Saturday 28 July 2018

எது வீண்?

எது வீண்?

ஆறு கடலில் கலக்காமல் அணை கட்டித் தடுத்து பயன்படுத்த வேண்டும் என்று கூறும் தமிழர்,
கன்னடர் போல முட்டாள் ஆவார்.

நதிகளை இணைக்கவேண்டும் என்பார் ஹிந்தியர் போல அடிமுட்டாள் ஆவார்.

கடலில் ஆறு கலக்காவிட்டால் நமக்கு மூச்சு கிடைக்காது.

ஆம். விளையாட்டில்லை.
இதுதான் உண்மை.

காற்றில் ஆக்சிஜனை நிரப்புவது மரங்கள் மட்டுமல்ல.
நதி கடலில் கலக்கும் இடத்தில் வாழும் நுண்ணுயிரிகளும் அதில் பெரும்பங்கு வகிக்கின்றன.

நாம் விடும் மூச்சில் மூன்றில் ஒன்று அந்த நுண்ணுயிரிகள் போட்ட உயிர்வளி பிச்சை.

அதோடு கடலில் நன்னீர் கலக்காவிட்டால் கடலின் உப்புத்தன்மை அதிகமாகும்.
அது ஆவியாவது குறைந்து மழைப்பொழிவு குறையும்.

கடலுக்கு தண்ணீர் வரவில்லை என்றால் அந்த வெற்றிடத்தை நிரப்ப கடல் நீர் நிலத்தினுள் புகும்.

இப்படி புகுந்து நமது நெற்களஞ்சியம் பாலைவனமாக ஆக வேண்டும் என்பதற்காகவே அணை கட்டுதல், நதிநீர் இணைப்பு போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.

கரிகாலன் அசை கட்டினான் என்றால் அது கரையை பலப்படுத்தி வெள்ளத்தை கட்டுக்குள் வைக்கவே!

கடலின் தாகத்தைத் தணிக்காவிட்டால் கடல் நம்மைக் கொன்றுவிடும்.

இயற்கைப் பொறுத்து நாம் வாழவேண்டும்.

நமக்காக இயற்கையை மாற்றக்கூடாது.

கன்னடனின் கொட்டத்தை அடக்கி மழை நீரைச் சேமிப்பதே தீர்வு.

No comments:

Post a Comment