Tuesday 10 July 2018

ஈ.வே.ராவும் முத்துப் பல்லக்கும்

ஈ.வே.ராவும் முத்துப் பல்லக்கும்

13.08.1972 அன்று ஈ.வே.ரா உயிரோடு இருக்கும்போதே தமிழக முதல்வர் கருணாநிதி கையினால் தனக்குத்தானே சிலை திறந்த விழாவில் நடந்தவை...

//13.8.1972இல் கடலூர் மஞ்சை நகர் மைதானத்தில் தந்தை பெரியார் திருவருவச் சிலை திறப்பு விழா மேலவைத் தலைவர் சி.பி. சிற்றரசு அவர்கள் தலைமையில் நடந்தது. தமிழக முதல்வர் மு. கருணாநிதி அவர்கள் அய்யா சிலையைத் திறந்து வைத்தார்கள்//

//மாலை 6.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட **முத்துப் பல்லக்கில்** திருப்பாதிரிப்புலியூரிலிருந்து இலட்சக் கணக்கான தமிழ் மறவர்கள் சூழ அய்யா அவர்கள், மேளவாத்தியம் கொட்டு முழக்கத்துடன் முடி சூடாமன்னராகப் பவனி வந்தார்கள்//

-----------------------

ஈ.வே.ரா வுக்கு நடக்க முடியாது அதனால் கார் வேண்டும் என்று பொதுமக்களிடம் நிதி திரட்டி ஏ.சி பொருத்தப்பட்ட வேன் வாங்கி அதை அவரிடம் ஒப்படைக்கும் விழாவில் நடந்தவை

//19-8-73 தஞ்சை மாநகரில் கோலாகலமாகக் குதூகலப் பெருநாள் திருநாள்!

ஆம் அது என்ன விழா? தந்தை பெரியாருக்கு பிரச்சார பயணம் மேற்கொள்ள வேன் வழங்கும் விழா.
பெரியதோர் ஊர்வலத்தில், யானை முன் செல்ல கருஞ்சட்டையினர் அணிவகுத்து முழக்கமிட்டுப் பின்தொடர,

அழகு ஒளி உமிழத் தஞ்சையின் தனிச் சிறப்புப் புகழ் வாய்ந்த **முத்துப் பல்லக்கில்** பெரியாரும், கி.வீரமணியும் அமர்ந்து வந்த பவனி,

பின்னர் திலகர் திடலில் மக்கள் வெள்ளத்தினிடையே மகத்தான பொதுக்கூட்டம்.

அமைச்சர் எஸ் இராமச்சந்திரன் கூட்டத் தலைமை ஏற்றார்.
தஞ்சை மாவட்டக் கூட்டமெனினும், மாநிலச் சிறப்புப் பொருந்தியதாகையால், கி.வீரமணி வரவேற்கட்டும் எனத் தோலி சுப்ரமணியம் உரைத்திட, வரவேற்புரை நிகழ்த்தினார் விடுதலை ஆசிரியரும், கார் நிதி அமைப்பாளருமான கி.வீரமணி.

அவர் கேட்டதோ ஒரு லட்சம், ஆனால் திரண்டதோ ஒன்றரை லட்சத்திற்கும் மேல் மீதியில் 50 ஆயிரம் ரூபாய் பெரியாரிடம் நிதியாக வழங்கப்பட்டது.
10 ஆயிரம் பெரியார் அறக்கட்டளைச் சொற்பொழிவுக்காகத் தரப்பட்டது.

பெரியார்பால் கரிசனமிக்க மருத்துவ நிபுணர்களான டாக்டர்கள் கே. ராமச்சந்திரா. பட். ஜான்சன், ஆகியோருக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

(ஆட்டோமாட்டிக்) தானியங்கிக் கடிகாரம் ஒன்றை விழாக்குழு சார்பில் அமைச்சர் மன்னை நாராயணசாமி பெரியாரிடம் தந்தார்.

ஒரு டேப் ரிக்கார்டர், தங்கத்தாலான கார் சாவி ஆகியவற்றைப் பெரியாரிடம் தந்து, பொன்னாடையும் போர்த்தினார் முதல்வர் கலைஞர்.

ஏர்கண்டிஷன் செய்யப்பட்டு, வேனிலிருந்தவாறே பேசுவதற்கு ஏற்ற முறையில் இந்த வேனை அமைத்தவர்கள் எல்.ஜி.பாலகிருஷ்ணன் கம்பெனியார்.

விழாவில் கி.வீரமணிக்கு மோதிரமும், ஓவியர் கருணாவுக்கு நல்லாடையும் பெரியாரால் அணிவிக்கப்பட்டன.//

நூல்: தமிழர் தலைவர்
ஆசிரியர்: கே.பி.நீலமணி
பக்கம்: 813

இச்செய்தி கி.வீரமணி அவர்களின் இணையதளமான kveeramani.காம் இலும் உள்ளது.
அதன் சுட்டி http://kveeramani. com/dravidar-ta. php
-----------------------------

வீரமணி இதனை "உண்மை" இதழில் நினைவுகூர்ந்தும் உள்ளார்.

//சிம்மாசனம் போல் அலங்கரிக்கப்பட்ட ஒரு முத்துப் பல்லக்கில் தமிழர் தலைவர் தந்தை பெரியார் அவர்களும், அய்யா அவர்களுடன் நானும் அமர்ந்து வந்தோம்.
வழி நெடுக மலர்மாலைகள் அளித்து, தாய்மார்களும், தமிழ் மக்களும் கைகூப்பி, அய்யாவைக் கண்டு உவகை பூத்த காட்சி மெய்சிலிர்க்கக்கூடியதாக இருந்தது.//

சுட்டி: http://www.unmaionline.com/index.php/2011-magazine/17-apr-16-30/184-அய்யாவின்-அடிச்சுவட்டில்.html
---------------------

தஞ்சாவூர் முத்துப் பல்லக்கு அந்நாட்களில் மிகவும் பிரபலமானதும் ஆடம்பரமானதும் ஆகத் திகழ்ந்தது.

தெய்வச்சிலைகளையும் அர்ச்சகர்களையும் மட்டுமே முத்துப் பல்லக்கில் சுமக்கும் நடைமுறை இருந்தது.

இதையெல்லாம் மறைத்துவிட்டு கட்டுக்கதை ஒன்று எழுதி பரப்பிவிட்டுள்ளனர் வந்தேறிகள்.
அதாவது காஞ்சியில் சங்கராச்சாரி பல்லக்கில் போனாராம் அப்போது "துறவிக்கு ஏன் பல்லக்கு சுகம்? மனிதனை மனிதன் சுமக்கலாமா?" என்று ஒரு குரல் கேட்டதாம்.
பார்த்தால் அது பெரியாராம்.
உடனே பல்லக்கையே துறந்துவிட்டு அன்றுமுதல் நடந்து செல்வதை பின்பற்றினாராம் சங்கராச்சாரியார்.
இது முழுக்க முழுக்க பொய்.

ஈ.வே.ரா இறப்பதற்கு சில மாதங்கள் முன்புவரைகூட பல்லக்கு சவாரி செய்துள்ளார் என்பதே உண்மை.

No comments:

Post a Comment