Showing posts with label உலகத் தமிழர். Show all posts
Showing posts with label உலகத் தமிழர். Show all posts

Friday, 25 January 2019

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

பதினேழாயிரம் ஆண்டுகள் முந்தைய பழந்தமிழர் பரவல்

வரலாற்று ஆய்வாளர் H.G.Wells என்பவர் உலகில் மாந்தர் பரவல் பற்றிய தமது கருத்தை கீழ்க்கண்டவாறு முன்வைக்கிறார்,

"For thousands of years, from 15,000 to 10,000 BC., such a heliolithic Neolithic culture and its brownish possessors may have been oozing round the globe through the warmer regions of the word, drifting by canoes often across wide stretches of sea"

"கி.மு 15,000 முதல் கி.மு. 10,000 வரையான புதிய கற்கால (அல்லது கதிரவக் கற்கால) காலகட்டத்தில் பழுப்பு மேனியுடையோர் சிறிய ரக படகுகள் மூலம் கடலில் துடுப்பாட்டியே வெப்பநாட்டிலிருந்து உலகெங்கும் பரவினார்கள்"

அத்தோடு நில்லாமல் இந்த பழுப்பு மனிதர்கள் இந்தியா முதல் எகிப்து மற்றும் ஸ்பெயின் வரை தொடர்ச்சியாக வாழ்ந்ததாக பிற ஆய்வாளரும் கருதுவதாகக் கூறியுள்ளார்,

"Wilfred scaven Blunt says that huxley had a long suspected a common origin of Egyptians and Dravidians of india, perhaps along belt of brown skinned men from india to spain in very early days"

Book: The outline of History
Page: 138 & 140

(கால்டுவெல் காலத்திற்கு முந்தைய ஆய்வாளர்கள் 'தமிழிய' என்று அழைத்தனர்.
அவர் காலத்திற்கு பிறகே 'திராவிட' எனும் பொருத்தமற்ற பெயர் நம்மீது திணிக்கப்பட்டு அதுவே மேலைநாட்டார் வழக்கத்திலும் உள்ளது)

நன்றி: பழந்தமிழர் பரவிய நாடுகள் - பழ.நெடுமாறன்

Monday, 2 April 2018

தென்கொரியத் தமிழர்களின் ஆதரவு

உலகின் மறுமூலையில்...

தென்கொரியா தலைநகர் சியோல் (seoul) நகரில் வாழும் தமிழர்கள்,
தங்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் நிலைப்பாட்டை பதிவு செய்தனர்.

https://m.facebook.com/story.php?story_fbid=1192340730869578&id=100002809860739

Thursday, 3 August 2017

தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?

தமிழகத்தில் எந்த கருத்தியல் உருவானாலும் அது உடனடியாக மண்ணைக் கவ்வுவது ஏன்?

அந்த கருத்தியல் பொருளாதாரம் சார்ந்ததோ,
சாதி சார்ந்ததோ,
மதம் சார்ந்ததோ,
மொழி சார்ந்ததோ,
இனம் சார்ந்ததோ,
மாந்தநேயம் சார்ந்ததோ,
வணிகம் சார்ந்ததோ,
இறையியல் சார்ந்ததோ
எந்தவித கருத்தியலாக இருந்தாலும் குறுகிய காலத்தில் தோல்வியைத் தழுவுவதற்கு காரணம்,
நாம் இனத்திற்கு வெளியே ஹிந்தியாவில் ஆதரவு தேடுவதுதான்.

நாம் தற்போது கையிலெடுத்துள்ள தமிழ்தேசியம் பிற இனங்களின் தேசியவாத சக்திகளை சேர்த்துக்கொள்ளும் என்றால் நாம் மீண்டும் மண்ணைக்கவ்வுவது உறுதி.

நாம் ஹிந்தியாவில் வேறு எந்த இனத்திலும் ஆதரவு தேடவேண்டிய அவசியமில்லை.

ஆனால் உலகம் முழுவதும் ஆஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை வாழும் தமிழர்களிடம் ஆதரவு திரட்டவேண்டும்.
அதுவும் தாய்நிலத் தமிழர்கள் ஓரணியில் திரண்டபிறகே செய்யப்படவேண்டும்.

தமிழினத்தைக் காப்பாற்றும் முதல் பொறுப்பு தாய்நிலத் தமிழர்களுக்கே உண்டு.

அதை ஓரளவு அவர்கள் நிறைவேற்றியும் வருகிறார்கள்.

Wednesday, 14 June 2017

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

பர்மா தமிழர்களின் பரிதாப நிலை

2008 ல் 40,000 தமிழர்கள் உயிரிழந்தனர்.
1,00,000 தமிழர்கள் வீடிழந்தனர்.
நர்கீஸ் புயலில்.
மியான்மர் (பர்மா) அரசாங்கம் மருந்துக்கு கூட  தமிழர்களுக்கு உதவவில்லை.

இந்த கொடுமை தாய்நிலத் தமிழர்களுக்கு கூட தெரியாது.

தமிழருக்கான அரசு இல்லாது போனாலும்
தமிழர்மீது அக்கறை கொண்ட ஒரு ஊடகம் கூட இல்லாததே இதற்குக் காரணம்.

2012 க்குப் பிறகு இணையப் புரட்சியால் முகநூல் ஓரளவு தமிழின ஒருங்கிணைப்பிற்கு உதவுகிறது.
இது எத்தனை காலத்திற்கோ தெரியவில்லை.

நாடில்லாத இனம் நாதியற்று சாகும்.

தகவல்:
து.ரவிக்குமார்,
சட்டமன்ற உறுப்பினர்,
காட்டுமன்னார்கோயில்,
பொதுச்செயலாளர்,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
(27-05-08 அன்று முதலமைச்சருக்கு எழுதிய மடல்)

Friday, 26 May 2017

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தியை உருவாக்கிய தமிழர்கள்

காந்தி தென்னாப்பிரிக்காவில் 1893 முதல் 1914 வரை வாழ்ந்தார்.
இந்த 21 ஆண்டுகளில் அவரை மகாத்மாவாக ஆக்கியது தமிழர்களே.

ஆம். தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் குடியேற்றிய இந்தியர்களில் 90% தமிழர்களே.

அதாவது மலையாளிகளுக்கு திருவிதாங்கூர் சமஸ்தானம்,
தெலுங்கருக்கு ஐதராபாத் சமஸ்தானம்,
கன்னடருக்கு மைசூர் சமஸ்தானம் என ஓரளவு ஆட்சியுரிமை பெற்ற சமஸ்தானங்கள் இருந்தன.
மற்ற இனங்களில் பாதிப்பேராவது ஆங்கிலேயரின் நேரடி அடக்குமுறையில் இருந்து தப்பிக்க இந்த சமஸ்தானங்கள் வழிசெய்தன.

ஆனால் தமிழர்கள் ஐரோப்பியர் கால்வைத்த காலத்திலிருந்தே போராடி கடைசியில் ஆங்கிலேயரின் முழு கட்டுப்பாட்டில் நெடுங்காலம் நசுங்கினர்.

ஆங்கிலேயர்கள் தமிழர்களை உலகம் முழுக்க அடிமாடுகளாக ஓட்டிச்சென்று உழைக்கவைத்தனர்.

இந்தியாவில் பஞ்சம் ஏற்பட்டபோது வெளிநாடுகளில் நிதி திரட்டிய ஆங்கிலேயர் அந்த ரசீதுப் புத்தகத்தை ஆங்கிலத்திலும் தமிழிலுமே அச்சடித்தனர்.

அப்படி இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்.
தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்.
சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்.
மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000.
பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000.
ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000.
ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000.
ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000.
கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500.

அதாவது இலங்கைக்கு அடுத்ததாக தமிழர்கள் சென்றது தென்னாப்பிரிக்கா.

அவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட தமிழர்களை வேலைவாங்க அதிகாரிகளாக மற்ற இந்தியர்களும் ஒரு 10% அவர்களுடன் இருந்தனர்.

ஆனால் வெள்ளைக்காரர்கள் அனைவரையும் கீழ்த்தரமாகவே நடத்தினர்.
அதாவது தென்னாப்பிரிக்கா நிறவெறியின் உச்சசூட்டில் இன்றுபோல அன்றும் இருந்தது.

காந்தி வரும் முன்பே தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் அங்கே போராடத் தொடங்கியிருந்தனர்.

ஜோசப் ராயப்பன் என்ற தமிழர் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்து படித்து இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்கா திரும்பி எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்.
மக்களுக்காகப் போராடியவர்.
காந்திக்கு முன்னுதாரணம் இவரே.

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1893 இல் தென்னாப்பிரிக்கா வந்து அப்துல்லா தாதா கம்பெனியின் வழக்கை நடத்தி ஓராண்டு ஒப்பந்தம் முடிந்து திரும்பும் வேளை,
பாலசுந்தரம் என்ற தமிழன் வின்சென்ட் லாசரஸ் என்ற இளம் வழக்கறிஞருடன் காந்தியிடம் வந்தான்.
தன் வெள்ளைக்கார முதலாளி தன்னை அடித்து உதைத்த காயத்துடன் வந்து நின்றான்.
தன் உரிமைக்காக வழக்கு தொடுத்து வாதாடுமாறு காந்தியைக் கேட்டான்.

ஏற்கனவே வெள்ளையர்களிடம் பலமுறை அவமானப்பட்ட காந்தி இந்த வழக்கை நடத்த முடிவெடுத்தார்.

வழக்கை நடத்தி தனது வாதத்திறமையால் அந்த வெள்ளைக்கார முதலாளிக்கு தண்டனை வாங்கிக் கொடுத்தார் காந்தி.
வின்சென்ட் அவரிடமே உதவியாளராக சேர்ந்தார்.
தமிழை காந்திக்கு மொழிபெயர்த்து கூறியது இவரே.

மீண்டும் ஊர்திரும்பும் வேளையில் தமிழ்த் தொழிலாளர்களால் ஒரு வழியனுப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தென்னாப்பிரிக்காவில் குடியேற்றப்பட்ட இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது பற்றி பேச்சு எழுந்தது.
அதாவது கரும்பு பயிரிட இந்தியர்களை தென்னாப்பிரிக்கா அழைத்துவரும்போது ஆங்கில அரசாங்கம்,
ஐந்தாண்டு உழைத்தால் நிலம் சொந்தமாகும் என்றும்
குடியுரிமை வழங்கப்படும் என்றும் ஆசைகாட்டி அழைத்து வந்தது.
ஆனால் பிறகு குடியுரிமையை மறுத்ததோடு தலைக்கு 25 பவுன் கட்டவேண்டும் என்றும் சட்டம் போட்டது.
காந்தி இந்த பிரச்சனைக்காப் போராட தமிழர்கள் வலியுறுத்தினர்.
காந்தி மறுபடியும் ஊர் திரும்புவதை தள்ளிப்போட்டார்.

1894 ஆகஸ்ட் 22 அன்று 'நேட்டால் காங்கிரஸ்' காந்தியால் தொடங்கப்பட்டு இந்தியர்கள் ஒருங்கிணைய முதலடி எடுத்துவைத்தார்.
இதில் அப்துல்லா ஹாஜி என்பவர் தலைவர்.
துணைத் தலைவர்களாக 23 பேரில் 4 தமிழர்கள் இருந்தனர்.
(ஆனால் தொண்டர்கள் பெரும்பாலும் தமிழர்கள்தான்!)

1896 ல் ஆதரவு இந்தியா வந்த காந்தி இது தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் பிரச்சனை என்பதால் தமிழகத்தில் 14 நாட்கள் தங்கி ஆதரவு திரட்டினார்.

அப்போது இந்தியாவில் யாருக்கும் காந்தியைத் தெரியாது.
ஆனால் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது.
ஹிந்து ஜி.சுப்பிரமணிய ஐயர், சர் ராமசாமி முதலியார், பரமேஸ்வரன் பிள்ளை, பாஷ்யன் ஐயங்கார் ஆகியோர் காந்தியை வரவேற்று சென்னையில் தங்கும் வசதிகள் செய்துகொடுத்தனர்.
ராஜா சேதுபதி தந்தி அனுப்பினார்.
இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் பச்சையப்பன் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசினார்.
ஹிந்து, மெட்ராஸ் ஸ்டான்டர்ட், மெட்ராஸ் மெயில் ஆகிய தமிழக பத்திரிக்கைகளே முதன்முதலாக காந்தி பற்றி அப்போது எழுதின.

1903ல் 'இந்தியன் ஒப்பீனியன்' என்ற ஒரு பத்திரிக்கையை காந்தி தொடங்கினார்.
இதற்கு அச்சுத் தொழிலாளி சாம் என்ற கோவிந்தசாமி முழு ஒத்துழைப்பையும் வழங்கினார்.

1904ல் காந்தி டர்பன் நகரில் பீனிக்ஸ் ஆசிரம் அமைத்தார்.

1906 ல் ஆங்கில நிறவெறியின் அடுத்த அடியாக இந்தியர் அனைவரும் கட்டாய கைரேகை அடையாள அட்டை வைத்திருக்க சட்டம் போடப்பட்டது (அன்றைய ஆதார்).
இந்த சட்டத்திற்கு எதிராக காந்தி போராட முடிவெடுத்து நிதி திரட்டியபோது அம்மாக்கண்ணு, திருமதி.பக்கிரிசாமி ஆகிய இரண்டு தமிழ்ப்பெண்கள் நகைகளைக் கழற்றிக் கொடுத்தனர்.

பெரிய போராட்டம் தொடங்கியது.
ஏராளமான தமிழர்கள் சிறை சென்றனர்.
ஆங்கில அரசு அவர்களை சித்திரவதை செய்தது.
சித்திரவதையால் சிறையில் உயிர்விட்ட முதல் மாவீரனும் ஒரு தமிழனே.
ஆம். நாகப்பன் என்ற அந்த மாவீரன் தனது 17 வது வயதில் 1909 ஜூலை 6 அன்று கொடுமைகளால் உடல் நலிந்து குளிரில் போடப்பட்டு நிமோனியா குளிர்க்காய்ச்சல் வந்து இறந்தான்.
தென்னாப்பிரிக்காவில் பெரிய போராட்டம் வெடித்தது.
இங்கிலாந்து வரை இந்த பிரச்சனை எதிரொலித்தது.

இரண்டாவது மாவீரர் உரிமைக்காகப் போராடியதால் ஆங்கில அரசால் நாடுகடத்தப்பட்ட நாராயணசாமி.
நாடு நாடாக அலைக்கழிக்கப்பட்டு 16.10.1910 ல் கப்பலில் இறந்தார்.

அதன்பிறகு நடந்த ஒரு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி செல்வன், சூசை, பச்சையப்பன் என மூன்று தமிழர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணம் அடைந்த முதல் பெண்போராளி தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் நோய்வாய்ப்பட்டு வீட்டுக்கு தூக்கிவரப்பெற்று 2.2.1914 அன்று இறந்தார்.
அப்போது அவருக்கு வயது 16.

மேற்கண்ட அனைவரும் தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த தமிழர்கள் ஆவர்.

கிறித்துவ திருமணங்கள் மட்டுமே செல்லும் என்று அடுத்த அடி விழுந்தது.
இப்போது பெண்கள் போராட்டத்தில் குதித்தனர்.
ஜோகனஸ்பெர்க் இல் இருந்து நியூகேசில் வரை ஊர்வலம் சென்றனர்.
காந்தியின் மனைவி பங்கேற்ற முதல் போராட்டமான இதில் பங்குபெற்ற 16 பெண்களில் 8 பேர் தமிழர்கள்.

1914 ல் குடியுரிமை பெற போராட்டம் நடந்தபோது காந்தி உட்பட அனைவருக்கும் உணவு உறைவிடம் தந்து உபசரித்து அதனால் அரசினால் துன்புறுத்தப்பட்டவர் லாசரஸ் எனும் தமிழர்.

1916ல் கோச்ரப் கிராமத்தில் காந்தி தமது முதல் ஆசிரமத்தை நிறுவினார்.
அதில் குடியேறிய 25 பேரில் 11 பேர் தமிழர்கள்!

லைசன்ஸ் வாங்காமல் கடை நடத்தும் போராட்டம் நடத்தியபோது காந்தியின் மகனோடு சேர்த்து 6 பேர்  கைதாயினர்.
அதில் 4 பேர் தமிழர்கள்.

ஒரு ஜெர்மானிய முதலாளியிடம் பேசி வெள்ளை முதலாளிகளிடம் வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அவர் பண்ணையில் வேலை வழங்க ஏற்பாடு செய்து அதை ஒரு புகலிடமாகவே உருவாக்கிய நால்வரில் இருவர் தமிழர்.

சபர்மதி ஆசிரமத்தை அமைத்தபோது குண்டு வாங்கி இறந்த செல்வனின் மனைவி மற்றும் இரு மகன்களை தரங்கம்பாடியில் இருந்து அழைத்துவந்து தங்கவைத்தார்.

தமிழர் அல்லாதோரில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் உண்டு.
அவர் தம்பி நாயுடு.
8 முறை சிறை சென்றவர்.
அவரது குடும்பமே காந்தியின் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டது.
ஆனால் வி.ர.செட்டியார் போன்ற இவரை மிஞ்சிய தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.
இவர் 4 முறை சென்றவர்.
சொத்துகள் அனைத்தையும் இழந்தவர்.
செட்டியாரின் மகனோ 7 முறை சிறைசென்றவர்.
வீடே ஜப்தி செய்யப்பட்ட முனுசாமி,
காந்தியின் இயக்கத்தை வளர்த்ததில் முக்கிய பங்கு வகித்து (நெல்சன் மண்டேலா பின்னாட்களில் அடைக்கப்பட்ட சிறையான) டிப்குளுப் சிறையில் அடைக்கப்பட்ட துரைசாமி,
மாணவராக இருந்தபோதே போராடி நாடுகடத்தப்பட்டு சிறையில் போடப்பட்ட மாணிக்கம்பிள்ளை,
ஒவ்வொரு போராட்டத்திலும் பங்கேற்ற ஆர்.எல்.சி பிள்ளை, டி.ஏ. சுப்பிரமணிய ஆசாரி என பல தமிழர்கள் காந்தியுடன் இருந்தனர்.

அ.ராமசாமி எழுதிய 'தமிழ்நாட்டில் காந்தி' நூலில் காந்தியின் பக்கம் நின்று சிறைசென்ற 88 தமிழர்களையும்
நாடுகடத்தப்பட்ட 28 தமிழர்களையும் பட்டியலிட்டுள்ளார்.
வேறு எந்த இனமும் இதில் பாதி கூட காந்திக்காக உழைத்ததில்லை.

1919 ல் ரௌலட் சட்டத்தை எதிர்க்க முடிவெடுத்ததும்
1921 ல் மதுரையில் ஆடம்பர ஆடை துறந்து அரைநிர்வாணம் ஆனது என பல முக்கிய முடிவுகள் தமிழகத்தில் எடுக்கப்பட்டன.

மொழிவாரியாக காங்கிரஸ் கிளைகளை காந்தி பிரித்தபோது அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதும் ஒரு தமிழரே.
இதுவே மொழிவழி உரிமையின் முதல் நடவடிக்கை ஆகும்.

ஆக காந்தியை முன்னிறுத்தி பின்னால் நின்று நகர்த்தியது தமிழர்களே.

படம்: காந்தி தமிழில் எழுதிய கடிதம்

Wednesday, 26 April 2017

ஹிந்தி படிக்கச் சொல்பவனுக்கு பதில்

ஹிந்தி படிக்கச் சொல்பவனுக்கு பதில் :
தென்னாப்பிரிக்கத் தமிழர் பற்றி காந்தி எழுதியது

“No other Indians can equal the performance of the Tamils in this fight.
It therefore occurred to me that I should read Tamil with close attention, if for no other reason than to tender sincere thanks to them at least mentally.
Accordingly, the last one month was devoted mostly to the study of Tamil.
The more I learn it, the better I appreciate the beauties of this language.
It is a very fine and sweet language, and from its structure and from what I have read in it, I find that the Tamils have produced, and still produce, a large number of intelligent thoughtful and wise men.
Moreover, since India is going to be one country, some Indians outside Madras should also learn Tamil.”
-Gandhi ‘Indian opinion’ (5 june 1909)
———–
(உடனே இந்திய உணர்வில் சிலிர்த்துக்கொள்ள வேண்டாம்;
தென்னாப்பிரிக்காவில் தமிழர் அதிகம் வாழும் KwaZulu-Natal பகுதியில் தமிழ் கற்றுக்கொடுக்கப்படுவது 2014ம்ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுவிட்டது;
இதுதான் இந்திய ஒன்றியத்தின் விடுதலைக்கு உழைத்த தென்னாப்பிரிக்கத் தமிழனுக்கு கிடைத்த பரிசு;
காந்தியும் கடைந்தெடுத்த பிழைப்புவாதி;
கப்பலோட்டிய தமிழன் நடுத்தெருவுக்கு வந்தபோது தென்னாப்பிரிக்கத் தமிழர் அப்போதே 1000ரூபாய் திரட்டி காந்தியிடம் கொடுத்து அனுப்பினார்கள்;
ஆனால் காந்தி அதை அமுக்கிவிட்டார்).

(ஆகஸ்ட் 2014)

Monday, 3 April 2017

வேட்டொலி இணையம் ஏன்?

கடந்த மாதத்தில் தமிழ்தேசிய இணையமான (எனது) வேட்டொலி வலைத்தளம் பல மடங்கு முன்னேற்றம் கண்டுள்ளது.

திராவிட எதிர்ப்பு,
ஈ.வே.ராமசாமி பற்றிய உண்மைகள்,
ஹிந்திய அரசிடமிருந்து தமிழர்நாடு அடைதலுக்கான தேவைகள், திட்டங்கள் மற்றும் சிந்தனைகள்,
தமிழ் மொழி பழமை,
தமிழர் வரலாறு,
உலகத் தமிழர் பற்றிய விபரங்கள்,
தனித் தமிழர் நாட்டில் வருங்கால திட்டங்கள்,
இழந்த மண் மீட்பு,
தமிழ் தேசிய வரைபடங்கள்,
தமிழுக்காகப் போராடிய தலைவர்கள் வரலாறு,
ஈழ போராட்ட நிகழ்வுகள் மற்றும் சாதனைகள்,
வீரப்பனார் பற்றிய தகவல்கள்,
தமிழ் இசுலாமியர் மற்றும் தமிழ்ப் பார்ப்பனர் பற்றிய தகவல்கள்,
தமிழ்ச் சாதிகளின் வரலாறு மற்றும் இலக்கிய சான்றுகள்,
பழந்தமிழர் வாழ்வியல்,
தமிழர் இன்று சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள்,
தமிழக அரசியல்

என முழுக்க தமிழ்தேசியத்திற்கான வலை இது. vaettoli. blogspot

இதில் மிக முக்கியமானவை மண்மீட்பு பதிவுகள் அதற்கென தனிவலை wordpress ல் தொடங்கி அதிலும் இடுகிறேன். vaettoli. wordpress

தமிழ், தமிழர், தமிழர்நாடு தொடர்பான எந்த தகவலானாலும் கூகுளில் தேடும்போது 'வேட்டொலி' என்று சேர்த்துப்போட்டு தேடுங்கள்.

(தமிழ்தேசியம் தவிர்த்து உலக இனங்களின் போராட்டங்கள் பற்றி சில பதிவுகள் உண்டு.
மற்றபடி வேறு தகவல்கள் இது கிடைக்காது)
---------------
முகநூலில் தமிழ்தேசிய பதிவர்கள் பலர் போட்ட பதிவுகள் பிறகு அழிந்துவிடும்.

அதை சேமிக்கும் நோக்கில் மற்றவர்களின் பதிவுகள் (தோராயமாக 2500 பதிவுகள்)
'தமிழர்நாடு தகவல் திரட்டு' (fbtamildata. blogspot) என்ற வலையில் கிடைக்கும்.

வேட்டொலியில் கிடைக்கவில்லை எனில் fbtamildata என்று சேர்த்துப்போட்டு தேடுங்கள்.

நன்றி.

_ ஆதி பேரொளி

Monday, 27 February 2017

தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது

தமிழின விடுதலை விறுவிறுப்பாக இருக்காது

தமிழக மக்கள் உணவும் உறைவிடமும் தருவார்கள்!

இந்திய ஒன்றியத் தமிழர்கள் இனவழி சக்திகளை திரட்டித் தருவார்கள்!

ஈழத்தமிழர்கள் தளபதிகளைத் தருவார்கள்!

மலேசியத் தமிழர்கள் ஆயுதம் தருவார்கள்!

தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் கப்பல்கள் தருவார்கள்!

சிங்கப்பூர் தமிழர்கள் விமானம் தருவார்கள்!

அந்தமான் தமிழர்கள் மறைவிடம் தருவார்கள்!

அமெரிக்கத் தமிழர்கள் தொழில்நுட்பம் தருவார்கள்!

ஐரோப்பியத் தமிழர் உலக அரசியலை நம் பக்கம் திருப்புவார்கள்!

கரீபியன் தமிழர்கள் அமெரிக்க கண்டங்களை நம் பக்கம் திருப்புவார்கள்!

எதுவும் தரமுடியாவிட்டாலும் மலையகத் தமிழர் உயிரையே தருவார்கள்!

நாம் செய்யவேண்டியது எல்லாம் கால்மேல் கால் போட்டபடி உட்கார்ந்த இடத்திலிருந்து
ஒரே அடியில் பெரியபெரிய வல்லாதிக்க சக்திகளையெல்லாம் வீழ்த்திவிட்டு நம் விடுதலையை நாமே எடுத்து, நமக்கு நாமே மகுடம் சூட்டிக்கொள்வதுதான்.

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Tuesday, 19 July 2016

புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?

புலம்பெயர் தமிழர்களின் நாடு எது?

உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களே!
தமிழ் வம்சாவழி மக்களே!

நீங்கள் தமிழர்நாடு அமைய முடிந்த அளவு உதவி செய்து
தாய்நாடு தமிழர் சேனையின் கட்டுப்பாட்டிற்கு வந்ததும் தமிழர்நாட்டில் குடியேறிக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை..ஒருவேளை உங்களால் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாவிட்டால் பரவாயில்லை.
அதில் பல தடங்கல்கள் உள்ளன.
எனவே வருத்தமில்லை.

ஆனாலும் தமிழர் என்ற உணர்வுடன் நீங்கள் என்றைக்கும் இருக்கவேண்டும்.

நாளையே சூழ்நிலை மாறலாம்.
நீங்கள் வாழும் நாட்டிற்கும் தமிழர் நாட்டிற்கும் போர் வரலாம்.

அப்போது நீங்கள் என்னதான் இனத்தால் தமிழராய் இருந்தாலும்,
என்னதான் தமிழ் உணர்வுடன் இருந்தாலும்,
(அந்த நாடு இனரீதியாகத் தமிழரை ஒடுக்காத நிலையில்) பிறந்து வளர்ந்த நாட்டின் சேனையில்தான் சேரவேண்டும்.
சேர்ந்து தமிழர்நாட்டுக்கு எதிராக போரிடவேண்டும்.
அது இல்லாமல் தமிழர் நாட்டுக்கு ஆதரவாக மாறக்கூடாது.
உப்பிட்ட மண்ணுக்கு இரண்டகம் செய்யக்கூடாது.

இந்த பதிவு இமயம் முதல் மாலைத்தீவுகள் வரை
சிந்து சமவெளி முதல் கங்கைக் கழிமுகம் வரை
வேற்றினத்தவர் ஆக்கிரமித்திருக்கும் தமிழர் பூர்விக மண்ணில் வாழும் தமிழருக்குப் பொருந்தாது.