Saturday, 20 July 2019

தமிழ்நாடு - இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை

தமிழ்நாடு

இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை.

இதற்கு பதிலாக "தமிழகம்" என்றே பயன்படுத்துகிறேன்.

முதலில்....
எது நாடு?!

ஐ.நா அங்கீகாரமா?
அல்ல.
ராணுவ வேலி போடப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் "நாடு" என்றாகும்.

தமிழர் வாழும் நிலப்பரப்பில்
பாதிக்கும் குறைவான நிலத்தை,
எந்த ஒரு அதிகாரமும் இல்லாத "மாநிலம்" ஆக்கி,
அதை ஒரு (முதல்)அமைச்சர் மூலம் ஆண்டுவருகிறது ஹிந்திய ஏகாதிபத்தியம்.

இந்த நிலப்பரப்பை "நாடு" என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்றால்....
சொந்தவீடு கட்ட இயலாத ஒருவன் ஒரு பொம்மை வீட்டை வாங்கி அதற்கு "இல்லம்" என்று பெயரிடுவதைப் போன்று வேடிக்கையாக இருக்கிறது.

இதில் அந்த பொம்மை வீட்டை வாங்கிய நாளை கொண்டாடவும் வேண்டுமாம்....
இருந்த சில உரிமைகளையும் மத்திக்கு தாரைவார்த்த அடிமை,
தன் இன மக்களையே சுட்டுக்கொன்ற இனத்துரோகி எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறான்.

எவர் தலையீடும் இல்லாமல் தன்னாட்சி செலுத்தும் ஒரு இனமே இத்தகைய "நாடு அமைந்த நாள்" "விடுதலை நாள்" "வெற்றி நாள்" போன்றவற்றைக் கொண்டாட தகுதியானது.

நாம் உழைத்து அதில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ஹிந்தியாவுக்கு கொட்டியழுது
எந்த உரிமையும் சலுகையும் இல்லாமல்
மேலும் மேலும் சுரண்டப்படும் நமக்கு இந்த கொண்டாட்டங்கள் தேவையா?!

வளத்தால்,
மக்கட்தொகையால்,
பரப்பளவால்,
பொருளாதாரத்தால்,
அறிவாற்றலால்,
நாகரீகத்தால்
ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிபோட வல்ல தமிழர்நாடு...
"தமிழ்நாடு" என்கிற
நொடிந்த,
வலுவற்ற,
பாதுகாப்பற்ற,
அடிமைத்தனமான,
கொள்ளைபோகிற,
கலப்படமாகிற,
அழியப்போகிற,
ஒரு சிறு மாநிலமாக ஆவானேன்?!
அது அமைந்த நாளை கொண்டாடுவானேன்?!

பாரத மாதாவின் பாதத்தில் மிதிபட்டு நசுங்கிக் கிடக்கும் தமிழன்னை விடுதலை பெறும்வரை நமக்கு பிறந்தநாள் கொண்டாடக்கூட தகுதி கிடையாதே?!

(படம்:
"தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட  வரைபடம்"
மற்றும்
"தமிழர்நாடு - வட்டார எல்லைகள்"
ஒப்பீடு)
------
படம் தெரியாவிட்டால்
https://vaettoli.wordpress.com/2019/07/20/தமிழ்நாடு-இந்த-பெயரை-நான/

1 comment:

  1. சங்க காலத்துக் முன் உள்ளது தமிழகம் - அகண்ட நிலப்பரப்பு தமிழர்கள்.

    தமிழ் நாடு என்று பெயர் இருப்பது பலருக்கு உறுத்தல் ; இப்படி எந்த மாநிலத்துக்கும் இல்லாத ஆளுமை இருப்பது முதலில் வாழ்விழந்து கிடக்கும் தமிழுக்கு தேவை ; தமிழருக்கு ..தமிழ் நாட்டுக்குத் தேவை ; பொம்மையாகவே இருந்தாலும் குழந்தைக்கு அது புத்தாக்கம்

    ReplyDelete