நெல்சன் மண்டேலா சாதித்தது என்ன?
மொபைல் கேமரா போராளிகள் இன்று மட்டும் இல்லை அன்றே உண்டு.
அதாவது நமது பிரச்சனைக்காக நாம் போராடாமல் ஊரையே கூவி அழைத்துவிட்டால் நியாயம் கிடைத்துவிடும் என்று நம்புபவர்கள்.
போராடுவதை விட கூவுவது எளிதல்லவா?
சல்லிக்கட்டு போராட்டம் நடந்தாலும் நடந்தது,
இன்று ஒரு கிராமத்தில் ஒரு குழியை மூடவேண்டும் என்றாலும் அந்த ஊர் இளைஞன் ஒரு வீடியோ எடுத்து "ஜல்லிக்கட்டு போராட்டம் போல நடத்தவேண்டும்" என்று பேசி சமூகவலையில் பரப்பிவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து லைக்குகளை எண்ணிக்கொண்டு குழியை மூட உலகமே திரண்டுவரும் என்று எதிர்பார்த்தபடி இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
உலகத்தின் கவனத்திற்கு நமது பிரச்சனையைக் கொண்டு சென்றால் அது தீர்ந்துவிடும் என்றால்,
நெல்சன் மண்டேலா பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கருக்கே கிடைத்துவிட்டதா?
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கம் குறைந்துவிட்டதா?
பதில் "சிறிதும் இல்லை"
இதேபோல யாசர் அராபத் பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் பாலஸ்தீனம் அமைந்துவிட்டதா?
தலாய்லாமா பற்றி உலகத்திற்கே தெரியும் திபெத் விடுதலை ஆனதா?
இதுபோல உலகத்தின் பரந்துவிரிந்த கண்களின் முன்னிலையிலேயே பல அநியாயங்களும் அடக்குமுறைகளும் கொடூரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
2009 தமிழினப் படுகொலை அப்படிதான் நடந்தது.
இன்றும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு சர்வதேசம் நீதி வழங்கும் என்று திரிபவர்கள் உண்டு.
நாம் ஏன் அகிம்சையை முதலில் தேர்ந்தெடுக்கிறோம்?
ஏனெனில் நாம் அறவழியில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்.
அதிகார வர்க்கமும் அதையே விரும்புகிறது.
அப்போதுதான் அவர்கள் அடிக்க, நாம் அடி "வாங்குவதை" பெருமையாக நினைப்போம்.
நாம் இப்படி அடிவாங்கிக்கொண்டே போனால் நமக்கும் ஒரு தலாய்லாமா கிடைப்பார்.
நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.
ஆனால் தீர்வுதான் கிடைக்காது.
சல்லிக்கட்டு போராட்டம் பாதி வெற்றிதான் பெற்றது.
ஸ்டெர்லைட் போராட்டமும் நிரந்தர வெற்றி பெறவில்லை.
இந்த வெற்றிகளின் முன்பு அதற்கான இழப்புகளைக் கணக்கிட்டால் இதற்கு சட்டத்தை நாமே கையிலெடுத்திருக்கலாம் என்று தோன்றும்.
காவிரி பிரச்சனையை நாம் 150 ஆண்டுகளாக அறவழியில்தான் கையாள்கிறோம்.
அது ஐபிஎல்லில் செருப்பு வீசியதில் முடிந்தது. அவ்வளவுதான்.
ஆனால் நமது வீரப்பனாரும் அவரது சொற்ப ஆயுத பலமும் குறுகிய காலத்திற்கு பெற்றுத்தந்த நியாயத்தை ஜனநாயகப் போராளிகளும் இத்தனை பெரிய ஜனநாயகமும் உயர் உச்ச நீதிமன்றங்களும் பெற்றுத்தர முடிந்ததா?
இதே நமது தமிழரசனார் பொன்பரப்பி வங்கியைக் கொள்ளையடிக்கும் திட்டம் உளவுத்துறைக்குத் தெரியாமலிருந்து அவர் அந்த கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி அதன்மூலம் வெடிமருந்து தயாரித்து அணையை உடைத்திருந்தால் காவிரிப் பிரச்சனை உடனடி முடிவுக்கு வந்திருக்குமா இல்லையா?
நமது சங்கரலிங்கனாரும் திலீபனும் அன்னை பூபதியும் நடத்திய அறவழி போராட்டம் எதில் முடிந்தது?
எட்டுவழிச்சாலை நில கையகப்படுத்தல் பணி 85% முடிந்துவிட்டது என்கிறார்கள்.
நமது எதிர்வினை என்ன?
பெண்கள் கதறி அழுதபடி 4 படம். சில தலைவர்கள் கைது. அவ்வளவுதான்.
இங்கே ஏதோ புத்தனும் காந்தியும் ஆட்சி செய்வது போலவும்
நமது ஆருயிர்க் காதலன் ஆட்சியில் இருப்பது போலவும் நாம் நடந்துகொள்கிறோம்.
பிரபாகரனாரைக் கண்முன் பார்த்த தலைமுறை இன்று கூடன்குளத்திலும் கதிராமங்கலத்திலும் கூட்டமாக குத்தவைத்து நாட்களை எண்ணினோம்.
இப்போது வருடத்தை எண்ணிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறோம்.
ஒரு போலீஸ்காரனைக் கைநீட்டத் துப்பில்லாமல் முழு கிராமமும் பிழைப்பை விட்டுவிட்டு போராட்டம் என்ற பெயரில் கூடி பொழுதைப் போக்குவது இங்கேதான் நடக்கிறது.
ஆனால் அத்தனை நாசகார திட்டங்களின் பணிகளும் தங்குதடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஒரு வாட்டசாட்டமான இளைஞன் நடுரோட்டில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக நின்று நாலு கோசம் போட்டுவிட்டு காவல்துறையிடம் ரெண்டு அடிவாங்கி வாகனத்தில் ஏற்றபட்டு மண்டபத்தில் தங்கிவிட்டு மாலையில் விடுதலை ஆகி மறுநாள் ஒருவரிச் செய்தியில் வந்ததும் போராடிவிட்ட திருப்தியைப் பெறுகிறான் என்றால் நட்டம் யாருக்கு?
நாம் இன்று செய்யும் கூத்துக்கெல்லாம் பெயர் போராட்டமே அல்ல.
போராட்டம் என்கிற பெயரில் நாமும் பாதிப்படைந்து பிற பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.
அதிகார வர்க்கத்தின் மீது சிறு கீறலும் விழாமல், இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பார்த்து நகைக்கும் வண்ணம் காமெடி செய்துகொண்டு இருக்கிறோம்.
அவர்கள் ஏன் சிரிக்கமாட்டர்?!
கிரிக்கெட் வீரன்கூட பார்ம் இல் இல்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
நம்மை ஆள்பவர்களை நாம் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறோமா?!
அவர்களாக சாகும்வரை பதவியில் வைத்திருக்கிறோம்.
இதையே செய்த தென்னாப்பிரிக்கர் மண்டேலா செய்த சிறு வன்முறைச் செயலுக்கே அவரைச் சாகும்வரை தலைவராகப் போற்றினர்.
மண்டேலா எதற்காகப் போராடவந்தாரோ அதே நிலைதான் இன்றும்.
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் வீரியமாகப் போராடி பாதிவழி வந்து பிறகு சமரசம் செய்துகொண்ட தலைவர்கள் வானளாவிய புகழடைந்துள்ளனர்.
நாமும் இதே போல உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கிறோம்.
தமிழன் என்பதை விடுங்கள்.
மனிதன் என்பதை விடுங்கள்.
ஒரு விலங்கினம் என்பதையாவது நிரூபிக்க வக்கு இருக்கிறதா நமக்கு?!
ஒரு எறும்பின் கூட்டைக் கலைக்கப் போனால் அவை கூட கடிக்கும்.
நாம் நமது வீட்டை இடிக்க வந்த, நமது மகனை தூக்கிச்செல்ல வந்த 4 தொப்பை போலீசிடம் பயந்துகொண்டு கெஞ்சி அழுகிறோம்.
இப்படியே போனால் நம் அக்கா தங்கைகளை நம் வீடுபுகுந்து நம் கண்முன்னே கெடுப்பார்கள்.
நாம் வீடியோ எடுத்து நியாயம் கேட்கப் போகிறோமா?
கொடிபிடித்துக்கொண்டு கோசம் போடப் போகிறோமா?
இவ்வளவு அநியாயம் நடக்கிறது.
ஒரு போலீஸ்காரனின் கன்னம் சிவக்கவில்லை.
ஒரு அரசாங்க அதிகாரியின் செவுள் கிழியவில்லை என்றால் அவமானம் யாருக்கு?
அவன் வெறும் அம்பாம்! எய்தவன் எவனோவாம்!
ஏனிந்த வெற்று சமாதானம்?!
தட்டிக்கேட்க துப்பில்லை என்று நேரடியாக ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே?!
நீங்கள் திருப்பி அடிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டால் விட்டுவிடுவார்களா?
இந்திய சனநாயகத்தில் ஏன் உலக சனநாயகத்தலே கூட வன்முறையில் இறங்கியவனை விட அப்பாவிக்குத்தான் தண்டனை கிடைக்க வாய்ப்பு அதிகம்.
வாச்சாத்தி கிராம மக்களை விடவா நீங்கள் அப்பாவிகள்?!
அவர்களுக்கு நேர்ந்தது தெரியும்தானே?!
உங்களுக்காக களத்தில் இறங்க ஒரு கதாநாயகன் வரப்போவதில்லை.
பொதுமக்களே கூட்டாக வன்முறையில் இறங்குங்கள்.
கூவியது போதும்!
கையை நீட்டுங்கள்!
உங்கள் வீரத்தை நிரூபியுங்கள்!
அதன்பிறகு கண்ணைக்காட்டினாலும் உலகம் உங்கள் பின்னால் வரும்!
No comments:
Post a Comment