Friday, 27 November 2015

வணங்காமண் விட்ட கண்ணீர்

தொண்டைகிழிய அழுதுசெத்த குழந்தைகளும்
வணங்கா மண் என்ற உணவுக் கப்பலின் கண்ணீரும்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

இந்த உலகில் மனிதநேயம் இருப்பதாக இன்னும் நம்பிவரும் அப்பாவி முட்டாள்களுக்கு இந்தப்பதிவு

32 உலகநாடுகள் இலங்கைக்கு படையுதவி செய்து தமது செயற்கைகோள் வழியாக தமிழ்மக்கள் எப்படி எப்படியெல்லாம் கொல்லப்படுகிறார்கள் என்று இமைகொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

போரில் இனி புலிகள் வெல்வது கடினம் என்று உலகத் தமிழர்களுக்கு முன்பே புரிந்துவிட்டது.

பதறியபடி அவர்கள் உலகம் முழுவதும் போராட்டங்களை நடத்திக்கொண்டே தமிழ்மக்களுக்கு உதவயாருமில்லை என்பது புரிந்தவர்களாக "கருணைத் தூதுவன்" என்றொரு குழுவை அமைத்து  போர்வளையத்தில் உள்ள தமது சொந்தங்களுக்கு உதவ நிதி திரட்டி சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள 884டன் (1டன்=1000கிலோ) உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சிரியாவுக்கு சொந்தமான 'கேப்டன் அலி' என்ற கப்பலை (மேலே படத்தில்)  ஏற்பாடு செய்து அதற்கு 'வணங்காமண்' என்று பெயரிடுட்டு 07-5-2009 அன்று இலங்கையை நோக்கி அனுப்பிவைத்தனர்.

அது இலங்கைக்கு அருகில் வந்ததும்  இலங்கை கடற்படையினரால் முற்றுகையிட்டு 111மணிநேரம் சோதனையிட்டப்படுகிறது.
கப்பலில் நிவாரணப் பொருட்கள் மட்டுமே இருப்பதாகவும் ஆனால் இது விதிமுறைகளை மீறிவிட்டதாகவும் கூறி அதைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிட்டனர்.

ஆனால் இந்தக்கப்பலைக் கொண்டு சென்ற பிரித்தானியத் தமிழர் அதை திருப்பி எடுத்து செல்ல மறுத்துவிட்டார்.
சர்வதேச கடல் எல்லையில் இருந்தபடி எப்படியாவது தமிழ்மக்களுக்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டுசேர்ப்பது என்ற உறுதியுடன் தமிழகத்தைத் தொடர்பு கொண்டார்.

சென்னையில் 'மனிதம்' என்ற தொண்டு அமைப்பு சென்னைத் துறைமுகத்தில் அந்தக் கப்பலின் பொருட்களை இறக்கி தமிழருக்கு அனுப்ப அனுமதி கேட்டது.

தமிழர்களைக் கொல்வதில் மும்முரமாக இருந்த இந்தியா அதற்கு அனுமதி மறுத்துவிட்டது.
"கொன்றது போதுமா இல்லை இன்னும் கொஞ்சம்பேரைக் கொல்லலாமா"
என்று ஆலோசனை நடத்த இலங்கை உயர்மட்டக்குழு இந்தியா வந்தது.

தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் வணங்காமண் பொருட்களை ஏற்றுக்கொள்ளும்படி இந்தியாவை ஒருவர் மாற்றி ஒருவர் கெஞ்சிக்கொண்டிருந்தனர்.
அவர்களால் முடிந்தது அதுதான்.

இலங்கை உயர்மட்டக்குழு இந்தியாவிடம் 'வணங்காமண் பொருட்களை நீங்களே எடுத்து அனுப்பிவையுங்கள் நேரமிருந்தால் யோசிக்கிறோம்'
என்று கட்டளை போட்டுவிட்டு வந்தனர்.

பிறகு சென்னைக்கு வணங்காமண் கொண்டுவரப்பட்டு "கேப் கலோராடா" என்ற கப்பலுக்கு பொருட்கள் மாற்றப்பட்டு இலங்கைக்கு கொண்டு சென்று கொழும்பில் இறக்கப்பட்டன.

அங்கே அந்த நிவாரணப்பொருட்கள் பல மாதங்கள் கேட்பாரின்றி கிடந்தன.

இந்நிலையில் போர் முடிந்து பெரும்பாலான மக்கள் செத்துபோய்விட்டனர்.

செயற்கைக்கோள் வழியாகப் பார்த்து ரசித்தவர்கள்
'இந்தத் தாக்குதலில் ஒரு ஆயிரம்பேர்
இந்த தாக்குதலில் ஒரு இரண்டாயிரம்பேர்'
என்று குத்துமதிப்பாக எண்ணிக்கொண்டிருந்தனர்.

போர் முடிந்ததும் நாற்பதாயிரம் பேர் இறந்திருக்கலாம் என்று கூறினார்கள்.
அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை.

தடைசெய்யப்பட்ட குண்டுகள் மூலமும் பலமுனை ஆயுதங்கள் மூலமும் நேரடியாகச் செத்தது நாற்பதாயிரம் அல்லது அறுபதாயிரம் பேர்தான்.

ஆனால், உணவு கிடைக்காமல் காயத்துக்கு மருந்து கிடைக்காமல் கதறிக்கதறி அணுஅணுவாகச் செத்தவர்கள் ஒரு இலட்சத்துக்கும் மேல்.

இதை வெளிக்கொண்டு வந்ததும் ஒரு தமிழரான மன்னார் பாதிரியார்தான்.

இந்த சமையத்தில் தமிழகத்திலிருந்து வந்தேறிக்குழு ஒன்று அதன் அடிபொடிகளுடன் இலங்கைக்குச் சென்று இராசபக்சவுடன் விருந்துண்டு இளைப்பாறி கைகுலுக்கி வாழ்த்திவிட்டு வந்தனர்.

தெலுங்கன் கருணாநிதியிடம் வணங்காமண் பொருட்கள் பற்றி கேட்கப்பட்டபோது அவை தமிழருக்குப் போய்சேர்ந்துவிட்டதாக நாகூசாமல் புழுகினான்.

ஐந்து மாதங்கள் திறந்தவெளியில் அழுகிக்கொண்டிருந்தன அந்த நிவாரணப்பொருட்கள்.

அதன் பிறகு இலங்கை அந்த பொருட்களுக்கு விதித்திருந்த இருபது இலட்சம் வரியை செஞ்சிலுவைச் சங்கத்தின் இலங்கைக் கிளை கட்டி (வழக்கமாக நிவாரணப்பொருட்களுக்கு பரம ஏழைநாடுகள் கூட வரிவிதிப்பதில்லை. அதையும் செய்தது இலங்கை) கெட்டுப்போன பொருட்களை நீக்கிவிட்டு 614டன் உணவு,மருந்து பொருட்களை தமிழர்களுக்கு விநியோகிக்க 23-10-2009 அன்று எடுத்துச்சென்றது.

மறுநாளே அந்தப் பொருட்கள் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்படுவதாகவும் அதை விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து தாம் விலகிக்கொள்வவதாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.

வேறென்ன நடந்திருக்கும் உலகத்தமிழர் உழைத்து ஒன்றுதிரட்டிய பணத்தில் வாங்கப்பட்ட பொருட்கள் காயம்பட்ட சிங்கள இராணுத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், அந்தக் கப்பலுக்கு உயிர் இருந்திருந்தால் கைக்கெட்டும் தூரத்தில் தாய்ப்பால் தீர்ந்துபோன அன்னை மார்பில் முட்டி பசிக்கு அழுது அழுது தொண்டை புண்ணாகி அந்த வலியும் பொறுக்காது மீண்டும் அழுது அழுது கோரமரணத்தைத் தழுவியக் குழந்தைகளுக்கு தான் சுமந்துவந்த உணவைத் தரமுடியவில்லையே என்று கண்ணீர் சிந்தி உயிரை விட்டிருக்கும்.

மறக்கக்கூடாது தமிழரே
மறக்கக்கூடாது.

http://nerudal.com/nerudal.11306.html
http://www.tamilolli.com/?p=9173
http://tamilwin.easyms.com/search.php?key=%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&page=3

No comments:

Post a Comment