Showing posts with label தமிழ் வம்சாவளி. Show all posts
Showing posts with label தமிழ் வம்சாவளி. Show all posts

Saturday, 16 September 2017

முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்

முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்

நல்லவேளை குழப்பவாதிகள் ஈழத்தில் பிறந்திருந்தால்
"ஈழம் என்பதே வெள்ளாளர் தேசியம்.
பிரபாகரன் உட்பட அனைவரும் ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கோட்டை, கப்பல் எல்லாம் வைத்திருந்தார்கள்.
எனவே இவர்களை ஒழித்துவிட்டு தமிழ் வம்சாவழி சிங்கள சாதிகளான கரவ, துரவ, ,சாலகாம, வேட போன்றவர்களுடன் கைகோர்த்து தனிநாடு கேட்டால் அடுத்த நொடி ஈழம் கிடைத்துவிடும்.
நம்பமுடியவில்லையா இதோ பிடி சான்று"
என்று இந்திரா சௌந்திரராஜன் மாதிரி அமானுஷ்யமாக பத்து புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.
நண்டு சிண்டுகள், அம்புலி மாமா ரசிகர்கள், மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் பலரும் வாங்கி படித்து ஆகா ஓகோ என்று 100, 120 கடிதம் எழுதியிருப்பார்கள்.
சிங்களவர் தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பர்.
நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஒருவேளை இத்தகைய குழப்பவாதிகள் இருந்திருக்கலாம்.
அவர்கள் குரல்வளை சத்தமேயில்லாமல் புலிகளால் நெரிக்கப்பட்டு காணாமலடிக்கப் பட்டிருக்கலாம்.

யாருக்கு தெரியும்?

Wednesday, 13 September 2017

ஈழவர்

ஈழவர்

பலரும் கேரளாவில் தற்போது இருக்கும் ஈழவர் சாதி தமிழர் என்கின்றனர்.
நான் அவ்வாறு கூறமாட்டேன்.
அவர்கள் தமிழ் வம்சாவழி அவ்வளவுதான்.

நாம் விடுதலைக்காக போராடும்போது அவர்கள் மலையாளிகள் பக்கம்தான் சேர்வார்கள்.

இதை கவிமணி அவர்கள் முன்பே கூறி அறுபது ஆண்டுகள் முன்பு மண்மீட்பு போராட்டமும் இனவுணர்வும் உச்சத்தில் இருந்தபோதும் கண்கூடாகக் கண்டோம்.

கேரள மக்கட்தொகையில் 21% வரை இருக்கும் இவர்கள் தற்போது தமிழ் பேசும் பகுதியில் இருந்து தொலைவில் இருக்கிறார்கள்.
தமிழையும் அறவே மறந்துவிட்டனர்.
  அவர்களில் சிறிதளவு கூட தமிழ் தாய்நிலத்தில் வாழ்வதில்லை.
எனவே ஈழவர்கள் இனத்தால் தமிழர்தான் என்று புரியவைப்பதும் நமது இனத்திற்குள் சேர்த்துக்கொள்வதும் மிகவும் கடினம்.

  கேரளாவில் நாயர் நம்பூதிரி தவிர பிறர் தமிழினத்தவர் என்றாலும், அது நடைமுறையில் அவ்வாறு இல்லை.
தமிழை அறவே மறந்த தமிழினத்தாரில் நாடார்கள் மட்டுமே விதிவிலக்கு.
மலையாளம் பேசினாலும் தம்மை மலையாளிகளாக அவர்கள் கருதுவதில்லை.
அதற்கு காரணம் அவர்கள் பெரும்பான்மை தமிழகத்தில் இருப்பதும் தமிழகத்திற்கு அருகில் வாழ்வதுமே.

நான் சொல்வது சரிதானா என்பதை வருங்காலம் சொல்லும்.

Monday, 15 August 2016

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி -பெருஞ்சித்திரனார்

தமிழ் பரம்பரையினர் பதினேழு கோடி
-பெருஞ்சித்திரனார்

உலகில் இன்று பரந்துபட்டு வாழும் இரண்டு பழம் பேரினங்களில் தமிழினமும் ஒன்று .
மற்றொன்று சீன இனம்.

உலகில் இன்று வாழும் தமிழ்மக்களின் மொத்த மதிப்பீடு ஏறத்தாழ பதினேழு கோடியாகும் .

சீனநாட்டில் “சீ-மோ-லா”(TCHI-MO-LO) என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ நாலரைக் கோடியாகும் என்றும்

பிரன்னீசு மலை நாடு, செருமனி, பிரான்சு, போர்த்துகல், இத்தாலி ஆகிய நாடுகளில் “தாமோர்” மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ மூன்றரைக் கோடி பேராகும் என்றும்,

எகிப்தில் தொமூர் என்ற மொழி பேசும் தமிழின மக்கள் ஏறத்தாழ இரண்டரைக் கோடிப்பேர் என்றும் அறிஞர்கள் கூறுவர்.

சீ-மோ-லா, தாமோர், தொமூர் என்னும் பீயர்கள் தமிழ் என்னும் திரிபு மொழிகளாகும் .

தமிழ் என்னும் சொல் எங்ஙனம் வேத ஆரியர்களிடையே த்ரமுள் என்று திரிக்கப் பெற்றுத் தரமிளம், திரவிடம் என உருமாறி வழங்கியதோ, அங்ஙனமே அச்சொல் பல்வேறு நாடுகளில் பலவேறு வடிவங்களாகத் திரிபுற்றும், கலப்புற்றும், சிதைவுற்றும் மாறியும் வழங்குகின்றது.

கிரேத்தா தீவில் தெர்மிலர் என்னும் தீபெத்தில் திரமிலர் என்றும் தமிழர் அழைக்கப்பெறுகின்றனர்.

மற்றும் தமிழ் மொழியும் தாமிட , தமுர், தாமாலி, தமார், தமிர், துமா, தொமிட, தெமலிக், தாமுரி, தாமல் முதலிய பெயர்களாகப் பல்வேறு நாடுகளில் வழங்கப்பெறுகின்றன.

மலேசியா, ஈழம், சிங்கப்பூர், அந்தமான், பர்மா, பிசி, பிரான்சு, இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா முதலிய நாடுகளில் நகர்ப்புறங்களில் கலப்பில்லாமல் இங்கிருந்து பலவகைப் பணிகள் தொடர்பாகப் போய் வாழும் தமிழின மக்கள்தாம் தம்மைத் தமிழர்கள் என்றும், தாம் பேசும் தாய்மொழியைத் தமிழ் என்றும் சிதைவில்லாமல் கூறி வருகின்றனர்.

தமிழீழமாகிய யாழ்பாணத்தில் வாழும் தமிழினமும் தமிழும் பெயரிலும் வழக்கிலும் திரிபில்லாமல் இருப்பதற்குக் கரணியம், அங்குத் தமிழர் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே வாழ்ந்து வருவதுதான் .

மற்றபடி ஆத்திரேலியா, இந்தோனேசியா, மொரிசீயசு முதலிய நாடுகளில் கூட தமிழினப் பெயரும் தமிழ் மொழிப் பெயரும் ஓரளவு சிதைந்தும் பெருவாரியாக வழக்கிழந்தும் போய்விட்டன.

உலகில் தமிழினம் வாழும் வேறு நாடுகள் திபெத்து, பெலுச்சித்தானாம், ஆப்கானிஸ்தான், மெக்சிகோ, கானா, கம்போடியா, சயாம், மார்த்தினிக்கு, மோரித்டீவு, பிரிட்டிசு, குவைத்து, தென் அமெரிக்கா , சப்பான், உகாண்டா முதலியன.

உலகின் ஏறத்தாழ நாற்பத்து நான்கு நாடுகளில் தமிழினம் வாழ்கிறது.
அங்கெல்லாம் தமிழ்மொழி கலப்புற்றும், சிதைந்தும், திரிந்தும் வழங்கப்பெறுகின்றது.

சில நாடுகளில் தமிழினம் பழங்குடி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
சிலவிடங்களில் திருந்திய மக்களாக நாகரீகமுற்ற மக்களாக, ஆனால் பிரஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகள் பேசும் மக்களாக வாழ்கின்றனர் .

உருசிய நாட்டில் ஏறத்தாழ முப்பது இலக்கம் மக்கள் வாழ்வதாக கணக்கிடப்பெற்றுள்ளது.
அவர்கள் சி-மோ-லா என்னும் திரிந்த மொழியைப் பேசி வருகின்றனர் என்னும் கூறப்பெறுகிறது.

தென்மொழி, பெருஞ்சித்திரனார்.

Wednesday, 15 July 2015

நாடுவாரியாகத் தமிழர் எண்ணிக்கை

நாடுவாரியாகத் தமிழர் எண்ணிக்கை

1. அங்கோலா - Angola -10(மொத்த மக்கள் தொகை 18,498,000)
2. அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்- United States of America -200,000 (மொத்த மக்கள்தொகை 314,659,000)
3. அயர்லாந்து - Ireland 2,000(மொத்த மக்கள் தொகை4,515,000)
4. அர்ஜென்ரினா - Argentina100 (மொத்தமக்கள் தொகை 40,276,000)
5. அல்ஜீரியா - Algeria 100(மொத்த மக்கள்தொகை 34,895,000)
6. அன்ரிகுவா-பார்புடா -Antigua and Barbuda 1,000(மொத்த மக்கள் தொகை 88,000)
7. ஆப்கானிஸ்தான் -Afganistan 100 (மொத்தமக்கள் தொகை 28,150,000)
8. ஆர்மினியா - Armenia 300(மொத்த மக்கள்
தொகை 3,083,000)
9. ஆஸ்திரியா - Austria 1,500(மொத்த மக்கள்தொகை 8,364,000)
10. ஆஸ்திரேலியா - Australia 100,000 (மொத்த மக்கள்தொகை 21,293,000)
11. இத்தாலி - Italy 5,000 (மொத்த மக்கள்தொகை 59,870,000)
12. இந்தியா - India 81,000,000 (மொத்தமக்கள் தொகை1,198,003,000)
13. இந்தோனீசியா - Indonesia 300,000 (மொத்தமக்கள் தொகை 229,965,000)
14. இலங்கை - Sri Lanka 6,000,000 (மொத்தமக்கள் தொகை 20,238,000)
15. இஸ்ரேல் - Israel 100(மொத்த மக்கள்தொகை 7,170,000)
16. ஈராக் - Iraq 1,000 (மொத்தமக்கள்தொகை 30,747,000)
17. ஈரான் - Iran 500 (மொத்தமக்கள்தொகை 74,196,000)
18. உகண்டா - Uganda 100(மொத்த மக்கள்தொகை 32,710,000)
19. உக்ரெயின் - Ukraine 500(மொத்த மக்கள் தொகை 45,708,000)
20. உஸ்பெகிஸ்தான் -Uzbekistan 300(மொத்தமக்கள்தொகை 27,488,000)
21. எகிப்து - Egypt 1,000(மொத்த மக்கள்தொகை 82,999,000)
22. எதியோப்பியா - Ethiopia100 (மொத்த
மக்கள் தொகை 82,825,000)
23. எமிரேட்ஸ், ஐக்கிய அரபு - United ArabEmirates 200,000(மொத்த மக்கள்தொகை 4,595,000)
24. எரித்திரியா - Eritrea 100(மொத்த மக்கள்தொகை 5,073,000)
25. எல்சால்வடோர் - ElSalvador 100 (மொத்தமக்கள் தொகை 6,163,000)
26. எஸ்ரோனியா - Estonia500 (மொத்த மக்கள்தொகை 1,340,000)
27. ஐஸ்லாந்து - Iceland 25(மொத்த மக்கள்தொகை 323,010)
28. ஓமான் - Oman 50,000(மொத்த மக்கள்தொகை 2,845,000)
29. கம்பூசியா - Cambodia1,000 (மொத்தமக்கள் தொகை 14,805,000)
30. கயானா - Guyana 10,000(மொத்த மக்கள்தொகை 762,000)
31. கனடா - Canada 300,000(மொத்த மக்கள்தொகை 33,573,000)
32. கஸாக்ஸ்தான் -Kazakhstan 100 (மொத்தமக்கள் தொகை 15,637,000)
33. காட்டார் - Qatar 10,000(மொத்த மக்கள்தொகை 1,409,000)
34. கானா - Ghana 500(மொத்த மக்கள்தொகை 23,837,000)
35. கியூபா - Cuba 100(மொத்த மக்கள்தொகை 11,204,000)
36. கிர்கிஸ்தான் - Kyrgyzstan100 (மொத்தமக்கள் தொகை 5,482,000)
37. கிரிபாத்தி - Kiribati 25(மொத்த மக்கள்தொகை 98,000)
38. கிரேக்கம் - Greece10,000(மொத்த மக்கள்தொகை 11,161,000)
39. கினீயா - Guinea 1,000(மொத்த மக்கள்தொகை 10,069,000)
40. கினீயா பிஸ்ஸாவ் -Guinea-Bissau 100(மொத்த மக்கள்தொகை 1,611,000)
41. குரோசியா - Croatia 100 (மொத்த மக்கள்
தொகை 4,416,000)
42. குவாதமாலா - Guatemala100 (மொத்தமக்கள் தொகை 14,027,000)
43. குவைத் - Kuwait10,000(மொத்த மக்கள்தொகை 2,985,000)
44. கென்யா - Kenya 300(மொத்த மக்கள்தொகை 39,802,000)
45. கொங்கோ சயர் - Congo - Zaire 25 (மொத்தமக்கள் தொகை 66,020,000)
46. கொமொறொஸ் -Comoros 100 (மொத்த மக்கள்தொகை 676,000)
47. வட கொரியா - North Korea 100 (மொத்த
மக்கள் தொகை 23,906,000)
48. தென்கொரியா - SouthKorea 500 (மொத்தமக்கள் தொகை48,333,000)
49. கொலம்பியா - Colombia500 (மொத்த மக்கள்தொகை 45,660,000)
50. சமோவா - Samoa 100(மொத்த மக்கள்தொகை179,000)
51. சவூதி அரேபியா - Saudi Arabia 50,000(மொத்த மக்கள்தொகை 25,721,000)
52. சாம்பியா - Zambia 2,500(மொத்த மக்கள்தொகை 12,935,000)
53. சான் மறினோ - SanMarino 25 (மொத்தமக்கள் தொகை 31,000)
54. சிங்கப்பூர் - Singapore300,000 (மொத்தமக்கள் தொகை4,737,000)
55. சிம்பாப்வே - Zimbabwe250 (மொத்தமக்கள் தொகை 12,523,000)
56. சியாரா லியோன் - SierraLeone 1,000(மொத்தமக்கள் தொகை 5,696,000)
57. சிரியா - Syria 500 (மொத்தமக்கள்தொகை 21,906,000)
58. சிலி - Chile 100 (மொத்தமக்கள்தொகை 16,970,000)
59. சீசெல்சு - Seychelles 9,000(மொத்தமக்கள் தொகை84,000)
60. சீனா - China 5,000(மொத்தமக்கள்தொகை 1,353,311,000)
61. சுரினாம் - Suriname130,000 (மொத்தமக்கள் தொகை520,000)
62. சுலோவாக்கியா - Slovakia100 (மொத்தமக்கள் தொகை 5,406,000)
63. சுலோவேனியா - Slovenia100 (மொத்த மக்கள்தொகை 2,020,000)
64. சுவாசிலாந்து - Swaziland5,000 (மொத்தமக்கள் தொகை 1,185,000)
65. சுவிற்சர்லாந்து -Switzerland 60,000(மொத்தமக்கள் தொகை 7,568,000)
66. சுவீடன் - Sweden 12,000(மொத்த மக்கள்தொகை 9,249,000)
67. சூடான் - Sudan 100(மொத்த மக்கள்தொகை 42,272,000)
68. செக் - Czech 100 (மொத்தமக்கள்தொகை 10,369,000)
69. செர்பியா - Serbia 200(மொத்த மக்கள்தொகை 9,850,000)
70. செனகல் - Senagal 25(மொத்த மக்கள்தொகை 12,534,000)
71. சைப்ரஸ் - Cyprus 500 (மொத்த மக்கள்தொகை 871,000)
72. சோமாலியா - Somalia 25(மொத்த மக்கள்தொகை 9,133,000)
73. டென்மார்க் - Denmark15,000 (மொத்தமக்கள் தொகை 5,470,000)
74. தஜிக்கிஸ்தான் - Tajikistan100 (மொத்தமக்கள் தொகை 6,952,000)
75. தாய்லாந்து - Thailand10,000 (மொத்தமக்கள் தொகை 67,764,000)
76. தான்சானியா - Tanazania250 (மொத்தமக்கள் தொகை 43,739,000)
77. துர்க்மெனிஸ்தான் Turkmenistan 50(மொத்தமக்கள் தொகை5,110,000)
78. துருக்கி - Turkey 500(மொத்த மக்கள்
தொகை 74,816,000)
79. துனீசியா - Tunisia 100(மொத்த மக்கள்தொகை 10,272,000)
80. தென் ஆபிரிக்கா - SouthAfrica 750,000(மொத்தமக்கள் தொகை 50,110,000)
81. தைவான் - Taiwan 100(மொத்த மக்கள்தொகை 25,300,000)
82. நமீபியா - Namibia 25(மொத்த மக்கள்தொகை 2,171,000)
83. நவுறு - Nauru 100(மொத்த மக்கள்தொகை10,000)
84. நியுசிலாந்து - NewZealand 30,000(மொத்த மக்கள் தொகை 4,266,000)
85. நெதர்லாந்து - Netherlands12,000 (மொத்த
மக்கள் தொகை 16,592,000)
86. நேபாளம் - Nepal 500(மொத்த மக்கள்தொகை 29,331,000)
87. நைஜர் - Niger 25 (மொத்தமக்கள்தொகை 15,290,000)
88. நைஜீரியா - Nigeria 2,500(மொத்த மக்கள்தொகை 154,729,000)
89. நோர்வே - Norway 15,000(மொத்த மக்கள்தொகை 4,812,000)
90. பராகுவே - Paraguay 25 (மொத்த மக்கள்தொகை 6,349,000)
91. பல்கேரியா - Bulgaria 200(மொத்த மக்கள்தொகை 7,545,000)
92. பனாமா - Panama 500(மொத்த மக்கள்தொகை 3,454,000)
93. பஹ்ரெயின் - Bahrain7,000 (மொத்தமக்கள் தொகை 791,000)
94. பஹாமாஸ் - Bahamas200 (மொத்த மக்கள்தொகை 342,000)
95. பாகிஸ்தான் - Pakistan1,000 (மொத்தமக்கள் தொகை 180,808,000)
96. பாபுவா-நியுகினீயா Papua-New Guinea500 (மொத்த மக்கள் தொகை6,732,000)
97. பார்படாஸ் -Barbados1,000 (மொத்தமக்கள் தொகை 256,000)
98. பாலஸ்தீனம் - Palestine200 (மொத்தமக்கள் தொகை 3,336,000)
99. பிரான்ஸ் - France 50,000(மொத்த மக்கள்தொகை 62,343,000)
100. பிரிட்டன் - UnitedKingdom 300,000(மொத்த மக்கள் தொகை61,565,000)
101. பிரெஞ்சு கயானா -French Guyana 1,000(மொத்த மக்கள்தொகை 170,000)
102. பிரேசில் - Brazil 100(மொத்த மக்கள்தொகை 193,734,000)
103. பிலிப்பைன்ஸ் -Philippines 200 (மொத்த
மக்கள் தொகை 91,983,000)
104. பின்லாந்து - Finland3,000 (மொத்தமக்கள் தொகை 5,326,000)
105. பிஜி - Fiji 125,000 (மொத்த மக்கள்தொகை849,000)
106. புர்கினோ பாசோ -Burkina Faso 100(மொத்தமக்கள் தொகை 15,757,000)
107. புறுணை - Brunei 1,500(மொத்த மக்கள்தொகை 400,000)
108. பூடான் - Bhutan 100(மொத்த மக்கள்தொகை 697,000)
109. பெர்முடா - Bermuda 100(மொத்த மக்கள்தொகை 63,000)
110. பெரு - Peru 100 (மொத்தமக்கள்தொகை 29,165,000)
111. பெல்ஜியம் - Belgium12,000 (மொத்தமக்கள் தொகை 10,647,000)
112. பொலிவியா - Bolivia1,000 (மொத்த மக்கள்தொகை 9,863,000)
113. பொற்சுவானா -Botswana 1,000 (மொத்தமக்கள் தொகை 1,950,000)
114. போர்த்துக்கல் - Portugal500 (மொத்தமக்கள் தொகை 10,707,000)
115. போலாந்து - Poland 500(மொத்த மக்கள்தொகை 38,074,000)
116. மசிடோனியா Macedonia 100 (மொத்தமக்கள் தொகை 2,042,000)
117. மலாவி - Malawi 500 (மொத்த மக்கள்தொகை 15,263,000)
118. மலேசியா - Malaysia2,250,000 (மொத்தமக்கள் தொகை 27,468,000)
119. மால்ரா - Malta 100 (மொத்த மக்கள்தொகை 409,000)
120. மாலி - Mali 250 (மொத்தமக்கள்தொகை 13,010,000)
121. மாலை தீவு - Maldives2,000 (மொத்தமக்கள் தொகை 309,000)
122. மியான்மா - Myanmar600,000 (மொத்தமக்கள் தொகை 50,020,000)
123. மெக்சிகோ - Mexico3,000 (மொத்த மக்கள்தொகை 109,610,000)
124. மொல்டோவியா -Moldovia 25 (மொத்தமக்கள் தொகை 3,604,000)
125. மொறிசியசு - Mauritius126,000 (மொத்தமக்கள் தொகை 1,288,000)
126. மொறித்தானியா -Mauritania 100 (மொத்தமக்கள் தொகை 3,291,000)
127. மொறொக்கோ - Morocco100 (மொத்த மக்கள்தொகை 31,993,000)
128. மொனாகோ - Monaco 50(மொத்த மக்கள்தொகை 33,000)
129. யப்பான் - Japan 200(மொத்த மக்கள்தொகை 127,156,000)
130. யேமன் - Yemen 500(மொத்த மக்கள்தொகை 23,580,000)
131. ரஷ்யா - Russia 5,000(மொத்த மக்கள்தொகை 140,874,000)
132. ரினிடாட்-ரொபாகோ -Trinidad and Tobago100,000 (மொத்த மக்கள் தொகை1,339,000)
133. லக்செம்போர்க் -Luxembourg 1,000(மொத்த மக்கள் தொகை 486,000)
134. லற்வியா - Latvia 500(மொத்த மக்கள்தொகை 2,249,000)
135. லாவோஸ் - Lao 1,000(மொத்த மக்கள்தொகை 6,320,000)
136. லிதுவானியா - Lithuania100 (மொத்தமக்கள்தொகை 3,287,000)
137. லிபியா - Libya 500(மொத்த மக்கள்தொகை 6,420,000)
138. லெசொத்தோ - Lesotho500 (மொத்த மக்கள்தொகை 2,067,000)
139. லெபனன் - Lebanon5,000 (மொத்த மக்கள்தொகை 4,224,000)
140. லைபீரியா - Liberia 500(மொத்த மக்கள்தொகை 3,955,000)
141. வங்காள தேசம் -Bangladesh 1,000 (மொத்தமக்கள் தொகை162,221,000)
142. வத்திக்கான் நகர் - VaticanCity 20(மொத்த மக்கள் தொகை 1,000)
143. வியற்னாம் - Viet Nam3,000 (மொத்தமக்கள் தொகை 88,069,000)
144. ஜமைக்கா - Jamaica30,000 (மொத்த மக்கள்
தொகை 2,719,000)
145. ஜிபுற்றி - Djibouti 1,000(மொத்தமக்கள் தொகை 864,000)
146. ஜெர்மனி - Germany40,000(மொத்தமக்கள் தொகை 82,167,000)
147. ஜோர்டான் - Jordan 4,000(மொத்த மக்கள்தொகை 6,316,000)
148. ஜோர்ஜியா - Georgia 25(மொத்த மக்கள்தொகை 4,260,000)
149. ஸ்பெயின் - Spain 500(மொத்த மக்கள்தொகை 44,940,000)

மொத்தம் 93,805,905
(ஒன்பது கோடியே முப்பத்து எட்டு லட்சத்து ஐந்து ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐந்து)
நன்றி: http://www.muthukamalam.com/essay/general/p26.html

Monday, 13 July 2015

தொழிலாளித் தமிழன்

தொழிலாளித் தமிழன்

*****************

ஹிந்தியாவில் வேறு எந்த இனத்தையும் விட ஆங்கிலேயர்களால் அடிமைகளாக ஆடுமாடுகள் போல ஓட்டிச் செல்லப்பட்டு பல்வேறு நாடுகளில் குடிவைக்கப்பட்டது நம் தமிழினமே.

ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் கன்னடவருக்கு மைசூர் அரசும், மலையாளிகளுக்கு திருவாங்கூர் அரசும், தெலுங்கருக்கு ஐதராபாத்தும் இருந்தன.

ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியில் முற்றுமுழுதாக நெடுநாட்களுக்கு சிக்கியிருந்தது தமிழர்களே.

பஞ்சம் வந்தபோது விளைந்த கொஞ்சம் நெல்லையும் ஆங்கிலேய அரசு விழுங்கிக்கொண்டு  மக்களை கால் வயிற்றுக் கஞ்சிக்கு கடல்கடந்து அழைத்துச்சென்று காட்டில் கொண்டுவிட்டது.

மலேசியா, சிங்கப்பூர், பர்மா, இலங்கை மலையகம், மொரீசியஸ், அந்தமான், பிஜி, ரீயூனியன், மார்த்தினிக், ட்ரினிடாட் டொபகோ, சூரினாம், கயானா,  தென்னாப்பிரிக்கா என்று லட்சக்கணக்கானத் தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டு காட்டைத் திருத்தி தோட்டங்களாக்கும் தொழிலாளர்களாக, வாழ்நாள் கூலிகளாக ஆக்கப்பட்டனர்.

அன்றைய மலேயா (மலேசியா,சிங்கப்பூர்) பகுதிக்குச் சென்ற தமிழர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 9லட்சம்.

இலங்கை மலையகம் சென்றோர் கிட்டத்தட்ட 6லட்சம்

தென்னாப்பிரிக்கா போனோர் கிட்டத்தட்ட 3லட்சம்

சூரினாம் கிட்டத்தட்ட 60,000 பேர் சென்றார்கள்

மொரீசியசு சென்றோர் கிட்டத்தட்ட 60,000

பிஜி தீவு சென்றோர் கிட்டத்தட்ட 50,000

ட்ரிடாட் டொபகோ சென்றோர் கிட்டத்தட்ட 40,000

ரீயூனியன் தீவு சென்றோர் கிட்டத்தட்ட 20,000

ஜமைக்கா சென்றோர் கிட்டத்தட்ட 15,000

கயானா சென்றோர் கிட்டத்தட்ட 5,500

அதாவது ஏறத்தாழ 20லட்சம் பேர் தாய்நிலத்தை விட்டு வெளியேறினார்கள்

வெளியேறினார்கள் என்பது முக்கியமில்லை
இவர்களின் வாரிசுகள் கிட்டத்தட்ட 50லட்சம் பேர் அதே அடிமட்ட தொழிலாளர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

இது ஆங்கிலேயர் காலத்தில் பிழைக்கப்போன தமிழ் தொழிலாளர் எண்ணிக்கை மட்டும்தான்.

1947க்குப் பிறகு ஹிந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பிழைக்கப்போன தமிழர் எண்ணிக்கை இன்று 80லட்சம்

80-90கள் வரை அரேபிய நாடுகளுக்குப் பிழைக்கப்போனோர் 4லட்சம் பேருக்கு மேல்

தற்போது படித்த இளைஞர்களும் வெளியேறுவது தொடங்கிவிட்டது.
படித்துவிட்டு
ஐரோப்பிய நாடுகளுக்கு உழைத்துகொடுக்கப் போன பட்டதாரிகளின் அதாவது நாகரீக அடிமைகளின் எண்ணிக்கை கணக்கிலடங்காது கூடிக்கொண்டே போகிறது.

இதையெல்லாம் தாண்டி  ஈழ அகதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 10லட்சத்துக்கும் மேல்

இவர்கள் அத்தனை பேரும் உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்கள் என்றுதான் கொள்ளவேண்டும்

இது போக தமிழகத்திலேயே பன்னாட்டு தொழிற்சாலைகளில் நிரந்தரமற்ற வேலைகளில் குறைந்த ஊதியத்துக்கு உழைத்துக் கொட்டுவோரையும் சேர்த்தால்
இன்றைய தமிழ் இளைஞர்களில் 95% உழைத்துப் பிழைக்கும் தொழிலாளர்களே.

வேலைகிடைக்காதோரைக் கணக்கில் எடுத்தால்....

வேண்டாம் முடிவே இல்லாமல் நீளும்.

ஆக இன்று தமிழினமே தொழிலாளி இனம் என்றுதான் சொல்லவேண்டும்.

தொழிலாளர் போராட்டங்களை முன்னெடுத்த தமிழரையும் நாம் நினைத்துப்பார்க்கவேண்டும்.

1949ல் 'மலேயா கணபதி' 24 வயதில் ஆங்கிலேயரால் தூக்கில் போடப்பட்டார்.
அவரது தோழர் 'மலேயா வீரசேனன்' 20 வயதிற்குள் ஆங்கிலேயரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

1950ல் இவ்விருவரது தோழர் வாட்டக்குடி இரணியன் சிங்கப்பூரில் இருந்து தப்பி தமிழகம் வந்து இங்கே தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டார்
இவரது தோழர்களான ஜாம்பவனோடே சிவராமனும்
ஆம்பலாப்பட்டு ஆறுமுகமும் சுட்டுக்கொல்லப்பட்டனார்.

தென்னாப்பிரிக்காவில் பிறந்த  'தில்லையாடி வள்ளியம்மை' 16வயதில் போராடி இறந்தார்.

மொரீசியசில் அஞ்சலை என்ற பெண் தொழிலாளர்களைத் திரட்டி போராட்டங்களை முன்னெடுத்தார்.

1977ல் சிவணு லட்சுமணன் சிங்கள அரசால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதுபோக தாமிரபரணி படுகொலை, கீழவெண்மணி படுகொலை, சயாம் மரண ரயில் 50,000  தமிழர் படுகொலை போன்ற வேற்றினத்தார் செய்த தொழிலாளர் படுகொலைகளும் வரலாற்றில் உள்ளன.

தமிழ்மண்ணில் தொழிலாளர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் 'முதலாளியும் தமிழன் தொழிலாளியும் தமிழன்' என்று சொல்ல தமிழ்த்தேசியவாதிகள் ஒன்றும் முட்டாள்கள் கிடையாது.
தமிழர் நாட்டில் அத்தனை பிரச்சனைகளும் அதற்குரிய வழியில் தீர்க்கப்படும்.

தமிழருக்கு ஒரு நாடு இருந்திருந்தால் உலகத் தமிழர்களுக்கு கைகொடுத்திருக்கலாம்

மலேயா கணபதி தூக்குக்குப் காத்திருந்தபோது ஹிந்தியாவுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அது வாயை திறக்கவில்லை.

ரிசானா நபீக் செய்யாத தவறுக்கு தலைசீவப்பட்டு கொல்லப்பட்டாளே
நம்மால் என்ன செய்யமுடிந்தது?

மலையகத் தமிழர் வெளியேறியபோது அந்தமானில் குடிவைக்க ஹிந்தியா அனுமதி மறுக்க, அவர்கள் நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.

பொறுப்பான ஒரு அரசு இருந்திருந்தால் இத்தனை தமிழர்கள் வெளியேறவேண்டி இருந்திருக்காது.
தாய்நிலத்தில் சரியான வாய்ப்புகள் கிடைத்து இங்கேயே வாழ வழிசெய்திருக்கலாம்.

வேற்றினத்தாரின் நேரடி மற்றும் மறைமுக சுரண்டலுக்கு ஆளாகியிருக்கும் தமிழினம் இனியும் சகித்துக் கொண்டிருக்கக்கூடாது.

எமக்கான ஒரு படையை அமைத்து இழந்த தாய்மண்ணை மீட்டு அதில் ஒரு மக்களாட்சி அரசை அமைத்து தாய்நில வளங்களை சரியாகப் பயன்படுத்தி எந்தக் குறையுமில்லாமல் நமது சந்ததிகள் வாழச்செய்ய நம்மால் முடியும்.

இன்றைய தமிழினத்துக்கு ,
கடினமாக உழைக்கவேண்டிய அவசியமில்லாமல் சுகமாக வாழப்போகும் வருங்கால தமிழர்நாட்டு குடிமகன்களின் சார்பாக
'உழைப்பாளர் நாள் வாழ்த்துக்கள்'
_____________________________
மேலும்
https://m.facebook.com/photo.php?fbid=393369544100038&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

Thursday, 10 July 2014

கரீபியன் தமிழர்


கிறித்தவத் தேவாலயம் போன்ற கட்டிடத்தில் ஏசு சிலை இல்லை. ஆனால், வேறு ஏதோ தெய்வங்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
அவை மாரியம்மனையும் அய்யனாரையும் ஒத்திருக்கிறது.
அங்கே பூசாரி தன்னை ஒரு இசுலாமியர் என்கிறார் நோய்வாய்ப்பட்டு வந்த மக்களுக்கு வேப்பிலை அடித்து, சாமியாடி, மருந்து தருகிறார்.

யார் இவர்கள்? பார்ப்பதற்கு தமிழர்கள் போலவே இவர்கள் முகம் இருக்கிறது; ஆனால் உடையோ வேறுமாதிரி இருக்கிறது.
இவர்கள் பெயர்களோ தமிழோடு ஒத்துப்போகிறது; ஆனால் பேசும் மொழி வேறு எதுவோ.
இவர்கள் சமைக்கும் உணவுவகைகளின் பெயரும் சுவையும் தமிழ்மண்ணோடு ஒத்துப்போகிறது; இவர்களின் இருப்பிடமோ தமிழ்மண்ணிலிருந்து பாதி உலகம் கடந்து இருக்கிறது.
கிறித்தவப் பெயர்களோ இசுலாமியப் பெயர்களோ வைத்துள்ளனர்; ஆனால் திருமணமுறை தமிழ்முறைப்படி உள்ளது.
நீங்கள் யார் என்று கேட்டால் 'தமிழர்' என்கின்றனர்.
வாழ்வதோ வேற்றின மக்களுக்கு மத்தியில் எங்கோ ஒரு பட்டியூரில்(குக்கிராமம்).

மிகவும் பின்தங்கிய மக்கள், தங்கள் வாழ்க்கையை அடையாளத்தைத் தொலைத்துவிட்ட மக்கள்.

நீங்கள் இந்தியர்கள் என்று அங்கே இயங்கும் இந்திய அரசு அமைப்புகள் இந்தியைக் கற்றுக்கொடுத்து இந்து சமயத்தை அந்த மக்களிடம் பரப்புகின்றன.

விடுமுறை நாட்களில் ஆடு,கோழி பலியிட்டு, கும்மிப்பாட்டு பாடி, விருந்துண்ணும்போது அவர்கள் தாங்கள் தமிழகத்தில் வாழ்ந்த கண்ட அனுபவித்த விடயங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.

எந்த திசையில் இருக்கிறதென்றே தெரியாது ஆனாலும் அவர்கள் தமிழகத்தின் நினைவாகவே இருக்கின்றனர்.

(நன்றி: https://m.facebook.com/notes/தமிழ்-tamil/தமிழர்-வாழும்-நாடுகள்-கரீபிய-நாடுகளில்-தமிழர்-tamils-in-caribbean-தொகுப்பு-ப-திர/10150279415679710/?p=10

http://world4tamil.blogspot.in/2009/06/blog-post_2557.html?m=1

http://www.muthukamalam.com/essay/general/p26.html )