யாரெல்லாம் திராவிடர்?
எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.
சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?
ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,
"தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.
சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்;
இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.
-- ஈ.வே.ரா (குடிஅரசு, 03.06.1944)
அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்கவேண்டும்.
ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.
அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார்வந்தாலும் தமது நாட்டை பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் மற்றவர் என்று வரும்போது அவரவர் விருப்பம்.
என்னவொரு அநியாயம்...?
Friday, 6 July 2018
யாரெல்லாம் திராவிடர்? -ஈ.வே.ரா விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment