ஆண்டு 2153, நவ07.
அத்தியாவசியக் கொலைகள்:
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
மூலிகை வாசனை வீசும் மனிதர்கள் செய்யும் அத்தியாவசியக் கொலைகள்:-
மரம், செடிகொடிகளின் பச்சை வாசனை தூய்மையான காற்றில் கலந்து வீசும் எங்கு நோக்கினும் பச்சை பசேல் என்ற தோற்றம்.
ஆம்; நான் வந்திறங்கியது 'தமிழ்குடியரசு' என்று பூவுலக சொர்க்கத்தில்.
ஆமாம் சொர்க்கமேதான்.
பரபரப்பான இந்த விமான நிலையம் அடர்த்தியான வனம்போல காட்சியளிக்கிறது என்றால் அப்படித்தானே சொல்லவேண்டும்.
மரங்களை விட இயற்கையானவர் இந்தக் குடியரசின் மக்கள்.
இவர்களை இங்கே வர்ணித்தே ஆகவேண்டும்.
இரண்டடி தூரத்திலேயே இவர்கள் மேல் வீசும் மூலிகை வாசனை உங்களை வரவேற்கும்.
பெரும்பாலும் கறுப்பாகவோ அல்லது மாநிறமாகவோ இருப்பார்கள்.
ஆனால், சிகப்பான மனிதர்களைவிட அழகானவர்களாக இருப்பார்கள்.
பொலிவான முகம், ஈரம் தோய்ந்த வெள்ளையான கண்கள், மினுமினுக்கும் தோல், மிகமிக அடர்த்தியான கருப்பு நிறத்தில் கண்மைபோல கண்களைச்சுற்றிய முடிகள், அதே கரியநிறத்தில் புருவம், அதே அடர்கருப்பில் வயதானாலும் நரைக்காத பளபளப்பான தலைமுடி, புன்னகைத்த உதடுகளுக்குள் பளிச்சிடும் வெள்ளைவெளேரென்ற பற்கள், வயதானாலும் உருக்குலையாத வடிவான உடலமைப்பு, சிறிய குழந்தையிலிருந்து பெரிய மனிதர் வரை மரியாதையாக பேசும் நாகரீகம்.
வெயில் காலத்தில் தளர்வான வெண்ணிற ஆடை, குளிர்காலத்தில் இறுக்கமான கறுப்பு ஆடை, நேர்த்தியாகத் தரமாக அணிவார்கள்.
உடலில் உடையைத் தவிர செருப்பு, இடுப்புக்கச்சை, கைகுட்டை மட்டும் அணிவார்கள் மற்றபடி எதுவும் அணியமாட்டார்கள்.
ஆண்களும் பெண்களும் காதுகுத்தி இருப்பார்கள், சில பெண்கள் இடதுபக்கம் மூக்கு குத்தியிருப்பார்கள் ஆனால் அதில் எதுவும் அணிவதில்லை.
கடவுள் நம்பிக்கை எதுவும் கிடையாது.
ஆனால், சகமனிதர்களை கடவுள் என்று பொருள்படும்படி 'சாமி' 'எல்லே' 'ஆண்டை' என்றே அழைப்பார்கள்.
இயற்கையை மிகவும் நேசிப்பார்கள்.
தமது மொழியின் மீதும் இனத்தின் மீதும் நாட்டின் மீது அழுத்தமான பற்று வைத்திருப்பார்கள்.
இவர்கள் நாட்டைப் பற்றியும் இங்கு கூறவேண்டும்.
இங்கே தனிமனிதருக்கு என்று எதுவும் சொந்தம் கிடையாது.
அத்தனையும் அரசுக்கு சொந்தம்.
அரசு என்பது ஐந்தாண்டுக்கு ஒருமுறை வாக்குப்பதிவு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
அதில் சிறப்பு எதுவும் இல்லை.
ஒரு குடும்பத்திற்கு ஒரு வீடு அதைச்சுற்றிய தோட்டம் கொடுக்கப்படும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு இருசக்கர வண்டி, ஒரு நாற்சக்கர சொகுசு வண்டி வழங்கப்பட்டிருக்கும் அவையும் மின்சாரத்தில் ஓடும்,
புகைகக்கும் வாகனங்களை அறவே வெறுப்பவர்கள் அதனால் அத்தகைய வாகனங்கள் படையினரிடம் மட்டுமே உண்டு.
வீட்டுக்குத் தேவையான அத்தனையும் சீப்பு முதல் குளிர்சாதனப் பெட்டிவரை அரசாங்கம் கொடுத்திருக்கும்.
எது பழுதடைந்ததோ அதை சரிசெய்து தருவார்கள் அதுமுடியாத நிலையில் பழையதை திருப்பி அளித்துவிட்டு புதிது பெற்றுக்கொள்ளலாம்.
ஒவ்வொரு ஊருக்கும் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு செய்யப்பட்டிருக்கும்.
ஒவ்வொருநாளும் அரசு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று என்ன தேவை என்று நேரடியாக விசாரித்து தேவையானதை குறித்துக் கொண்டு மொத்தமாக வாங்கிவந்து கொடுத்துவிடுவார்கள்.
அத்தனை பேருக்கும் அரசே வேலை கொடுக்கும்.
அதாவது எல்லாவேலைகளுமே அரசுதான் செய்யும்.
நிலத்தை உழுவது, பொருட்களைத் தயாரிப்பது, கடைகள் நடத்துவது என அத்தனையும் அரசே செய்யும்.
வாரத்திற்கு ஐந்துநாட்கள் வேலைஇரண்டுநாட்களில் ஒருநாள் அரசு நடத்தும்கருத்தரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடக்கும்அங்கே செல்லவேண்டும்.
அதில் நாட்டின்நிலைமை குடிமக்களின்கடமை பற்றி வகுப்பு எடுக்கப்படும் அதுவும்மூன்றுமணிநேரம் அதற்கும் தேநீர், நொறுக்குத் தீனி,அசைவ உணவு வழங்கிவிடுவார்கள.
மீதி அரைநாள்கலை நிகழ்ச்சிகள், இசை, விளையாட்டு, மனவளக்கலைகள்,போர் பயிற்சி எதிலாவது பங்கு பெறலாம்.
தேவையானதை கடைகளுக்குச்சென்று எடுத்துக்கொண்டு அரசு அளித்துள்ளகுடியுரிமை எண்ணை பதிவு செய்துவிட்டால் தானாகவங்கிக் கணக்கிலிருந்து தொகை கழிக்கப்பட்டுவிடும்.
அதுவும் இத்தனை தொகைவரைதான் நீங்கள் கடைகளில்வாங்கலாம் என்று வரைமுறை உண்டு.
உணவகங்களிலோ வீட்டிலோ தங்களுக்குத் தேவையானதைத்தாங்களே எடுத்துக் கொள்ளவேண்டும், தாம் பயன்படுத்தியபொருளை தாங்களே சுத்தம்செய்துவைக்கவேண்டும்.
துப்புரவாளர் என்று யாரும்எங்கும் கிடையாது.
அரசு நடத்தும்கடைகளிலோ உணவகங்களிலோ, ஆலைகளிலோ,காவல்துறையிலோ, வீட்டில் சிறுதொழிலோ,வேளாண்மையோஎதில் வேலைசெய்தாலும்வேலைச்சுமை என்பது அனைவருக்கும்பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும்.
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லை.
வேலைக்குச் செல்பவர்களில் உயர்பதவியில் உடலுழைப்பு இல்லாமல்வேலைசெய்பவர்களுக்கு 8மணிநேரம் வேலை தேவையானசம்பளம்.
அதே உடலால் உழைப்பவர்களுக்கு 6மணிநேரவேலை கொஞ்சம் சம்பளம் கூடக் கிடைக்கும்.
அதுவும்கையில் கிடைக்காது வங்கியில் உங்கள் கணக்கில்சேர்க்கப்படும்.
அதாவது தமிழ்க்குடியரசில் பணம்என்கிற காகிதம் கிடையாது.
ஒரு குழந்தை பிறந்ததுஅதற்கு ஒரு குடியுரிமை எண்ணும் வங்கிக்கணக்கும்ஆரம்பித்து குறிப்பிட்ட தொகை முதலீடு செய்யப்படும்.
அந்தக் குழந்தைக்கு படிப்பு அரசே அளிக்கும்.
அத்தனை பள்ளிகளும் அரசு நடத்துவதால் ஒரே தரத்துடன்இருக்கும்.
தாய்மொழியில்தான் கல்வி.
இணைப்புமொழியாஆங்கிலம் சொல்லிக் கொடுப்பார்கள்.
குழந்தைகள்ஆறுமணிநேரம் பாடம், இரண்டு மணிநேரம்உடற்பயிற்சி மற்றும் தற்காப்புக்கலைகள், வாரம் ஒருநாள் விளையாட்டும் கருத்தரங்கும் ஒரு நாள் விடுமுறை;
16வயதில் கட்டாய உடற்பயிற்சிகள், 18வயதில்போர்ப்பயிற்சி மற்றும் விருப்பமான மேற்படிப்பு,21வயதில் அரசுவேலை.
எல்லாம் அரசே செய்யும்.
18வயதுக்கு மேல் திருமணம் செய்யலாம்.
திருமணம்செய்ததும் ஒருவீடு, தோட்டம், தேவையானஅனைத்து பொருட்களும் தரப்படும்.
ஒரு வேளை வேறு ஊருக்கு குடிபெயர்ந்தால் அந்தவீடு மற்றும் பொருட்களை அங்கே விட்டுவிட வேண்டும்;குடியேறும் ஊரில் வேறுஒரு வீடு கிடைக்கும்.
வீடுகளுக்கு தண்ணீர், மின்சாரம், மரக்கன்றுகள் மற்றும்அத்தனை பொருட்களும் அரசு தரும்.
மக்களுக்கு மருத்துமும், காப்பீடும்அரசே வழங்குகிறது.
இத்தனைக்கும் பணம்அரசுக்கு எங்கிருந்து வருகிறது என்றால்,
அரசே நிலத்தை உழுது உணவை உற்பத்தி செய்கிறது,அரசே புகை கக்காத(அல்லது புகையை சுத்திகரித்துவிடும்)ஆலைகள் மூலம்பொருட்களைத் தயாரிக்கிறது, அரசே மக்களிடம்வேலை வாங்குகிறது, அரசே கடைகள் நடத்தி வணிகம்செய்கிறது, உள்நாட்டில் பயன்பட்டது போகமீதியை உற்பத்தி செய்து அந்த வருமானத்தில்தேவையானதை இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி செய்வது மிகமிகக் குறைவு ஏனெனில்தேவையான அனைத்தும் தாமே தரமாக தயாரித்துக்கொள்கிறது.
உற்பத்தி செய்வது பெரும்பாலும் உணவுப்பொருட்களும் மூலிகைகளுமே அதுவும் மக்கள் தம்வீட்டிலேயே தேவையானவற்றை விளைவித்துக் கொள்வதால்அரசாங்க நிலத்தில் விளைவதில் அரிசி, கோதுமை போகமற்ற வேளாண்பொருட்கள் 60% மிஞ்சிவிடுவதால்அவை இயற்கையான முறையில்பதப்படுத்தப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அதுவும் ஏழைநாடுகளுக்கு குறைந்த விலையில்கொடுப்பார்கள்.
தவிர இங்கே பாதுகாக்கப்பட்டவனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகள் மூலம்செய்யப்பட்ட மருந்துகள் உலகம் முழுதும் வரவேற்பைப்பெற்றுள்ளன.
மின்சாரம் என்பது என்பது நீர்வீழ்ச்சி, சூரிய ஒளி,காற்றாலை போன்ற இயற்கையான முறையில்தயாரிக்கப்படுகிறது.
மக்களுக்கும் சிக்கனமாகபயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
நூறு ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு நபர்மீதான தனிநபர்கடன் என்பது நாட்டின் சொத்துகள் அனைத்தையும் அரசாங்கஎடுத்துக் கொண்டு பெரிய பணக்காரர்களின் செல்வங்கள்நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் மூலம்சரிசெய்யப்பட்டு இன்று ஒவ்வொரு தனிநபர் மீதும்வங்கிக்கணக்கில் அவர்கள் வாழ்நாள் முழுதும்உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு வைப்பு உள்ளது.
ஆனால் பலருக்கு இது தெரியாது, அதை அவர்கள் பயன்படுத்தவாய்ப்பும் இல்லை.
வெளிநாடு செல்லும் தமிழர்தான் இதை தெரிந்து வைத்துள்ளனர் ஏனெனில்அவர்கள்தான் இதை பயன்படுத்தமுடியும் அப்படியே அவர்கள் பயன்படுத்த தகுந்த காரணம் சொல்லவேண்டும்.
அதற்கேற்ப பணம்அனுப்பப்படும்.
ஆனால், பெரும்பாலும் குடிமக்கள்வெளிநாடு செல்வதில்லை தேவையான அனைத்தும்நாட்டிலேயே இருக்கும்போது அவர்கள் வெளிநாடு செல்லவிரும்புவதும் இல்லை,
அரசும் அதை ஊக்குவிப்பதில்லை.
நூறு வருடம் முன்பு உலகம் முழுவதும் பரவியிருந்ததமிழர்கள்தாய்நிலத்திற்கு அழைத்துவரப்பட்டு குடியேற்றப்பட்டனர்.
இப்போதும் உலகில் தமிழர்கள் ஆராய்ச்சியாளராகவும்,மொழியாளர்களாகவும் உள்ளனர்.
அவர்கள்தான்அவ்வப்போது சென்று வருகின்றனர். பலநாடுகளில்விடுதலைப் போரில் வல்லரசுகளுக்கு எதிராகப் போரிடதமிழ்ப்படையில் உள்ள தமிழருக்கு அரசே பணம் அனுப்பிவிடும்.
வெளிநாட்டிலிருந்து வருபவர் அரசிடம் பணம்செலுத்தி அதற்கான எண் பெற்றுக் கொண்டு அதற்குள்செலவு செய்யவேண்டும்.
அரசவேலையாகவெளிநாட்டிலிருந்து வருபவருக்கு குறிப்பிட்ட அளவு மட்டும் பணம் ஒதுக்கப்படும்.
மற்றபடி வருடத்திற்கு ஒரு மாதம் அரசே சுற்றுலா செல்லஏற்பாடு செய்கிறது அதாவது குடியரசின்
ஒருமூலையில் இருக்கும் மக்கள் இன்னொரு மூலைக்கு இருக்கும் தமிழன்னைக் கோவிலுக்கு சுற்றுலா செல்வதன் மூலம் மக்களின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துகின்றனர்.
கோவிலில் தமிழர் கட்டடக்கலையும், ஓவியக்கலையும், சிற்பக்கலையும் கண்டுகளிக்கலாம்.
கடவுள் வழிபாடு கிடையாது.
அங்கே மூன்று நாட்கள் வரை தங்கி தமிழரின் ஆடல்,பாடல்,வரலாற்று நாடகங்களைக் கண்டுகளிக்கலாம்.
தமிழருக்கான தனிமதத்துக்கு மாறாத சிறுபான்மை மக்களான கிறித்தஇசுலாமியத் தமிழரும் அந்தக்கோவில்களுக்குச் செல்கின்றனர்.
தமிழர் எந்த மதத்தினரோ எந்த நாட்டில் வாழ்பவரோ அவரகள்ஒருதாய்ப்பிள்ளைகள் என்றே கருதிக்கொள்கின்றனர்.
தமிழில்பேசும்போது தவறாக ஒருவார்த்தையை தவறாக உச்சரித்தால்சட்டென்று பேச்சை நிறுத்தி தவறுக்கு வருந்துவார்கள்.
வேறு ஒரு மொழிச் சொல்லை தவறியும் தமிழுடன் கலக்கமாட்டார்கள்.
மற்ற மொழியினர் தமிழ்கற்பதை இவர்கள்விரும்புவதில்லை தத்தமது மொழியை கற்பதை வலியுறுத்துவர்.
வெளியாட்கள் தமிழ் தெரிந்தவர் என்றாலும் ஆங்கிலத்தில்பேசுவார்கள்.
தமிழ்தெரியாதத் தமிழர் தமிழ்கற்பதை ஊக்குவிக்கின்றனர்.
தமிழில் நவீன இலக்கியம்முதல் தொழில்நுட்பம் வரை அத்தனையும் உருவாக்கியுள்ளனர்.
வருடத்திற்கு ஒரு சுற்றுலா, பொங்கல் என்ற பண்டிகை தவிரஆன்மீகம் என்ற எதுவும் இல்லை.
கடவுள் இல்லையென்றுநம்புகிறார்கள்.
நடப்பவை அத்தனைக்கும்மனிதரே பொறுப்பு என்பது கொள்கை.
இவர்கள்மனிதனுக்கு மேலாக மதிப்பது இயற்கையை.
சாலைகளின்குறுக்கே சீரான இடைவெளிகளில் மேம்பாலம் அமைத்து செடிகொடிகளை நட்டு விலங்குகள்இடையூறின்றி ஒருபகுதியிலிருந்து மறுபகுதி கடக்கும் வகையில் அமைத்திருப்பார்கள்.
வீட்டின் நாலாபுறமும் மரம்நட்டுவளர்ப்பார்கள்.
வீட்டை ஒட்டி நச்சுகொண்ட உயிர்களை விரட்டும் செடிவகைகள் நடப்பட்டு இருக்கும்.
ஒரு வெளி, ஒரு வரவேற்பறை, ஒரு கூடம், இரு படுக்கையறைகள், கழிவறை, குளியலறை கொண்ட 5பேர்வசதியாக வாழும் வீடு ஒவ்வொரு குடும்பத்துக்கும்அளிக்கப்படுகிறது.
இதே போல தரைக்குக் கீழேயும் இருக்கும்.
குளிர்காலங்களிலும் போர்க்காலங்களிலும் தங்கிக்கொள்வர்.
தோட்டத்தில் பெரியமரங்களும் முன்வெளியில் சிறயவகை மரங்களும் மொட்டைமாடியில் சிறுசெடிகளும் நடப்பட்டிருக்கும்.
வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், மூலிகைகள், பூக்கள் போன்றவை வீட்டிலேயே விளைவிக்கப்படும்.
வீட்டிலிரக்கும் பெண்கள் இதைப் பராமரிக்கின்றனர்.
ஆண்கள் தோட்டவேலைகளைச் செய்கின்றனர், குழந்தைகள் சிறுசிறு உதவிகள்செய்கிறார்கள்
பொதுவாக வீட்டிற்குள் யாரும்இருப்பதில்லை தோட்டத்தில் புல்வெளியில்தான் அமர்ந்திருப்பர். தூங்குவதும் அங்கேதான்.
மனிதர் மட்டுமல்லாது தாவரங்களும்கேட்கும் வகையில் எல்லா இடங்களிலும் இனிமையான மெல்லிய தமிழிசை ஒலித்தபடி இருக்கும்.
வீட்டிலும் உடல்மேலும்நச்சுஉயிரிகள் அண்டாத மூலிகை தைலங்களை தடவியிருப்பர்.
இது அவர்கள் உடலோடு ஒட்டிக்கொண்டுள்ளது.
வியர்த்தால்மூலிகைவாசனைதான் வரும்.
குளிக்க, பல்துலக்க இயற்கையான பொருட்களையே பயன்படுத்துவர்.
நச்சுஉயிரிகள் கடித்தாலும் அவற்றைக் கொல்லமாட்டார்கஒவ்வொரு ஆண்டும் விலங்குகளைக் கணக்கெடுத்து அதற்குத்தக்கபடி உணவுக்காகக் கொல்வதை வரம்புடன் அனுமதிப்பர்.
தேவையான மூலிகை மருந்துகள் எப்போதும் வைத்திருப்பர்.
பெரும்பாலும் மருத்துவரிடம் செல்லும் அவசியமே இல்லை.
இங்கே வாழ்வோரின் சராசரி ஆயுள் உலகில் மற்றவரை விட அதிகம்.
முடிநரைக்காத வடிவான தேறிய உடற்கட்டு கொண்டதொண்ணூறு வயதுக்கு மேற்பட்டோர் இங்கே எல்லாத்தெருக்களிலும் உள்ளனர்.
வேதியியல் கலந்த மருந்தையோ, பானங்களையோ,உணவையோ இவர்கள் உட்கொள்வதில்லை.
எந்த தீய பழக்கவழக்கங்களும் போதைப் பொருட்களும் தமிழ்க்குடியரசில் இல்லை.
இயற்கையான பழச்சாறு, இளநீர், பதநீர்,கரும்புச்சாறு போன்றவை மட்டுமே.
சாரயம் குடிகாரர்களைத் திருத்தும் மையங்களில் குடிகாரர் திருந்தும்வரை பயன்படுத்தப்படுகிறது.
உளவியல் சிகிச்சை மூலம் மெல்ல மெல்ல குடிப்பழக்கம்குறைக்கப்பட்டு ஒரு மாதத்தில்குடிவெறியை மனதிலிருந்து அகற்றிவிடுவார்கள்.
இங்கே உளவியல்தான் எல்லாமே.
குற்றம் புரிபவர்களை பிடித்து அவரது நினைவுகளில் உள்ள கசப்பான கடந்தகால நிகழ்ச்சிகளை அழித்துவிடுவார்கள்.
அல்லது தண்டனை அளிக்காமலேயே தண்டனை அளித்ததாகபயத்தை மனதில் உருவாக்கிவிடுவார்கள்.
அப்படியும் திருந்தாதவர்களை சகலவசதிகளுடன் சிறையில்வைத்துவிடுவார்கள்.
அவர்கள் உள்ளேயே வேலை,பொழுதுபொக்கு, படிப்பு,விளையாட்டு உண்டு.
மாதம் ஒருமுறை காவலுடன் குடும்பத்தினரைப் பார்க்க செல்லலாம்.
துன்புறுத்தும் தண்டனைகள் கிடையாது.
குற்றங்கள் மிகவும் குறைவு.
எல்லாருக்கும் எல்லாம்கிடைத்தபிறகு குற்றங்கள் நிகழ்வது சாத்தியமில்லை.
குடும்பத்தில் ஏற்படும் பூசல்கள்,அண்டை மனிதருடனானதகராறுஎன சகலமும் உளவியல் ரீதியான அறிவுறுத்தல்மூலமே தீர்க்கப்படுகின்றன.
இங்கே கணிகைக்கூடங்களும் உள்ளன.
அதில் தமது உடலை பாலியல்தேவைக்காக மற்றவர் பயன்படுத்த அனுமதிக்கும் ஆண்களும் பெண்களும்இருப்பார்கள்.
துணை உள்ளவர்கள் அங்கே போகத்தடை.
துணையை இழந்தவர்களை அல்லது துணை நோய்வாய்ப்பட்டவர்களை மனரீதியாக ஆராய்ந்து உடல்நிலைக்கு ஏற்ப மாதத்திற்கு இத்தனைமுறை என்ற வரம்பு விதித்து தக்க பாதுகாப்புடன் அனுமதிப்பர்.
இந்தப் பாலியியல் தொழில் செய்பவர்களுக்கு அரசே சம்பளம் கொடுக்கிறது.
இவர்கள் சமூகத்தால் சேவையாளராகமதிக்கப்படுகின்றனர்.
கருத்து சுதந்திரம், போராடும் உரிமை, சட்டரீதியானபாதுகாப்பு அனைவருக்கும் உள்ளது.
நடுஇரவில் தனியே ஒரு இளம்பெண் எங்கும் சென்றுவரும் அளவுக்கு காவலும்பாதுகாப்பும் பேணப்படுகின்றன.
இவர்களின் படையைப் பற்றி கூறவேண்டுமே!
உடல் ஊட்டமாகமக்கள், 18வயதுக்கு மேற்பட்ட அனைவரும்போர்பயிற்சி பெற்றவர்கள்,
வீட்டுக்கு ஒரு நவீன ஆயுதம். படைவீரர்களோ இதற்கு ஒரு படிமேல்.
நான் போனமுறை வந்தபோது,'எதிரிப்படைகள் நெய்யாற்றைக் கடந்துவிட்டார்கள் புறப்படுங்கள்'என்று ஒலிபெருக்கியில் அறிவித்ததும் நான் இருந்த ஊரில் வீட்டுக்கு குறைந்தது ஒருவர்ஆயுதத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டனர்.
நானும்சென்றேன்.
அங்கேயிருந்து 40கிமீ தூரத்தில் கொடூரமான போர் நடந்தது எனக்குத் தெரியாத அளவுக்கு அமைதியாக இருந்தது நான் இருந்த பகுதி.
நான் செல்லும்போது வழியில் நின்ற மக்கள் பதற்றமோ அச்சமோ சிறிதும் இல்லாமல் போர்நடப்பதையும்திரும்பிச் செல்லும்படியும் என்னைப் பார்த்து புன்னகையுடன் எச்சரித்தனர்.
பலர் பூத்தொட்டிகளைக்கூட பத்திரமாக சுரங்கத்திற்கு எடுத்துச்சென்றதைப் பார்த்தேன்.
இரண்டு மணிநேரத்தில் நான் அந்தஆற்றங்கரைக்குப் போய்விடலாம்.
வழிநெடுக ஆயுதங்களைச்சுமந்தமக்கள் தம் தாய்மண்ணுக்கு ஆபத்து என்றதும் காப்பாற்றவிரைந்துகொண்டிருந்தனர்.
அப்பகுதியை நெருங்கவும் பல்குழல் பீரங்கிகளால் எதிர்தரப்பிலிருந்து தாக்குதல்நடந்தபடி இருந்தது.
குண்டுதாக்குதலால் விழுந்தமரங்களை அம்மக்கள் கவலையுடன் பார்த்தனர்.
ஒரு இடத்தில்நான்குமரங்கள் சாய்ந்துவிட்டன.
அதைச் சுற்றி சோகம் கப்பிய முகத்துடன் நின்றிருந்தனர்.
தமிழ்மக்கள் பெரும்பாலும்அழுவதில்லை.
நான்போய்ச்சேருமுன்னே அந்தப்பகுதி மீட்கப்பட்டிருந்தது.
பார்க்கவேண்டுமே! இந்த அமைதியான மக்களுக்குள்இப்படி ஒரு வீரமா என்று வாயடைத்துப்போனேன்.
ஒரே பிணக்குவியல்தமிழர்படையைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு,எங்கு நோக்கினாலும் எதிரிப்படையினரின் சடலங்கள்.
தமிழ்ப்படை தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருந்தது.
எனக்கு அதற்கு மேல் செல்ல இசைவு மறுக்கப்பட்டது.
காலில்காயம்பட்டதால் மருத்துவ வண்டி ஒன்றில் ஏறினேன்.
அதில் வயிற்றிலும் இடது விலாவிலும் பலத்த காயம்பட்ட ஒருபெண்ணை ஏற்றினர்.
ஆனால், அவள்வலியின்றி நிதானமாக என்னுடன் பேசியபடி வந்தாள்.
முன்னனிப் படைப்பிரிவைச் சேர்ந்தவள்.
அந்தப் படையில் இருப்பவர்கள் ஒரு வாரம் வரை கூட தூங்காமல், சாப்பிடாமல், தண்ணீர்கூட அருந்தாமல் தொடர்ந்து இயங்கும் அளவுக்கு தயார்செய்யப்பட்டவர்கள்.
காயம் சீக்கிரம் ஆற, வலி உணர்வு குறைய தேவையான தைலங்கள் குருதியிலேயே கலந்துவிடப்பட்டுள்ளன.
தமிழ்ப் படையினர் நினைத்த மாத்திரத்தில் உயிர்விட ஒருநிமிடம் மூச்சை நிறுத்தினால் போதும் குருதியில் பரவி உயிரை மாய்க்கும் நஞ்சும் இவர்கள்உடலில் வைக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் குணமாக ஒருவாரம் போதும் என்று கூறினார்கள்.
அத்தனை வீரியமான மூலிகை மருத்துவம் தமிழ்ப்புத்தகங்களில் இருந்து எடுத்து நவீன வழியில்ஆராய்ந்து மேம்படுத்தியுள்ளனர்.
இவர்களின் நீர்மேலாண்மை, கல்வி, உடல் மற்றும் மனவளக்கலைகள் அனைத்தும் பண்டைய தமிழ்இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.
போர்த்தந்திரம், கப்பல் கட்டுதல், கட்டிடக் கலை,இல்லறவியல், உளவியல் என அனைத்துமே நவீன அறிவியலில் இருந்து பெறாமல் பழம்பெரும் நூல்களில் இருந்தே எடுக்கின்றனர்.
நான்திரும்பி வந்தபோது பார்த்தேன்.
போர்ப்பகுதியை நெருங்கியஊர்க்காரர்கள்தமது பிள்ளைகளை அப்படியே விட்டுவிட்டு போர்முனைக்கு சென்றுவிட அதற்கு அடுத்த ஊரில் உள்ள மக்கள் வந்து அந்தப்பிள்ளைகளை போர்நடக்கும் பகுதியிலிருந்து சற்று தள்ளிதமது வீடுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டனர்.
போர் ஓய்ந்ததும் திருப்பி கொண்டு வந்து விடுகின்றனர்.
ஒருவேளை பெற்றோர் வீரச்சாவு அடைந்துவிட்டால் பிள்ளைகளைதம்முடனேயே வைத்துக்கொள்ளவும் தயாராகஇருக்கின்றனர்.
எதிரிப்படையினர் கொல்லப்பட்ட வீரர்களைகுறைத்துக்காட்ட தமது வீரர்களின் சடலங்களை வாங்கமறுத்துவிட்டனர்.
அந்த எதிரிநாட்டு வீரர்களை அக்கறையுடன் அடையாளம் கண்டறிந்து விபரங்களை வெளியிட்டு அவர்கள்உடலங்களை சரியான முறையில் எரியூட்டினர்.
நான் போர்ப்பகுதிக்கு மீண்டும் சென்றபோது ஒரு தமிழ்ப்படைவீரர்எதிரிப்படையினர் உடலங்களில் இருந்த அரைகுறையானமுகவரிகளுக்கு இறந்தவரின் படம் மற்றும் அங்கஅடையாளகுறிப்பிட்டு இந்த வீரரை இந்த முறையில் இவ்வாறு கொன்றோம்அதற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு மன்னிப்பும் கோருவதாக எழுதி அனுப்பியபடி இருந்தார்.
என்னிடம் பணம் என்கிறதாள் இருந்திருந்தால் அதையும்கூட இறந்தவர்குடும்பத்திற்கு அனுப்பியிருப்பேன் என்றார் அவர்.
இந்த மக்களை ஏன் கொல்லநினைக்கிறார்கள்?
உலகை ஆண்டுவரும் பெருமுதலாளிகள் அனைவரும் சமமாக வாழவைக்கும் இந்த நாட்டின் கோட்பாட்டை ஏற்கமாட்டார்கள்தான்.
ஆனால், பல்வேறு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்காகத் தோள்கொடுத்துப் போராடும் இந்தக் குடியரசுநாடு ஒருநாள் வென்றே தீரும்.
No comments:
Post a Comment