Showing posts with label தமிழர் நாடு. Show all posts
Showing posts with label தமிழர் நாடு. Show all posts

Thursday, 31 October 2019

தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்


தமிழகம் இழந்த பகுதிகள் - தவறான வரைபடம்
முதல் படத்தை "தமிழகம் இழந்த பகுதிகள்" என பல்வேறு தமிழ்தேசிய அமைப்புகள் கூறுகின்றனர்.
இந்த வரைபடம் "தமிழ்தேசியப் பேரியக்கம்" மற்றும் "தமிழர்களம்" ஆகிய கட்சிகளாலும் பயன்படுத்தப் படுகிறது.
இரண்டாவது படம் நான் தயாரித்த "தமிழர்நாடு" வரைபடம் மற்றும் மேற்கண்ட "தமிழகம் இழந்த பகுதிகள்" வரைபடத்தின் ஒப்பீடு.
(தெளிவான தமிழர்நாடு வரைபடம் காண
தேடுக : தமிழர்நாடு வட்டார எல்லைகள் )
முதலாவது படமே பெரியதாக உள்ளது.
இத்தனை பெரிய நிலப்பரப்பு நம்முடையது என்று எந்த சான்றுகள் அடிப்படையில் யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை.
நான் வரைந்த தமிழர்நாடு வரைபடம் நான் திரட்டிய சான்றுகள் அடிப்படையில் வரையப்பட்டது.
இதற்கென தனி வலை ஏற்படுத்தி (vaettoli. wordpress. com)  அதில் மண்மீட்பு சான்றுகளைத் தொகுத்து வைத்துள்ளேன்.

ஒரு பகுதி நமக்கு சொந்தம் என்று கூற நாம் காட்டவேண்டிய சான்றுகளாவன
1) இலக்கியம்
2) கல்வெட்டு
3) அரசு ஆவணம்
4) புத்தகம்
5) தற்போதைய மக்கட்தொகை
இதில்
'இலங்கை' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'கேரளா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
'ஆந்திரா' ஆக்கிரமித்துள்ள பகுதிகள்
ஆகியவற்றிற்கு மேற்கண்ட அனைத்து ஆவணங்களையும் திரட்டிவிட்டேன்.
கர்நாடகா ஆக்கிரமித்துள்ள பகுதிகளுக்கு மட்டும் பழமையான கல்வெட்டு சான்று தவிர மீதி நான்கும் உள்ளது.
தமிழகத்திற்கும் கன்னட நாட்டிற்கும் இடையே தற்போதுள்ளதை விட பெரிய காடு இருந்துள்ளது.
அதில் தமிழ்ப் பழங்குடிகள் வாழ்ந்துள்ளனர்.
அக்காலத்து இலக்கிய சான்றுகள் நமக்கு சாதகமாக உள்ளன.
காடுகளுக்கு அந்தப் பக்கத்திலிருந்து கன்னடர் சிறிய அளவில் குடியேறினர்.
சில நடுகற்களும் குகைக் கல்வெட்டுகளும் பாறைக் குடைசல்களும் நிறுவினர்.
பிறகு தமிழ் அரசு பேரரசாக விரிந்தது.
கன்னடரை விரட்டிவிட்டு தமிழர்கள் குடியேறி நாடு, நகரம், கோவில் என நாகரிகமாக வாழ்ந்தனர்.
பிறகு கன்னடர் தமிழரை அடக்கி மிக அதிக அளவில் குடியேறி காவிரிக்கரை வரை பரவினர்.
காவிரி தோன்றும் குடகு இப்பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மண்மீட்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.
பிற எல்லைகள் போல அல்லாது கன்னடர் - தமிழர் எல்லை ஒரு இழுபறியிலேயே உள்ளது.
ஆனால் இவ்வெல்லைக்கு இருபுறமும் நமக்கு கடற்கரையை ஒட்டி வெகுதூரம் வரைக்கும் சான்றுள்ளது.
இந்தப்பக்கம் கேரள எல்லையையும் தாண்டி கோகர்ணம் (Gokharna) வரை நமக்கு சான்று உள்ளது.
அந்த பக்கம் வடபெண்ணை ஆறு வரை நமக்குச் சான்றுள்ளது.
அதையும் தாண்டி இமயம் வரை நமக்கு இலக்கியச் சான்று உள்ளது.

கல்வெட்டு தலைமை அலுவலகம் மைசூர் நகரில் இருப்பதால் பழமையான தமிழ்க் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு பழமையான கன்னட கல்வெட்டுகள் மட்டும் வெளிவந்துள்ளன.
நானறிந்த வரையில் மேற்கண்ட வரைபடம் அளவு நிலத்தை நாம் கோர நம்மிடம் சான்றுகள் இல்லை.

இந்த வரைபடம் பற்றி மேலும் விபரம் தெரிந்தோர் தொடர்பு கொள்ளவும்.

நன்றி!








Saturday, 20 July 2019

தமிழ்நாடு - இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை

தமிழ்நாடு

இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை.

இதற்கு பதிலாக "தமிழகம்" என்றே பயன்படுத்துகிறேன்.

முதலில்....
எது நாடு?!

ஐ.நா அங்கீகாரமா?
அல்ல.
ராணுவ வேலி போடப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் "நாடு" என்றாகும்.

தமிழர் வாழும் நிலப்பரப்பில்
பாதிக்கும் குறைவான நிலத்தை,
எந்த ஒரு அதிகாரமும் இல்லாத "மாநிலம்" ஆக்கி,
அதை ஒரு (முதல்)அமைச்சர் மூலம் ஆண்டுவருகிறது ஹிந்திய ஏகாதிபத்தியம்.

இந்த நிலப்பரப்பை "நாடு" என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்றால்....
சொந்தவீடு கட்ட இயலாத ஒருவன் ஒரு பொம்மை வீட்டை வாங்கி அதற்கு "இல்லம்" என்று பெயரிடுவதைப் போன்று வேடிக்கையாக இருக்கிறது.

இதில் அந்த பொம்மை வீட்டை வாங்கிய நாளை கொண்டாடவும் வேண்டுமாம்....
இருந்த சில உரிமைகளையும் மத்திக்கு தாரைவார்த்த அடிமை,
தன் இன மக்களையே சுட்டுக்கொன்ற இனத்துரோகி எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறான்.

எவர் தலையீடும் இல்லாமல் தன்னாட்சி செலுத்தும் ஒரு இனமே இத்தகைய "நாடு அமைந்த நாள்" "விடுதலை நாள்" "வெற்றி நாள்" போன்றவற்றைக் கொண்டாட தகுதியானது.

நாம் உழைத்து அதில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ஹிந்தியாவுக்கு கொட்டியழுது
எந்த உரிமையும் சலுகையும் இல்லாமல்
மேலும் மேலும் சுரண்டப்படும் நமக்கு இந்த கொண்டாட்டங்கள் தேவையா?!

வளத்தால்,
மக்கட்தொகையால்,
பரப்பளவால்,
பொருளாதாரத்தால்,
அறிவாற்றலால்,
நாகரீகத்தால்
ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிபோட வல்ல தமிழர்நாடு...
"தமிழ்நாடு" என்கிற
நொடிந்த,
வலுவற்ற,
பாதுகாப்பற்ற,
அடிமைத்தனமான,
கொள்ளைபோகிற,
கலப்படமாகிற,
அழியப்போகிற,
ஒரு சிறு மாநிலமாக ஆவானேன்?!
அது அமைந்த நாளை கொண்டாடுவானேன்?!

பாரத மாதாவின் பாதத்தில் மிதிபட்டு நசுங்கிக் கிடக்கும் தமிழன்னை விடுதலை பெறும்வரை நமக்கு பிறந்தநாள் கொண்டாடக்கூட தகுதி கிடையாதே?!

(படம்:
"தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட  வரைபடம்"
மற்றும்
"தமிழர்நாடு - வட்டார எல்லைகள்"
ஒப்பீடு)
------
படம் தெரியாவிட்டால்
https://vaettoli.wordpress.com/2019/07/20/தமிழ்நாடு-இந்த-பெயரை-நான/

Monday, 13 May 2019

தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்

தமிழர்நாட்டில் இனச்சான்றும் குடியுரிமையும்

நீங்கள் உயிருடன் கண் முன்னே நிற்கிறீர்கள்.
உங்களிடம் கேட்டால் உங்கள் பெயர், முகவரி, தகப்பனார் பெயர், பூர்வீகம் என அனைத்தையும் சொல்லமுடியும்.

இருந்தும் உங்களிடம் ஒரு அதிகாரி அடையாள அட்டை கேட்டால் அதைக் காட்டாமல்
"சக மனிதன் மீது நம்பிக்கை இல்லையா?" என்று எதிர்கேள்வியா கேட்பீர்கள்?!
மாட்டீர்கள்தானே?!

ஏனென்றால் ஆவணத்தில் இருப்பதுதான் மாற்றமுடியாத சான்று.
அதுதான் நம்பகமான சான்று.

ஒருவன் வருகிறான்.
"நான் தமிழன்" என்று கூறுகிறான்.

அவனிடம் இனச்சான்று இல்லை.
இனத்தின் உட்பிரிவான சாதிச்சான்றுதான் உள்ளது.

அதை காட்டச்சொல்லி கேட்டால் எரிந்துவிழுகிறான்.
"என் உறுதிமொழியை மட்டும் நம்பி தமிழனாக ஏற்றுக்கொள்" என்கிறான்.

அவனை நம்ப முடியுமா?!

சாதிச்சான்று வேறு எங்குமே காட்டப்படுவதில்லையா?!

சாதியை வெளிப்படையாகக் கூறாதவர்கள் ஒன்று வந்தேறிகளாக இருக்கவேண்டும்.
அல்லது தம் சாதி பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டவராக இருக்கவேண்டும்.
அல்லது வந்தேறிகளுக்கு தம் இனத்தைச் சுரண்ட வாய்ப்பளிப்போராக இருக்கவேண்டும்.

இம்மூவருமே தமிழினத்துக்கு கேடு செய்பவர்கள்!

எனவே தமிழர்நாடு தனியரசு அமைந்து ஒருவருக்கு சாதிச்சான்றுக்கு பதில் "தமிழர்" என்கிற இனச்சான்று கிடைக்கும்வரை சாதிதான் இனச்சான்று.
இந்த தெளிவு தமிழர் அனைவருக்கும் வேண்டும்.
அதுவரை "சாதி ஒழிப்பு" பற்றி பேசாமல் "சாதிய சமத்துவம்" பற்றித்தான் பேச வேண்டும்.

தமிழர்நாடு தமிழினத்தவர்க்கு இனச்சான்று அளித்த பிறகு சாதி அடையாளத்தைக் கைவிடுதல் அவசியம்.

என்றால் அதற்குப் பதில் எதைக் கைக்கொள்வது?!
சாதிதாண்டிய "ஊர்ப்பாசம்" நம் அனைவருக்குமே உள்ளது.

எனவே அதன்பிறகு சாதிப் பட்டத்திற்கு பதில் பிறந்த ஊர் பெயரை பின்னொட்டாகப் பயன்படுத்தலாம்.
(தமிழர்நாடு சான்றளிக்கும்போது அவரவர் தாம் பிறந்த ஊரைக் கூறி பெயரை பதிவு செயதுகொள்ள வேண்டும்.
அதன்பிறகு வேறு ஊருக்கு இடம்பெயர்ந்தாலும் மாற்றக்கூடாது.
தலைமுறை தாண்டியும் தந்தைவழியில் பயன்படுத்தவேண்டும்.
இது ஒன்றும் புதிதில்லை.
முன்பெல்லாம் ஊர், தந்தை பெயர், பிறகு தமது பெயர் என்றவாறே எழுதுவர்.
எ-டு ம.பொ.சி.
நாம் அதையே சிவஞானம் மயிலாப்பூர் என்றவாறு ஆக்குகிறோம்.
இதன்மூலம் தமிழர்நாடு அரசு அமைந்தபோது அவரவர் எந்தெந்த ஊரில் பிறந்தவர் என்பது பதிவாகி அவரது வம்சத்திற்கு பூர்வீக அடையாளம் கடத்தப்படும்.)

ஊர்ப்பெயரை போட்டுக்கொள்ளும் உரிமை தமிழர்நாட்டில் பிறந்த தமிழரல்லாதாருக்கும் உண்டு.
[இது தமிழரல்லாதார் தானும் தமிழரென ஏமாற்ற வாய்ப்பளிக்கிறது.
இருந்தாலும் வேறு வழியில்லை. தமிழர்நாடு தமிழர் கட்டுப்பாட்டில் வந்தபிறகு தமிழ்ச் சாதி அல்லாதார் அனைவரும் வெளியேற்றப் படுவர்.
(தமிழர் விடுதலைக்கு அதிலும் ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதார் மட்டும் விதிவிலக்கு.)
அப்படி வெளியேற்ற முடியாத பட்சத்தில் தமிழர் விடுதலைக்கு ஆரம்பத்தில் இருந்தே உதவாத மற்றும் கடைசி நேரத்தில் வந்து தமிழ்தேசியத்தில் ஒட்டிக்கொண்ட தமிழ்ச்சாதி அல்லாதாருக்கு குடியுரிமை வழங்கக் கூடாது.
ஊர்ப்பெயரை பயன்படுத்துவதையும் தடைசெய்யவேண்டும்.]

தமிழர் விடுதலைக்கு ஆரம்பம் முதலே தோள்கொடுத்த தமிழரல்லாதாருக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" என்கிற சான்று கிடைக்கும்.
இத்தகையோர் தமது இனத்திற்கான சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
அவ்வாறு "தெலுங்கர்", "கன்னடர்",  "மலையாளி" என்றவாறு வாங்க விரும்பாதோர் "வெளியினத்தவர்" என்கிற சான்றை வாங்கிக் கொள்ளலாம்.

உலகில் உள்ள அனைத்து தமிழருக்கும்"தமிழர்" என்கிற சான்று தமிழர்நாட்டு தூதரகம் மூலம் ஆய்வுசெய்து வழங்கப்படும்.
(இதற்குப் பத்தாண்டுகள் வரை எடுத்துக் கொள்ளலாம்)
அவர் தமிழர்நாட்டில் பிறந்தவர் என்றாலோ அல்லது தமிழர்நாட்டில் குடியேறினாலோ "தமிழர்நாட்டுக் குடிமகன்" சான்றும் கிடைக்கும்.

தமிழர்நாட்டில் குடியேறும் தொலைதூரத் "தமிழர்" ஊர்ப் பூர்வீகம் தெரியாவிட்டால் பூர்வீக வட்டம், மாவட்டம், அல்லது (பாண்டி, சோழம், கொங்கு, தொண்டை, ஈழம் போன்ற) மண்டலம் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.
இல்லாவிடில் "தமிழ்" என்றே இட்டுக்கொள்ளலாம்.
தொலைதூரம் வசிக்கும் "தமிழர்" தமது குழந்தை பிறந்ததும் அதன் 5 வயதுக்குள் தமிழர்நாடு வந்து அல்லது தமிழர்நாட்டு தூதரகம் சென்று "தமிழர்" என்கிற சான்று வாங்கிக்கொள்ள வேண்டும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டிகள் நால்வரில் மூவராவது "தமிழர்" அல்லது "தமிழ்ச்சாதி" ஆக இருக்கவேண்டும்)

வெளிநாட்டு தமிழரல்லாதார் தமிழர்நாட்டில் குடியேறினால் தமது இனத்தின் பெயரைக் கூறி இனச்சான்று வாங்கவேண்டும்.
பிறந்த இடத்தைக் கூறி பட்டப் பெயரும் கொண்டு பெயர்மாற்றம் செய்யவேண்டும்.
இவர்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கலாம் பணிபுரியலாம்.
ஆனால் குடியுரிமை ("தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று) கிடைக்காது.
இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் குடியுரிமை கிடைக்காது.

"தமிழர்நாட்டு குடிமகன்" வேறுநாட்டில் நிரந்தரமாக குடியேறிவிட்டால் அவருக்கு அங்கே பிறக்கும் பிள்ளைகளுக்கு "தமிழர்நாட்டு குடிமகன்" எனும் சான்று கிடைக்காது.
ஆனால் அவர் "தமிழர்" எனும் சான்று வைத்திருப்பின் அவரது பிள்ளைகளுக்கு "தமிழர்" எனும் சான்று கிடைக்கும்.
(அக்குழந்தையின் தாத்தா-பாட்டி நால்வரில் மூவர் தமிழராக இருக்கவேண்டும்).

ஒரு "தமிழர்" ஒரு "தமிழரல்லாதவரை" திருமணம் செய்தால் அவரது வாரிசு "அரைத்தமிழர்" என்று சான்று பெறும்.
ஒரு "அரைத்தமிழர்" ஒரு "தமிழரை" திருமணம் செய்தால் மட்டுமே அவர்களது வாரிசுகள் "தமிழர்" என்ற சான்று பெறுவர்.

சுருக்கமாக,
தமிழர்நாடு தனியரசு அமையும்வரை சாதியே சான்று.
அதன்பிறகு,
சாதிக்கு பதில் இனம்.
பட்டத்திற்கு பதில் ஊர்.
தமிழருக்கும் தமிழருக்கு உதவியவருக்கும் மட்டுமே குடியுரிமை.
முடிந்தவரை தன்னினத்தில் திருமணம்.


Wednesday, 7 March 2018

தமிழர்நாட்டில் சிலைகள்

தமிழர்நாட்டில் சிலைகள்

தமிழர் தாய்நிலம் தமிழர்களின் ராணுவக் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தேவையற்ற சிலைகள் அகற்றப்படும்.

அதிலும் ஈ.வே.ரா உட்பட திராவிடத் தலைவர்களின் சிலைகள்
காந்தி உட்பட ஹிந்திய தலைவர்களின் சிலைகள் அனைத்தும் ஒரு இடம் விடாமல் அத்தனையும் அகற்றப்படும்.

தமிழராக பிறந்த தலைவர் அல்லது தமிழருக்காகவே உழைத்த வேற்றினத் தலைவர் தவிர பிறருக்கு சிலை கிடையாது.

மெரீனா கடற்கரையில் உள்ள சமாதிகள் அனைத்தும் அகற்றப்படும்.

பள்ளி பாடப் புத்தகங்களில் தலைவர்கள் பற்றி தனிப்பட்ட வரலாறு எதுவும் இருக்காது.

தற்போதுள்ள பிரம்மாண்ட மணிமண்டபங்கள் அனைத்தும் இடிக்கப்படும்.
  நினைவிடங்கள் காலி செய்யப்படும்.

ஈழத்தை ஆக்கிரமித்து சிங்களவர் நிறுவியுள்ள புத்த சிலைகள் போல பிற இனத்தவர் ஆதிக்க நோக்கில் நிறுவியுள்ள சிலைகள் அனைத்தும் அகற்றப்படும்.

முக்கியமான பொருட்கள் இருந்தால் அவை அருங்காட்சியகத்தில் வைக்கப்படும்.

பொது இடங்களுக்கு தனிநபர் பெயர் இருந்தால் அவை மாற்றப்பட்டு இயல்பான பெயர்கள் வைக்கப்படும்.

இறந்த பிறகும் இந்த மண்ணில் ஆறடியை ஆக்கிரமித்தபடி யாரும் இருக்ககூடாது.

விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரருக்கு நடுகல் வைக்கப்படும்.

எத்தனை பெரிய தலைவராக இருந்தாலும் எந்த மதத்தவராக இருந்தாலும் இறந்த பிறகு உடல் எரியூட்டப்படும்.

அந்த நீறு(அஸ்தி) அவர் பிறந்த அல்லது வாழ்ந்த இடத்தில் மண்ணில் புதைக்கப்பட்டு அதன் மேல் நின்றநிலையில் ஒரே ஒரு சிலை  நிறுவிக்கொள்ளலாம்.
இந்த சிலை அவரது உடலமைப்பு அளவே பெரியதாக இருக்கவேண்டும்.
5 அடி உயர மேடையில் வைத்துகொள்ளலாம்.
அதில் உள்ள கல்வெட்டில் தலைவரது பெயர், பிறந்த தேதி, இறந்த தேதி மற்றும்  திறந்தவர் பெயர், திறந்த தேதி தவிர வேறு எதுவும் இருக்ககூடாது.

  சிலை பொதுவழியில் இடைஞ்சலாக இருக்ககூடாது.

கல்லில்தான் சிலை வைக்கவேண்டும்.
வண்ணமடித்தல் கூடாது.

தனியார் வளாகத்தில் வைக்கப்படும் சிலைகள் வெளியே இருந்து பார்ப்போருக்கு தெரியாமல் வைக்கப்படவேண்டும்.

வழிபாட்டு தலங்களுடைய கோபுரங்களில் சிலை இருக்கலாம்.
அது தனிநபர் சிலையாக இருக்ககூடாது.

சிலை அமைப்பது மிகச் சிறந்த தலைவர்களுக்கு மட்டுமே!

ஒரு தலைவருக்கு ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் சிலை இருக்கும்.

சிலை பராமரிப்பும் அத்தலைவர் பிறந்தநாள் விழா நடத்துவதையும் அரசே ஆடம்பரம் இல்லாமல் செய்யும்.

நமது கலை மற்றும் ஆற்றலை உலகிற்கு காட்ட பெரிய கட்டுமானங்கள் செய்வது அவசியம்.

ஆனால் அது தனிநபர் அடையாளமாக இருக்ககூடாது.

தமிழர்களே!

நடுத்தெருவில் கூண்டுக்குள் வெயிலில் புழுதியில் பறவைகள் எச்சமிட சிலை நிறுவி ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் மாலைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது செய்நன்றி ஆகாது.

தனிநபர் முக்கியத்துவம் தமிழர்நாட்டில் இருக்காது.

(படம்: அலெக்சாண்டரின் சிலை)

Monday, 26 February 2018

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்

இதுவே நமக்கொரு நாடும் முப்படையும் இருந்திருந்தால் சிரியாவில் நடப்பதை பார்த்துக்கொண்டு சும்மாவா இருந்திருப்போம்?

சிரிய மக்களுக்கு தேவையான ஆயுதமும் உணவும் அரசாங்கத்தை எதிர்த்த போரை வழிநடத்த சில தளபதிகளையும் அனுப்பியிருப்போமா இல்லையா?

அதனால்தான் நம்மை தனிநாடாக விடமாட்டார்கள்.

தமிழர்நாடு!
இரும்புநாடு!

Sunday, 12 November 2017

தமிழர்நாட்டு உளவுத்துறை

தமிழர்நாட்டு உளவுத்துறை

ஒரு நாட்டின் உண்மையான பலம் அதன் ராணுவம் மற்றும் உளவுத்துறை ஆகியன.

இஸ்ரேல் என்ற குட்டிநாடு சுற்றிலும் பெரிய பெரிய அரேபிய நாடுகளை தூக்கிப்போட்டு பந்தாடி கம்பீரமாக நடுவில் வீற்றிருக்க அதன் உளவுத்துறையான மொஸாட் முதல் காரணம்.

தமிழர்நாடு அமையும்போது அதன் அதிபராகவோ முப்படைகளின் தலைவர்களாகவோ தமிழினத்தவர் யார்வேண்டுமானாலும் வரலாம்.

மற்ற அரசியல் பதவிகள் மற்றும் பொறுப்புகளுக்கு தமிழர்நாட்டில் பிறந்து வளர்ந்த தமிழர்நாட்டு குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வரலாம்.

ஆனால் உளவுத்துறை அவ்வாறு இருக்கக்கூடாது.
அதன் தலைமை தமிழினத்தார் கையில் இருப்பதுடன் தமிழர்களிலேயே மிகவும் நம்பகமானோர் மட்டுமே தலைமைப் பதவிகளில் இடம்பெற வேண்டும்.

அதாவது உளவுத்துறையின் தலைவர் மற்றும் அதற்கடுத்த மூன்று அடுக்குகளில் இருப்போர் (தமிழினத்தவர்) கீழ்க்கண்டோராக இருக்கக் கூடாது

* பார்ப்பனர்
* இசுலாமியர்
* கிறித்தவர்
* பிற வெளிநாட்டு மதங்களை தழுவியோர்
* வெளிநாட்டில் பிறந்தோர்
* வேற்றினத்தார் மத்தியில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தோர்
* தமிழரல்லாதோரை திருமணம் செய்தோர்
* தமிழர்நாட்டுக்கு வெளியே தனது குடும்பத்தை வைத்திருப்போர்
(பெற்றோர், மனைவி, பிள்ளைகள்)
* 30 வயதுக்கு மேலாகியும் திருமணம் செய்யாதோர் மற்றும் 35 வயதாகியும் குழந்தை பெறாதோர்
* தமிழரல்லாத குழந்தையை தத்தெடுத்தோர்

மேற்கண்டவை தமிழர்நாடு அமையும்போது அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு யாரெல்லாம் தமிழர் என்று சான்றிதழ் வழங்கியபிறகு அதிகாரப்பூர்வமாக நிறுவப்படும் உளவுத்துறைக்கான விதிகள்.

தமிழர்நாடு அமையும் முன்பு ஒரு உளவுத்துறை நிறுவப்பட்டால் அதன் தலைமை அடுக்கானது
தமிழகம் மற்றும் ஈழத்தில் (எல்லை மாவட்டங்கள் அல்லாத மாவட்டங்களில்) தமிழ்ச்சாதியில் பிறந்து தமிழர்கள் மத்தியில் வளர்ந்த இசுலாமிய கிறித்துவர் அல்லாதோரிடம் இருக்கலாம்.

சுருக்கமாகக் கூறவேண்டுமானால்,
உளவுத்துறையில் முதல் நான்கு அடுக்குகள் முடிந்த அளவு வேற்றினத் தொடர்பு அல்லாமலும் முடிந்த அளவு தமிழ்த் தாய்நிலத்துடன் பிணைப்பு கொண்டும் இருக்கவேண்டும்.

ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு திருமணம் செய்வதை தமிழர்நாட்டில் கட்டாயமாக்கவேண்டும்.
திருமணம் ஆகாத ஒருவருக்கு சமூகத்தைப் பற்றிய புரிதலும் கவலையும் இருக்காது மற்றும்
துணை இல்லாமல் உடலியல் மனவியல் தேவைகள் பூர்த்தியடையாது ஆதலால் அவரால் சரியான நோக்கில் சிந்தித்து செயல்படவும் முடியாது.
 
(இப்பதிவு ஒரு சிந்தனை மட்டுமே!
எனது மற்ற சிந்தனைகள் காலப்போக்கில் மாற்றமடைந்தாலும் உளவுத்துறை பற்றிய எனது சிந்தனை பின்பற்றப்பட நான் அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.

பதவின் படி ஒன்பது ஆண்டுகள் வேற்றினத்தாருடன் வாழ்ந்த நான்கூட உளவுத் தலைமைக்கு தகுதியில்லாதவனே!

நான் பார்ப்பனர் தமிழர் என்று கூறுபவனும் கூட!

உளவுத்துறையானது அரசியல், பொருளாதாரம், உணர்ச்சி அலைகள் என காலமாற்றத்துக்கு ஏற்ப மாறக்கூடாது.
ஒரு நாட்டை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க வேண்டும்.
மறைமுகமாக மக்களை வழிநடத்தும் பொறுப்பும் உளவுத்துறைக்கு உண்டு.

எனவே சந்தேகம் ஏற்படும் பின்னணி கொண்ட எவரையும் உளவுத்துறையின் தலைமைக்கு வரவிடக் கூடாது.

இந்த இடத்தில் பாரபட்சம் தேவை என்பது எனது கருத்து.)

Monday, 9 October 2017

தமிழர்நாட்டில் மரவீடுகள்

தமிழர்நாட்டில் வீடுகட்ட இன்று நாம் பயன்படுத்தும் மணல், இரும்பு, சுண்ணாம்பு போன்ற புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்தாமல்
மரங்களை வைத்து வீடுகட்டவேண்டும்.

இரும்பு போல உறுதியான மர வகைகளும், தீயில் எரியாத மர வகைகளும்,
ஆச்சா போன்ற நீரில் மூழ்கும் மர வகைகளும் கூட உண்டு.

நாம் அனைத்து கட்டுமானங்களையும் பயன்பாட்டுப் பொருட்களையும் முடிந்தவரை மரத்தாலேயே செய்யவேண்டும்.

அதாவது பொம்மை, நாற்காலி, பாத்திரங்கள், கட்டில், அலமாரி, சிலைகள், அழகுப் பொருட்கள், செருப்பு, மின்னணு சாதனங்களின் உடல்பகுதி, வாகனங்களின் உடல் பகுதி, வேலி, வீடு, கூரை, தூண், பாலம், சாலை ஓர தடுப்புகள் போன்ற அனைத்தையும் மரத்தாலேயே செய்ய முயற்சிக்க வேண்டும்.

மரப்பொடியையும் மீண்டும் பசையில் குழப்பி அழுத்தி மீண்டும் பலைகை ஆக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுவரவேண்டும்.

அதற்கு முதலில் வனப்பகுதிகளைப் பாதுகாத்து அதனைப் பெருக்கி
பிறகு அதன் எல்லையை விரிவாக்கி நாட்டில் மூன்றில் ஒரு பங்கு அடர்த்தியான காடுகளை உருவாக்கவேண்டும்.
(இது எல்லைப்பகுதியில் செய்யப்படவேண்டும்).
பிறகும் நாம் நாடே காடாகும் அளவு சமூகக் காடுகளை வளர்க்கவும் வேண்டும்.
வானில் இருந்து பார்க்கும்போது பச்சையாக மட்டுமே தெரியுமளவு மரங்களை வளர்க்கவேண்டும்.

மரங்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக செல்லும்போது வெட்ட ஆரம்பிக்கவேண்டும்.
அதுவரை மிகவும் குறைவாகவே மரம் வெட்டுதல் நடக்கவேண்டும்.

Monday, 11 September 2017

ஆளும் பரம்பரை

ஆளும் பரம்பரை

தனிநாடு அமைய யார் பெரிய பங்களிப்பைச் செய்கிறார்களோ!
அவரையும் அவரது சந்ததிகளையும் மன்னர் பரம்பரையாக அறிவிக்கவேண்டும்.

இது எங்கும் நடக்காத விநோதம் இல்லை.
இப்போதும் பல நாடுகளில் (ஏதோ பெயருக்கு) மன்னர் குடும்பமும் அவர்களுக்கு தனியாக சலுகைகளும் அதிகாரங்களும் உள்ளன.

அதே போல நமது தமிழர்நாடு அமைவதில் யாரொருவர் பெரும்பங்கு வகிக்கிறரோ (அதாவது ராணுவத் தலைமை),
அவருக்கு பெரிய அரண்மனை கட்டிக்கொடுத்து (அவர் அதிபராக இருக்க விரும்பினால் அவர் ஓய்வு பெற்றபிறகு) முடிசூட்டி மன்னராக அறிவிக்கவேண்டும்.

(இரண்டு, மூன்று தலைவர்கள் இருந்தால் மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி தேர்ந்தெடுக்கலாம்)

முதல் மன்னரே தமிழினத்தின் தலைவர்.
*தமிழினத் தலைவர்* என்று அவர் மட்டுமே என்றென்றும் குறிப்பிடப்படுவார்.
(பிற மன்னர்களுக்கு அல்லது அதிபர்களுக்கு இந்த பட்டமோ அல்லது இதை ஒத்த பட்டமோ கிடையாது)

அவருக்குப் பிறகு அவரது வாரிசுளில் மூத்தவர் (ஆணோ பெண்ணோ) மூடிசூட்டிக்கொள்ள வேண்டும்.

மன்னர் குடும்பத்திற்கு தனியே பாதுகாப்புப்படை, சிறிய அளவு ஆளும் பகுதி, அரசியல் தலையீடு, சிறப்பு சலுகைகள், பொருளாதார ஒதுக்கீடு போன்றவற்றை வழங்குவதா வேண்டாமா அல்லது எந்த அளவு வழங்கவேண்டும் என்பதை தமிழர்நாடு அமைந்ததும் (அதாவது தமிழர் தாய்நிலம் தமிழரின் ராணுவக் கட்டுப்பாட்டில் வந்ததும்) உலக மன்னர் குடும்பங்களைப் பற்றி ஒப்பிட்டு மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவெடுக்கவேண்டும்.

(மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பார்கள் எனவே) மன்னர் குடும்பத்திற்கு அதிக சலுகை வழங்கக்கூடாது என்பது என் கருத்து.

நான் பரிந்துரைப்பது,

* தமிழர்நாட்டில் முதல் மன்னரின் வாரிசுகள் மட்டுமே ஆளும் பரம்பரை அல்லது ஆண்ட பரம்பரை.
மற்ற யாரும் அந்த பெயரை பயன்படுத்தக் கூடாது.

* மன்னர் குடும்பத்திற்கு ஒரு மிகப்பெரிய அரண்மனை.
ஏதாவது ஒரு ஆற்றின் நடுவே தீவு போல இருக்கும் பகுதியைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதில் நமது பண்பாடு கலாச்சாரம் கலைகளைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்ட அரண்மனை ஆடம்பரமாகக் கட்டவேண்டும்.
ஆற்றிற்கு கீழே இருகரைகளுக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கவேண்டும்.
மேல் தளத்தில் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்ட்டர்) இறங்கும் வசதி இருக்கவேண்டும்.

* அரண்மனைக்கு தனியாக நல்ல ராணுவப் பயிற்சி பெற்ற 500 பேர் கொண்ட காவல்படை அரசு நியமிக்கவேண்டும்.
அதில் 5 பேரை மன்னர் தனிப்பட்ட மெய்க்காப்பாளராக நியமித்துக்கொள்ள வேண்டும்.

* அரண்மையைச் சுற்றிய இரண்டு மூன்று கிராமங்களின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அரண்மனை செலவுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
மன்னருக்கு அந்த கிராமங்களின் மீது எந்த அதிகாரமும் கிடையாது.

* அரசு எடுக்கும் முடிவை மாற்றும் அதிகாரம் மன்னருக்குக் கிடையாது.
ஆனால் எல்லா முடிவுகளையும் விமர்சிக்க வேண்டும்.
மன்னரது விமர்சனம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் ஊடகம் மூலம் போய்ச்சேரவேண்டும்.

* மன்னர், அவரது வாழ்க்கைத் துணை, அவரது நேரடிக் குழந்தைகள், அவரது நேரடி பேரப்பிள்ளைகள் மட்டுமே அரண்மனையில் இருக்கலாம்.
மற்றபடி முதல் மன்னனின் நேரடி வம்சாவழிகள் எத்தனை தலைமுறைக்கும் அவரது பெயரை (அல்லது சிறப்புப் பெயரை) தமது பெயருடன் இணைத்துக் கொள்ளலாம்.
(மன்னரது உடன்பிறப்புகள் திருமணம் முடியும் வரை அரண்மனையில் இருக்கலாம்)

* மன்னர் தேர்தலில் போட்டியிட விரும்பினால் தமது குடும்பத்தில் வேறொருவருக்கு முடிசூட்ட வேண்டும்.
ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டால் (வென்றாலும் தோற்றாலும்) பிறகு அவருக்கு அரண்மனையில் இடம் கிடையாது.
(முதல் மன்னருக்கு மட்டும் விதிவிலக்கு.
ஆனால் இரண்டு பதவிகள் கிடையாது.
எதாவது ஒன்றுதான்.)

* மன்னர் மற்றும் அவரது வாழ்க்கைத்துணை தவிர அரண்மனையில் மற்றவர்கள் சாதாரண குடிமக்கள் போலவே மதிக்கப்படுவர்.
அதாவது அரண்மனைக்கு வெளியே எந்த சலுகையும் அவர்களுக்கு கிடையாது.

* மன்னர் எப்போது வேண்டுமானாலும் அதிபரைச் சந்திக்கலாம் என்ற ஒரு சலுகையைத் தவிர வேறு எந்த அரசியல் சலுகையும் கிடையாது.
(சந்திப்பு அதிபர் மாளிகையிலோ அல்லது அரண்மனையிலோ நடக்காது பொதுவான ஒரு இடத்திற்கு இருவரும் வந்து நடக்கவேண்டும்)

* மன்னர் பிறருக்கு அளிக்கும் பரிசு அவருடன் விருந்துண்ணல் மற்றும் அரண்மனையில் தங்கியிருத்தல் மட்டுமே

* அரண்மனை வேலைக்காரர்கள் தவிர மன்னர் மற்றும் அவரது துணைக்கு மட்டுமே தனிப்பட வேலைக்காரர்கள் மீது அதிகாரம் உண்டு.
மன்னருக்கு மட்டும் ஒரு உதவியாளர் உண்டு.
(பிறருக்கு வேலைக்காரர்கள் மீது அதிகாரம் கிடையாது)

* மன்னருக்கு ஆடம்பரமான ஒரு உந்து(car) வழங்கப்படும்.
அது உள்நாட்டில் தனித்துவமாக ஆடம்பரமாகத் தயாரிக்கப்படும்.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படும்.
ஓட்டுநர் உண்டு.

* மன்னர் குடும்பத்திற்கும் அரண்மனைக்கும் ஆகும் செலவு ஆண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும்.
அந்த செலவு ஒரு சாதாரண குடிமகனின் வீடு மற்றும் குடும்பச் செலவு போல 10 மடங்கு வரை இருக்கலாம்.

* மன்னர் குடும்பம் தமது அன்றாட வாழ்வில் தமிழ் மொழியையும் பண்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.
அதாவது மன்னர் என்பவர் பண்பாட்டுச் சின்னம்.

சுருக்கமாக,
மன்னர் என்பவர் கம்பீரமாக அரியணையில் வீற்றிருக்க வேண்டும்.
ஆடம்பரமாக தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்த கவலையும் இன்றி வாழவேண்டும்.
நாட்டு நடப்பினை அறிந்து அதற்குத் தக்க யோசனையோ விமர்சனமோ வெளியிடவேண்டும்.
தமிழ்ப் பண்பாட்டினை அப்படியே பின்பற்றவேண்டும்.

தற்போதைய ஆந்திராவின் பெண்ணாறு முதல் தற்போதைய இலங்கையின் கும்புக்கண் ஆறு வரை பரந்து விரிந்த தமிழர் நாட்டை ஆளப்போகும் அந்த முதல் மன்னனே ஒட்டுமொத்த தமிழினத்தின் தலைவன்.

நமக்குள் ஒருவன்தான் அவன்.