Showing posts with label பாடத்திட்டம். Show all posts
Showing posts with label பாடத்திட்டம். Show all posts

Saturday, 8 April 2017

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

மருத்துவர் இராமதாசுக்கு நாடார் சங்கங்கள் பாராட்டு விழா

சி.பி.எஸ்.இ 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்திய கருத்துகளை நீக்குவதற்கு முதல் குரல் எழுப்பிய பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு
நாடார் சங்கங்கள் சார்பில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவுக்கு நாடார் பேரவை மாநில இளைஞரணி தலைவர் ஜாக்குவார் தங்கம் தலைமை தாங்கினார்.

"நாடார் சமுதாயம் தமிழகத்தில், இந்தியாவில் பெருமைக்குரிய சமுதாயம்.
அவர்கள் இல்லாத துறையே இல்லை.
அவர்களுடைய மூலதனம் தமிழகத்தில் உழைப்பை பற்றி சொல்லி கொடுத்தவர்கள் நாடார் சமுதாயத்தினர்.

காலை தொடங்கி இரவு 12 மணி வரை உழைக்கிறார்கள்.
இந்த சமுதாயத்தை பார்த்து மற்ற சமுதாய மக்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாடார் சமுதாயத்தை பற்றி எழுதாமல் வரலாறு இருக்க முடியாது.
அரசியல், சமூகம், ஆன்மிகம், கல்வி, வணிகம் என எல்லாவற்றிலும் முன்னேறி இருக்கிறார்கள்.

தமிழக பொருளாதாரத்தின் முதுகெலும்பு நாடார் சமுதாயத்தினர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு 13 லட்சம் அரசு ஊழியர்கள் இருந்தார்கள்.
தற்போது 10 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
ஆனால் நாடார் சமுதாயத்தினர் 50 லட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

இதழியல் துறையில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்
‘தினத்தந்தி’, ‘மாலை முரசு’, ‘ராணி’ போன்ற பத்திரிகைகளை தொடங்கினார்.
இதழியல் துறையை இவர்களால் தான் நடத்த முடியும் என்று இல்லாமல் நாங்கள் நாடார்கள் எங்களாலும் முடியும் என்று வெற்றிகரமாக இன்றளவும் நடத்தி வருகிறார்கள்.

எந்த சமுதாயமாக இருந்தாலும் எந்த பாகுபாடும் இல்லாமல் நான் போராடுவேன்.
தமிழகத்தை மாற்ற வேண்டும்.
முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல வேண்டும்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து சமூக நல்லிணக்கத்தோடு பாடுபடுவோம்."
என்று டாக்டர் இராமதாஸ் பேசினார்.

ஜனவரி 06, 2017 16:05 (மாலை மலர்)

Saturday, 14 May 2016

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தமிழக முதலமைச்சர் சீமான் அவர்களுக்கு,

தாய்நாடான தமிழ்நாட்டின் மீது நாட்டுப்பற்று கொண்ட ஒரு குடிமகனின் விண்ணப்பம்.

தங்களின் பாடத்திட்டவரைவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஒரு விருப்பப்பாடம் என்ற கொள்கையை மறு ஆய்வு செய்ய வேண்டுகிறேன்.

இந்த பதிவினைத் திறந்த மடலாக எண்ணி,

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மட்டும் பள்ளிகளில் கற்பிக்கப்பட ஆணை பிறப்பிக்குமாறு தங்களை தமிழ் மக்கள் சார்பில் வேண்டிக்கொள்கிறேன்.

நன்றி.