Monday, 19 June 2023
இலக்கியம் கூறும் தமிழ்நாடு எனும் சொல்
Sunday, 9 October 2022
தமிழ்நாட்டான் இராசராசன்
Sunday, 31 October 2021
தமிழ்நாடு பெயர்மாற்றம் மீது அண்ணாதுரை பேச்சு
Saturday, 20 July 2019
தமிழ்நாடு - இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை
தமிழ்நாடு
இந்த பெயரை நான் பயன்படுத்துவதில்லை.
இதற்கு பதிலாக "தமிழகம்" என்றே பயன்படுத்துகிறேன்.
முதலில்....
எது நாடு?!
ஐ.நா அங்கீகாரமா?
அல்ல.
ராணுவ வேலி போடப்பட்ட ஒரு நிலப்பரப்புதான் "நாடு" என்றாகும்.
தமிழர் வாழும் நிலப்பரப்பில்
பாதிக்கும் குறைவான நிலத்தை,
எந்த ஒரு அதிகாரமும் இல்லாத "மாநிலம்" ஆக்கி,
அதை ஒரு (முதல்)அமைச்சர் மூலம் ஆண்டுவருகிறது ஹிந்திய ஏகாதிபத்தியம்.
இந்த நிலப்பரப்பை "நாடு" என்று அழைப்பது எப்படி இருக்கிறது என்றால்....
சொந்தவீடு கட்ட இயலாத ஒருவன் ஒரு பொம்மை வீட்டை வாங்கி அதற்கு "இல்லம்" என்று பெயரிடுவதைப் போன்று வேடிக்கையாக இருக்கிறது.
இதில் அந்த பொம்மை வீட்டை வாங்கிய நாளை கொண்டாடவும் வேண்டுமாம்....
இருந்த சில உரிமைகளையும் மத்திக்கு தாரைவார்த்த அடிமை,
தன் இன மக்களையே சுட்டுக்கொன்ற இனத்துரோகி எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறான்.
எவர் தலையீடும் இல்லாமல் தன்னாட்சி செலுத்தும் ஒரு இனமே இத்தகைய "நாடு அமைந்த நாள்" "விடுதலை நாள்" "வெற்றி நாள்" போன்றவற்றைக் கொண்டாட தகுதியானது.
நாம் உழைத்து அதில் ஆண்டுக்கு 3 லட்சம் கோடி ஹிந்தியாவுக்கு கொட்டியழுது
எந்த உரிமையும் சலுகையும் இல்லாமல்
மேலும் மேலும் சுரண்டப்படும் நமக்கு இந்த கொண்டாட்டங்கள் தேவையா?!
வளத்தால்,
மக்கட்தொகையால்,
பரப்பளவால்,
பொருளாதாரத்தால்,
அறிவாற்றலால்,
நாகரீகத்தால்
ஐரோப்பிய நாடுகளுடன் போட்டிபோட வல்ல தமிழர்நாடு...
"தமிழ்நாடு" என்கிற
நொடிந்த,
வலுவற்ற,
பாதுகாப்பற்ற,
அடிமைத்தனமான,
கொள்ளைபோகிற,
கலப்படமாகிற,
அழியப்போகிற,
ஒரு சிறு மாநிலமாக ஆவானேன்?!
அது அமைந்த நாளை கொண்டாடுவானேன்?!
பாரத மாதாவின் பாதத்தில் மிதிபட்டு நசுங்கிக் கிடக்கும் தமிழன்னை விடுதலை பெறும்வரை நமக்கு பிறந்தநாள் கொண்டாடக்கூட தகுதி கிடையாதே?!
(படம்:
"தமிழர்நாடு - இறுதிசெய்யப்பட்ட வரைபடம்"
மற்றும்
"தமிழர்நாடு - வட்டார எல்லைகள்"
ஒப்பீடு)
------
படம் தெரியாவிட்டால்
https://vaettoli.wordpress.com/2019/07/20/தமிழ்நாடு-இந்த-பெயரை-நான/
Thursday, 24 January 2019
இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்
இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்
சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடெனும் போதினிலே– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே
- பாரதியார்
Thursday, 23 August 2018
தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?
தமிழ்நாடு பெயர்மாற்றம் அண்ணாதுரையின் சாதனையா?
* 1955 இல் முதன்முதலாக ம.பொ.சி தனது தமிழரசுக் கழக செயற்குழு கூட்டத்தில் தமிழர் மாநிலத்துக்கு 'தமிழ்நாடு' என்ற பெயரை முன்மொழிந்தார்.
(1953 லேயே மதராஸ் என்ற பெயரை மாற்றுவது குறித்து சட்ட மேலவையில் பேசியுள்ளார்)
* 1956 இல் தமிழர்களின் எல்லையை அண்டை மூன்று மாநிலங்கள் தாராளமாக ஆக்கிரமித்து மிச்சம் வைத்த மதராஸ் மாகாணம் அதே பெயரல் ஒரு மதராஸ் மாநிலம் ஆனது.
'மதராஸ்' என்ற பெயருக்கு பதிலாக 'தமிழ்நாடு' என்று பெயரிட சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார்.
* காமராசர் பாராமுகமாக இருக்க 74 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அவர் இறந்தார்.
அதற்குப் பிறகு 42 நாட்கள் கழித்து சட்டமன்றத்தில் பெயர்மாற்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஆனால் காமராசர் அதைத் தள்ளுபடி செய்தார்.
* இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் "தமிழ் ராஜ்யம்" என்று பெயரிடுமாறு குரல் கொடுத்தார்.
தனது பத்திரிக்கையிலும் எழுதினார்.
* 1960 இல் ம.பொ.சி தலைமையில் மீண்டும் பெயர்மாற்றத்திற்கான மக்கள் திரள் போராட்டம் நடந்தது.
இதில் அண்ணாதுரை கலந்துகொண்டதோடு சரி.
* 1961 இல் சின்னதுரை கொண்டுவந்த தீர்மானத்தில் மதராஸ் மாகாணம் தமிழில் எழுதும்போது 'தமிழ்நாடு' எனவும் ஆங்கிலத்தில் 'மெட்ராஸ் ஸ்டேட்' என்றும் எழுதப்படும் என்று நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் உறுதியளித்தார்.
அந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை 'தமிழ்நாடடின் நிதிநிலை அறிக்கை' என்ற பெயரிலேயே தாக்கல் செய்து வாசித்தார்.
அதாவது பாதி வெற்றி அடைந்த இந்த நிலையில்தான் அதுவரை வேடிக்கை பார்த்த 'திராவிட நாடு' ஆசிரியரான அண்ணாதுரை இதில் நுழைகிறார்.
இதற்குக் காரணம் அண்ணா 1962 பிப்ரவரியில் நடந்த தேர்தலில் தான் பிறந்த மண்ணான காஞ்சிபுரத்திலேயே மண்ணைக் கவ்வியதுதான்.
அப்போது மக்கள் மத்தியில் 'தமிழ்நாடு' பெயர்மாற்றத்திற்கு இருக்கும் பரவலான ஆவலை கவனித்து மக்கள் ஆதரவைப் பெற இந்த விடயத்தில் பங்கெடுக்கிறார் அண்ணாதுரை.
* 1962 இல் காமராசர் ஆட்சியில் பெயர்மாற்றத் தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது.
* 1963 இல் அண்ணாதுரை இந்திய பாராளுமன்றத்தில் அண்ணாதுரை தமிழ்நாடு பெயர்மாற்றத்திற்கு குரல்கொடுத்து தனது வாதத் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
இதுவே இவர் இப்பெயர்மாற்ற போராட்டத்தில் செய்த குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு
* பிறகு 1964 இல் பக்தவச்சலம் ஆட்சியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேறாமல் போனது
* அதற்கடுத்த இந்தியெதிர்ப்பு போராட்டத்தில் மத்திய மாநில காங்கிரஸ் அரசுகள் செய்த அடக்குமுறைகள் மக்கள் மனதில் வெறுப்பை ஏற்படுத்தி 1967 ஏப்ரலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்க காரணமானது.
(இந்தியெதிர்ப்பு போராட்டமும் சோமசுந்தர பாரதியார் தலைமை ஏற்று நடத்தியதே.
அண்ணாதுரை பங்கு அதில் பெரிதாக ஏதுமில்லை.
ஈவேரா ஒரு படி மேலே போய் போராடும் மாணவர்களை சுடச்சொல்லி எழுதிவந்தார்)
* ஆட்சிக்கு வந்து மூன்று மாதம் கழித்து சட்டமன்றத்தில் அண்ணாதுரை பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
அது ஏகமனதாக நிறைவேறியது
* ஓராண்டு கழித்து 1968 ஆண்டுக் கடைசியில் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது.
* 14.01.1969 அன்று முதல் தமிழ்நாடு என்ற பெயரே நடைமுறைக்கு வந்தது.
அடுத்த ஒரு மாதத்தில் அண்ணாதுரை புகையிலைக் குதப்பும் பழக்கத்தால் வந்த புற்றுநோயினால் உயிரிழந்தார்.
ஏதோ அண்ணாதுரை சாகும்வரை போராடி பெயர்மாற்றம் கொண்டுவந்தது போல புனைக்கதைகள் எழுதப்படும் அதே வேளையில்
"தமிழ்நாடு" என்ற பெயருக்காக உயிர்நீத்த சங்கரலிங்கனாரை பெயர்மாற்ற விழா அன்று நினைவுகூர்ந்ததோடு சரி அதன்பிறகு இருட்டடிப்பு செய்துவிட்டனர்.
தமிழ்நாடு என்ற சொல்லை உருவாக்கி முன்மொழிந்த ம.பொ.சி கூட இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டார்.
ஆனால் தமிழ்நாடு பெயர்மாற்றம் என்றாலே அண்ணாதுரை கொண்டுவந்தது என்றும் அவர் இல்லாவிட்டால் நாம் 'மெட்ராஸ் மக்களாக' இருந்திருப்போம் என்றும் திராவிடவாதிகள் பேசுவதைப் பார்க்கிறோம்.
இவர்களின் செயழகு எவ்வாறு என்றால்,
* கால் நூற்றாண்டு கழித்துதான் 1996 இல் மதராஸ் சென்னை ஆனது.
* தமிழகத்தின் உயர்நீதி மன்றம் இன்றும் "சென்னை உயர்நீதிமன்றம்" அல்லது "மதராஸ் ஹைகோர்ட்" என்றே இன்றுவரை உள்ளது.
* இன்றுவரை தமிழகத்தின் தலைமை பல்கலைக்கழகம் "அண்ணா பல்கலைக்கழகம்" என்றே உள்ளது.
"தமிழ்நாடு பல்கலைக் கழகம்" என்று இல்லை
Sunday, 8 July 2018
தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?
தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?
காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.
ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.
அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)
இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.
அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.
இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.
இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.
நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.
அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.
ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.
எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.
இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.
அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.
நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.
தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார்
(இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).
நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.
ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.
ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.
பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.
ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.
நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.
நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.
இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்கு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிறோம்.
தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.
இனியும் பொறுக்கக்கூடாது!
நாம் தனிநாடாவோம்!
ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.
ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.
படம்: வீரப்பனார் மற்றும் தனித்தமிழ்நாடு ஆயுதக் குழுக்கள் வெளியிட்ட "பெரிய தமிழ்நாடு" வரைபடம்
Tuesday, 13 February 2018
மூலையில் கிடக்கிறோம்
Wednesday, 7 June 2017
இலக்கியத்தில் தமிழர்நாடு
இலக்கியத்தில் தமிழர்நாடு
*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡
கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?
(சிரிப்பை அடக்கிக்கொண்டு) பதில்:
தமிழ்:-
---------
தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது.
முக்கியமானவை மட்டும் தருகிறேன்.
தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58
அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50
தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6
தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார்
- பரிபாடல் 9
தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
- பரிபாடல் 4
__________________________________
தமிழர் :-
-------------
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
- புறநானூறு 19
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்)
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
- புறநானூறு 35
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்)
தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
- பரிபாடல் 8
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்)
அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
- சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை
தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண
- முத்தொள்ளாயிரம் 24
________________________________
தமிழர்நாடு :-
---------------------
தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31
இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்
தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.
தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9
தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)
கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)
தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)
தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை
இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை
குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை
தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)
_________________________________________
யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது.
Wednesday, 5 April 2017
குருதியில் நனைந்த குமரி -16
குருதியில் நனைந்த குமரி -16
------------------
நாள்: 26.08.1954
நேரம்: அதிகாலை 5 மணி
இடம்: நாகர்கோவில்
கதவு தட்டப்படும் ஓசை கேட்டு நேசமணியாரின் மனைவி கரோலின் அம்மையார் கதவைத் திறந்தார்.
வெளியே தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.எஸ்.கரையாளர் மற்றும் சில காங்கிரஸ் தலைவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.
"வணக்கம் அம்மா!
நாங்கள் காங்கிரஸ் குழு மதராசிலிருந்து வருகிறோம்.
நேசமணி இருக்கிறாரா?"
"வாருங்கள்! உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறார்"
உள்ளே நுழைந்தனர்.
நேசமணி சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி கண்ணயர்ந்து இருந்தார்.
சத்தம் கேட்டு கண்விழித்தார்.
கைகூப்பியபடி எழுந்தார்
"வணக்கம்! வாருங்கள்! வாருங்கள்!
உங்களுக்கு தந்து உபசரிக்க பாலோ மோரோ இல்லை!
கொஞ்சநேரம் பொறுங்கள்!
புட்டு தயாராகிவிடும்.
நீத்தண்ணீர் அருந்துகிறீர்களா?"
"பரவாயில்லை ஐயா!
இங்கே உள்ள இறுக்கமான சூழலை அறிவோம்.
உங்களுக்கு உணவுத் தட்டுப்பாடு ஏதும் இல்லையே?!"
" இல்லை.
தமிழ்மண்ணில் தஞ்சாவூருக்கு அடுத்து பெரிய நெற்களஞ்சியம் இந்த நாஞ்சில் நாடு.
80 ஆண்டுகள் முன்பு பஞ்சம் வந்தபோது கூட இங்கே உணவுக்கு தட்டுப்பாடு வரவில்லை.
என்ன! எல்லா விளைச்சலையும் குறைந்த விலை கொடுத்து திருவிதாங்கூர் அரசாங்கம் அள்ளிக்கொண்டு போய்விடும்"
"இப்போதுமா அது நடக்கிறது?"
"ஆமாம். வெளியே 40 ரூபாய் கிடைக்கும்.
ஆனால் வீட்டுக்குத் தேவையான நெல்லை எடுத்துக்கொண்டு அவர்களுக்கு 9 ரூபாய்க்கு கொடுக்கவேண்டும்.
அள்ளவரும் நம்பூதிரிகளைக் கேட்டால் பத்மநாபசாமி கோவிலுக்கு என்பார்கள்"
"பத்மநாபசாமி கோவிலுக்கு நான் போயிருக்கிறேன்.
திருவனந்தபுரம் பத்மநாதசாமி கோவில்தானே?"
"ஆம். ஆனால் பத்மநாபபுரம் இங்கேதான் இருக்கிறது.
அதுதான் திருவிதாங்கூர் தலைநகராக இருந்தது.
அரண்மனை கூட உண்டு.
பிறகுதான் தமிழர் மத்தியில் தலைநகர் வேண்டாமென திருவனந்தபுரத்தை தலைநகராக ஆக்கினர்.
திருவனந்தபுரத்திற்கு அந்தப்பக்கம் வரை மலையாளிகள் தாய்நிலம்.
அந்த பத்மநாபசாமி கோயிலை போய்ப்பாருங்கள் அப்படியே ஸ்ரீரங்கம் கோவிலைப் போல இருக்கும்.
நம்பூதிரிகள் சதிசெய்து கொன்ற கடைசி தமிழ்மன்னன் இருநூறு ஆண்டுகளுக்கு முன் பெரும் செல்வத்தை அக்கோயிலின் நிலவறைகளில் மறைத்துவைத்துள்ளான்.
கோயிலைச் சுற்றித் தமிழர்கள் இருக்கிறார்கள்.
கோயில் பக்தர்களும் தமிழர்களே!
என்று அந்த அறைகளைத் திறக்கிறார்களோ அப்போது பிரச்சனை வெடிக்கும்.
அந்த கோவில் உட்பட திருவிதாங்கூர் முழுவதுமே தமிழர் சொத்துதான்.
இன்றைக்கு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியையாவது மீட்கவேண்டும். குமரி முனையில் இருந்து மேற்கே திருவனந்தபுரம் வரையும்
அப்படியே வடக்கே தமிழ்நாட்டை ஒட்டியவாறு வால்பாறை வரையும் பரந்திருக்கும் நமது தமிழர் மண்ணை மீட்கவேண்டும்"
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் திருநெல்வேலி மாவட்டம் அளவு வரும் போலிருக்கிறதே?!"
"இல்லை அதில் முக்கால்வாசி வரும்.
ஆனாலும் இதை சாதிப்பது அத்தனை எளிய காரியமில்லை.
இந்த நாஞ்சில் பகுதி மலையாளிகளின் கையைவிட்டு போய்விட்டால் அவர்களுக்கு சோற்றுக்கே வழி கிடையாது.
தேவிகுளமும் பீருமேடும் தமிழ் மாநிலத்துடன் இணைந்து ஏலக்காய், தேயிலை, ரப்பர் மூலம் வரும் வருமானம் தமிழர் கைக்குப் போய்விட்டால் மலையாளிகள் பாதி ஏழைகள் ஆகிவிடுவார்கள்.
நமது மண்ணின் வளத்தை நம்மை உழைக்கவைத்து கொழுத்துக் கிடக்கின்றனர் நம்பூதிரிகள்.
வருமானம் தரும் பகுதிகள் போனாலும் சரி நம்மை அடக்கியாள நினைக்கும் இவர்கள் நோகாமல் உண்ண சோறு கிடைக்க ஒரு போதும் விடமாட்டேன்.
இந்த நாஞ்சில் நாட்டை தமிழ்மாநிலத்துடன் இணைத்துக்கொள்ளுங்கள்.
இந்த மண்ணை சரியாக பயன்படுத்தினால் பாதி தமிழினத்திற்கு சோறிடமுடியும்"
"கவலை வேண்டாம்.
எங்களுக்கு இங்கே தற்போது நடக்கும் அடக்குமுறை பற்றி சொல்லுங்கள்.
நாங்கள் நேரில் சென்று பார்வையிடவும் செய்வோம்"
"1948லேயே தமிழகத்துடன் இணைய போராடினோம்.
இரண்டு தமிழர்களை இதே பட்டம் தாணுப்பிள்ளை சுட்டுக் கொன்றான்.
பிறகு இவனை அகற்றிவிட்டு வேறு ஒரு மலையாளி முதலமைச்சரானான்.
அவனும் சளைத்தவனில்லை.
ஆனால் ஒரு மலையாள இனவெறியன்தான் தமிழர்களைச் சமாளிக்கமுடியும் என்று மறுபடி பட்டத்தையே கொண்டுவந்தனர்.
'தமிழன்மார அடிச்சமர்த்தனம்' என்று கொக்கரித்தபடி ஆட்சிக்கு வந்தான் பட்டம்"
"பிள்ளை என்றால் தமிழரா?"
"இல்லை எட்டுவீட்டுப் பிள்ளைமார் எனப்படும் நாயர்.
இவன் மலையாள கைதிகளை விடுதலை செய்து பீருமேட்டில் வீடும் பணமும் கொடுத்து குடியேற்றினான்.
பிறகு அங்கே அவர்கள் ஒரு தொழிற்சங்கம் தொடங்கி தமிழர்களுக்கான அமைப்பாக இருந்த தொழிற்சங்கத்துடன் பிரச்சனை செய்தனர்.
பட்டம் அரசும் ஒருதலைபட்சமாக நடந்தது.
பிறகு தமிழர்கள் மீது வழக்கு, கைது, சோதனையிடல், தடியடி என்று காவல்துறை அடக்குமுறைகள்.
குமரித் தமிழர்கள் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மாவா இருப்போம்.
200 கி.மீ அந்தப்பக்கம் இருந்தாலும் நாங்கள் போய் தடை உத்தரவை போராடினோம்.
400 பேர் கைதானோம்.
நான் விடுதலை ஆனதும் ஒரு பேரணி நடத்த திட்டம் இட்டவேளையில் நேரு அமைதியாக இருக்கும்படி கடிதம் எழுதினார்.
ஆனாலும் மாநில எல்லை வரைவுக் குழு வரவுள்ள இந்த நேரத்தில் நாங்கள் போராடவேண்டிய கட்டாயம்.
எனவே பெரியதொரு போராட்டத்தை முன்னெடுத்தோம்.
எங்களுக்கு இப்படி நடக்கும் என்று தெரியும்.
தெரிந்தேதான் போராடினோம்"
"என்னவொரு துணிச்சல் ஐயா உங்களுக்கு!
மற்ற அடக்குமுறைகளை நேரில் சென்று பார்வையிடுகிறோம்.
உள்ளது உள்ளபடி அப்படியே அறிக்கையாக அளிக்கிறோம்.
எங்களால் முடிந்ததை நிச்சயம் செய்கிறோம்.
நீங்கள் தமிழகத்துடன் இணைவது உறுதி"
"நம் மக்கள் இங்கே துப்பாக்கிச்சூடு, ஊரடங்கு உத்தரவு, சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்த படுவது, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு என பல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
நீங்கள் வருவதாக அறிவித்த பிறகு தற்போது நிலை ஓரளவு பரவாயில்லை.
உங்களுக்கு நன்றி"
"நன்றி எல்லாம் எதற்கு?
இது எங்கள் கடமை.
நாங்கள் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திப்போம்.
ஆறுதல் கூறுவோம்.
தேவையானவர்களுக்கு திருவிதாங்கூர் அரசிடமிருந்து இழப்பீடும் பெற்றுத்தருவோம்"
"இழப்பீடெல்லாம் வேண்டாம் ஐயா!
ஆறுதலும் ஆதரவுமே தற்போது தேவை.
எப்படியேனும் தமிழகத்துடன் இணைந்தால் போதும்"
"நன்றி! நாங்கள் கிளம்புகிறோம்"
"உணவு தயாராவிட்டது.
உணவருந்தியபின் செல்லலாம்"
---------------------
நாள்: 26.08.1954
இடம்: நேரு அலுவலகம்
மாலை: 4 மணி
மேசைத் தொலைபேசி அழைத்தது.
நேரு எடுத்தார்.
"வணக்கம் ஜவஹர் அவர்களே!"
" வணக்கம் கரையாளரே! உங்கள் அழைப்பைத்தான் எதிர்பார்த்திருந்தேன்.
அப்துல் ரசாக் முன்பே வந்துவிட்டார்.
வெளியே காத்திருக்கிறார்.
அங்கே என்ன நிலவரம்?"
"இங்கே நிலை சற்று கவலைக்கிடம்தான்.
தமிழ்மாநில எல்லையிலிருந்து நுழையும் முன்னே பார்த்தேன்.
நிறைய அகதிகள் திருநெல்வேலி எல்லையில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
500 குடும்பங்களாவது இருக்கும்.
இங்கே அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்காங்கே சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பள்ளி, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் எதுவுமே இயங்கவில்லை.
மக்கள் வெளியே வரவே பயப்படுகின்றனர்.
இவர்களது தலைவர் நேசமணியையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.
எங்கே பார்த்தாலும் காவல்துறையினர்.
தமிழ் எம்.பிக்கள் பலரைக் காணவில்லை.
சிறையில் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சிலர் தலைமறைவாகிவிட்டனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியைப் பார்த்தேன்.
தடயங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
ஆனால் நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளன.
கொல்லப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்தேன்.
இப்பகுதியை ஐக்கிய கேரளாவிலிருந்தே பிரிப்பதே முறை.
இவர்களுக்கும் மலையாளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை"
"ஒரு சந்தேகம். அதென்ன அவரது கட்சியின் பெயரில் 'தமிழ்நாடு' என்று உள்ளது.
தனிநாடு கேட்கும் பிரிவினைவாதி என்கின்றனர் கேரளத்தவர்"
"ஆம். தமிழர்கள் அவர்களது தாய்நிலத்தை தமிழ்நாடு என்றுதான் சொல்வார்கள்.
நான் சந்தித்தவரை அவர் பிரிவினை பற்றி பேசவில்லை.
ஒருவேளை அவர்களது உரிமைகள் கிடைக்காது போனால் பிரிவினையை கையில் எடுக்கலாம்.
ஏனென்றால் தமிழர்கள் மற்ற எந்த இந்தியர்களிடமிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.
நேசமணி கட்சியில் சாதி கடந்து மதம் கடந்து தமிழர்கள் ஓரணியில் நிற்கின்றனர்.
இவர்களுக்கு நியாயமாக கிடைக்கவேண்டியதை கொடுத்துவிடுவதே நல்லது"
"ஒரே நாளில் இந்த முடிவுக்கு எப்படி வந்தீர்கள்?
நான் காமராசரிடம் கேட்டபோதெல்லாம் சென்ற தேர்தலில் நேசமணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது நேரில் கண்டதாகவும், அப்பகுதி மலையாள கலப்புள்ள பகுதி என்றுமல்லவா கூறினார்?!"
"காமராசரே பிரச்சாரம் செய்தும் அவர் நிறுத்திய 'திருவிதாங்கூர்-கொச்சி காங்கிரஸ்' வேட்பாளர்கள் 14 பேரும் இப்பகுதியில் டெபாசிட் இழந்தததை மறந்துவிட முடியுமா?
நேசமணி நிறுத்திய 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' ஆமோக வெற்றி பெற்றதைத்தான் மறுக்க முடியுமா?
நான் தமிழன் என்ற முறையில் இதைச் சொல்லவில்லை.
நடுநிலையாக ஆராய்ந்தே சொல்கிறேன்.
இன்று யார்வந்தாலும் ஒருநாளிலேயே தெளிவாக புரிந்துகொள்ளும்படியான நிலை இங்கு உள்ளது.
முழுமையாக ஆராய்ந்து நான்கு நாட்களில் எழுத்தில் தருகிறேன்"
"சரி ஐயா! நல்லது"
அப்துல் ரசாக் வரவேற்பறையில் ஒரு மணிநேரமாக காத்திருந்தார்.
சுற்றிலும் ஒரே மலையாளிகள்.
நேருவின் உதவியாளர்(மலையாளி) வந்து அழைத்து உள்ளே போகும்படி கூறினார்.
(தொடரும்)
---------------------------
படம்: இணைக்கக் கோரிய பகுதி மற்றும் மக்கட்தொகை
( Liberation of the Oppressed a Continuous Struggle
எனும் கன்னியாகுமரி வரலாற்று நூலிலிருந்து எடுக்கப்பட்டன)