Showing posts with label தேசியத் தலைவர். Show all posts
Showing posts with label தேசியத் தலைவர். Show all posts

Tuesday, 26 November 2019

பிரபாகரன்னா யாரு

பிரபாகரன்னா யாரு?

பிரபாகரன் அப்டின்னா யாருன்னே தெரியாத தமிழ்நாட்டு பசங்க இப்பவும் உண்டு.

அவங்க இத படிங்க..

4 பேர் சேந்தாலும் ஒருத்தன அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அருவாளோட 10 ரவுடிங்க போனாலும் ஒருத்தன அடிக்க முடியாதுனா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

துப்பாக்கியோட போலீஸ் வந்தாலும் அடிக்க முடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

பீரங்கியோட ராணுவமே வந்தாலும் அடிக்கமுடியாதுன்னா அவன் எவ்வளவு பெரிய வீரன்?

அவ்வளவு பெரிய வீரன்தான் பிரபாகரன்.

டானுக்கெல்லாம் டான்!

ஒரு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள் போய் ஒதை வாங்கிட்டு வந்த மாவீரன்.

அப்பிடி ஒரு மாஸ் ஹீரோ நம்ம தமிழினத்துல பொறந்திருக்கான்.

இது நமக்கு பெரும இல்லையா?!

தமிழனா பொறந்துட்டு பிரபாகரன் யார்னு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்
எனக்கு அப்பன் பேரு தெரியாது னு சொல்றதும் ஒண்ணுதான்.

அவரென்ன நமக்கு அப்பா மாதிரியா?!

ஆமாப்பா! அப்பனுக்கு மேல!
தலைவன்!

புரியுற மாதிரி சொல்லுறேன்.
இந்தியாவுல தெற்க கடைசியா தமிழ்நாடு இருக்கு.
அப்பறம் ஆழமில்லாத கடல்.
அதுல படகு போற அளவு பக்கத்துல இலங்கை அதாவது ஸ்ரீலங்கா இருக்கு.

இது நாலுபக்கமும் கடல் சூழ்ந்த வலது உள்ளங்கை வடிவம் மாதிரி ஒரு தீவு.
இந்த உள்ளங்கைல  விரல்கள் அளவுக்கு தமிழர் வாழ்ற பகுதி.
மீதி சிங்களம் பேசுற வேற ஒரு மக்கள் வாழுற பகுதி.

1947 ல இந்தியாவுக்கு சுதந்திரம் கெடச்ச எட்டு மாசம் கழிச்சு இலங்கைக்கு சுதந்திரம் கெடைச்சு தனிநாடா ஆகுது.

நாம பண்ணுன ஒரே தப்பு என்னன்னா அப்பவே இலங்கைல வடக்கு கிழக்கா அதோட அளவுல மூணுல ஒரு பங்கு தமிழர்கள் வாழுற பகுதியயும் தமிழ்நாட்டோட சேக்கறத பத்தி யோசிக்காம விட்டதுதான்.

இலங்கைல 70% சிங்களவர்களும் 30% தமிழர்களும் இருந்தாங்க.

பெரும்பான்மையா இருக்குற சிங்களர்கள் வேலை வாய்ப்பு, கல்வி, அரசியல் பதவி எல்லாத்தையும் முழுக்க ஆக்கிரமிச்சிக்க தொடங்குனாங்க.

இப்போ இந்தியாவுல 60% இருக்குற ஹிந்தி மக்கள் மத்திய அரச கைபற்றி
இந்திபேசாத மாநிலங்களுக்கு சலுகைகள் கொடுக்காததோட
வடயிந்தியர்கள பெரிய அளவுல குடிபோக வச்சு அந்த மாநிலத்தோட வேலைவாய்ப்பை குறுக்கு வழியில பறிக்கிறாங்களே அதேமாதிரி
அங்க சிங்களர்கள் எல்லாத்தயும் பறிச்சிக்க நினைச்சாங்க.

70% சிங்களர்ல எல்லாருமே புத்த மதத்த சேந்தவங்க

  30% தமிழர்கள்ல இந்து, கிறிஸ்டின், முஸ்லீம் னு 3 மதங்கள சேந்தவங்க இருந்தாங்க.
இதுபோக தமிழ்நாட்டுல இருந்து தேயிலை தோட்ட வேலைக்கு வெள்ளக்காரங்க கூட்டிட்டு போன தமிழர்கள் இலங்கை தீவு நட்டநடுவுல இருக்குற மலைகள்ல சிங்களர் மத்தியில இருந்தாங்க.

தமிழர்கள் படிச்சவங்களா முன்னேறிய சமூகமாக இருந்தாங்க.
அரசாங்க அதிகாரிகள்ல 60% தமிழர்களா இருந்தாங்க.

சிங்களவர்கள் அப்படி இல்ல.
அவங்க நம்ம பீகார் மாதிரி.
அவங்க வாழ்ந்த பகுதி அதாவது இலங்கை தீவோட நடுப்பகுதி தெற்கு மற்றும் மேற்கு ல அவங்க மக்கட்தொகை நெருக்கம் ரொம்ப அதிகம்.
படிப்பறிவில்லாம வறுமைல வாடினாங்க.

சிங்களர்கள் பெரும்பான்மை பலத்த வச்சு ஆட்சிய புடிச்சாங்க.

முதல் வேலையா தமிழ்நாட்டுல இருந்து போன மலைநாட்டு தமிழர்கள ரேசன்காடு குடுக்காம இந்தியாவுக்கே வெரட்டி அடிச்சாங்க.

தேசிய மொழியா சிங்களத்த கொண்டுவந்தாங்க.
சிங்களம் தெரிஞ்சா மட்டும்தான் வேலை கிடைக்கும்னு சட்டத்த மாத்தினாங்க.

இப்படி தமிழர்கள் படிப்படியா கொறஞ்சு சிங்களர்கள் 90% அரசாங்க வேலைகள்ல நிறைஞ்சிட்டாங்க.
போலீஸ், ராணுவம் எல்லாத்துலயும் சிங்களம் தெரிஞ்சவங்க மட்டுமே சேரமுடிஞ்சதால 99% அவங்களே நிரம்பிட்டாங்க.

தமிழ் பகுதிகள்ல இருக்குற கல்லூரிகள்லயும் சிங்கள மாணவர்களுக்கு இடம் அதிகமா ஒதுக்கீடு பண்ணாங்க.

மக்கட்தொகை கம்மியா இருக்குற தமிழர் பகுதிகளுக்கு அரசாங்க ஆதரவோட நிலத்த பத்திரம் எழுதி வாங்கி கூட்டம்கூட்டமா குடிவந்து புதுபுது சிங்கள கிராமங்கள உருவாக்கினாங்க.

  பிக்குகள் ன்ற புத்த மத சாமியார்கள் இந்து முஸ்லீம் பகுதிகள் புத்தருக்கு பெரிய பெரிய கோவில் கட்ட ஆரம்பிச்சாங்க.

தமிழர்கள் உருவாக்கி வச்சிருந்த ஆசியாவிலேயே பெரிய நூலகம் ஒன்ன நெருப்பு வச்சி கொளுத்தினாங்க.

தமிழர்கள் செல்வநாயகம் ன்ற தலைவர் தலைமைல ஜனநாயக வழியில எவ்வளவோ போராடி பாத்தாங்க.
ஆனா சிறுபான்மையான தமிழர்களால ஜனநாயக வழியில எதையும் தடுத்து நிறுத்த முடியல

செல்வநாயகம் தமிழ்நாடு மாதிரி தனி போலீஸ் கொண்ட மாநிலம் கேட்டுபாத்தாரு.
கெடைக்கல.
கடைசியா 'எங்கள விட்டுடுங்க நாங்க தனிநாடா இருக்கறோம்' னு சொல்லி தேர்தல்ல நின்னாரு.
தமிழர்கள் மொத்த ஓட்டும் அவருக்கு விழுந்தது.

சிங்கள தலைவர்கள் செல்வாவுக்கு தந்த வாக்குறுதிகள நிறைவேற்றல.
அவங்க நாடாளுமன்றத்துல போட்ட  ஒப்பந்தத்தையே கிழிச்சு போட்டுட்டாங்க.

போலீஸ், ராணுவம், அதிகாரிகள், அரசியல்வாதிகள் எல்லாருமே சிங்களர் ன்றதால தெருவுல போற எந்த சிங்களவனும் எந்த தமிழன் வீட்டுலயும் புகுந்து அவன் பொண்ண தூக்கிட்டு போகலாம்ன்ற நெலமை.

இதனால தமிழ் இளைஞர்கள் ஆயுதத்த கையில எடுத்தாங்க.
சிங்களர்கள தட்டி கேட்டாங்க.
அப்ப பிரபாகரன் சின்ன குழந்தைதான்.

சிங்களர்கள் நிறைஞ்சு இருக்குற போலீஸ் ஸ்டேசன் ராணுவ முகாம் இதையெல்லாம் தமிழ் இளைஞர்கள் தாக்கினாங்க.

பதிலுக்கு அரசாங்க ஆதரவோட சிங்கள போலீசும் ராணுவமும் ரவுடிகளும் தமிழ் பொதுமக்கள் மீது கலவரம் பண்ணி கொள்ளையடிச்சு குழந்தைங்க வயசானவங்கனு பல பேர கொன்னாங்க.
பல தமிழ் பெண்கள கற்பழிச்சாங்க.
ஆயுதம் தூக்கி பதிலடி குடுத்த தமிழ் கைதிகள ஜெயிலுக்குள்ளயே போய் கொடூரமா கொல பண்ணாங்க.

பிரபாகரனுக்கு 16 வயசு ஆச்சு.
கண்முன்னாடி நடக்குற கொடுமைகள பாத்து அவரும் தன்னோட இனத்துக்காக ஆயுத குழுவுல இணைஞ்சாரு.

13 வருசம் காடுகள்ல தலைமறைவா இருந்து பல இளைஞர்கள சேத்தாரு.

அவரே ஒரு துப்பாக்கி செஞ்சிக்கிட்டாரு.
போலீஸ அடிச்சு துப்பாக்கிய புடுங்கினாரு.
பேங்க்க கொள்ளையடிச்சு பணம் சேத்தாரு.
அத வெச்சு தமிழ்நாட்டுல ஆயுதம் வாங்குனாரு.
காட்டிக்கொடுக்குற தமிழர்களயும் கொன்னாரு.

தமிழர் பகுதிகள் அட்டகாசம் பண்ற இராணுவத்த கொன்னாரு.
அவங்க ஆயுதங்கள எடுத்துகிட்டாரு.

1980 ல அவர் கீழ ஒரு சின்ன படை உருவாகிடுச்சு.
அவங்கதா விடுதலைப் புலிகள்.

சீனாவும் ஒரு புத்தமத நாடு அது இலங்கைக்கு ஆயுதம் வித்துச்சு.
இந்திரா காந்தி காலத்துல இதுக்கு பதிலடியா இந்தியா இலங்கைய அடக்க தமிழ் குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சி கொடுத்துச்சு.

ராஜீவ் காந்தி காலம் வர தமிழ்நாட்டுல தங்கி புலிகள் பயிற்சி பண்ணினாங்க.
தமிழ்நாட்டுல பிரபாகரனுக்கு இருக்குற மரியாதைய பாத்துட்டு எம்.ஜி.ஆர் அவங்கள ஆதரிச்சாரு.

இந்த காலத்துல புலிகள் பெண்களையும் சேர்த்துகிட்டு பெரிசா ஆச்சு.
அவங்க ராணுவத்தோட சண்டபோட்டு அவங்க ஆயுதங்கள பறிச்சு பெரிய ராணுவமா உருவாகிட்டாங்க.

காட்டுக்குள்ள மறைஞ்சி அடிச்ச காலம் போய் ஊரையே தன்னோட படைபலத்தால பாதுகாப்பு போட்டு ராணுவம் போலீச இல்லாம பண்ணி தனி அரசாங்கம் நடத்துனாரு பிரபாகரன்.
தமிழ் மக்களும் முழு ஆதரவு தந்தாங்க.

அப்பறம் ராஜீவ் காந்தி பிரதமராகி போபர்ஸ் பீரங்கி ஊழல் செஞ்சு மாட்டிக்கிட்டாரு.
இத திசைதிருப்பி நல்லபேர் வாங்க இலங்கையில சமாதானம் கொண்டுவரேன்னு எறங்கறாரு.
பிரபாகரன கூப்பிட்டு பணிஞ்சு போக சொல்லி மிரட்டுறாரு.

நம்ம தலைவர் பணியல.
இலங்கைக்கு இந்திய ராணுவத்த அனுப்புறாரு.
சும்மா இல்ல ஒரு லட்சம் பேரு பீரங்கி விமானம் கப்பல் னு பெரிய படை.
புலிப்படைல அப்போ பத்தாயிரம் பேர்தான் இருந்தாங்க.
புலிகளோட மூணு வருசம் சண்ட போட்டு பெரிய உயிரிழப்போட உதை வாங்கி திரும்புச்சு இந்திய ராணுவம்.

ஆனாலும் இந்திய ராணுவம் அங்க நெறய கொல பண்ணிருக்கு.
பத்தாயிரம் பேர்வர செத்துருக்காங்க.
தன்னோட மக்கள கொன்னவன ஒரு உண்மையான தலைவர் சும்மாவாவிடுவாரு?!
அதான் ராஜீவ் காந்திய மனித வெடிகுண்டு அனுப்பி போட்டுத் தள்ளிட்டாரு பிரபாகரன்.

இந்திய ராணுவம் அங்குட்டு போனதும் இங்க சிங்கள ராணுவம் தாக்குச்சு.
அதையும் தோற்கடிச்சாரு பிரபாகரன்.

வலது உள்ளங்கைல நடுவிரல் நகம் போக மீதி விரல்கள் புலிகள் கட்டுப்பாட்டுக்கு வந்தாச்சு.

ஆமா! எவனாலயும் எந்த கொம்பாதி கொம்பனாலயும் உள்ள நுழைய முடியல.
பிரபாகரன்தான் அரசாங்கம் நடத்துனாரு.
மக்கள்ட்ட வரி வாங்கி உலகத்துல இருக்குற தமிழர்கள்ட்ட நிதி வாங்கி தரைப்படை கப்பல் படை மட்டுமில்லாம விமானப்படையே உருவாக்கிட்டாரு.

ஒருத்தன் கத்தி வச்சிருந்தா பெரிய ஆளு.

துப்பாக்கி வச்சிருந்தா அத விட பெரிய ஆளு.

பீரங்கி வச்சிருந்தா அதவிட பெரிய ஆளு.

விமானப்படை வச்சிருந்தா....

அவ்வளவு பெரிய ஆளுதான் பிரபாகரன்.

விஜய், அஜித் மாதிரி டூப் ஹீரோ இல்ல.
நிஜமான ஹீரோ!

தமிழ்நாட்டு இளைஞர்கள் நிறைய பேர் போய் அவர் படைல சேந்தாங்க.
உலகம் முழுக்க தமிழர்கள் "தலைவா"னு அவர தலைல தூக்கிவச்சிட்டு ஆடுனாங்க.

அவர் தன்னோட நாட்டு வளங்கல எந்த கார்ப்பரேட்டுக்கும் விக்கல.
அவர் யாருக்குமே பணியல.

உலக நாடுகள் இலங்கைக்கு கடனுக்கு ஆயுதம் வித்து நல்ல லாபம் பாத்தாங்க.
எவ்வளவோ பண்ணியும் இலங்கை அரசாங்கத்துக்கு தோல்வி மேல தோல்வி.

2002 ல மிகப்பெரிய ராணுவ முகாம் இருந்த ஆனையிறவு முகாம புடிச்சாரு பிரபாகரன்.
இதுக்கு மேல முடியாதுனு இலங்கை பணிஞ்சது.
ஐ.நா சபை பேச்சுவார்த்தை நடத்தி போர்நிறுத்தம் அறிவிச்சாங்க.

பிரபாகரன் அரசாங்கம் அப்ப நல்ல முன்னேற்றம் அடைஞ்சது.
டிவி எல்லாம் நடத்தினாங்க.
தமிழ்நாட்டுல இருந்து சீமான் அண்ணன வரவச்சு படமெல்லாம் எடுத்தாங்க.

  2006 க்கு பிறகு  இலங்கை மறுபடி இராணுவத்த பலப்படுத்தி சண்டைக்கு வந்தது.
விமானம் மூலமா பொதுமக்கள் மேல குண்டு மழ பொழிஞ்சாங்க.

பிரபாகரன் அவரோட தற்கொலை படைய அனுப்பி விமான நிலையத்தையே  காலிபண்ணிட்டாரு.
இலங்கை நாட்டோட 90% விமானங்கள் எல்லாம் அதுல போச்சு.

உலக நாடுகள் பிரபாகரன வளரவிட்டா இதேமாதிரி சிறந்த தலைவர்கள் ஒவ்வொரு இனத்துலயும் உருவாகிருவாங்க.
அப்பறம் மண்ணயும் மக்களயும் கொள்ளையடிக்க முடியாதுனு அவர ஒழிக்க முடிவு கட்டினாங்க.

குறிப்பா இந்தியா இத முன்ன நின்னு செஞ்சது.

27 நாடுகள் ஆயுத உதவி செஞ்சு இலங்கை புலிகள எதிர்த்து போர் நடத்துச்சு.

பிரபாகரன் அப்பவும் அசரலயே!

ஒத்தையாளா உலகத்த எதுத்து நின்னாரு அந்த மாவீரன்.

2008 ல போர் உச்சம் அடைஞ்சது.
தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள பயன்படுத்தி பொதுமக்கள கொன்னு குறுக்கு வழியில கோழைத்தனமா தோற்கடிச்சாங்க அவர்படைய.

அவரோட ரெண்டு மகனும் ஒரு மகளும் கூட போர்ல இறந்தாங்க.

அவருக்கு என்னாச்சுனு தெரில.
அவர் உயிரோட இருக்க வாய்ப்பில்ல.

அப்போ நடந்த போர்ல ரெண்டு லட்சம் தமிழர்கள் கொடூரமா கொல்லப்பட்டாங்க.

உலகமே வேடிக்கை பாத்துச்சு.
எவ்வளவோ ஆதாரம் இருந்தும் இப்பவர அத செஞ்ச ராஜபக்ச குடும்பத்துக்கு தண்டன கிடைக்கல.

இப்போ தமிழர்கள ஊருக்கு வெளிய கொட்டக போட்டு குடிவச்சிட்டு தமிழர்களோட வீடு நெலத்தயெல்லாம் சிங்களர் எடுத்துகிட்டாங்க.

தமிழர்கள் வெளியபோனா வீடுவந்து சேர்றது நிச்சமில்ல.

உலகத்துலயே புலிகளுக்கு உதவி செஞ்சது தமிழ்நாடு மட்டும்தான்.
அங்க கொல நடந்தப்போ தமிழ்நாடு மட்டும்தா கதறுச்சு.
17 பேர் தீக்குளிச்சாங்க.

புலிகள் விழுந்த பிறகு இலங்கை கடற்படை நம்ம ராமேஸ்வரம் வர வந்து மீனவர்கள கொல்றான்.
இதுவர 800 பேர் வர தமிழ்நாட்டு மீனவர்கள கொன்னுருக்கான்.

நாம தப்பா ஒண்ணும் கேட்கலயே?!
வெள்ளக்காரன் வர்ற வர தமிழர்கள் தனி அரசாங்கம்.
அத கேட்குறோம்.

இலங்கைல தமிழர் பகுதிக்கு ஈழம் னு பேரு.
5 லட்சம் பேர் உயிர குடுத்து 50 வருசம் போராடியும் அத மீட்க முடியலதான்.

பிரபாகரனுக்கு வெற்றி கிடைக்கலனாலும் வெற்றிக்கு கிட்ட நெருங்கிட்டாரு.

அதனாலதான் அவர் வழில நடக்கணும்னு சொல்றேன்.

தமிழ்நாடும் இதே மாதிரி பிரச்சனைகள சந்திக்கிது.

ஏதோ நாம இந்தி திணிப்ப எதிர்த்து போராடி 700 பேர் உயிரக் குடுத்து தடுத்திட்டோம்.
இல்லன்னா நாமளும் ஈழம் மாதிரி ஆயிருப்போம்.

கோடிகோடியா நம்ம வரி மத்திய அரசுக்கு போகுது.
ஆனா நாம புயல் வெள்ளத்துல கெடந்தாலும் நயா பைசா தரமாட்றானுக.
ஒரு ரூவா போனா 30 பைசா கூட நமக்கு நிதி ஒதுக்கி வர்றதில்ல.

மத்திய அரசாங்க வேலை எல்லாம் இந்திக்காரன்.

தமிழ்நாடு அரசு வேலையையும் இப்ப எந்த மாநிலத்தானும் எழுதலாம்னு ஆக்கிட்டானுக.

அரசியல்வாதி எல்லாம் தெலுங்கன்.

நீட் னு மத்திய அரசு பாடத்திட்டத்த புகுத்தி நம்ம தமிழக அரசு நடத்துற கல்லூரிகள்ல பங்கு கேக்குறானுக.

கன்னடன் தண்ணி தராம நம்ம மாநில விவசாயம் 40% அழிஞ்சே போச்சு.

கேரளா பத்தி கேக்கவே வேண்டாம்.

நாமளும் ஈழமும் சேந்து தனிநாடா ஆகணும்.

ஏன்னா தமிழர்களுக்கு தனி நாடு பெற தகுதி இல்லன்னா வேற யாருக்கும் அந்த தகுதி இல்ல.

இப்போ இருக்கிற இங்கிலாந்து அளவு பெரிய நாடு நமக்கு இருக்கு.
அத தனிநாடு ஆக்கணும்.

அதுக்கு ஒவ்வொரு தமிழனும் பிரபாகரனா மாறணும்.

அப்பதான் ஒவ்வோரு இனத்திலயும் ஒரு பிரபாகரன் உருவாவான்.

- ஆதி பேரொளி

#மேதகு65
#HBDPrabhakaran65
#HBDTamilLeader
#HBDPrabhakaranLTTE

Saturday, 11 March 2017

மண்ணைக் காக்க ஜப்பானைப் பகைத்துக்கொண்ட புலிகள்

இயற்கை வளச் சுரண்டலுக்கு எதிராகப் புலிகள் உள்ளூர் வன்னி மரம் கடத்தல் பொருளாதார ரௌடிகளுக்கு மட்டுமன்றி பொருளாதார வல்லரசு என்றும் பார்க்காமல் ஜப்பானுக்கு சுளுக்கெடுத்த நிகழ்வும் உண்டு.

இது குறித்து புகழ்பெற்ற அரசியல் ஆய்வாளர் தராகி சிவராம் எழுதிய கட்டுரை,
6–12 ஜூன் 2003 ஈழநாடு பத்திரிக்கை.

ஜப்பானுக்கு ஏன் இந்த அக்கறை?

புலிகள் டோக்கியோ போவார்களா இல்லையா என்பதே இலங்கையின் அண்மைக்கால அரசியலின் முக்கிய கேள்வியாக இருந்தது.
‘அவர்கள் ஜப்பானின் தலைநகரத்திற்குச் செல்வதிலேயே தமிழரின் எதிர்காலம் தங்கியுள்ளது' என்ற வகையில் செய்திகளும் ஆய்வுகளும் வெளியாகிய வண்ணம் இருந்தன.
புலிகள் டோக்கியோவிற்கு எப்படியாவது போய்விட வேண்டுமென்று உள்ளார்ந்த எதிர்பார்ப்போடு பலர் ஆரூடம் கூறவும் தலைப்பட்டனர்.

டோக்கியோ.. ஜப்பானுக்கு எங்கள் சிக்கலைத் தீர்த்து வைப்பதில் ஏன் இவ்வளவு அக்கறை..?
1983 இல் இருந்து இலங்கையில் தமிழர் சிக்கல் ஒரு பெரும் போராக உருமாறி நடைபெற்று வருகின்றது.
இதிலோ 1990 இலும் 1995 இலும் புலிகளுக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுகளிலோ எந்த ஒரு வெளிப்படையான ஈடுபாடுமின்றி வாழாவிருந்த ஜப்பான் இன்று எமது அரசியல் எதிர்காலத்தையே தீர்மானிக்கும் வலுவுள்ள ஒரு நாடாக கிளம்ப முனைவது ஏன்?

கொக்குத் தொடுவாய்க்கும் புல்மோட்டைக்கும் இடைப்பட்ட கடலோரப் பகுதியிலேயே உலகில் அதிகூடிய டைட்டேனியம் செறிவுள்ள தாதுப் பொருள்களான இல்மனைட், றூட்டைல் என்பன காணப்படுகின்றன.
இன்றைய உலகின் இயக்கத்துக்கு இன்றியமையாத ஒரு உலோகம் டைட்டேனியமாகும்.
உலகில் உற்பத்தியாக்கப்படும் அனைத்து வானூர்திகள், விண்வெளிக் கலங்கள் ,செயற்கை விண்கோள்கள் போன்றவற்றை டைட்டேனியம் உலோகமின்றி தயாரிக்க முடியாது.
இது உருக்கைவிட நான்கு மடங்கு உறுதியுள்ளதாகவும் ஆனால் உருக்கினுடைய நிறையைவிட மிகக் குறைந்த நிறையுள்ளதாகவும் காணப்படுகின்றது.
இதனாலேயே இது மேற்படி உற்பத்திகளுக்கும் அடிப்படையாக உள்ளது.
இதுமட்டுமின்றி டைட்டேனியம் ஈரொட்சைட் செயற்கை வண்ணங்களின் தயாரிப்புக்கு மிக இன்றியமையாத இரசாயன மூலமாக உள்ளது.
இதன் காரணமாகவே அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் டைட்டேனியம் தாதுக்களான இல்மனைட் மற்றும் றூட்டைல் ஆகியவற்றை கேந்திர மூலப் பொருட்களாக வகைப்படுத்துகின்றது.

இல்மனைட்,றூட்டைல் ஆகிய தாதுக்களில் இருந்து டைட்டேனியம் உலோகத்தையும் டைட்டேனியம் ஈரொட்சையும் உற்பத்தியாக்குகின்ற நவீன விஞ்ஞானமுறை அமெரிக்காவின் இரு நிறுவனங்களிடம் மட்டுமே தனியுரிமையாக உள்ளது.
இத்தனியுரிமை அமெரிக்காவுக்கு உலகப் பொருளாதாரத்தின் மீது ஒரு பிடியைக் கொடுக்கிறது.
இந்தத் தொழில் நுட்பத்தின் தனி உரிமையை ஜப்பானோடு அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது.
இதன் காரணமாகவே ஜப்பான் உலகில் டைட்டேனியம் ஈரொட்சைட் உற்பத்தியில் முன்னிற்கின்றது.

புல்மோட்டையில் உற்பத்தியாகும் இல்மனைட் மற்றும் றூட்டைல் தாதுக்களை ஜப்பானே கொள்வனவு செய்து வருகின்றது.
இக்கொள்வனவுக்கு ஒரு தமிழ் வர்த்தக நிறுவனமே இடைத்தரகராகச் செயற்பட்டுவந்தது.
இந்நிறுவனம் நீண்டகாலமாக சர்வதேச கேள்வி நடைமுறைகள் இல்லாது டைட்டேனியம் தாதுக்களை ஐம்பது அமெரிக்க டொலர்களுக்கு வாங்கி குறைந்தபட்சம் ஆண்டொன்றுக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர்களையாவது சம்பாதித்திருக்க வேண்டும்.

எம் மண் இவ்வாறு பகல் கொள்ளை அடிக்கப்பட்டதை தமிழ் அரசியலாளர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
புல்மோட்டையில் நடைபெற்றுவந்த இம்மண் கொள்ளையை ஆராய்ந்தறிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் 1997 இல் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.

ஜப்பானுக்குக் கொண்டு செல்லப்படுவதற்கு இல்மனைட் மண் ஏற்றப்பட்டிருந்த கப்பல் ஒன்று புல்மோட்டைக் கடலில் மூழ்கடிக்கப்பட்டது.
இதன் பின்னர் ஜப்பானுடைய கவனம் விடுதலைப் புலிகளை நோக்கியும் வடக்குக் கிழக்குப் போர் நிலமைகள் மீதும் குறிப்பாகத் திரும்பலாயிற்று.

நன்றி: நடேசபிள்ளை சிவேந்திரன்

Sunday, 9 October 2016

புலிக்கொடி சொல்லும் செய்தி

புலிக்கொடி சொல்லும் செய்தி

1977 ஆம் ஆண்டு.
அப்போது தலைவர் பிரபாகரன் பல மாதங்களாக மதுரையில்தான் தங்கியிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக கொடி வடிவமைக்கும் பணி அப்போது நடந்தது.

பண்டார வன்னியனின் கொடியான ஒரு கேடயத்தின் குறுக்கான இரண்டு
வாட்கள் உள்ளபடி புலிகள் கொடி இருக்கவேண்டும் என்பது ஈழப்போராளிகளின் யோசனை.

துப்பாக்கியும் 33 தோட்டாக்களும் இருக்கவேண்டும் என்பது தலைவரின் விருப்பம்.

அதென்ன 33?

1977+33=2010
அதாவது 2010 ஆம் ஆண்டு ஈழப்போராட்டம் உச்சநிலை அடைந்து ஈழம் அமையும் என்பது தலைவரின் கணிப்பு (!).

மூவேந்தர் சின்னத்தை பொறிக்குமாறு தமிழக ஆதரவாளர்கள் யோசனை கூறினார்கள்.

பாண்டியரே ஆதி தமிழ் மன்னர்கள்.
பாண்டியர்கள் தாய்மண்ணை மட்டும் ஆண்டவர்கள்.
சிங்களவரோடு நட்பாக இருந்தவர்கள்.
எனவே மீன் சின்னத்தைச் சேர்க்கவேண்டும் என சில மதுரைக்காரர்கள் கூறினர்.

சிங்களவர்கள் சேரர்களையோ பாண்டியர்களையோ வெறுப்பதில்லை.
சோழர்கள் என்றால்தான் அலறுவார்கள்.

எனவேதான் 1976ல் தலைவர் 'தமிழ்ப் புதிய புலிகள்' என்றே இயக்கம் தொடங்கியிருந்தார்.
இதற்குக் காரணம் சோழர்களைப் பற்றி இராஜரத்தினம் என்ற தமிழகத்து தமிழ்தேசியவாதி 1972வாக்கில் தலைவரிடம் எடுத்துக் கூறியதுதான்.
புலிக்கொடி வரையப்பட்ட காலம் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்று பெயர்மாற்றி ஓராண்டு ஆகியிருந்த காலம்.

  சோழர்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளை பிடித்தவர்கள்.
எனவே அவர்களின் சின்னம் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் போராட்டத்திற்கு சரியாக வராது.
அதோடு ஈழத்து காடுகளில் புலியே கிடையாது.
தமிழகக் காடுகளில்தான் உண்டு.
அதனால் நாம் புலியை சின்னமாக வைத்தால் தமிழகத்தையும் தனிநாடாக ஆக்க புலிகள் முயற்சி செய்யலாம் என்று இந்தியா சந்தேகிக்கலாம்.
இந்தியாவை நாம் பகைத்துக் கொள்வது நல்லதல்ல.

எனவே பண்டார வன்னியன் கொடியையே வைப்போம்.
புலி மட்டும் வேண்டாம் என்றார்கள் ஈழப் போராளிகள்.

கொடியை வரைந்து தர ஒரு ஓவியர் தேவைப்பட்டார்.

அப்போது சிவகாசியில் ஓவியராக இருந்தவர் நடராஜன்.
(பின்னாட்களில் மதுரை அரசாங்க மருத்துவமனையில் பார்மசிஸ்ட் ஆக இருந்தார்)
சொந்த ஊர் விருதுநகர் அருகே மல்லாங்கிணறு.

  தமிழகத் தமிழர் மாறன் பேபியையும் பிரபாகரனையும் சிவகாசி அழைத்துச்சென்று நடராஜனை சந்தித்து ஈழ விடுதலைப் படைக்கு ஒரு கொடி வரைந்து தரவேண்டும் என்றனர்.

தமிழுணர்வாளரான நடராசன் உற்சாகமாக ஒத்துக்கொண்டு மற்றவேலைகளை கிடப்பில் போட்டுவிட்டு உடனடியாக பணியை ஆரம்பித்தார்.
தலைவர் சொல்லச் சொல்ல நடராசன் புலிக்கொடியை வரைந்தார்.

கொடி வரைந்து முடித்ததும் அதை புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொஞ்சம் படச்சுருளை (நெகட்டிவ்) நடராசன் வைத்துக்கொண்டார்.

புலிக்கொடியை தம் இருப்பிடத்திற்குக் கொண்டு சென்றார் தலைவர்.
ஈழப்போராளிகள் அதைப் பார்த்தனர்.
அதில் பண்டார வன்னியன்  கொடியின் வடிவமும் இருந்தது.
துப்பாக்கி தோட்டாக்களும் இருந்தன.
புலி நடுவில் எதிர்பார்த்ததை விப் பெரியதாக இருந்தது.

ஈழப்போராளிகள் தலைவரை பார்த்தனர்.

தலைவர் புன்னகைத்தார்.

அந்த புன்னகைக்குள் அவர் வெளியே சொல்லாத ஒரு ஆழ்மன விருப்பம் ஒன்று புதைந்து இருந்தது.