தமிழருக்கு (மட்டுமே) உரித்தான மதம்:
நாளை நாம் நமது வன்மையால் நிறுவும் நமது தமிழ்க்குடியரசில் சமத்துவம் உடனே பிறந்துவிடாமா என்றால் பிறந்துவிடாது;
அதைவைத்து எதிரிகள் நம்மைப் பிளவுபடுத்த முயற்சிப்பார்கள்;
அதிலும் சாதி, மதம், பணம், பால், நிறம், இடம் என்று பல்வேறு காரணங்களால் விளைந்த ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
இதை எதிர்கொள்வது என் அறிவுக்கு எட்டியவரை கருத்துக்களை முன்வைக்கிறேன்.
மற்றவர்களும் முன்வையுங்கள்.
முதலில் நாம் 'மதத்தை' எடுத்துக்கொள்வோம்.
தமிழர் எந்த மதத்தை பின்பற்றலாம் என்ற எனது தற்காலிகக் கோட்பாடுகளை முன்வைக்கிறேன்.
*தமிழரின் மதம் இதுவரை உலகில் பின்பற்றப்படாத மதமாக புத்தம் புதிய மதமாக இருக்கவேண்டும்
*தமிழரின் மதம் தமிழருக்காக மட்டுமே இருக்கவேண்டும்;
ஏனென்றால் தமது மதத்தின் பெயரால் வேறொரு இனமக்களிடம் புதியபிரிவினை ஏற்படுவதை தமிழியம் விரும்பவில்லை.
*தமிழர் மதம் என்பது தீவிர இறைமறுப்பையும் இயற்கையைக் காப்பதையும் வலியுறுத்த வேண்டும்.
* தமிழர் மதம் பிறமதத்தைப் பின்பற்றும் தமிழரை தம்முடன் இணையுமாறு வற்புறுத்தக்கூடாது.
*தமிழர் மதம் உணவுக்காகக் கொல்வதை பாவமாகக் கருதக்கூடாது.
*தமிழர்மதம் தமிழ்த்தாயை சிலைவடித்து,
தமிழ்க் கட்டிடக்கலையின்படி கட்டப்பட்ட,
எந்தவொரு மதத்தழுவலும் இல்லாத,
கோயில்கள் கட்டி
அதில் தமிழ்மொழியை வளர்க்கும் விதமான திருத்தலங்கள் நிறுவப்படுவதை வலியுறுத்துகிறது
.
*தமிழ்கோவில்களில் தமிழரின் இசை, ஆடல், தற்காப்புக் கலைகள் மட்டுமே நடக்கும்.
கட்டிடக் கலையை ரசிக்க, இயற்கையை ரசிக்க,
கலைகளை ரசிக்க மட்டுமே அந்தக் கோவில்கள் இருக்கும்.
*தமிழர் மதம் உடலில் மானத்தை மறைக்கும் துணியைத் தவிர யாதொரு ஆடம்பர குறியீடுகளையோ நகைகளோ மதஅடையாளங்களோ அறவே வெறுக்கிறது.
*தமிழர் மதம் மற்ற மதங்களில் உள்ள ஆக்கமான கூறுகளை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து தம்முடன் இணைத்துக்கொள்தல் வேண்டும்.
*திருமணம் பண்டைய தமிழ்முறைப்படி நடத்தப்படும்.
திருமணம் செய்வோர் பெற்றோரின் இசைவு பெற அவசியமில்லை.
ஒருத்திக்கு ஒருவன் என்ற நடைமுறை பின்பற்றப்படும்.
துணையிழந்தோர் மறுமணம், மணமுறிவு மற்றும் அதற்குப் பின்னர் மறுமணம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.
*தமிழ் இலக்கிய காப்பியங்கள் ஆராயப்பட்டு குறைகள் நீக்கப்பட்டு தற்காலக் கண்ணோட்டத்துடன் சுருக்கமான ஒரு வேதநூல் தயாரிக்கப்படும்;
அதைக் கற்பதும் கட்டாயமில்லை.
*பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரையும் ஒரே மாதிரியான மரியாதையுடன் பேசுவதை வலியுறுத்தும்.
*மக்கள் ஒருமைப்பாட்டைக் காக்க ஒரு மூலையிலிருந்து மற்ற மூலைக்கு மக்கள் பயணம் செய்யும் வகையில் கோயில்கள் நிறுவப்பட்டு,
விருப்பமுள்ளவர்கள் புனிதப்பயணம் செய்யலாம்.
*மதத்திற்கு என்று தனியாக பணச்செலவோ கால ஒதுக்கீடோ வழங்கவேண்டி வரக்கூடாது.
*மற்ற இனத்தினர் தமிழர்மதம் போலவே தம் மக்களுக்கென்றே தமது தாய்மொழியை தமது பாரம்பரியப்படி வணங்குவதை தமிழ்மதம் வரவேற்கிறது.
*இயற்கையை அதாவது தாவரங்கள், நீர், காற்று, நிலம், காடு, விலங்குகள் ஆகியவற்றைக் காப்பதே பக்தி என்று எண்ணல் வேண்டும்.
*பொங்கல் பண்டிகை எம்மதத்தின் சார்வும் இல்லாமல் பழங்காலத் தமிழ்முறைப்படிக் கொண்டாடப்படல் வேண்டும்.
*மதத்திற்கு என்று எந்தவொரு சடங்கும் கூடாது.
பிறப்பு, இறப்பு, பூப்பெய்தல், பரிசம், திருமணம் போன்றவை சொந்தங்கள் ஒன்று கூடுதல் என்பதற்காக மட்டுமே.
பெரிதாகக் கொண்டாடுவதோ பரபரப்பு ஏற்படுத்தவோ கூடாது.
*அன்றாட வாழக்கையில் மதத்தின் தலையீடு கூடாது.
வருடத்திற்கு நான்குநாட்கள் எளிய கட்டாயமில்லாத மதரீதியான நிகழ்வுகளுக்கு சுற்றுலாவுக்கு பண்டிகைகளுக்கு ஒதுக்கலாம்.
*பிறமதத்தை விமர்சிக்கவோ தமது மதத்தை பரப்பவோ முயற்சிக்கக் கூடாது.
*மதயோகிகள், மதகுருக்கள், மதப் பிரசங்கிகள் என்று யாரும் இருக்கக்கூடாது.
*எந்த மதத்திலும் திருமணம் செய்யலாம். திருமணத்தின் பின்னும் விருப்பமான மதத்தை பின்பற்றலாம்.
*கண்மூடித்தனமான கதைகள், நம்பிக்கைகள், சடங்குகள், முறைகள் என்று எதுவும் கூடாது.
*தமிழர் மதத்தைத் தழுவுவோர் தமது பழைய மதவழக்கங்களை அறவே கைவிடவேண்டும்.
ஆனால், அனைத்து மதவுணர்வுகளையும் மனிதரையும் உயிர்களையும் சமமாக மதிக்கவேண்டும்.
*மதத்தில் செய்யப்படும் திருத்தங்கள் தமிழ்மதத்தவர் அத்தனைபேரிடமும் வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மை கிடைத்தபிறகே செய்யப்படல் வேண்டும்.
*பொதுஇடங்களிலோ, தொழிற்கூடங்களிலோ, பெயருடன் சேர்த்தோ, கடிதங்கள் அழைப்பிதழ் சுவரொட்டி என எந்த இடத்திலும் மதத்தைக் குறிப்பிடக்கூடாது.
நாலுபேர் பார்க்கும்படி இருக்கக்கூடாது.
பொதுஇடங்களில் தமிழன்னைக்குச் சிலைவைப்பது மதவழிபாட்டிற்கென்று ஆகாது.
*மது அருந்துதல், புகைப்பிடித்தல், பலதாரமணம், வரதட்சனை, பெண்கருக்கொலை, மூளைவெறியேற்றும் பழக்கங்கள் அறவே கூடாது.
*தமிழ்மொழியை முடிந்த அளவு பயன்படுத்துவதை வலியுறுத்துகிறது.
*தமிழ்மதம் தழுவியவர்கள் விருப்பமில்லாத நிலையில் கைவிடலாம். தமிழ்மதம் தழுவுவதும் கைவிடுவதும் எழுத்துப்பூர்வமாகப் பதியப்படவேண்டும்.
Friday, 27 November 2015
தமிழருக்கு (மட்டுமே) உரித்தான மதம்
Labels:
ஆதி பேரொளி,
இறை மறுப்பு,
கடவுள்,
சிந்தனை,
மதம்,
வேட்டொலி
Subscribe to:
Post Comments (Atom)
This comment has been removed by the author.
ReplyDeleteஏற்கனவே தமிழருக்கு ஆசிவக மதம் இருக்கிறதே? எதற்கு புதிதாக உருவாக்க வேண்டும்? நாம் இந்துக்கள் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டு நாம், சிவனையும், மாயோனையும், கந்தனையும், இந்திரனையும், கொற்றவை போன்றவர்களை வழிபட்டாலே போதுமானது. ஔவைக்கு கோவில்கள் வேண்டும். ஔவை கோவில்களில் முட்டையும், கறியும் கொண்ட பிரசாதம் வழங்க பட வேண்டும். விநாயகருக்கு பதில் ஊர் தோறும் முருகன் கோவில்கள் ஏற்படுத்த வேண்டும். இதை எல்லாம் தமிழர் அரசு தோன்றினால் தான் செய்வோம் என்று சொல்லுவதை விட, இப்பொழுதே ஆரம்பிப்பதே சிறப்பு.
ReplyDelete