Sunday 8 July 2018

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

தமிழகத்தின் வளர்ச்சி யாரால்?

காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.
1952 இல் பொட்டி ஸ்ரீராமுலு 10% கூட தெலுங்கர் வாழாத சென்னையை ஆந்திராவுடன் சேர்க்கக் கோரி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கிறார்.

  ம.பொ.சி அவரிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது ராமுலு "உங்கள் மாவட்டத் தலைநகரங்கள் கூட மாநிலத் தலைநகருக்கு இணையாக வளர்ந்து நிற்கின்றன.
ஈரோடு போல ஒரு நகரத்தை ஆந்திரா முழுவதும் சுற்றினாலும் பார்க்கமுடியாது.
எனவே பின்தங்கியுள்ள எங்களுக்கு சென்னையை மட்டும் விட்டுத்தாருங்கள்.
உங்களுக்கு புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சுகிறார்.

அதாவது தமிழகம் அப்போதே ஒரு முன்னேறிய மாநிலம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.
 
(இதற்கு 1920ல் ஆட்சிக்கு வந்த முதல் திராவிடக் கட்சியான நீதிக்கட்சியின் 13 ஆண்டுகால ஆட்சிதான் சிலர் சப்பைக்கட்டு கட்டாலம்.
நீதிக்கட்சி சில சீர்திருத்தங்களைச் செய்ததே தவிர பொருளாதார திட்டம் எதையும் செயல்படுத்தவில்லை)

இன்று இந்தியாவிலேயே தமிழகமும் கேரளாவும் எந்தவொரு மாநிலத்தையும் விட முன்னேறிய மாநிலங்கள்.

அதிலும் தமிழகம் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சி கொண்ட மாநிலம்.

இந்தியாவின் 6% மக்கட்தொகை மட்டுமே கொண்ட 11வது பெரிய மாநிலமான தமிழகம், இந்தியாவின் இரண்டாவது பணக்கார மாநிலம்.
இந்திய பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழகம் தன்வசம் வைத்துள்ளது.

இதற்கு காரணம் திராவிடக் கட்சிகளா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

திராவிடக் கட்சிகளும் இயக்கங்களும் முன்னேற்றத்திற்கு தடையாகவே என்றும் இருந்துள்ளன.

நமது உரிமைகள், பொருளாதாரம், வளங்கள் என அனைத்தையும் திராவிட ஆட்சியாளர்களான வந்தேறிகள் மத்திய அரசும் சுரண்டவிட்டு தானும் சுரண்டிக் கொளுத்தனரேயன்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதையுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

அதாவது ஆட்சியாளர்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் கோட்டை விட்டனர்.

ஆனால், மக்கள் சாதிக்கவேண்டிய அத்தனை சந்தர்ப்பங்களிலும் சாதித்தே வந்துள்ளனர்.

எந்தவொரு உருப்படியான தலைவனும் இல்லாமல் பொதுமக்களின் இயல்பான தனிமனித ஒழுக்கமும் திறமையும் மட்டுமே நமது இந்த வளர்ச்சிக்குக் காரணம்.

இப்போதும் நாம் முன்னேறிய மாநிலம் போன்ற ஒரு போலியான தோற்றம்தான் இன்று உள்ளது.
அதற்குக் காரணம் பிற மாநிலங்கள் நம்மை விட பின்தங்கிய நிலையில் உள்ளன.
வடக்கே செல்லச் செல்ல மிகமோசமான நிலை உள்ளது.

அவர்களோடு நம்மை ஒப்பிட்டு முன்னேறிய மாநிலம் என்பது மடைமை.

நாம் ஒரு தனிநாட்டு இனம்.
இயல்பிலேயே வல்லரசு.
நம்மால் ஐரோப்பியருடன் போட்டிபோட முடியும்.

தமிழ்நாடு தனிநாடாக இருக்கும் பட்சத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் வல்லமை கொண்டது என தனது 'An Uncertain Glory: India and its Contradictions' என்ற நூலில் பொருளாதார மேதை அமர்த்தியா சென் தெரிவித்துள்ளார் (இவர் 1998ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவராவார்).

நம்முடைய வளர்ச்சியில் சோம்பேறி இனங்களுக்குப் பங்குகொடுத்தே நாம் நாசமாய்ப் போனோம்.

ஆண்டுக்கு சுமார் "ஒரு லட்சம் கோடி" மத்திய அரசுக்கு கப்பம் கட்டி எல்லா மாநிலத்தானும் அனுபவித்துபோக மீதி நிதியை நாம் பெறுகிறோம்.

ஒரு ரூபாய் வரி கட்டி 30 பைசா திரும்பப் பெறுகிறோம்.

பேரிடர் காலத்திலும் வெறும் 500 கோடி கூட நிவாரணம் கேட்டுக் கிடைக்காமல் அல்லாடுகிறோம்.

ஆங்கிலேயர் வரும்வரை நாம் தனியரசு.
1947 லேயே நாம் தனிநாடு ஆகியிருக்கவேண்டும்.

நமக்கான உரிமைகள் மறுக்கப்பட்டபோதே நாம் இந்திய ஒன்றியத்தில் இருந்து விலகியிருக்க வேண்டும்.

நம்முடைய அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடவேண்டிய நிலை வந்தபோதாவது வெளியேறியிருக்க வேண்டும்.

இன்று நம் இனத்தையும் மண்ணையும் அழிக்கும் நிலைப்பாட்டிற்கு ஹிந்தியமும் திராவிடமும் வந்தபின்னும் நாம் சும்மாயிருக்கிறோம்.

தேசபக்தியின் பெயரால் நம் மண்ணையும் உயிரையும் கேட்கிறது ஹிந்தியம்.

இனியும் பொறுக்கக்கூடாது!

நாம் தனிநாடாவோம்!

ஆகாவிட்டால் சாவோம் என்பது உறுதி.

ஆகிவிட்டால் வல்லரசாவோம் என்பதும் உறுதி.

படம்: வீரப்பனார் மற்றும் தனித்தமிழ்நாடு ஆயுதக் குழுக்கள் வெளியிட்ட "பெரிய தமிழ்நாடு" வரைபடம்

No comments:

Post a Comment