Friday, 21 March 2025
பாடுவதிலும் தெலுங்கருக்கே வாய்ப்பு
- எல்.ஆர்.ஈஸ்வரி பேட்டி
மனதோடு மனோ நிகழ்ச்சி
ஜெயா டிவி
also search பாடகர்களும் வந்தேறிகளே
Sunday, 13 October 2019
2000 ஆண்டு பழமையான தமிழிசை தொடர்பான கல்வெட்டு!
சமீபத்தில் நண்பருடன் நடந்த விவாதத்தில், Youtube இல் ஒரு பரதநாட்டிய காணொளியில் கன்னட நபர் ஒருவர் போட்டிருந்த கமெண்ட் ஒன்றை காட்டி என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார்.
அந்த கன்னட நபரின் கமெண்ட்டானது,
'Just like karnataka shastriya sangeetha bharathanatya is from Deccan, after all root word bharatha or natya, neither is Dravidian terms, also it can't be preceeded without jathi or thala and neither got root in tamil.
May be tamils stole or carried it out'
என்று இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டிலிருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது அறச்சலூர் கிராமம்.
அங்கு நாகமலை என குறிப்பிடப்படும் நீண்ட மலைத்தொடரின் குன்று ஒன்றில் இசைத்தாளத்தில் அமைந்த தமிழி (தமிழ் பிராமி) கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது.
ஐந்து வரிகளில் அமைந்த இந்த கல்வெட்டு
'த தை தா தை த
தை தா தே தா தை
தா தே தை தே தா
தை தா தே தா தை
த தை தா தை த'
என்று வெட்டப்பட்டுள்ளது.
இதை மேலிருந்து கீழாகவும் இடமிருந்து வலமாகவும் படிக்கலாம்.
இந்த கல்வெட்டு கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலமாக இருக்கலாம் என்பது தொல்லியலாளர்கள் கருத்து.
இதற்கு அருகிலேயே இன்னொரு கல்வெட்டு தமிழி (தமிழ் பிராமியி)லிருந்து வட்டெழுத்தாக மாற்றமடைந்த காலத்தை சேர்ந்ததாக கருதப்படுகிறது.
அதில்
'எழுத்தும் புணருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்'
என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது "மணிவண்ணக்கனான தேவன் சாத்தன் இங்கு கீறப்பட்ட இசை எழுத்துகளை சேர்த்தமைத்தான்" என்பது இதன் பொருளாகும்.
இசை எழுத்துகள் பற்றி அடியார்க்குநல்லார் சிலப்பதிகார உரையில் “பாலை” என்னும் படவடிவ இசைக் குறிப்புகள் உண்டு என்றும் அவை வட்டப்பாலை, சதுரப்பாலை என்று இருவகைப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.
அதுபோன்ற ஒரு சதுரப்பாலை வடிவத்தை எழுத்துகளால் பொறித்திருக்கிறார் தேவன் சாத்தன் என்பவர் என திரு.துரை சுந்தரம் குறிப்பிடுகின்றார்.
அதோடுமட்டுமில்லாமல் இதனருகிலேயே இருவரின் நடன ஓவியங்கள் (Petroglyphs) கீறப்பட்டுள்ளன.
அது நாட்டியத்தை காட்டுவதற்கானது தான் என்பதை குறிப்பிட்டு சொல்லவேண்டியதில்லை.
பார்த்தாலே தெரியும்.
கிபி 300 க்கு பின் தான் கன்னடத்துக்கான எழுத்தே தோன்றியதாக கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அதுவும் பழங்கன்னடம் தமிழோடு நெருக்கமான வார்த்தைகளை கொண்டுள்ளது.
அது கிளாசிக்கல் கன்னடமாக மாறியது கிபி 8 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தான்.
ஏனெனில் அதன் பின்பு தான் கன்னடத்துக்கு இலக்கியமே படைக்கப்படுகிறது.
இந்த மாதிரி எல்லாம் எதிர்காலத்தில் சிலர் அறிவற்று கேட்பார்கள் என்று தான் அனைத்தையும் பாறைகளிலும் பானை ஓட்டிலும் எழுதி வைத்து சென்றிருக்கிறார்கள் தமிழர்கள்.
காவிரியையும் கோலாரையும் கண்ணெதிரில் சமீபத்தில் நம்பி கொடுத்து ஏமாந்தோம்.
எங்களது உரிமைகளை கூட சட்ட ரீதியாக பெற முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறோம்.
வரலாற்றிலும் பலவற்றை ஏமாந்திருக்கிறோம்.
சில வலுக்கட்டாயமாக பறிக்கப்பட்டிருக்கிறது.
அதில் இசையும் ஒன்று.
நன்றி: Vicky Kannan

Wednesday, 14 December 2016
பாடகர்களும் வந்தேறிகளே!
பாடகர்களும் வந்தேறிகளே!
ஏன், தமிழ் திரைப்பட உலகத்தில் அதிகம் தமிழ் பாடகர்கள் வருவதில்லை?
.
தமிழை தாய்மொழியாக கொண்ட பின்னணி பாடகர்கள் எத்தனை பேர்? விரல் விட்டு எண்ண கூடிய சிலரே.பெரும்பாலும் ஆந்திரா அல்லது கேரளத்தை சேர்ந்த பாடகர்களே தமிழ் திரையுலகில் பின்னணி பாடகர்களாக கோலேச்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள் / இருக்கிறார்கள். குறிப்பாக தமிழை தாய்மொழியாக கொண்ட பாடகிகள் மிக மிக குறைவு. ஏன் இந்த நிலை?
.
1937 - 1950 வரை தமிழ் திரையில் பின்னணி பாடகர்களில் பலர் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள். உதாரணம், எம்.கே.டி, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், எம்.எஸ், எம்.எல்.வி போன்றவர்கள். இவர்கள் அனைவருக்கும் இருந்த பொதுவான அம்சம் என்னவென்றால் இவர்கள் அனைவருமே கர்நாடக இசையை நன்கு அறிந்தவர்கள். 1950 ஆம் ஆண்டுக்கு பிறகு தான் பின்னணி பாடகர்கள் என்ற குரூப் உருவானது. அதற்கு முன் இருந்த காலகட்டத்தில் சொந்த குரலில் தான் அனைவரும் பாடினார்கள் ஏனென்றால் சினிமா உருவெடுத்தது 1937 ஆம் ஆண்டு தான். அதற்கு முன் நாடகங்கள் தான் பெரிய அளவில் நடைபெற்றன. நாடக கலைஞர்கள் சொந்த குரலில் தான் பாடியாக வேண்டும்.
.
1950 ஆம் ஆண்டுக்கு பிறகு பின்னணி பாடகர்களில் குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியவர் திரு.டி.எம்.எஸ் அவர்கள். டி.எம்.எஸ் சௌராஷ்ட்ரா வகுப்பை சேர்ந்தவர். அவர் சொந்த ஊர் மதுரை. ஆனால், தாய்மொழி தமிழா என்று உறுதியாக தெரியவில்லை. பெண்களில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி அவர்கள். சுசீலா, ஜானகி இருவருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள். தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர்கள் ஆதிக்கம் தான். நடுவில் ஏ. எம். ராஜா, பீ. பி. ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் பாடினாலும் திரையுலகை ஆக்கிரமித்தார்கள் என்று சொல்ல முடியாது. பீ. பி. ஸ்ரீநிவாசும் ஆந்திராவை சேர்ந்தவர்.
.
பாடகிகளில் சுசீலாவுக்கு இணையாக பேசப்பட்ட வாணி ஜெயராம் வேலூரை சேர்ந்தவர். தமிழர். ஆனால், இவர் தமிழில் பெரிதாக சோபித்தார் என்று சொல்ல முடியாது. இவர்களுக்கு பின் வந்த ஜென்சி, சித்ரா, சுஜாதா அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள். டி. எம். எஸ் அவர்கள் உச்சியில் இருந்த போதே அறிமுகமாகிய எஸ். பி. பி அவர்களும் ஆந்திராவை சேர்ந்தவர். அவருடைய சமகாலத்தவர் ஆன காந்தர்வ குரலோன் கே. ஜே. இயேசுதாஸ் கேரளாவை சேர்ந்தவர்.
.
இன்றைய பாடகர்கள் பற்றி நாம் அதிகம் பேச முடியாது. காரணம், இவர் தான் இன்று பெரிய பின்னணி பாடகர் என்று யாரையும் அடையாளம் காட்ட இயலாது. ஒரே படத்தில் பத்து பேர் பாடுகிறார்கள். இப்போதெல்லாம் நடிகர்களே பாடுகிறார்கள்.
.
ஏன், தமிழிலிருந்து அதிகம் பாடகர்கள் வரவில்லை? நல்ல தமிழ் பாடகர்கள் இல்லையா? அல்லது ஆந்திரர், கேளரர், கர்நாடகர் நிறைந்த தமிழ் திரைப்பட உலகம் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில்லையா?
நன்றி: வாசு (kulambiyagam.blogspot
ஏழாண்டுகளுக்கு முந்தைய பதிவு!!!!!

