யாரெல்லாம் திராவிடர்?
எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.
சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?
ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,
"தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.
சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்;
இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.
-- ஈ.வே.ரா (குடிஅரசு, 03.06.1944)
அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்கவேண்டும்.
ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.
அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார்வந்தாலும் தமது நாட்டை பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் மற்றவர் என்று வரும்போது அவரவர் விருப்பம்.
என்னவொரு அநியாயம்...?
Friday, 6 July 2018
யாரெல்லாம் திராவிடர்? -ஈ.வே.ரா விளக்கம்
Saturday, 16 September 2017
முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்
முகநூல் இந்திரா சௌந்திரராஜன்கள்
நல்லவேளை குழப்பவாதிகள் ஈழத்தில் பிறந்திருந்தால்
"ஈழம் என்பதே வெள்ளாளர் தேசியம்.
பிரபாகரன் உட்பட அனைவரும் ரகசிய அமைப்பை சேர்ந்தவர்கள்.
உலகம் முழுவதும் பணக்காரர்களாக இருக்கிறார்கள்.
கோட்டை, கப்பல் எல்லாம் வைத்திருந்தார்கள்.
எனவே இவர்களை ஒழித்துவிட்டு தமிழ் வம்சாவழி சிங்கள சாதிகளான கரவ, துரவ, ,சாலகாம, வேட போன்றவர்களுடன் கைகோர்த்து தனிநாடு கேட்டால் அடுத்த நொடி ஈழம் கிடைத்துவிடும்.
நம்பமுடியவில்லையா இதோ பிடி சான்று"
என்று இந்திரா சௌந்திரராஜன் மாதிரி அமானுஷ்யமாக பத்து புத்தகங்கள் போட்டிருப்பார்கள்.
நண்டு சிண்டுகள், அம்புலி மாமா ரசிகர்கள், மூடநம்பிக்கையில் ஊறிப்போனவர்கள் பலரும் வாங்கி படித்து ஆகா ஓகோ என்று 100, 120 கடிதம் எழுதியிருப்பார்கள்.
சிங்களவர் தலையில் தூக்கிவைத்து ஆடியிருப்பர்.
நல்லவேளையாக அப்படி எதுவும் நடக்கவில்லை.
ஒருவேளை இத்தகைய குழப்பவாதிகள் இருந்திருக்கலாம்.
அவர்கள் குரல்வளை சத்தமேயில்லாமல் புலிகளால் நெரிக்கப்பட்டு காணாமலடிக்கப் பட்டிருக்கலாம்.
யாருக்கு தெரியும்?