Monday 30 November 2015

இங்கே காவிரி ஆற்று மண் விற்கப்படும்

"இங்கே காவிரி ஆற்று மண் விற்கப்படும்"

பாலக்காட்டில் பலகையில் எழுதிப்போட்டே விற்கிறார்கள்.

தமிழகத்தில் காவிரியில் ஒரு யூனிட் மண் அள்ள ரூ.350,
இதை அருகிலிருக்கும் கேரளாவிற்கு கொண்டுசென்றால் போதும் 350க்கு ரூ.11,000 கிடைக்கும்!

கர்நாடகா மற்றும் ஆந்திராவில் ரூ.12,000முதல் ரூ18,000 வரை கிடைக்கும்.

இதையே கடல்தாண்டி கொண்டுசென்றால்?

இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றுவிட்ட மணல் கொள்ளையர்கள் கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள்.

மாலைத்தீவுக்கு
2008-2009 இல் 4.5 லட்சம் டன் மணலும்,
2009-2010 இல் 10.15 லட்சம் டன் மணலும்,
2011-2012 இல் 12 லட்சம் டனா மணலும்
கப்பலில் மூலம் அனுப்பி விற்கப்பட்டுள்ளது.

கேரளாவிலும் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் அந்தந்த மண்ணின் மைந்தர்கள் 'மணல் அள்ளத் தடை' போட்டு தமது மண்ணைப் பாதுகாத்துவிட்டனர்.

அம்மாநிலத்தார்கள் அநியாய விலை கொடுத்தேனும் தமிழகத்தின் மணலை வாங்கி வீடுகட்டுகிறார்கள்.

என்றால் இலங்கைத் தீவுக்கு சற்று அப்பால் இருக்கும் மாலைத்தீவுக்கு மணல் எங்கேயிருந்து போகும்?

வேறு எங்கேயிருந்து?
திறந்துகிடக்கும் வேட்டைக்காடான தமிழகத்திலிருந்துதான்.

மற்ற பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவு மணலை கப்பலேற்றி அனுப்புவதற்கு பெரிய கெடுபிடி எதுவுமில்லை.

தமிழகத்தின் மணல் தேவைக்கும் அள்ளப்படும் மணலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒரு சிறு எடுத்துக்காட்டு மூலம் கூறவா?

தாமிரபரணியின் தோழப்பண்ணை என்ற இடத்தில் ஒரு மாதத்திற்கு அள்ளிக்கொள்ள அனுமதிக்கப்பட்ட மணல் ஒரு மாதத்திற்கு 9000 யூனிட்.
ஆனால், ஒரு மாதத்தில் அங்கே அள்ளப்பட்டது 58,000 யூனிட்.

அதாவது ஆறரை மடங்கு!
தமிழகத்தின் மணலில் இருந்துதான் மற்ற ஐந்து இடங்களுக்கு மண் செல்கிறது.

(திரு.ஆர்.நல்லகண்ணு அவர்கள் தாமிரபரணியைக் காக்கத் தொடுத்த பொதுநலவழக்கின் தரவுகளில் இருந்து)

இது மணல்,
காட்டுவளமோ நீர்வளமோ இல்லை திருப்பி உருவாக்க.

நாம் தீவிரவாதிகளாக மாறி தென்னிந்தியாவையும் மாலைத்தீவையும் ஆக்கிரமித்து,
அங்கேயிருந்து மணல் அள்ளி கொண்டுவந்து நம் ஆற்றுப்படுகைகளில் நிரப்பினால்தான் உண்டு.

(இனவெறிக்கு இரையான பாலாறு
vaettoli.blogspot.in/2015/07/blog-post_45.html?m=1 )

No comments:

Post a Comment