கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான்.
சோழர் தலைநகராக விளங்கிய.முடிகொ
ண்டசோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்"
எனனும் சடங்கை இவன் செய்தான். அதன்
பொருட்டு சோழ அரசியும் அந்தப்புரத்துப்
பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப்
பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப
்பட்டனர் (சாஸ்திரி, மேலது,579).//
இலங்கைப் படையெடுப்பின்போ
து இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை
அவனது
திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
குறிப்பிடுகின்றன.
ஈழநாட்டு கிராமங்களை தஞ்சைப்
பெருவுடையார்.கோவிலுக்குத் தானமாக
ராசேந்திரன் வழங்கினான்//
மேலும், சிங்கள
போர்க்கைதிகளை அடிமையாகக்
கொண்டுவந்து கல்லணை கட்டினான்
கரிகாலன்//
கண்ணகி மதுரையை எரித்தபின்
ஒரு பொற்கொல்லன் அறம்தவறியதற்காக 1000
பொற்கொல்லர்கள் கழுவிலேற்றிக்
கொல்லப்பட்டனர்//
ரொம்ப நல்லவன்
என்று சொல்லி சொல்லியே பல நூற்றாண்டுகள்
நம்மை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடித்துவருகின்ற
னர்; நாமும் சராசரி காட்டுமிராண்டி மனிதரே;
போர்க்குற்ற சான்றுகள் கொஞ்சமா நஞ்சமா?
பலன்தான் இல்லை;
சான்றுகாட்டி கெஞ்சிக்கேட்க
விடுதலை ஒன்றும் பிச்சையல்ல;
இது இனவழிப்பு இதைத் தடுக்க இனம்
ஒன்றுசேர்ந்தாலே போதும்;
போர் என்பது வெற்றி என்ற ஒன்றால்
மட்டுமே அளக்கப்படுகிறது.//
தமிழன் நல்லவனும் கிடையாது அப்பாவியும்
கிடையாது; ஒவ்வொரு காலத்திலும்
ஒவ்வொரு இனங்களின் கை ஓங்கியிருந்தது;
இப்போது எதிரிகள் கை ஓங்கியுள்ளது;
காயத்தைக் காட்டி கையேந்தும்
பிச்சைக்காரன்போல
கணக்கிலடங்கா சான்றுகளை கையில்வைத்துக்க
ொண்டு அனைத்துலகத்திடம் ஓடாமல், வாங்கிய
அடியை தமக்குள் பரப்பி அடுத்த
போரை திட்டமிட வலியுறுத்துகிறேன்;
எதிரிகளெல்லாம் நம்முன் குழந்தைகள் ஆனால்
உண்மையில் தமிழன்தான் பொல்லாதவன்;
உள்நெஞ்சில் பெருந்தீ
கொண்டோர்க்கு இப்பதிவின் நோக்கம் விளங்கும்.
https://m.facebook.com/photo.php?fbid=423969407706718&id=10000280986