முகநூல் தமிழ்தேசியர்க்கு...
2012 முதல் 2020 வரை என்னிடம் இருந்த முகநூல் கணக்கு இப்போது என்னிடம் இல்லை.
அது முடக்கப்பட்ட 2 மாதங்கள் யாருமே என்னைத் தேடவில்லை.
(ஒரே ஒருவர்தான் உங்கள் கணக்கு என்னவாயிற்று என்று கேட்டார்)
இங்கே என்னை என்று நான் குறிப்பிடுவது எனது பதிவுகளை!
நான் என்றுமே என்னையோ எனது தனிப்பட்ட வாழ்க்கையையோ முகநூலுக்கு கொண்டுவந்தது இல்லை
.
"நான்" என்கிற வார்த்தையை இதுவரை பெரும்பாலும் நான் பயன்படுத்தியதில்லை.
இதுவே முகநூலில் எனக்கென்று தனிப்பட்ட ஒரு நட்புவட்டம் உருவாகாமல் போக காரணமாக இருந்திருக்கலாம்.
நான் முகநூலே கதியாகக் கிடந்த காலம் போய் கடந்த ஓராண்டாக ஏதோ பெயருக்கு எட்டிப்பார்த்துவிட்டு போய்விடுவதால் கூட இது நிகழ்ந்திருக்கலாம்.
அனைவரும் ஒருகட்டத்தில் விரக்தியாகி கூறுவது போல நான் முகநூலை விட்டு போகப்போவதெல்லாம் இல்லை.
தொடர்ந்து முகநூலில் பதிவிடுவேன்.
இருக்கும்போது அருமை தெரியாது என்பார்கள்.
எனது பதிவுகளின் முக்கியத்துவத்தை அவை இல்லாதபோதும் கூட யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
எனது வேட்டொலி இணையம் கூட போதுமான பார்வையாளர்களை பெறமுடியவில்லை.
சரி பரவாயில்லை.
நான் உங்கள் ஒவ்வொருவரிடமும் கூற விரும்புவதை இங்கே சுருக்கமாக எழுதுகிறேன்.
இன்று முகநூலில் தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டிருக்கும் உங்கள் மனநிலை என்ன?!
தமிழகத்தை தன் பிடியில் வைத்திருக்கும் வந்தேறிகள் முகத்திரையைக் கிழிப்பது, முதலமைச்சர் நாற்காலியில் ஒரு தமிழின உணர்வுள்ள தமிழரை அமரவைப்பது,
அவர்மூலம் மாநில உரிமைகளை மீட்பது,
அதன்பிறகு எம்.ஜி.ஆர் காலத்தில் செய்தது போல ஈழம் அமைய உதவுவது.
இந்த வழியில்தான் நீங்கள் போய்க்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்த சுற்றுவழி எங்கே போய் முடியும் தெரியுமா?!
வந்தேறிகளின் முகமூடியைக் கிழிப்பதற்குள் ஈழம் அழிந்துவிடும்!
(கிட்டத்தட்ட அழிந்துவிட்டது)
மாநில ஆட்சியைப் பிடிப்பதற்குள் எல்லா மாநில உரிமைகளையும் ஹிந்தியம் விழுங்கிவிடும்!
(காவிரி மேலாண்மை வாரியம் கடைசியாக விழுங்கப்பட்டது)
நாம் மாற்றுவழி யோசிக்கும்முன் தமிழகம் ஹிந்தியர்களால் நிறைந்துவிடும்.
(ஒன்றரை கோடி பேர் ஏற்கனவே குடிவந்தாயிற்று)
பிறகு நமது கதையும் அப்படியே ஈழம் போலாகும்!
இதற்குச் சான்று 2009 லிருந்து 2020 வரை இத்தனை தமிழ்தேசியர்கள் உருவாகியும் ஒரு இயக்கத்தையோ கட்சியையோ கட்டியமைக்க முடியவில்லை.
கட்டியமைக்க முடியாவிட்டாலும் இருக்கும் ஒரே நம்பிக்கையான நாம் தமிழர் கட்சியையும் வளரவிட்டீர்களா என்றால் அதுவும் இல்லை.
வந்தேறிகளையும் ஹிந்தியத்தையும் திட்டிக்கொண்டு மட்டுமே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்.
நான் இங்கே தமிழ்தேசியவாதிகளை மட்டுமே குறிப்பிட்டு பேசுகிறேன்.
"நம் நாடு இந்தியா" என்று பள்ளிப்பருவத்திலேயே மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளை இழுக்கவில்லை.
"நமது மதத்திற்கு மரியாதை இல்லை" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட மூடர்களை இழுக்கவில்லை.
"நாம் ஆண்ட பரம்பரை" அல்லது "நாம் ஆயிரமாண்டு அடிமை" என்று மூளைச் சலவை செய்யப்பட்ட காட்டுமிராண்டிகளை இழுக்கவில்லை.
"உழைப்பவரெல்லாம் ஒரே குடும்பம்" என்று மூளைச்சலவை செய்யப்பட்ட முட்டாள்களை இங்கே இழுக்கவில்லை.
சினிமாக் கூத்தாடி பின்னால் ஓடும் பொறுக்கிகளை இங்கே இழுக்கவில்லை.
இனப்படுகொலையை பிரச்சாரம் செய்து தனிநாடு அடையலாம் என்று பத்து ஆண்டுகளாக பகற்கனவு கண்டுவரும் ஈழத்தமிழரையும் இங்கே இழுக்கவில்லை
எத்தனையோ சமூக வலைப்பொறிகளில் சிக்காமல் இனத்திற்கென்று சிந்திக்கத் தொடங்கி
தமிழினம் பழமையானது, அது தனிநாடு அடையும் தகுதி உடையது என உணர்ந்துகொண்ட அறிவார்ந்த தமிழ்தேசியர்களைத்தான் கூறுகிறேன்.
நீங்கள் இப்போதும் முட்டாள்களாகவே இருக்கிறீர்கள்.
நீங்கள் அரசியல் ரீதியாக எந்த அளவுக்கு முட்டாள்களாக இருக்கின்றீர்கள் என்றால் "ஈழமும் தமிழகமும் ஒரே நாடு" என்கிற அடிப்படை அறிவுகூட உங்களுக்கு வரவில்லை.
நீங்கள் வரலாற்று ரீதியாக எந்த அளவு முட்டாள்களாக இருக்கிறீர்கள் என்றால் "ஆயுதம் ஏந்தாமல் ஒரு இனம் விடுதலை அடைய ஒரு சதவீதம் கூட வாய்ப்பு கிடையாது" என்கிற வரலாற்று உண்மையைக் கூட அறியாதவர்களாக இருக்கிறீர்கள்.
நான் 2012 லிருந்து இதைத்தான் முகநூலிலும் வலைப்பூவிலும் கதறிக்கொண்டு இருக்கிறேன்.
இத்துடன் சேர்த்து தமிழர் இழந்த எல்லை மாவட்டங்கள் பற்றியும் கத்திக்கொண்டு இருக்கிறேன்.
ஆனால் யாருமே
ஈழம் - தமிழகம் இணைப்பு பற்றியோ
ஆயுதப் போராட்டம் பற்றியோ
மண்மீட்பு பற்றியோ
பேசுவது கூட இல்லை.
பேசவே தொடங்கவில்லை எனும்போது விவாதிப்பது எப்போது?!
ஒன்றிணைவது எப்போது?!
கொள்கைகளை உருவாக்குவது எப்போது?!
இயக்கம் கட்டுவது எப்போது?!
ஆயுதம் திரட்டுவது எப்போது?!
செயலில் இறங்குவது எப்போது?!
நிலத்தை கைப்பற்றுவது எப்போது?!
நாடமைப்பது எப்போது?!
ஒரு....
பத்தாயிரம் ஆண்டுகள் ஆகும் என்று நினைக்கிறேன்.
இன்னொன்றை இங்கே உறுதியாகக் கூறுகிறேன்.
நீங்கள் புளகாங்கிதம் அடைவதுபோல நீங்கள் வந்து திராவிடத்தை வீழ்த்தவில்லை.
1500 களில் தோன்றிய வடுகத்தின் குழந்தையான வந்தேறியத்தின் கடந்த நூற்றாண்டு வடிவமாக திராவிடம் 1890 களில் உருவாகி
1920 களில் அதிகாரத்தைக் கைப்பற்றி வேரூன்றி
வளர்ந்து
செழித்து
கொழுத்து
ஆண்டு
அனுபவித்து
தானாகத்தான் வீழ்ந்ததேயொழிய தமிழ்தேசியவாதிகளால் சிறு சிராய்ப்பைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.
(இந்த நூற்றாண்டில் அதன் புதுவடிவம் "நாம் தமிழ்நாட்டவர்" அரசியலாக இருக்கலாம்)
இதற்கெல்லாம் காரணம் நீங்கள் ஜனநாயகத்தை நம்பிக்கொண்டு இருப்பதுதான்.
சனநாயத்தை நம்புகிறீர்களா அல்லது அப்படி நடித்து உங்களுக்கு ஆயுதம் தூக்க ஆண்மையில்லை என்கிற உண்மையை மறைக்கிறீர்களா?!
தமிழர் வீரம் என்று கதைகதையாக பேசுவதெல்லாம் பேச்சோடு மட்டும்தானா?!
ஆயுதம் தூக்கிய தமிழ்த் தலைவர்களெல்லாம் ஆதரவு கிடைக்காமல் வீழ்ந்தது தமிழர்களின் பெட்டைத்தனம் அன்றி வேறு எதனால்?!
இதைக் கேட்டால் "நீ என்ன சாதித்தாய்?" என்றுதான் கேட்பீர்கள்.
ஒருவர்கூட என் கருத்தை உள்வாங்காத போது நான் மட்டும் செயலில் எப்படி இறங்கமுடியும்?!
என்னால் யாருமே மாறவில்லையா என்றால் மாறியிருக்கிறார்கள்.
ஆனால் அந்த மாற்றம் மிகச் சிறிய அளவானதே!
எனக்கு யார் மீதும் கோபமில்லை!
என் வாழ்க்கையில் எட்டு ஆண்டுகளை வீணடித்ததாக எனக்குத் தோன்றினாலும் 10 கோடித் தமிழர்களில் நான்குபேரையாவது விழிக்கவைக்க முடியும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
முதலுதவிக்கு முரண்டு பிடிப்பவன் கடைசி நேரத்தில் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும்.
வந்தேறிய விளைவுகள் நெருக்கும்போது என் சிந்தனைகளின் அருமை உங்களுக்குப் புரியும்!
என் வாழ்நாளில் நான்குபேர் நான்கே நான்கு பேர் விழித்தால் போதும் என் இனத்திற்காக என் உயிரைக் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக போய்விடுவேன்.
ஆயுதப் போராட்டமெல்லாம் இந்தக் காலத்தில் சாத்தியமில்லை என்று நீங்கள் வாயசைத்துவிட்டு கடந்துசெல்லும் இதே வேளையில்
உலகில் குட்டி குட்டி நாடோடி இனங்கள் ஆயுதம் தாங்கி வல்லரசுகளைச் சாய்த்து மண்ணை மீட்டு அரசாங்கம் கட்டி மானத்துடன் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
நம்மாலும் முடியும்!
நமக்கு அந்த வலு இப்போது இருக்கிறது.
ஆனால் வருங்காலத்தில் இருக்காது.
ஆயுத பலத்தால் வீரப்பனார் காவிரி தந்த வரலாறும்
பிரபாகரனார் ஈழம் ஆண்ட வரலாறும் கண்முன்னே நடந்துள்ளன.
இவ்விருவரை பாராமுகமாய் இருந்து பலிகொடுத்தது போல இனி உருவாகப்போகும் தலைவனையும் கையாலாகாத் தனத்தால் பலிகொடுத்துவிட்டு அவன் செத்தபிறகு சாமியாக்கி பூசாரித்தனம் செய்யாதீர்கள்!
இனத்திற்காக ஆயுதம் தாங்கி ஒருவன் முன்னே நடந்தால் அவன் பின்னே செல்லுங்கள்!
விடுதலைக்காக எந்த மக்கள் அதிகம் உயிரைப் பணயம் வைக்கிறார்களோ அவர்கள்தான் வருங்காலத்தில் உயர்ந்த சாதி!
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகள் வருங்காலத்தில் ஆண்ட பரம்பரை!
இன்று மேல்சாதியாக இருப்பவர் வரலாற்றைப் புரட்டுங்கள்.
அவர்கள் இனத்திற்காகப் போராடியவர்களாக இருப்பார்கள்.
உங்கள் சந்ததி மேல்சாதியாக இருக்கவேண்டுமா?!
கீழ்சாதியாக இருக்க வேண்டுமா?!
இன்றிலிருந்து சனநாயகம் தவிர்த்த செயல்பாடுகள் குறித்து பேசவாவது தொடங்குங்கள்!
பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தாவது தமிழர்நாடு அமையட்டும்!
நீங்கள் பேடியாக இருந்தவரை போதும்!
Wednesday, 17 June 2020
முகநூல் தமிழ்தேசியர்க்கு
Saturday, 26 October 2019
சிவகாசிக்கு உதவி
சிவகாசிக்கு உதவி
பட்டாசுக்கு வெடிக்காமல் "பச்சை தீபாவளி" கொண்டாடுவோம் என்று சில சூழலியல் ஆர்வலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
உடனே சில இசுலாமிய பயங்கரவாதிகள் "பட்டாசை புறக்கணிப்போம்" என்று பிரச்சாரம் செய்ய
"அப்டித்தான் வெடிப்போம்" என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் ஆரம்பிக்க
வழக்கம்போல குழப்பத்தில் சிக்கிவிட்டது தீபாவளி.
இந்திய ஒன்றியம் மற்றும் அதன் அண்டை நாடுகள் வரை தீப்பெட்டியும் வெடியும் ஏற்றுமதி செய்யும் சிவகாசி நிறுவனங்களை நசுக்க களமிறங்கி உள்ளன சில வட ஹிந்திய நிறுவனங்கள்.
இவை போதாது என்று தமிழகத்தின் பொருளாதாரத்தில் குறிப்பிட்ட பங்காற்றும் சிவகாசி வெடிமருந்து தொழில் தற்போது சீன பட்டாசு போட்டியையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
ஏற்கனவே மோடி செய்துவரும் பொருளாதார சீர்கேட்டினால் பாதி சிவகாசி நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன.
இவற்றிற்கெல்லாம் தீர்வுதான் என்ன?
இயற்கையும் பாதிப்படையக் கூடாது,
பொருளாதாரமும் பாதிக்கப்படக் கூடாது.
என்ன செய்யலாம்?
சிவகாசி வெடிமருந்து தொழில் அம்மக்களுக்கு வாழ்வாதாரத்தை தருகிறதோ இல்லையோ கட்டாயம் நோயையும் உயிரிழப்பையும் தருகிறது.
கடினமாக உழைக்கும் மக்களால் "குட்டி ஜப்பான்" என்று பெயர் பெற்றாலும் மக்கள் என்னமோ வேறுவழியின்றிதான் வெடிமருந்து தொழிலுக்கு போகிறார்கள்.
அதில் முதலாளிகளுக்கும் சரி தொழிலாளர்களுக்கும் சரி அரசுக்கும் சரி பெரிய வருமானம் எல்லாம் கிடையாது.
சிவகாசி ஒன்றும் பாலைவனப் பகுதி இல்லை.
அது விவசாய பூமி.
இப்போதும் கூட!
இதுபோக சிவகாசி அச்சு தொழிலுக்கும் பெயர் பெற்றது.
அரசாங்கம் இவ்விரண்டையும் முன்னேற்றினால் பட்டாசு ஆலைகளை படிப்படியாக மூடிவிடலாம்.
அதுவரை நாம் சிவகாசி பட்டாசு வெடித்துதான் ஆகவேண்டும்.
ஆனாலும் கொண்டாட்டத்திற்காக இயற்கையை நாசம் செய்வதை ஏற்க முடியாது அல்லவா?!
எனவே கூடிய விரைவில் அரசு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
இந்த அடிமை திராவிட கட்சிகள் அதைச் செய்யும் என்ற நம்பிக்கை இல்லை.
ஈழத்திற்கு வெடிமருந்து மட்டுமல்லாது செங்கண்ணன் என்கிற ஒரு கரும்புலியையும் அனுப்பிவைத்தது சிவகாசி மண்.
தமிழர்கள் ஆயுதம் தூக்கும்போதும் வெடிமருந்தும் இளைஞர்களும் கொடுத்து முன்னனியில் நிற்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
புலிகள் வழியில் தமிழர்களுக்கான அரசு அமைந்த பிறகு சிவகாசியையே கூட "பச்சைகாசி" ஆக்கிவிடலாம்.
அனைத்து மத தமிழரும்
எண்ணெய் தேய்த்து குளித்து
கறிச்சோறு உண்டு
தீபங்கள் ஏற்றி
சுளுந்து கொளுத்தி
முன்னோர் வழிபாட்டுடன்
"தீவாளி" எனும் "கார்த்திகை" யைக் கொண்டாடலாம்.
ஆனால் அதுவரை சிவகாசிப் பட்டாசு வெடித்தே ஆகவேண்டும்!
Monday, 13 May 2019
தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்
தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்
நீங்கள் உயிருடன் கண் முன்னே நிற்கிறீர்கள்.
உங்களிடம் கேட்டால் உங்கள் பெயர், முகவரி, தகப்பனார் பெயர், பூர்வீகம் என அனைத்தையும் சொல்லமுடியும்.
இருந்தும் உங்களிடம் ஒரு அதிகாரி அடையாள அட்டை கேட்டால் அதைக் காட்டாமல்
"சக மனிதன் மீது நம்பிக்கை இல்லையா?" என்று எதிர்கேள்வியா கேட்பீர்கள்?!
மாட்டீர்கள்தானே?!
ஏனென்றால் ஆவணத்தில் இருப்பதுதான் மாற்றமுடியாத சான்று.
அதுதான் நம்பகமான சான்று.
ஒருவன் வருகிறான்.
"நான் தமிழன்" என்று கூறுகிறான்.
அவனிடம் இனச்சான்று இல்லை.
இனத்தின் உட்பிரிவான சாதிச்சான்றுதான் உள்ளது.
அதை காட்டச்சொல்லி கேட்டால் எரிந்துவிழுகிறான்.
"என் உறுதிமொழியை மட்டும் நம்பி தமிழனாக ஏற்றுக்கொள்" என்கிறான்.
அவனை நம்ப முடியுமா?!
சாதிச்சான்று வேறு எங்குமே காட்டப்படுவதில்லையா?!
சாதியை வெளிப்படையாகக் கூறாதவர்கள் ஒன்று வந்தேறிகளாக இருக்கவேண்டும்.
அல்லது தம் சாதி பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருக்கவேண்டும்.
அல்லது வந்தேறிகளுக்கு தம் இனத்தைச் சுரண்ட வாய்ப்பளிப்போராக இருக்கவேண்டும்.
இம்மூவருமே தமிழினத்துக்கு கேடு செய்பவர்கள்!
எனவே தமிழர்நாடு தனியரசு அமைந்து ஒருவருக்கு சாதிச்சான்றுக்கு பதில் "தமிழர்" என்கிற இனச்சான்று கிடைக்கும்வரை சாதிதான் இனச்சான்று.
இந்த தெளிவு தமிழர் அனைவருக்கும் வேண்டும்.
அதுவரை "சாதி ஒழிப்பு" பற்றி பேசாமல் "சாதிய சமத்துவம்" பற்றித்தான் பேச வேண்டும்.
தமிழர்நாடு தமிழினத்தவர்க்கு இனச்சான்று அளித்த பிறகு சாதி அடையாளத்தைக் கைவிடுதல் அவசியம்.
என்றால் அதற்குப் பதில் எதைக் கைக்கொள்வது?!
சாதிதாண்டிய "ஊர்ப்பாசம்" நம் அனைவருக்குமே உள்ளது.
எனவே அதன்பிறகு சாதிப் பட்டத்திற்கு பதில் பிறந்த ஊர் பெயரை பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
(தமிழர்நாடு சான்றளிக்கும்போது அவரவர் தாம் பிறந்த ஊரைக் கூறி பெயரை பதிவு செயதுகொள்ள வேண்டும்.
அதன்பிறகு வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தாலும் மாற்றக்கூடாது.
தலைமுறை தாண்டியும் தந்தைவழியில் பயன்படுத்தவேண்டும்.
இது ஒன்றும் புதிதில்லை.
முன்பெல்லாம் ஊர், தந்தை பெயர், பிறகு தமது பெயர் என்றவாறே எழுதுவர்.
எ-டு ம.பொ.சி.
நாம் அதையே சிவஞானம் மயிலாப்பூர் என்றவாறு ஆக்குகிறோம்.
இதன்மூலம் தமிழர்நாடு அரசு அமைந்தபோது அவரவர் எந்தெந்த ஊரில் பிறந்தவர் என்பது பதிவாகி அவரது வம்சத்திற்கு பூர்வீக அடையாளம் கடத்தப்படும்.)
ஊர்ப்பெயரை போட்டுக்கொள்ளும் உரிமை தமிழர்நாட்டில் பிறந்த தமிழரல்லாதாருக்கும் உண்டு.
[இது தமிழரல்லாதார் தானும் தமிழரென ஏமாற்ற வாய்ப்பளிக்கிறது.
இருந்தாலும் வேறு வழியில்லை. தமிழர்நாடு தமிழர் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தமிழ்ச் சாதி அல்லாதார் அனைவரும் வெளியேற்றப் படுவர்.
(தமிழர் விடுதலைக்கு அதிலும் ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதார் மட்டும் விதிவிலக்கு.)
அப்படி வெளியேற்ற முடியாத பட்சத்தில் தமிழர் விடுதலைக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவாத மற்றும் கடைசி நேரத்தில் வந்து தமிழ்தேசியத்தில் ஒட்டிக்கொண்ட தமிழ்ச்சாதி அல்லாதாருக்கு குடியுரிமை வழங்கக் கூடாது.
ஊர்ப்பெயரை பயன்படுத்துவதையும் தடைசெய்யவேண்டும்.]
தமிழர் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதாருக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" என்கிற சான்று கிடைக்கும்.
இத்தகையோர் தமது இனத்திற்கான சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு "தெலுங்கர்", "கன்னடர்", "மலையாளி" என்றவாறு வாங்க விரும்பாதோர் "வெளியினத்தவர்" என்கிற சான்றை வாங்கிக் கொள்ளலாம்.
உலகில் உள்ள அனைத்து தமிழருக்கும்"தமிழர்" என்கிற சான்று தமிழர்நாட்டு தூதரகம் மூலம் ஆய்வுசெய்து வழங்கப்படும்.
(இதற்குப் பத்தாண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்)
அவர் தமிழர்நாட்டில் பிறந்தவர் என்றாலோ அல்லது தமிழர்நாட்டில் குடியேறினாலோ "தமிழர்நாட்டுக் குடிமகன்" சான்றும் கிடைக்கும்.
தமிழர்நாட்டில் குடியேறும் தொலைதூரத் "தமிழர்" ஊர்ப் பூர்வீகம் தெரியாவிட்டால் பூர்வீக வட்டம், மாவட்டம், அல்லது (பாண்டி, சோழம், கொங்கு, தொண்டை, ஈழம் போன்ற) மண்டலம் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிடில் "தமிழ்" என்றே இட்டுக்கொள்ளலாம்.
தொலைதூரம் வசிக்கும் "தமிழர்" தமது குழந்தை பிறந்ததும் அதன் 5 வயதுக்குள் தமிழர்நாடு வந்து அல்லது தமிழர்நாட்டு தூதரகம் சென்று "தமிழர்" என்கிற சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டிகள் நால்வரில் மூவராவது "தமிழர்" அல்லது "தமிழ்ச்சாதி" ஆக இருக்கவேண்டும்)
வெளிநாட்டு தமிழரல்லாதார் தமிழர்நாட்டில் குடியேறினால் தமது இனத்தின் பெயரைக் கூறி இனச்சான்று வாங்கவேண்டும்.
பிறந்த இடத்தைக் கூறி பட்டப் பெயரும் கொண்டு பெயர்மாற்றம் செய்யவேண்டும்.
இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கலாம் பணிபுரியலாம்.
ஆனால் குடியுரிமை ("தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று) கிடைக்காது.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்காது.
"தமிழர்நாட்டு குடிமகன்" வேறுநாட்டில் நிரந்தரமாக குடியேறிவிட்டால் அவருக்கு அங்கே பிறக்கும் பிள்ளைகளுக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று கிடைக்காது.
ஆனால் அவர் "தமிழர்" எனும் சான்று வைத்திருப்பின் அவரது பிள்ளைகளுக்கு "தமிழர்" எனும் சான்று கிடைக்கும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டி நால்வரில் மூவர் தமிழராக இருக்கவேண்டும்).
ஒரு "தமிழர்" ஒரு "தமிழரல்லாதவரை" திருமணம் செய்தால் அவரது வாரிசு "அரைத்தமிழர்" என்று சான்று பெறும்.
ஒரு "அரைத்தமிழர்" ஒரு "தமிழரை" திருமணம் செய்தால் மட்டுமே அவர்களது வாரிசுகள் "தமிழர்" என்ற சான்று பெறுவர்.
சுருக்கமாக,
தமிழர்நாடு தனியரசு அமையும்வரை சாதியே சான்று.
அதன்பிறகு,
சாதிக்கு பதில் இனம்.
பட்டத்திற்கு பதில் ஊர்.
தமிழருக்கும் தமிழருக்கு உதவியவருக்கும் மட்டுமே குடியுரிமை.
முடிந்தவரை தன்னினத்தில் திருமணம்.
Monday, 11 March 2019
தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?
தொடரும் பாலியல் வன்முறைகள் - தீர்வுதான் என்ன?
ஒரே பேச்சுக்கு இந்த உலகத்தின் ஆண்களெல்லாம் இறந்து ஒரே ஒரு ஆரோக்கியமான ஆண் மட்டும் உயிரோடு இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம்.
அவனுடைய இரண்டு வார கால விந்து உற்பத்தியில் உள்ள விந்தணுக்கள் மட்டுமே போதும்,
இந்த உலகில் உள்ள அனைத்து பருவமெய்திய பெண்களுக்கும் தலைக்கொரு விந்தணுவை வழங்க முடியும்.
அதைவைத்து செயற்கை கருவூட்டல் மூலம் தாயாகிக் கொள்ளலாம்.
ஆணின் பிறப்புறுப்பு ஏன் இந்த வடிவத்தில் இருக்கிறது என்றால் ஏற்கனவே செலுத்தப்பட்ட வேறொரு விந்துவை வெளியே எடுத்துவிட்டு தனது விந்துவை செலுத்திவிடும் நோக்கத்திற்காகத்தான்.
முன்பின் அசைவும் இதனாலேயே தேவைப்படுகிறது.
ஒரு ஆண் பருவமெய்திய காலம் முதல் அவனது விந்து உற்பத்தி சாகும்வரை நடக்கும்.
பெண்களின் கருமுட்டை எண்ணிக்கை மிக மிக குறைவு.
குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு கருமுட்டைகள் அழிந்தும்விடும்.
மேற்கண்ட செய்திகளின் மூலம் பெண்ணை விட ஆணுக்கு பாலியல் எவ்வளவு முதன்மையாது என்பதை கணிக்கலாம்.
புரியும்படி கூறினால் மனித இனத்தில் ஆண்களுக்கு இயற்கை இட்ட தலையாய கட்டளை என்னவென்றால்,
"ஒரு பெண் இனப்பெருக்கத்திற்கு தகுதியான உடலுடன் இருந்தால் அவளுடைய சம்மதம் இருக்கிறதோ இல்லையோ அவளுக்குள் உன் கருவை எப்படியேனும் விதைத்தே ஆக வேண்டும்".
ஏனென்றால் இயற்கையின் பார்வையில் மனித ஆணும் பெண்ணும் இனப்பெருக்கத்திற்கு சோம்பல் படுவார்கள்.
எனவே உலகில் ஈடில்லாத இன்பம் கலவிக்கு வழங்கப்பட்டு அந்த இன்பத்திற்காகவாவது கலவி நடந்து கருவுறுதல் ஏற்படும் என்று இயற்கை எண்ணுகிறது.
இதில் பத்துமாதம் கருவைச் சுமந்து உயிரைப் பணயம் வைத்து குழந்தை பெற பெண் அதிகம் சோம்பல் படுவாள் என்று இயற்கை ஆணுக்கு அனைத்து சலுகையையும் வழங்கி அதற்கு எதிரான பெண்ணின் தற்காப்பை குறைத்து வழங்கியுள்ளது.
மனித சமுதாயத்திற்கு என்று சில சட்டங்கள் உள்ளன.
ஆனால் இயற்கை வகுத்த விதிகள் அதைவிட கடுமையானவை.
மாற்றவே முடியாதவை.
வன்புணர்வு செய்தோரை எவ்வளவு கொடுமைப் படுத்தி வெட்டவெளியில் வெளிப்படையான தண்டனை வழங்கினாலும் வன்புணர்ச்சி நின்றுவிடாது.
இன்றைய சூழலில் நாம் வாழும் வாழ்க்கை முழுக்க இயற்கைக்கு எதிரானது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் வயதுவந்து பல ஆண்டுகள்வரை கலவி கிடைப்பதில்லை.
திருமணம் முடிந்து முதல் கரு உருவாகும்வரை மட்டுமே நிறைவான கலவி கிடைக்கிறது.
அதன்பிறகு அவர்கள் இரண்டாம் குழந்தைக்கு முயற்சிக்கும்போது கிடைக்கிறது.
மற்றபடி பெண்ணின் கருமுட்டை வெளிவரும் நாளில் ஆணின் விந்து கலப்பது ஏறத்தாழ நிகழ்வதே இல்லை.
என்னதான் அறுவை சிகிச்சை, உறைகள், வெளியே எடுத்துவிடுதல் என்று மாற்றுவழகள் செய்தாலும் இன்றைய மனிதருக்கு நிறைவான கலவி கிடைப்பதேயில்லை.
இந்த பாலியல் பசியானது வளர்ந்து வெறியாக மாறுகிறது.
சிலருக்கு இயற்கையாகவே இந்த வெறி அதிகம் உள்ளது.
பாலியல் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வழிதவறிச் செல்லவும் ஆபத்தை விலைக்கு வாங்கவும் இத்தகையோர் தயங்குவதில்லை.
வேலிதாண்டுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
பொள்ளாச்சி தொடர் வன்புணர்வு சம்பவத்தில் நான் பெண்களைத்தான் குற்றம் சொல்வேன்.
அவர்கள் மீதுதான் தவறு.
ஆண்கள் மீது தவறே இல்லையா என்றால்,
நிச்சயம் இருக்கிறது.
ஆனால் முதல் தவறு பெண்கள் மீதுதான்.
பாதுகாப்பற்ற சூழலில் அதிகம் அறிந்திராத ஆணை நம்பி சென்றிருப்பது
ஆண்களை அவர்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பதைக் காட்டுகிறது.
வெளிப்படையாகப் பேசினால்,
அந்த வீடியோவை பார்த்த ஆண்கள் வெளிப்புறத்தில் கொந்தளித்தாலும் உள்ளூற அதை ரசிக்கவே செய்வார்கள்.
இப்படி வீடியோ வந்துள்ளது என்று தெரிந்தால் அதை பார்க்கத் துடிப்பார்கள்.
முதல்முறை அதைப் பார்த்து முடித்த பிறகுதான் மனசாட்சி உறுத்தும்.
99% ஆண்களுக்கு இது பொருந்தும்.
ஆண்கள் எந்தவொரு பெண்ணையும் முதலில் உடலாகத்தான் பார்க்கிறார்கள்.
பிறகுதான் மனிதராகப் பார்க்கிறார்கள்.
ஒரு பெண் கலவிக்கு அழைத்தால் 99% ஆண்களால் மறுக்க முடியாது.
ஒரு பெண்ணின் உடல்மீது ஒரு ஆண் வைத்திருக்கும் வேட்கை கற்பனைக்கு எட்டாத ஒன்று.
இது தவிர்த்து ஆண்களுக்கு பெரிதாக எந்த ஆசையும் கிடையாது.
மிஞ்சிப்போனால் ஒரு வாகனம், அவ்வளவுதான்.
கணினியில் தமிழ் தட்டச்சு வந்தபோது கூகுள் செர்ச் பார் இல் "அ" என்று தட்டினால் "அம்மா மகன் உடலுறவு" "அக்கா தம்பி உடலுறவு" என்று வந்து நிற்கும்.
அதிகம் தேடப்பட்டது முதலில் இடம்பெறும் வழக்கத்தால் இப்படி இருந்தது.
பிறகுதான் கூகுளிடம் முறையிட்டு மாற்றினார்கள்.
"நீ வேணா அப்பிடி இருக்கலாம்.
நாங்கள்லாம் அப்படி இல்லை" என்று கூறும் ஆண்கள் கட்டாயம் பொய் சொல்கிறார்கள்.
அல்லது அந்த விட்டுப்போன 1% ஆண்களாக இருக்கலாம்.
பெண்களே உங்கள் அருகில் ஒரு ஆண் இருக்கிறானா?
அவன் மனதளவிலேனும் உங்களை வன்புணர தயாராக இருக்கிறான் என்பதை உணருங்கள்.
அதற்காக எல்லாரும் செயலில் இறங்கிவிட மாட்டார்கள்.
பெரும்பாலும் மனசாட்சி தடுத்துவிடும்.
குழந்தைகளை வன்புணர்ச்சி செய்தவர்களை இப்படி நியாயம் சொல்லமுடியாது.
வன்புணர்ச்சி தவிர்த்த உடல்சிதைவுகளுக்கும் இந்த நியாயம் பொருந்தாது.
பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளை விட மிக மோசமான வன்புணர்ச்சி குற்றவாளிகள் வரலாற்றில் இருந்துள்ளனர்.
ஒரு பெண்ணைக் கொலை செய்து சமைத்து சாப்பிட்ட மனிதன் பிறகு திருந்தி சட்டத்தாலும் சமூகத்தாலும் மன்னிக்கப்பட்டு சாதாரணமாக தெருக்களில் நடமாடிய வரலாறு கூட உண்டு.
எனவே, பெண்கள் கவனமாக பாதுகாப்பாக இருங்கள்.
"ஆண்களுக்கு நீங்கள் சளைத்தவர் இல்லை" என்று யாராவது கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்பதை உணருங்கள்.
உங்கள் விருப்பம் இல்லாமல் உங்களை வன்புணர்வு செய்யமுடியும்.
சினிமாவில் வருவதுபோல ஒரு ஆணால் தனியாக முடியாது, என்றாலும் பெண்களுக்கு உடல்ரீதியான தற்காப்பு குறைவு.
சூழல் அமைந்துவிட்டால்
ஒரு ஆணுக்கு இயற்கை அளித்துள்ள சாபத்தை மீறி அவனது மனசாட்சியைத் தவிர உங்களை யாராலும் எதுவாலும் காப்பாற்ற முடியாது.
பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!
பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும்!
இதுதான் தீர்வு!
வன்புணர்ச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவது தற்காலிக தீர்வு மட்டுமே!
எனவே பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இந்த மாதிரியான பிரச்சனைகளை ஆய்வு நோக்கில் அறிவியல் ரீதியில் அணுக வேண்டும்.
வயதுவந்தோருக்கான கல்வித் திட்டதில் ஆண்கள் பெண்கள் என்று பிரித்து தனித்தனியாக பாலியல் பற்றிய அடிப்படை புரிதல் வழங்கப்பட வேண்டும்.
வன்புணர்ச்சி எண்ணம் அதிகம் இருப்பவர்கள் முன்கூட்டியே உளவியல் சிகிச்சையை ரகசியமாக எடுத்துக்கொள்ள வழி இருக்கவேண்டும்.
பாலியல் வழக்குகள் ரகசியமாக விசாரிக்கப்பட வேண்டும்.
திருமண வயது வந்ததும் திருமணம் செய்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.
மது ஒழிக்கப்பட வேண்டும்.
பாலியல் பசி கணக்கிடப்பட்டு தேவை அதிகம் இருப்போர் துணை இல்லாத நிலையில் பரத்தையரை நாடிச் செல்ல அனுமதி வழங்கப்பட வேண்டும்.
இதையெல்லாம் ஒரு நல்ல அரசாங்கத்தால் மட்டுமே செய்யமுடியும்.
இந்த வழியில் வன்புணர்ச்சி மறைந்துபோக பல ஆண்டுகள் ஆகலாம்.
அதுவரை, பெண்களே கவனம்!
உடன்பிறந்த அண்ணன், தம்பி, பெற்ற தந்தை, கட்டிய கணவன், பெற்ற மகன் ஆகியோரைத் தவிர எந்த ஆணையும் நம்பாதீர்கள்!