Showing posts with label தமிழர் பெருமை. Show all posts
Showing posts with label தமிழர் பெருமை. Show all posts

Tuesday, 26 November 2019

பிரபாகரன்னா யாரு

பிரபாகரன்னா யாரு?

பிரபாகரன் அப்டின்னா யாருன்னே தெரியாத தமிழ்நாட்டு பசங்க இப்பவும் உண்டு.

அவங்க இத படிங்க..

4 பேர் சேந்தாலும் ஒருத்தன அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அருவாளோட 10 ரவுடிங்க போனாலும் ஒருத்தன அடிக்க முடியாதுனா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

துப்பாக்கியோட போலீஸ் வந்தாலும் அடிக்க முடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

பீரங்கியோட ராணுவமே வந்தாலும் அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அவ்வளவு பெரிய வீரன்தான் பிரபாகரன்.

டானுக்கெல்லாம் டான்!

ஒரு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் போய் ஒதை வாங்கிட்டு வந்த மாவீரன்.

அப்பிடி ஒரு மாஸ் ஹீரோ நம்ம தமிழினத்துல பொறந்திருக்கான்.

இது நமக்கு பெரும இல்லையா?!

தமிழனா பொறந்துட்டு பிரபாகரன் யார்னு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்
எனக்கு அப்பன் பேரு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்.

அவரென்ன நமக்கு அப்பா மாதிரியா?!

ஆமாப்பா! அப்பனுக்கு மேல!
தலைவன்!

புரியுற மாதிரி சொல்லுறேன்.
இந்தியாவுல தெற்க கடைசியா தமிழ்நாடு இருக்கு.
அப்பறம் ஆழமில்லாத கடல்.
அதுல படகு போற அளவு பக்கத்துல இலங்கை அதாவது ஸ்ரீலங்கா இருக்கு.

இது நாலுபக்கமும் கடல் சூழ்ந்த வலது உள்ளங்கை வடிவம் மாதிரி ஒரு தீவு.
இந்த உள்ளங்கைல  விரல்கள் அளவுக்கு தமிழர் வாழ்ற பகுதி.
மீதி சிங்களம் பேசுற வேற ஒரு மக்கள் வாழுற பகுதி.

1947 ல இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச எட்டு மாசம் கழிச்சு இலங்கைக்கு சுதந்திரம் கெடைச்சு தனிநாடா ஆகுது.

நாம பண்ணுன ஒரே தப்பு என்னன்னா அப்பவே இலங்கைல வடக்கு கிழக்கா அதோட அளவுல மூணுல ஒரு பங்கு தமிழர்கள் வாழுற பகுதியயும் தமிழ்நாட்டோட சேக்கறத பத்தி யோசிக்காம விட்டதுதான்.

இலங்கைல 70% சிங்களவர்களும் 30% தமிழர்களும் இருந்தாங்க.

பெரும்பான்மையா இருக்குற சிங்களர்கள் வேலை வாய்ப்பு, கல்வி, அரசியல் பதவி எல்லாத்தையும் முழுக்க ஆக்கிரமிச்சிக்க தொடங்குனாங்க.

இப்போ இந்தியாவுல 60% இருக்குற ஹிந்தி மக்கள் மத்திய அரச கைபற்றி
இந்திபேசாத மாநிலங்களுக்கு சலுகைகள் கொடுக்காததோட
வடயிந்தியர்கள பெரிய அளவுல குடிபோக வச்சு அந்த மாநிலத்தோட வேலைவாய்ப்பை குறுக்கு வழியில பறிக்கிறாங்களே அதேமாதிரி
அங்க சிங்களர்கள் எல்லாத்தயும் பறிச்சிக்க நினைச்சாங்க.

70% சிங்களர்ல எல்லாருமே புத்த மதத்த சேந்தவங்க

  30% தமிழர்கள்ல இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் னு 3 மதங்கள சேந்தவங்க இருந்தாங்க.
இதுபோக தமிழ்நாட்டுல இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு வெள்ளக்காரங்க கூட்டிட்டு போன தமிழர்கள் இலங்கை தீவு நட்டநடுவுல இருக்குற மலைகள்ல சிங்களர் மத்தியில இருந்தாங்க.

தமிழர்கள் படிச்சவங்களா முன்னேறிய சமூகமாக இருந்தாங்க.
அரசாங்க அதிகாரிகள்ல 60% தமிழர்களா இருந்தாங்க.

சிங்களவர்கள் அப்படி இல்ல.
அவங்க நம்ம பீகார் மாதிரி.
அவங்க வாழ்ந்த பகுதி அதாவது இலங்கை தீவோட நடுப்பகுதி தெற்கு மற்றும் மேற்கு ல அவங்க மக்கட்தொகை நெருக்கம் ரொம்ப அதிகம்.
படிப்பறிவில்லாம வறுமைல வாடினாங்க.

சிங்களர்கள் பெரும்பான்மை பலத்த வச்சு ஆட்சிய புடிச்சாங்க.

முதல் வேலையா தமிழ்நாட்டுல இருந்து போன மலைநாட்டு தமிழர்கள ரேசன்காடு குடுக்காம இந்தியாவுக்கே வெரட்டி அடிச்சாங்க.

தேசிய மொழியா சிங்களத்த கொண்டுவந்தாங்க.
சிங்களம் தெரிஞ்சா மட்டும்தான் வேலை கிடைக்கும்னு சட்டத்த மாத்தினாங்க.

இப்படி தமிழர்கள் படிப்படியா கொறஞ்சு சிங்களர்கள் 90% அரசாங்க வேலைகள்ல நிறைஞ்சிட்டாங்க.
போலீஸ், ராணுவம் எல்லாத்துலயும் சிங்களம் தெரிஞ்சவங்க மட்டுமே சேரமுடிஞ்சதால 99% அவங்களே நிரம்பிட்டாங்க.

தமிழ் பகுதிகள்ல இருக்குற கல்லூரிகள்லயும் சிங்கள மாணவர்களுக்கு இடம் அதிகமா ஒதுக்கீடு பண்ணாங்க.

மக்கட்தொகை கம்மியா இருக்குற தமிழர் பகுதிகளுக்கு அரசாங்க ஆதரவோட நிலத்த பத்திரம் எழுதி வாங்கி கூட்டம்கூட்டமா குடிவந்து புதுபுது சிங்கள கிராமங்கள உருவாக்கினாங்க.

  பிக்குகள் ன்ற புத்த மத சாமியார்கள் இந்து முஸ்லீம் பகுதிகள் புத்தருக்கு பெரிய பெரிய கோவில் கட்ட ஆரம்பிச்சாங்க.

தமிழர்கள் உருவாக்கி வச்சிருந்த ஆசியாவிலேயே பெரிய நூலகம் ஒன்ன நெருப்பு வச்சி கொளுத்தினாங்க.

தமிழர்கள் செல்வநாயகம் ன்ற தலைவர் தலைமைல ஜனநாயக வழியில எவ்வளவோ போராடி பாத்தாங்க.
ஆனா சிறுபான்மையான தமிழர்களால ஜனநாயக வழியில எதையும் தடுத்து நிறுத்த முடியல

செல்வநாயகம் தமிழ்நாடு மாதிரி தனி போலீஸ் கொண்ட மாநிலம் கேட்டுபாத்தாரு.
கெடைக்கல.
கடைசியா 'எங்கள விட்டுடுங்க நாங்க தனிநாடா இருக்கறோம்' னு சொல்லி தேர்தல்ல நின்னாரு.
தமிழர்கள் மொத்த ஓட்டும் அவருக்கு விழுந்தது.

சிங்கள தலைவர்கள் செல்வாவுக்கு தந்த வாக்குறுதிகள நிறைவேற்றல.
அவங்க நாடாளுமன்றத்துல போட்ட  ஒப்பந்தத்தையே கிழிச்சு போட்டுட்டாங்க.

போலீஸ், ராணுவம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாருமே சிங்களர் ன்றதால தெருவுல போற எந்த சிங்களவனும் எந்த தமிழன் வீட்டுலயும் புகுந்து அவன் பொண்ண தூக்கிட்டு போகலாம்ன்ற நெலமை.

இதனால தமிழ் இளைஞர்கள் ஆயுதத்த கையில எடுத்தாங்க.
சிங்களர்கள தட்டி கேட்டாங்க.
அப்ப பிரபாகரன் சின்ன குழந்தைதான்.

சிங்களர்கள் நிறைஞ்சு இருக்குற போலீஸ் ஸ்டேசன் ராணுவ முகாம் இதையெல்லாம் தமிழ் இளைஞர்கள் தாக்கினாங்க.

பதிலுக்கு அரசாங்க ஆதரவோட சிங்கள போலீசும் ராணுவமும் ரவுடிகளும் தமிழ் பொதுமக்கள் மீது கலவரம் பண்ணி கொள்ளையடிச்சு குழந்தைங்க வயசானவங்கனு பல பேர கொன்னாங்க.
பல தமிழ் பெண்கள கற்பழிச்சாங்க.
ஆயுதம் தூக்கி பதிலடி குடுத்த தமிழ் கைதிகள ஜெயிலுக்குள்ளயே போய் கொடூரமா கொல பண்ணாங்க.

பிரபாகரனுக்கு 16 வயசு ஆச்சு.
கண்முன்னாடி நடக்குற கொடுமைகள பாத்து அவரும் தன்னோட இனத்துக்காக ஆயுத குழுவுல இணைஞ்சாரு.

13 வருசம் காடுகள்ல தலைமறைவா இருந்து பல இளைஞர்கள சேத்தாரு.

அவரே ஒரு துப்பாக்கி செஞ்சிக்கிட்டாரு.
போலீஸ அடிச்சு துப்பாக்கிய புடுங்கினாரு.
பேங்க்க கொள்ளையடிச்சு பணம் சேத்தாரு.
அத வெச்சு தமிழ்நாட்டுல ஆயுதம் வாங்குனாரு.
காட்டிக்கொடுக்குற தமிழர்களயும் கொன்னாரு.

தமிழர் பகுதிகள் அட்டகாசம் பண்ற இராணுவத்த கொன்னாரு.
அவங்க ஆயுதங்கள எடுத்துகிட்டாரு.

1980 ல அவர் கீழ ஒரு சின்ன படை உருவாகிடுச்சு.
அவங்கதா விடுதலைப் புலிகள்.

சீனாவும் ஒரு புத்தமத நாடு அது இலங்கைக்கு ஆயுதம் வித்துச்சு.
இந்திரா காந்தி காலத்துல இதுக்கு பதிலடியா இந்தியா இலங்கைய அடக்க தமிழ் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்துச்சு.

ராஜீவ் காந்தி காலம் வர தமிழ்நாட்டுல தங்கி புலிகள் பயிற்சி பண்ணினாங்க.
தமிழ்நாட்டுல பிரபாகரனுக்கு இருக்குற மரியாதைய பாத்துட்டு எம்.ஜி.ஆர் அவங்கள ஆதரிச்சாரு.

இந்த காலத்துல புலிகள் பெண்களையும் சேர்த்துகிட்டு பெரிசா ஆச்சு.
அவங்க ராணுவத்தோட சண்டபோட்டு அவங்க ஆயுதங்கள பறிச்சு பெரிய ராணுவமா உருவாகிட்டாங்க.

காட்டுக்குள்ள மறைஞ்சி அடிச்ச காலம் போய் ஊரையே தன்னோட படைபலத்தால பாதுகாப்பு போட்டு ராணுவம் போலீச இல்லாம பண்ணி தனி அரசாங்கம் நடத்துனாரு பிரபாகரன்.
தமிழ் மக்களும் முழு ஆதரவு தந்தாங்க.

அப்பறம் ராஜீவ் காந்தி பிரதமராகி போபர்ஸ் பீரங்கி ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்டாரு.
இத திசைதிருப்பி நல்லபேர் வாங்க இலங்கையில சமாதானம் கொண்டுவரேன்னு எறங்கறாரு.
பிரபாகரன கூப்பிட்டு பணிஞ்சு போக சொல்லி மிரட்டுறாரு.

நம்ம தலைவர் பணியல.
இலங்கைக்கு இந்திய ராணுவத்த அனுப்புறாரு.
சும்மா இல்ல ஒரு லட்சம் பேரு பீரங்கி விமானம் கப்பல் னு பெரிய படை.
புலிப்படைல அப்போ பத்தாயிரம் பேர்தான் இருந்தாங்க.
புலிகளோட மூணு வருசம் சண்ட போட்டு பெரிய உயிரிழப்போட உதை வாங்கி திரும்புச்சு இந்திய ராணுவம்.

ஆனாலும் இந்திய ராணுவம் அங்க நெறய கொல பண்ணிருக்கு.
பத்தாயிரம் பேர்வர செத்துருக்காங்க.
தன்னோட மக்கள கொன்னவன ஒரு உண்மையான தலைவர் சும்மாவாவிடுவாரு?!
அதான் ராஜீவ் காந்திய மனித வெடிகுண்டு அனுப்பி போட்டுத் தள்ளிட்டாரு பிரபாகரன்.

இந்திய ராணுவம் அங்குட்டு போனதும் இங்க சிங்கள ராணுவம் தாக்குச்சு.
அதையும் தோற்கடிச்சாரு பிரபாகரன்.

வலது உள்ளங்கைல நடுவிரல் நகம் போக மீதி விரல்கள் புலிகள் கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு.

ஆமா! எவனாலயும் எந்த கொம்பாதி கொம்பனாலயும் உள்ள நுழைய முடியல.
பிரபாகரன்தான் அரசாங்கம் நடத்துனாரு.
மக்கள்ட்ட வரி வாங்கி உலகத்துல இருக்குற தமிழர்கள்ட்ட நிதி வாங்கி தரைப்படை கப்பல் படை மட்டுமில்லாம விமானப்படையே உருவாக்கிட்டாரு.

ஒருத்தன் கத்தி வச்சிருந்தா பெரிய ஆளு.

துப்பாக்கி வச்சிருந்தா அத விட பெரிய ஆளு.

பீரங்கி வச்சிருந்தா அதவிட பெரிய ஆளு.

விமானப்படை வச்சிருந்தா....

அவ்வளவு பெரிய ஆளுதான் பிரபாகரன்.

விஜய், அஜித் மாதிரி டூப் ஹீரோ இல்ல.
நிஜமான ஹீரோ!

தமிழ்நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் போய் அவர் படைல சேந்தாங்க.
உலகம் முழுக்க தமிழர்கள் "தலைவா"னு அவர தலைல தூக்கிவச்சிட்டு ஆடுனாங்க.

அவர் தன்னோட நாட்டு வளங்கல எந்த கார்ப்பரேட்டுக்கும் விக்கல.
அவர் யாருக்குமே பணியல.

உலக நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு ஆயுதம் வித்து நல்ல லாபம் பாத்தாங்க.
எவ்வளவோ பண்ணியும் இலங்கை அரசாங்கத்துக்கு தோல்வி மேல தோல்வி.

2002 ல மிகப்பெரிய ராணுவ முகாம் இருந்த ஆனையிறவு முகாம புடிச்சாரு பிரபாகரன்.
இதுக்கு மேல முடியாதுனு இலங்கை பணிஞ்சது.
ஐ.நா சபை பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்தம் அறிவிச்சாங்க.

பிரபாகரன் அரசாங்கம் அப்ப நல்ல முன்னேற்றம் அடைஞ்சது.
டிவி எல்லாம் நடத்தினாங்க.
தமிழ்நாட்டுல இருந்து சீமான் அண்ணன வரவச்சு படமெல்லாம் எடுத்தாங்க.

  2006 க்கு பிறகு  இலங்கை மறுபடி இராணுவத்த பலப்படுத்தி சண்டைக்கு வந்தது.
விமானம் மூலமா பொதுமக்கள் மேல குண்டு மழ பொழிஞ்சாங்க.

பிரபாகரன் அவரோட தற்கொலை படைய அனுப்பி விமான நிலையத்தையே  காலிபண்ணிட்டாரு.
இலங்கை நாட்டோட 90% விமானங்கள் எல்லாம் அதுல போச்சு.

உலக நாடுகள் பிரபாகரன வளரவிட்டா இதேமாதிரி சிறந்த தலைவர்கள் ஒவ்வொரு இனத்துலயும் உருவாகிருவாங்க.
அப்பறம் மண்ணயும் மக்களயும் கொள்ளையடிக்க முடியாதுனு அவர ஒழிக்க முடிவு கட்டினாங்க.

குறிப்பா இந்தியா இத முன்ன நின்னு செஞ்சது.

27 நாடுகள் ஆயுத உதவி செஞ்சு இலங்கை புலிகள எதிர்த்து போர் நடத்துச்சு.

பிரபாகரன் அப்பவும் அசரலயே!

ஒத்தையாளா உலகத்த எதுத்து நின்னாரு அந்த மாவீரன்.

2008 ல போர் உச்சம் அடைஞ்சது.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள பயன்படுத்தி பொதுமக்கள கொன்னு குறுக்கு வழியில கோழைத்தனமா தோற்கடிச்சாங்க அவர்படைய.

அவரோட ரெண்டு மகனும் ஒரு மகளும் கூட போர்ல இறந்தாங்க.

அவருக்கு என்னாச்சுனு தெரில.
அவர் உயிரோட இருக்க வாய்ப்பில்ல.

அப்போ நடந்த போர்ல ரெண்டு லட்சம் தமிழர்கள் கொடூரமா கொல்லப்பட்டாங்க.

உலகமே வேடிக்கை பாத்துச்சு.
எவ்வளவோ ஆதாரம் இருந்தும் இப்பவர அத செஞ்ச ராஜபக்ச குடும்பத்துக்கு தண்டன கிடைக்கல.

இப்போ தமிழர்கள ஊருக்கு வெளிய கொட்டக போட்டு குடிவச்சிட்டு தமிழர்களோட வீடு நெலத்தயெல்லாம் சிங்களர் எடுத்துகிட்டாங்க.

தமிழர்கள் வெளியபோனா வீடுவந்து சேர்றது நிச்சமில்ல.

உலகத்துலயே புலிகளுக்கு உதவி செஞ்சது தமிழ்நாடு மட்டும்தான்.
அங்க கொல நடந்தப்போ தமிழ்நாடு மட்டும்தா கதறுச்சு.
17 பேர் தீக்குளிச்சாங்க.

புலிகள் விழுந்த பிறகு இலங்கை கடற்படை நம்ம ராமேஸ்வரம் வர வந்து மீனவர்கள கொல்றான்.
இதுவர 800 பேர் வர தமிழ்நாட்டு மீனவர்கள கொன்னுருக்கான்.

நாம தப்பா ஒண்ணும் கேட்கலயே?!
வெள்ளக்காரன் வர்ற வர தமிழர்கள் தனி அரசாங்கம்.
அத கேட்குறோம்.

இலங்கைல தமிழர் பகுதிக்கு ஈழம் னு பேரு.
5 லட்சம் பேர் உயிர குடுத்து 50 வருசம் போராடியும் அத மீட்க முடியலதான்.

பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்கலனாலும் வெற்றிக்கு கிட்ட நெருங்கிட்டாரு.

அதனாலதான் அவர் வழில நடக்கணும்னு சொல்றேன்.

தமிழ்நாடும் இதே மாதிரி பிரச்சனைகள சந்திக்கிது.

ஏதோ நாம இந்தி திணிப்ப எதிர்த்து போராடி 700 பேர் உயிரக் குடுத்து தடுத்திட்டோம்.
இல்லன்னா நாமளும் ஈழம் மாதிரி ஆயிருப்போம்.

கோடிகோடியா நம்ம வரி மத்திய அரசுக்கு போகுது.
ஆனா நாம புயல் வெள்ளத்துல கெடந்தாலும் நயா பைசா தரமாட்றானுக.
ஒரு ரூவா போனா 30 பைசா கூட நமக்கு நிதி ஒதுக்கி வர்றதில்ல.

மத்திய அரசாங்க வேலை எல்லாம் இந்திக்காரன்.

தமிழ்நாடு அரசு வேலையையும் இப்ப எந்த மாநிலத்தானும் எழுதலாம்னு ஆக்கிட்டானுக.

அரசியல்வாதி எல்லாம் தெலுங்கன்.

நீட் னு மத்திய அரசு பாடத்திட்டத்த புகுத்தி நம்ம தமிழக அரசு நடத்துற கல்லூரிகள்ல பங்கு கேக்குறானுக.

கன்னடன் தண்ணி தராம நம்ம மாநில விவசாயம் 40% அழிஞ்சே போச்சு.

கேரளா பத்தி கேக்கவே வேண்டாம்.

நாமளும் ஈழமும் சேந்து தனிநாடா ஆகணும்.

ஏன்னா தமிழர்களுக்கு தனி நாடு பெற தகுதி இல்லன்னா வேற யாருக்கும் அந்த தகுதி இல்ல.

இப்போ இருக்கிற இங்கிலாந்து அளவு பெரிய நாடு நமக்கு இருக்கு.
அத தனிநாடு ஆக்கணும்.

அதுக்கு ஒவ்வொரு தமிழனும் பிரபாகரனா மாறணும்.

அப்பதான் ஒவ்வோரு இனத்திலயும் ஒரு பிரபாகரன் உருவாவான்.

- ஆதி பேரொளி

#மேதகு65
#HBDPrabhakaran65
#HBDTamilLeader
#HBDPrabhakaranLTTE

Wednesday, 16 October 2019

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

ஈழம் - ஹிந்தியாவின் வியட்நாம்

1947 க்கு பிறகு இந்தியா சந்தித்த போர்கள், இழப்புகள் மற்றும் முடிவுகள்
------------

1947 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 1104 பேர்
முடிவு = போர்நிறுத்தம்
-------------

1962 சீனா உடனான போர்
உயிரிழப்பு = 1383 பேர்
முடிவு = தோல்வி
-----------

1965 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3000 பேர்
முடிவு = வெற்றி
------------

1971 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 3843 பேர்
முடிவு = வெற்றி
-------------

1984 சீக்கியர் உடனான போர்
உயிரிழப்பு = 634 பேர்
முடிவு = வெற்றி
------------

1987 புலிகள் உடனான போர்
உயிரிழப்பு = 1138 பேர்
முடிவு= பின்வாங்கல் (விலகுதல்)
-------------

1999 பாகிஸ்தான் உடனான போர்
உயிரிழப்பு = 700 பேர்
முடிவு = வெற்றி
-------------
இதில் சேர்க்கப்படாதவை

ஜுனாகத், ஹைதராபாத் (32 பேர் உயிரிழப்பு) ஆக்கிரமிப்புகள் சேர்க்கப்படவில்லை.

கோவா(22 உயிரிழப்பு) , தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி (44 உயிரிழப்பு) ஆகியவற்றை கைப்பற்ற போர்ச்சுகல் உடன் நடந்த போர்கள் சேர்க்கப்படவில்லை.

காங்கோ மற்றும் சிசெல்ஷ் நாடுகளுக்கு படையுதவி செய்த முடிவுகளையும் சேர்க்கவில்லை.

சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நடந்த எல்லை மோதல்கள் சேர்க்கபடவில்லை.

(இதில் வட கிழக்கு, காஷ்மீர் ஆயுதக் குழுக்கள் மற்றும் நக்சலைட்  உடனான போர் நடவடிக்கைகள் ஒரு முடிவை எட்டாமல் தொடர்ந்து கொண்டு இருப்பதால் அவற்றைச் சேர்க்கவில்லை)

மேற்கண்ட அனைத்திலும் பாகிஸ்தான் (1947), சீனா (1962) மற்றும் புலிகள் (1987 - 1990) தவிர்த்த அனைத்து போரிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இதில் பாகிஸ்தானை மீண்டும் போரிட்டு 3 முறை தோற்கடித்துள்ளது.

1967 இல் சியாச்சின் எல்லை மோதலில் சீனாவைக்கூட தோற்கடித்துள்ளது.

என்றால் இந்தியாவின் வியட்நாம் ஈழம் என்றுதானே பொருள்?!

(தகவல்களுக்கு நன்றி: Wikipedia)

Sunday, 13 October 2019

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!

 சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
 அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
 என்று இருந்தது.

 ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
 அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
 ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
 இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.

 இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.

 இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
 அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
 அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.

 இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
 அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
 அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
 பார்த்தாலே தெரியும்.

கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
 அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
 அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
 ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
 இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.

 காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
 எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
 வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.

நன்றி: Vicky Kannan



Thursday, 24 January 2019

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

இமயத்தைத் தோற்கடிக்கும் திறனுடையோர்

சிங்களம் புட்பகம் சாவக மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடி யும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் – எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் – சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் – தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் – இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் – கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் – மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே– இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே

- பாரதியார்

Tuesday, 27 February 2018

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியாவிற்காக துடிக்கும் தமிழகம் !

சிரியா பற்றிய தேடலில் கூகுளில் முதலிடம் பிடித்தது !

கடந்த ஏழு நாட்களில் சிரியா பற்றி அதிகம் தேடியது தமிழ்நாடு என்று புள்ளிவிபர செய்தி வந்துள்ளது.

குறிப்பாக ஆவடி உலக அளவில் முதலிடத்தில் உள்ளது.

முதல் 50 இடங்களில் 90%  இடங்கள் தமிழகத்தை சேர்ந்தது.

5 வது இடத்தில் சென்னையை சேர்ந்த காட்டாங்குளத்தூர் இருக்கிறது.

உலக அளவில் முதல் பத்து இடங்களில் 8,9,10 ஆகிய இடங்களில் நாகர் கோவில், தஞ்சாவூர், மதுரை ஆகிய இடங்கள் இருக்கிறது.

(மேற்கண்ட பகுதிகள் இசுலாமியப் பெரும்பான்மை கொண்டன அல்ல)

(நன்றி: oneindia
தலைப்பு: உலகிலேயே சிரியா போர் பற்றி அதிகம் தேடியது தமிழர்கள்தான்..
என்ன காரணம்?)

Wednesday, 29 March 2017

ஒரே ஆண்டில் 20,500 போராட்டங்கள் நடத்திய தமிழகம்

கடந்த ஆண்டில் சிறிதும் பெரிதுமாக 20,450 போராட்டங்களை நடத்தியுள்ளது தமிழகம்.

தமிழினம் போராடாத இனம் என்போரின் கவனத்திற்கு.

செய்தி: The Hindu

Sunday, 1 May 2016

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

சங்ககாலப் பெண்பாற்புலவர்கள்

(1)ஔவையார் -
புறநானூறு 33 பாடல்கள்
(87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392)
நற்றிணை 7 பாடல்கள்
(129, 187, 295, 371, 381, 390, 394)
குறுந்தொகை 15 பாடல்கள்
(15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388),
அகநானூறு 4 பாடல்கள்
(11, 147, 273, 303) -
மொத்தம் 59 பாடல்கள்

(2) அஞ்சில் அஞ்சியார் -
நற்றிணை 1 (90)

(3) அஞ்சியத்தை மகள் நாகையார்–
அகநானூறு 1 (356)

(4)அள்ளூர் நன்முல்லையார் -
அகநானூறு 1 (46) ,
புறநானூறு 1 (306),
குறுந்தொகை 9
(32, 67, 68, 96, 140, 157, 202, 237)

(5) அணிலாடு முன்றிலார் -
குறுந்தொகை 1 (41)

(6) ஆதிமந்தி -
குறுந்தொகை 1 (31)

(7) ஊண் பித்தையார் -
குறுந்தொகை 1 (232)

(8) ஒக்கூர் மாசாத்தியார் -
அகநானூறு 2 (324, 384),
புறநானூறு 1 (279),
குறுந்தொகை 5 (126, 139, 186, 220, 275)

(9) ஓரிற் பிச்சையார் -
குறுந்தொகை 1 (277)

(10)கச்சிப்பேட்டு நன்னாகையார் -
குறுந்தொகை 6 (30, 172, 180, 192, 197, 287)

(11) கழார்க்கீரன் எயிற்றியார் –
அகநானூறு 4,
குறுந்தொகை 3 (35, 261, 330) ,
நற்றிணை 2 (281, 312)

(12) காக்கைப்பாடினி நச்செள்ளையார் –
புறநானூறு 1 (278),
குறுந்தொகை 1 (210),
பதிற்றுப்பத்து 10 (51 – 60)

(13) காவற்பெண்டு -
புறநானூறு 1 (86)

(14 )காமக்கணி நப்பசலையார் - அகநானூறு 2 (204) ,
நற்றிணை 2 (243, 304)

(15) குறமகள் குறிஎயினி -
புறநானூறு 1 (157),
நற்றிணை 1 (357)

(16) குமுழி ஞாழல் நப்பசையார் -
அகநானூறு 1

(17) தாயங்கண்ணியார் -
புறநானூறு 1 (250)

(18)பாரிமகளிர் -
புறநானூறு 1 (112)

(19) பூங்கணுத்திரையார் (பூங்கண் உத்திரையார்) -
புறநானூறு 1 (277),
குறுந்தொகை 2 (48, 171)

(20) பெருங்கோப்பெண்டு -
புறநானூறு 1 (246)

(21) பேய்மகள் இளவெயினியார் –
புறநானூறு 1 (11)

(22) பொன்மணியார் –
குறுந்தொகை 1 (391)

(23) பொன்முடியார் -
புறநானூறு 3 (299, 310, 312)

(24) பொதும்பில் புல்லளங்கண்ணியார் -
அகநானூறு 1(25)

(25) பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் -
அகநானூறு 1 (252),
புறநானூறு 3 (83, 84, 85),
நற்றிணை 2 (19, 87)

(26) நல்வெள்ளியார் -
அகநானூறு 1 (32),
குறுந்தொகை 1 (365),
நற்றிணை 2 (7)

(27) நன்னாகையார் –
குறுந்தொகை 2 (118, 325)

(28) நெடும்பல்லியத்தையார் –
குறுந்தொகை 1(178)

(29) மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்-
நற்றிணை 2 (250, 369)

(30) மதுரை நல்வெள்ளியார் –
குறுந்தொகை 1 (365)

(31) மாற்பித்தியார் -
புறநானூறு 2 (251, 252)

(32) மாறோகத்து நப்பசலையார் -
புறநானூறு 7 (37, 39, 126, 174, 226, 280, 383)
நற்றிணை 1 (304)

(33) முடத்தாமக் கண்ணியார் –
பொருநராற்றுப்படை 1
(பத்துபாட்டில் ஒன்று)

(34) முள்ளியூர் பூதியார் –
1 அகநானூறு 1

(35) வருமுலையாரித்தி –
குறுந்தொகை 1(176)

(36) வெறி பாடிய காமக்கண்ணியார் –
புறநானூறு 1 (271),
அகநானூறு 2 (22, 98),
நற்றிணை 1 (268)

(37) வெண்மணிப்பூதியார் –
குறுந்தொகை 1 (299)

(38) வெள்ளி வீதியார் -
அகநானூறு 2 (45, 362),
குறுந்தொகை 8 (26, 44, 58, 130,146, 149, 169, 386),
நற்றிணை 3 (70, 335, 348)