Showing posts with label தமிழர். Show all posts
Showing posts with label தமிழர். Show all posts

Wednesday, 2 May 2018

தமிழிய மொழிக்குடும்பம்

தமிழிய மொழிக்குடும்பம்

1856 இல் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளுக்கு திராவிடம் என்று பெயர்வைத்து நூல் வெளியிட்டார்.

ஆனால் அதற்கு இரண்டாண்டுகள் முன்பே 1854 இல் ஜெர்மானிய மொழியியல் ஆய்வாளர் பிரடெரிக் மாக்சு முல்லர் (Friedrich Max Müller ) என்பவர் தமது "The classification of the Turanian languages" எனும் நூலில்  தென்னிந்திய மொழிக்குடும்பத்திற்கு இட்டப் பெயர் தமுலிக (Tamulic) மொழிக் குடும்பம் என்பதாகும்.

இவருக்கும் முன்பு 1847 -லேயே ஆங்கிலேயே இனவியல் ஆய்வாளர் பிரையன் ஓட்குசன் (Brian Houghton Hodgson) இந்தியாவின் பூர்வீக இனமாக தென்னிந்தியரை தமுலியர் (Tamulian) என்றும்
அவர்களின் மொழிக்குடும்பத்தைத் தமுலிய (Tamulian) மொழிக் குடும்பம் என்றும் தம் "Essay the first on the Kocch, Bodo and Dhimal Tribes" எனும் நூலில் பெயரிட்டு குறித்துள்ளார்.

தமிழும் அதன் வழி வந்த மொழிகளும் தமிழிக, தமிழிய என்னும் பெயரால் அழைக்கப்படுவதே சரியாகும்.

கால்டுவெல்லோ தமிழும், அதன் பிற  உறவுமொழிகளும் மூலத் திரவிடம் (Proto- dravidian) என்றொரு பொது மொழியினின்று வந்ததாக பிறழ உரைத்துள்ளார்.
இது தமிழின் பழமையைக் குறைத்து பிற தென்னிந்திய மொழிகளுக்கு ஈடாகத் தமிழையும் ஒரு சேய்மொழியாக வைக்கும் முயற்சியாகும்.

தமிழுக்கு மூலமாக எம்மொழியும் இல்லை.
அப்படி இருந்ததாக கால்டுவெல் நிறுவவும் இல்லை.

கால்டுவெல்லின் தடுமாற்றம் அவரது நூலில் தலைப்பிலேயே தெரிகிறது.

"திராவிட அல்லது தென்னிந்திய மொழிக்குடும்பத்தின் ஒப்பிலக்கணம்" எனுமாறு (Comparative grammar of the Dravidian or South-Indian family of languages) குழப்பமான ஒரு பெயரையே வைத்துள்ளார்.

தமிழர் வரண (Race- மரபின) அடிப்படையிலும் தமிழர்தான்.
தேசிய இன(Ethnicity) அடிப்படையிலும் தமிழர்தான்.

திராவிடர் என்ற இல்லாத இனமாகத் தமிழர் உட்பட எவரையும் திரித்தல் கூடாது.

தமிழ் மொழியைத் தமிழென்றும்,
தமிழினத்தாரைத் தமிழரென்றும்,
தமிழ் வழிவந்த மொழிகளை தமிழிக(Tamilic) மொழிகள் என்று வழங்குவதே சரியானதாகும்.

(பெரும்பான்மையான தகவல்களுக்கு நன்றி: அழகன் தமிழன் )

Tuesday, 22 August 2017

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

ஈழத் தமிழர்கள் அடிமையில்லை, சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள் _ தேவர் அன்றே சொன்னார்

இலங்கையில் தமிழர்கள் சிங்களருக்கு இணையாக வாழ விரும்புகிறார்கள்.
அவ்வாறு வாழ முடியாத போது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள் என்று தேவர் தனது கட்டுரையில் எழுதுகிறார்.

அந்தக் கட்டுரை இதோ...

"இனம் என்றால் சிங்கள இனமும் தமிழ் இனமும் என்று இருந்தால் பிரச்சனைக்கு இடமே இல்லை.
மொழி என்று இருந்தால் சிங்கள மொழியும் தமிழ்மொழியும் என்றிருந்தால் சிக்கலே கிடையாது.
இது சேன நாயகாவுக்குத் தெரியாத ஒன்றல்ல.
ஆயினும் அந்த நிலைமையை ஏற்படுத்த அவர் மறுக்கிறார்.
தம்மைப் பதவியில் அமர்த்தியவர்கள் சிங்களவர்களாம். சிங்களத்தை ஆட்சிமொழியாக்கவும் சிங்களவர்களைப் பாதுகாக்கவும் தம்மை அவர்கள் தெரிவு செய்தார்களாம்.
அவர்கள் விருப்பத்துக்கு மாறாக தாம் எதையும செய்ய முடியாது என்று கையை விரிக்கிறார்.
பாவம் பதவி போய்விடுமே என்ற பயம்.
பதவி என்ன அவ்வளவு பெரிதா?
அப்படி நினைத்தால் அதன் விளைவை அவர் அனுபவித்தே தீர வேண்டும்.
சிங்களவர்களுக்குச் சிங்களம் எப்படியோ அப்படித்தான் தமிழர்களுக்கும் தமிழ் உள்ளது.
சிங்களவர்களுக்குத் தமது மேம்பாட்டில் எவ்வளவு அக்கறையுண்டோ அவ்வளவு அக்கறை தமிழர்களுக்கும் தமது மேம்பாட்டில் உண்டு.
ஆகவே நாட்டில் ஒற்றுமை வேண்டும், அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தமிழர்கள் இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு அடிமைகளாக வாழத் தேவையில்லை.
அடிமைகளாய் உரிமை அற்றவர்களாய் வாழ்வதைவிடச் சுதந்திரப் போராட்டத்தில் குதித்துச் சுத்த வீரர்களாய் மானம் உள்ளத் தமிழர்களாய் மடிவது மேல் என்று அவர்கள் கருதுகிறார்கள்"

பசும்பொன் தேவரின் அரசியல் முழக்கம் (1952)
- க.பூபதிராஜா
பக்கம்:141.

படம்: 1952 இலங்கை ஞவுஞ்சுவே-யின் இலங்கை தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் மாநாடு முடிந்தபின் தேநீர் விருந்தில் பசும்பொன் பெருமகனார் சௌமிய மூர்த்தி தொண்டைமான்......!!

நன்றி: ஈழத்தமிழர்களின் உணர்வுகளை பற்றி தேவர் திருகமனார் எழுதிய கட்டுரை..!
_ Tamil creators (youtube)

Wednesday, 7 June 2017

இலக்கியத்தில் தமிழர்நாடு

இலக்கியத்தில் தமிழர்நாடு
*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡*♡

கேள்வி: இலக்கியத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு எனும் சொற்கள் உண்டா?

(சிரிப்பை அடக்கிக்கொண்டு) பதில்:

தமிழ்:-
---------

தமிழ் எனும் சொல் பல இடங்களில் வருகிறது.
முக்கியமானவை மட்டும் தருகிறேன்.

தமிழ்கெழு கூடல் தண்கோல் வேந்தே
- புறநானூறு 58

அதூஉம் சாலும்நற் றமிழ்முழுது அறிதல்
- புறநானூறு 50

தமிழ் வையைத் தண்ணம் புனல்
- பரிபாடல் 6

தள்ளாப் பொருள் இயல்பின் தண்டமிழ் ஆய்வந்திலார்
கொள்ளார்
- பரிபாடல் 9

தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன்
- பரிபாடல் 4
__________________________________

தமிழர் :-
-------------

தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
- புறநானூறு 19
(இருபுறமும் தமிழர் இறந்த தலையாலங்கான போர்)

மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
- புறநானூறு 35
(தமிழ்க் கிழவர் அதாவது தமிழ்த் தலைவர்)

தாதின் அனையர் தண்டதமிழ்க் குடிகள்
- பரிபாடல் 8
(தமிழ்க்குடிகள் அதாவது தமிழ் மக்கள்)

அருந்தமிழர் ஆற்றல் அறியாது போரிட்ட கனகவிசயரை
- சிலப்பதிகாரம், நீர்ப்படைக்காதை

தண்ணார மார்பிற் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காண
- முத்தொள்ளாயிரம் 24
________________________________

தமிழர்நாடு :-
---------------------

தமிழர் ஆட்சி தமிழ்பேசாத நாடுகள் வரை பரவியிருந்தது,

தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
- அகநானூறு 31

இமயமலை முதல் குமரிக்கடல் வரை தமிழ் பேசப்பட்டது,

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
- தொல்காப்பிய சிறப்புப் பாயிரம்

தமிழரின் நாடு 'தண்டமிழ்' (தண்+தமிழ், தண்=குளிர்ச்சி) என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது.

தண்டமிழ் வேலித் தமிழ்நாட்டகம் எல்லாம்
- பரிபாடல் 9

தண்டமிழ் பொதுஎனப் பொறாஅன்
- புறநானூறு 51
(தமிழ்நாடு எல்லாருக்கும் பொது என்றால் பொறுக்கமாட்டானாம்.
தனக்குத்தான் அது சொந்தம் என்பானாம்)

கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்துக்
- பதிற்றுப்பத்து 63
(செல்வம் பெருகிட தமிழர்நாட்டை இறுக்கி அதாவது சேர்த்து)

தமிழகப்படுத்த இமிழிசை முரசின்
- அகநானூறு 227
(தமிழகம் எனும் சொல்)

இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழுது அறிந்த
- சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை (வரைப்பு அதாவது எல்லை)

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம்பு அறுத்த
தண்புனல் நல்நாட்டு
- சிலப்பதிகாரம், வேனில் காதை
(வரம்பு அதாவது எல்லை)

தென்தமிழ் நன்னாட்டு தீதுதீர் மதுரைக்கு
- சிலப்பதிகாரம், நாடுகாண் காதை

இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
- சிலப்பதிகாரம், காட்சிக் காதை

குமரி வேங்கடங் குணகுட கடலா
மண்டினி மருங்கில் தண்டமிழ் வரைப்பின்
செந்தமிழ் கொடுந்தமி ழென்றிரு பகுதியின்
- சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

தண்டமிழ் கோள்நிலை திரிந்து கோடை நீடினும்
தான் நிலைதிரியாத் தண்டமிழ் பாவை
- மணிமேகலை
(தமிழர்நாட்டு காலநிலை மாறி கோடை நீண்டாலும் தன் இயல்பு மாறாத தமிழ்ப்பெண் காவிரி)
_________________________________________

யார் தமிழன்? ஏது தமிழ்? எங்கே தமிழர்நாடு? போன்ற வந்தேறித்தனமான கேள்விகளுக்கு இதற்கு மேலும் பதிலளிக்க முடியாது.

Saturday, 8 April 2017

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய கருத்துகளை நீக்குவதற்கு முதல் குரல் எழுப்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு
நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் ஜாக்குவார் தங்கம் தலைமை தாங்கினார்.

"நாடார் சமுதாயம் தமிழகத்தில், இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயம்.
அவர்கள் இல்லாத துறையே இல்லை.
அவர்களுடைய மூலதனம் தமிழகத்தில் உழைப்பை பற்றி சொல்லி கொடுத்தவர்கள் நாடார் சமுதாயத்தினர்.

காலை தொடங்கி இரவு 12 மணி வரை உழைக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தை பார்த்து மற்ற சமுதாய மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடார் சமுதாயத்தை பற்றி எழுதாமல் வரலாறு இருக்க முடியாது.
அரசியல், சமூகம், ஆன்மிகம், கல்வி, வணிகம் என எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கிறார்கள்.

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாடார் சமுதாயத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தார்கள்.
தற்போது 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் நாடார் சமுதாயத்தினர் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

இதழியல் துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்
‘தினத்தந்தி’, ‘மாலை முரசு’, ‘ராணி’ போன்ற பத்திரிகைகளை தொடங்கினார்.
இதழியல் துறையை இவர்களால் தான் நடத்த முடியும் என்று இல்லாமல் நாங்கள் நாடார்கள் எங்களாலும் முடியும் என்று வெற்றிகரமாக இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

எந்த சமுதாயமாக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் நான் போராடுவேன்.
தமிழகத்தை மாற்ற வேண்டும்.
முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பாடுபடுவோம்."
என்று டாக்டர் இராமதாஸ் பேசினார்.

ஜனவரி 06, 2017 16:05 (மாலை மலர்)

Friday, 29 July 2016

Sunday, 9 August 2015

Wednesday, 15 July 2015

சங்ககாலத்தில் காதல்திருமணம்

சங்ககாலத்தில் காதல்திருமணம்.

<B<B<B<B<B<B<B<B<B

உடன்போக்கு என்பது காதலனும் காதலியும் தத்தமது பெற்றோர் தம்மை சேர்த்துவைக்க விரும்பாத நிலையில் வீட்டைவிட்டு வெளியேறுவது,

பழந்தமிழ் இலக்கியமான கலித்தொகையில்,
ஒருவரை ஒருவர் காதலிக்கும் தலைவனும் தலைவியும் உடன்சென்ற பின்னர்,
தேடிவரும் செவிலித்தாய்(வளர்ப்புத்தாய், சித்தி) முக்கோற்பகவர் எனப்படும் துறவியர்களைக் காண்கிறாள்.
அவர்களிடம் இவ்வழியே சென்ற தன் மகளையும் அவளது காதலனையும் கண்டீர்களா என வினவுகிறாள்.
அதற்கு அவர்கள்,

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும்
ஆங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்
செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்
செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே.

என்று பதிலுரைக்கிறார்கள்.
இதன் பொருள்,

சந்தனம் பூசிக்கொண்டவர்க்கு மணம் சேர்க்குமேயன்றி அது விளைந்த மலைக்கு அதனால் சிறப்புசெய்ய முடியுமா?
முத்து அணிந்து கொண்டவர்க்கு சிறப்பு செய்யுமேயன்றி அது தோன்றிய கடலுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
யாழிசை கேட்பவர்களுக்கு சிறப்பு செய்யுமேயன்றி யாழுக்கு சிறப்பு செய்யமுடியுமா?
அதுபோலத்தான் உன் மகள் தன் தலைவனுக்கு சிறப்பு செய்வாளேயன்றி உனக்கு சிறப்பு செய்யமாட்டாள்.

காதலர்களின் வாழ்க்கையை முடிவுசெய்வதில் பெற்றோர் தலையிடக்கூடாது என்று துறவிகளே கூறுகின்றனர்.

http://m.youtube.com/watch?v=_fiR_CPBYZY

பொங்கலும் இறைமறுப்பும்

பொங்கலும் இறைமறுப்பும்

ஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞுஞு

பொங்கல் ஏன் கொண்டாடுகிறோம்?
கதிரவனுக்கு நன்றி தெரிவிக்கக் கொண்டாடுகிறோம்.

பழங்காலத் தமிழனுக்குத் தெரிந்திருந்தது கதிரவனின் உண்மையான நிறம் சிவப்பு என்று.
அதனால் அது சிவம் என்று அழைக்கப்பட்டது.
பின்பு அது சிவன் என்ற ஆண் கடவுளாகத் திரிக்கப்பட்டது.
பிறகு அது ஆதிநாதர் என்ற சடைமுடியுடன் புலித்தோல் உடுத்தி 10,000 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த ஒரு தலைவனுடன் திரிக்கப்பட்டு சிவபெருமான் ஆக்கப்பட்டது.
அதன்பிறகு பல்வேறு கட்டுக்கதைகள் புராணங்களாக எழுதப்பட்டு தமிழர் வணங்கிவந்த சித்தர்களுக்கு அக்கதைகளில் பல்வேறு பாத்திரங்கள் அளிக்கப்பட்டு சைவ மதமானது.
பிறகு ஆங்கிலேயர் சூட்டிய பெயரான ஹிந்து என்ற பெயர்கொண்ட மதத்துடன் திரிக்கப்பட்டுவிட்டது.

வணங்குதல், கும்பிடுதல் என்பன மரியாதையைத் தெரிவிப்பது என்றே பொருள்படுவன ஆகும்.
வழிபடுவது என்பது வழிநடப்பது என்றே பொருள்படும்.
மதம் என்பது மதித்தல் என்றவாறே பொருள்படும்.

நமச்சிவாயம் என்றால் நம்+அச்சு+இவ்+ஆயம்.
நம்மை அச்செடுத்தது போன்றதே நமது சுற்றம்.
என்று பொருள்வரும்.
இவை அனைத்துமை இறையை வலியுறுத்துவதில்லை.

தமிழர் எதை வழிபட்டனர்?
எதனை மதித்துப் போற்றினர்?

தமிழினம் ஒரு அறிவார்ந்த இனம்.
இயற்கையை பாதுகாப்பதையும் முன்னோர்களை நினைவுகொள்வதையும் வலியுறுத்துவதே அவ்வினத்தின் இறையியல்.

"மன்ற மராஅத்த பேஎமுதிர்க் கடவுள்"
என்று குறுந்தொகை கூறுகிறது.
மரத்தைக் கடவுளாகப் பார்த்த இனம் நம் தமிழினம்.

தமிழகத்தின் திருத்தலங்கள் அனைத்தும் மரவழிபாட்டுத் தலங்களே ஆகும்.

சிதம்பரம்(தில்லையம்பலம்)=தில்லைமரம்.
காஞ்சி=மாமரம்.
கீழைப்பழுவூர்=புள்ளமங்கை.
திருவிடைமருதூர்=மருதமரம்.
திருவானைக்கா=நாவல்மரம்.
குற்றாலம்=ஆலமரம்.
திருநெல்வேலி(வேணுவனம்)=மூங்கில்(வேணு).
திருவொற்றியூர்=மகிழமரம்.
திருமயிலை=புன்னை.
மதுரை(கடம்பவனம்)=கடம்பம
தமிழ்மண்ணில் ஒவ்வொரு ஊரும் கல்,பாறை,பூ,மரம்,குளம்,ஆறு,ஏரி என்ற பதங்களைச் சேர்த்தே வழங்கப்படுகின்றன.
(நூல்:நெல்லையப்பர் கோவில், பக்57)

"மரம் சா மருந்தும் கொள்ளார்"
என்கிறார் கணியன் பூங்குன்றனார் (நற்றிணை -226)
ஒரு மரத்தை அழித்து உயிர்வாழ்வதை பாவமாகக் கருதினர் அன்றைய தமிழர்.

மரம் என்பது என்ன?
கழிவுகளை தன் உடல்வழியே செலுத்தி உணவாக மாற்றுவது.

மானிடன் என்பவன் உணவை உடல்வழியே செலுத்தி கழிவாக மாற்றும் விலங்கு.

ஒரு மாந்தன் ஒருநாளில் மூன்றுவேளை உண்டு வெளியேற்றும் கழிவின் அளவு ஒருநாளில் ஒருமரம் உருவாக்கும் உணவை விட பலமடங்கு அதிகம்.
தவிர மரங்களை அழிப்பதன் மூலம் மானிட இனம் அழிவைநோக்கி விரைவாக செல்கிறது.

பொங்கல் அன்று கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, உப்பு, மற்ற காய்கறிகளைப் படையல்வைத்து புது அரிசியை  வாசலில் பொங்கலிட்டு கதிரவனுக்கு படைத்து நன்றி தெரிவிப்பது இயற்கையை காப்பதை வலியுறுத்தாமல் வேறு எதை வலியுறுத்துகிறது?

தமிழர்கள் மரம் மட்டுமன்றி விலங்குகளையும் பாதுகாப்பதை அறிந்திருந்தனர்.
மாட்டுப்பொங்கல் வலியுறுத்துவது அதைத்தான்.
காடுகளைப் பாதுகாக்கும் புலிகளையும் கடலைப் பாதுகாக்கும் வேட்டைமீனையும் அவர்கள் பெருமைப்படுத்த அரச சின்னங்களாக வைத்திருந்தனர்.

"புணரி பொருத பூ மணல் அடைகரை
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி
வலவன் வள்பு ஆய்ந்து ஊர
நிலவு விரிந்தன்றால் கானலானே"
-என்கிறார் உலோச்சனார், நற்றிணை - 11.(நெய்தல்).
இப்பாடல் தேர்செலுத்தி வரும் தலைவன் மணலில் ஊர்ந்துசெல்லும் வண்டுகள் மேல் சக்கரங்கள் ஏறிவிடாதபடி கவனமாக செலுத்தச்செய்ததைக் கூறுகிறது.
நண்டுகளைக் கூட நேசித்தனர்.

இன்று தமிழினம் தம் முன்னோர் காட்டியவழியில் செல்லாது அழிவுப்பாதையில் பயணித்துவருகிறது.
தமிழர்களின் திருநாளான பொங்கலின் முதல்நாள் ஒட்டுமொத்த இயற்கையின் ஒற்றை அடையாளமாக கதிரவனை வணங்கி
அதன்பிறகு விலங்குகளின் ஒற்றை அடையாளமாக மாடுகளை வணங்கி
அதற்குப் பிறகுதான் காணும்பொங்கலில் உடன்வாழும் சொந்தங்களைச் சென்றுபார்க்கின்றனர்.
ஆக இயற்கைக்கு முதலிடம், விலங்கினத்திற்கு இரண்டாவது இடம், அதற்பிறகே மாந்தர்கள்.

பொங்கல் என்பது இல்லாத ஒரு கடவுளை வணங்குவது இல்லை.
அது இறைமறுப்பிற்கும் முற்போக்காகத் திகழும் கருத்தியல்.
அதாவது இயற்கையையும் விலங்குகளையும் மாந்தரையும் போற்றிப்பாதுகாக்கும் கருத்தியல்.

எனவே இதை மதம்தாண்டி தமிழர் அனைவரும் கொண்டாடுவதே முறை.

(இசுலாமியரும் கொண்டாடும் பொங்கல்
https://m.facebook.com/photo.php?fbid=406803462756646&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739 ) .

Saturday, 19 July 2014

பிலிப்பைன்ஸ் தமிழர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் தமிழ்
ஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐஐ
படத்தைப் பார்த்தாலே தமிழின் இழிநிலை விளங்கும்;
பிலிப்பைன்ஸில் வாழும் தமிழர்
பற்றி ஏதாவது தெரிந்தால் இங்கே பகிரவும்;
தெரியாத மற்றவருக்கு இந்த பதிவைப் பகிரவும்.
சில தரவுகள்:-
Jose dalman மாவட்ட ஆட்சி மொழிகளில் ஒன்று தமிழ்;
cainta,rizal என்ற இடத்தில் 1794ல்
ஆங்கிலப்படை அழைத்து சென்ற தமிழர்
அங்கேயே குடியமர்ந்தனர்;
தலைநகர் மனிலா ல் வெரித்தாஸ், கிருபை ஆகிய
இரு தமிழ் கிறித்துவ வானொலிகள் உள்ளன;
வெரித்தாசு வானொலியில் பணிபுரிந்த திரு.ஜெகத்
கஸ்பர்
http://nakkheeran.in/users/frmNews.aspx?N=1
9781
தமிழில் ஜெபம் பாடும் பிலிப்பினோ கிறித்தவர்
http://m.youtube.com/watch?v=rb0bL1booEM
சம்போங்கா தமிழ் மழலையர் பள்ளி
http://www.zamboanga.com/z/index.php?title=
File%3AElementary_school_tamil_jose_dalman_za
mboanga_del_norte.jpg
கலைநிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்
http://m.youtube.com/watch?v=UCgZECm6nlA
பிலிப்பைன்சு புரட்சியாளர் ஈழவிடுதலைக்கு ஆதரவு
http://naamtamilar.org/செய்திகள்/புலம்பெயர்-
தேசங்கள்/பிலிப்பைன்ஸ்-நாட்டின்-கி
பிலிப்பைன்சு சூறாவளியில் பாதிக்கப்பட்ட தமிழர்
பேட்டி
http://www.bbc.co.uk/tamil/global/2013/11/
131110_phillipinescyclone.shtml
தமிழருக்கும் பிலிப்பினோவுக்கும் பிறந்தவரின்
கட்டுரை
http://tamilculture.ca/navigating-through-my-
tamil-filipino-world-an-account-of-a-mixed-
first-generation-kid/
https://m.facebook.com/photo.php?fbid=421580777945581&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday, 10 July 2014

இன்னொரு ராமானுஐம்


நியூட்டன் அழைப்பு விடுத்த தமிழன்.

சிவசங்கர நாராயணப் பிள்ளை என்பதுதான் அவர் பெயர். 1901 ஏப்ரல் 5 இல் செங்கோட்டைக்கு அருகிலுள்ள வல்லத்தில் பிறந்தார்///
எஸ்.எஸ். பிள்ளை சென்னைப் பல்கலையில் ஆராய்ச்சி மாணவனாகச் சேர்ந்து 4ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து எம்.எஸ்.ஸி பட்டம் பெற்றார்.
பேராசிரியர் அனந்தராவ் என்பவர் கீழ், பிள்ளை ஆராய்ச்சி செய்தாராம். பிறகு 1929 இல் அண்ணாமலைப் பல்கலையில் விரிவுரையாளராகச் சேர்ந்து பணிபுரியத் தொடங்கினார். அப்போதுதான் எண்கணித ஆராய்ச்சியில் ஈடுபட்டு டாக்டர் பட்டம் பெற்றார். இதில் சிறப்பம்சம் என்ன என்றால், இந்தியாவிலேயே முதல் முதலாகக் கணிதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற பெருமை எஸ்.எஸ். பிள்ளைக்கு உண்டு///
ஒருமுறை அமெரிக்கக் கணிதமேதை டாக்டர் டிக்ஸன்,
இவரைக் காண கல்கத்தா பல் கலைக்கு வந்தபோது, அவர்
தாம் தங்கியிருந்த ஹோட்டலில்
நண்பர்களுக்கு மேலைநாட்டு பாணியில் விருந்தளித்தார்///
1936 பிப் 10 இல் எஸ்.எஸ்.பிள்ளை தமது கண்டுபிடிப்பை உறுதிசெய்து ஒரு நூலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து ""டாக்டர் பிள்ளை தியரி ஆஃப் நம்பர்ஸ்' -ஒரு கோட்பாடு, கணிதவியலில் நிரந்தரமான இடத்தைப் பிடித்தது.
வாரிங்க்ஸ் ப்ராப்ளத்திற்கு விடைகண்ட கையோடு சுமார் 400 ஆண்டுகளாகக் கணித உலகை மிரட்டிக் கொண்டிருந்த "ஃபூரியர் சீரிஸ்' என்ற தொடருக்கான புதிரையும் விடுவித்துப் பெருமை பெற்றார்.
இதைத் தொடர்ந்து விஞ்ஞானி ஐன்ஸ்டீனும் டாக்டர் ஓபன்ஹைமரும் தங்களுடன் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட பிள்ளைக்கு அழைப்பு விடுத்தனர்///
சான்பிரான்ஸிஸ்கோவில்
நடைபெறவிருந்த உலகக்கணித மாநாட்டுக்குத்
தலைமையேற்கவும், பிரின்ஸ்டன் பல்கலையில் ஜன்ஸ்டீனுடன் சேர்ந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபடவும் டாக்டர் பிள்ளை 1950ஆகஸ்டில் அமெரிக்கா புறப்பட்டார்///
30.8.1950 இல் ஸ்டார் ஆஃப் மேரிலேண்ட் விமானத்தில் இந்தியாவின் புகழையும் தன்னுடைய எதிர்காலத்தையும் பற்றிய கனவுகளோடு பறந்தார்.
கெய்ரோவில் எரிபொருள் நிரப்பிய பின் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளாகி சகாரா பாலைவனத்தில் எரிந்து சாம்பலாகி விழுந்தது.
சான்பிரான்ஸிஸ்கோ மாநாட்டில் பங்குகொண்ட கணிதமேதைகள் சிவசங்கரன் பிள்ளைக்குப் புகழாரம்
சூட்டி அஞ்சலி செலுத்தினர்.
உலகின் தலைசிறந்த
கணிதமேதைகளைப் பற்றி இ.டி.பெல் எழுதிய ''மென்
ஆஃப் மேத்தமேட்டிக்ஸ்" நூலில் இந்தியாவின் சார்பில்
இராமானுஜனும் சிவசங்கரன் பிள்ளையும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும்
தமிழர்களே என்பது நமக்குப் பெருமை தரத்தக்கது///

ஆசாரித்தமிழன் வாயில் மண்


ஆசாரித்தமிழன் வாயில் மண்
=#=#=#=#=#=#=#=#=#=

என் நண்பர்கள் மூலம் கேள்விப்பட்ட சில விடயங்களைப் பகிர்கிறேன்; எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை; 
ஆசாரிகள்தான் அந்தக்காலத்துப் பொறியாளர்கள் (எஞ்சினியர்ஸ்); தமிழர் தலையெழுத்துக்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கா?
இன்று கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கும் அளவுக்கு தரம்தாழ்ந்துபோனார்கள்; தமிழகத்தில் இருக்கும் கொத்தனார்கள், நாவிதர்கள், சிற்பிகள், கூலிகள், ஓட்டுநர்கள் எல்லாரும் இப்போது கேரளாவுக்குப் போய் சம்பாதிக்கிறார்கள்;
அதாவது தமிழகத்திலிருந்து ஆள்கூட்டிவந்து வேலைவாங்குமளவு மலையாளிகள் உயர்ந்துவிட்டனர், தமிழர் தாழ்ந்துவிட்டனர்;
சபரிமலை ஐயப்பன் சிலையை செய்து தந்ததே தமிழக சிற்பிகள்தான் (ஸ்தபதி என்று அழைக்கப்படும் பெருந்தச்சர்);
இன்று அதே சபரிமலையில் ஒரு தேநீர்கடை மலையாளி தமிழனை வெந்நீர் ஊற்றிக்கொல்லும் அளவு தரம்தாழ்ந்துவிட்டனர்;
சரி, ஆசாரிகள் கதைக்கு வருவோம்; மற்ற தமிழரைப்போலவே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கல்வியறிவு இல்லாமல் (ஆங்கிலம் தெரியாமல் படிப்பைவிட்டோரே அதிகம்) சொந்தமண்ணில் எதிர்காலமும் இல்லாமல் அவர்கள் குடிமூழ்கிவருகிறது;
தமிழர்களின் கலைகள் எவ்வாறு கொள்ளையடிக்கப்படுகின்றன என்பதை அறியப்போகிறீர்கள்; ஊரறிந்த பெருந்தச்சன் ஒருவர் இருந்தார்; அவர் பெயர் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள் 'கணபதி ஸ்தபதி';
குமரிக்கடலில் வானுயரம் நிற்கும் வள்ளுவர் சிலையை கட்டியவர்; இவர் பல்வேறு புகழ்பெற்ற சிலைகளையும் கோவில்களையும் தமிழர் வாழும் பல நாடுகளில் செய்துதந்துள்ளார்;
(பலருக்குத் தெரியாத செய்தி- இலங்கை அரசு 1998ல் பாம்புப்படுக்கையில் இருக்கும் திருமால் சிலை செய்ய முன்பணம் கொடுத்தது; பல இடங்கள் தேடி நீலநிறப் பாறைகளைக் கண்டறிந்து தன் கைக்காசைப்போட்டு அந்த சிலையைச் செய்தார்; சிங்கள அரசுகளைப் பற்றிக் கூறவும் வேண்டுமா, ஆட்சிமாறியதும் அம்போவென விட்டுவிட்டார்கள்;
அச்சிலையை அவர் தானியங்கள் நிரப்பிய தொட்டியில் வைத்து புதைத்துவைத்திருந்தாராம், அது இன்றும் அப்படியே இருக்கிறதாம்)
சென்னையில் சிற்பக்கல்லூரி நிறுவப்பட்டபோது (அதை நிறுவியதும் தமிழ்ப் பார்ப்பனரான ராஜாஜிதான், திராவிடக்கட்சிகள் ஆட்சிக்கு ஆபத்து வரும்போது வள்ளுவர் கோட்டம், கண்ணகி சிலை போல எதையாவது கட்டி விளம்பரம் தேடுவதோடு சரி) அக்கல்லூரியின் முதல்வராக கணபதியார் நியமிக்கப்பட்டார்; வெறும் உளிப்பட்டறையாக இருந்த சிற்பக்கல்லூரியை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு குறைவில்லாமல் கட்டியெழுப்பினார் கணபதி ஸ்தபதி; தமது 84ம் வயதில் 2011 ல் மறைந்தார்;
கணபதி ஸ்தபதிதான் அதுவரையிலும் தலைமுறை தலைமுறையாக வாய்வார்த்தையாக ஆசாரிகள் கற்றுவந்த தொழில்நுட்பங்களை (கட்டுமானம் மற்றும் சிற்பம்) சரியாக தொகுத்து சீராக்கி வார்த்தைகளை உருவாக்கி கோட்பாடுகளை வகுத்து நூலாக வெளியிட்டார்;
அவர் இருந்தவரை ஆங்கில எழுத்துகள் கூட தெரியாத ஆசாரிகள் பட்டறிவை(அனுபவத்தை) நிறுவி 'ஸ்தபதி' பட்டம் வாங்கமுடிந்தது; அதாவது
மூன்றாம் வகுப்பு தாண்டாத ஒரு கோவில்கட்டும் ஆசாரி தமது பட்டறிவால் கற்றுத்தேர்ந்ததும் அக்கல்லூரியில் விண்ணப்பித்தால் பட்டறிவை சோதித்து 'ஸ்தபதி' பட்டம் வழங்கினார்கள்; கணபதியார் மறைந்தபிறகு சிற்பக்கலையில் கல்லூரிப் பட்டம் பெற்றவருக்கு மட்டுமே அப்பட்டம் கிடைக்கிறது;
இதனால் தனியாக தாமே முழுக்கோவிலையும் கட்டிமுடிக்கும் திறமையுள்ள பட்டறிவு வாய்ந்த ஆசாரிகள், பட்டம் வாங்கிய ஒரு மாணவன் இருந்தால்தான் கோயில்கட்ட இசைவே(அனுமதியே) பெறமுடியும்;
வெறுமனே புத்தகத்தைப் படித்த ஒரு இளைஞன் உட்கார்ந்த இடத்தில் கையெழுத்துப்போட்டுவிட்டு காசுபார்ப்பான்;
இதைவிடவும் கேடு வேறொன்று உள்ளது;
அதாவது வெளிநாட்டு ஆட்களும் அக்கல்லூரியில் சேர்ந்து புத்தகத்தைப் படித்து தேர்வெழுதிவிட்டு தமிழகத்தின் தலைசிறந்த ஆசாரிகளுக்கு தன் பட்டத்தின் மூலம் தொழில்பெற்றுக்கொடுத்து அதற்கு கைமாறாக அவர்களின் தொழில்முறையைப் பார்த்து குறிப்பெடுத்துக்கொண்டு அவன் நாட்டுக்குப்போய் அதற்கான காப்புரிமையை வாங்கிவிடுவான்;
அதன்பிறகு ஆசாரிகள் காலம்காலமாக பயன்படுத்திவரும் தொழில்நுட்பங்கள் அவனிடம் இசைவு பெற்றபிறகுதான் ஆசாரிகளே பயன்படுத்தமுடியும்;
எடுத்துக்காட்டாக, இன்று தங்க வளையல்களில் போடப்படும் வேலைப்பாடுகள் (டிசைன்ஸ்) ஆசாரிகள் பயன்படுத்திவந்த அதே முறையை பயன்படுத்தி சிறிய இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகின்றன;
அதற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் காப்புரிமைகள் வைத்துள்ளன; அந்த வேலைப்பாடு மற்றும் அதன் அளவீடுகள் வடிவங்கள் என அனைத்தும் ஆங்கிலப்பெயர்களில் மாற்றப்பட்டுவிட்டன;
அதாவது வளையல் செய்யும்கலையே வெளிநாட்டிலிருந்து வந்ததாக மக்கள் நம்புவார்கள்;
எந்தவொரு புதிய தொழில்நுட்பமும் நடைமுறைக்கு கொண்டுவரும் முன் பழைய தொழில்நுட்பம் பயன்படுத்துவோர் அடையும் பாதிப்பை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்;
பழைய தொழில்நுட்பத்தில் பிழைப்போருக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொடுக்கவேண்டும் அல்லது அவர்களுக்கு உரிய மாற்றுவழி அமைத்துத் தரவேண்டும்;
நமக்குத்தான் அரசே கிடையாதே;
எப்படி பனினி என்பவரால் தமிழின் புணர்ச்சி விதிகள் திருடப்பட்டு சமசுக்கிருத இலக்கணத்தில் சேர்க்கப்பட்டு இன்று அது தமிழுடன் போட்டிபோடுகிறதோ.
எப்படி தெலுங்கர் ஆட்சியில் தமிழிசையைக் கற்று அதில் தெலுங்கு பாடல்களை அமைத்து மெட்டு, தாளம், இசை ஆகியவற்றின் பெயரை சமசுக்கிருதத்தில் மாற்றி தமிழரின் இசையை திருடி இன்று கர்நாடக சங்கீதம் ஆக்கினார்களோ. அதே கலைத்திருட்டுதான் இதுவும்;
கலையைப் பாதுகாக்க அக்கறையுள்ள ஆற்றலுள்ள அரசு நமக்கு இல்லை;
தமிழரின் பழமையான நாகரிகமான சிந்துசமவெளி நாகரிகத்தை இந்தியா தனதாக்கிக்கொண்டது;
தோப்புக்கரணத்திற்கு ஆங்கிலத்தில் பெயர்வைத்து அமெரிக்கா காப்புரிமை வைத்துள்ளது;
இன்று பரதநாட்டியம் என்று அறியப்படுவது தமிழர் கலையான சதிராட்டத்தின் ஒரு வடிவமே;வாடிப்பட்டி மேளம் என்பது போல பந்தநல்லூர் சதிராட்டம்தான் இன்றைய பரதநாட்டியம் (பந்தநல்லூர் தஞ்சாவூர் அருகில் உள்ளது);
இந்த திருட்டுவேலையைச் செய்த சென்னை கலாச்சேத்ராவுக்குப் போய்ப் பாருங்கள் ஒரு தமிழன் கூட அங்கு கிடையாது;
கலையை வளர்க்காமல் அதை வெளிநாட்டாருக்கும் வேற்றினத்தாருக்கும் விற்று பின் அவன் திருத்திய வடிவத்தை நமக்கே கொண்டுவந்து கொடுத்து இரட்டையாக காசுபார்த்து நம்மை சீரழிக்கின்றன இந்த வேற்றின அரசுகள்.
கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துவருகிறான் தமிழன்