Thursday 12 July 2018

ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!

ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!

மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருந்தனர்.

மற்றவர்கள் வாய்கிழிய பேசிக்கொண்டு இருந்தனர்.

ஆனால் செயலில் இறங்கியதோ ஒரு பார்ப்பனர்!

நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழக்குப் போட்டு மதிப்பெண் (நியாயம்) பெற்றுத் தந்த டி.கே.ரங்கராஜன் அவர்கள் பார்ப்பனர் குலத் தமிழர் ஆவார்.

கம்யூனிஸ்ட் என்றாலும் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் இனப்பற்றாளர் இவர்.

பார்ப்பனர் தமிழுக்கு உழைத்த வரலாறு போல தமிழர் உரிமைக்காக உழைப்பதிலும் சளைத்தவரில்லை.

மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் முன்பே 1921லேயே காங்கிரஸ் கட்சியை மொழிவாரி கிளைகளாகப் பிரித்தது ஒரு பார்ப்பனரான சத்தியமூர்த்தி ஐயர்.
[திருப்பதி சித்தூர் வரை தமிழகத்திற்கு கேட்டவர்]

இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி மலையகத் தமிழருக்காக்க் குரலெழுப்பியது ஒரு பார்ப்பனரான கோதண்டராம நடேசையர்.
[தமிழகத்தைச் சேர்ந்தவர்]

குமரி தமிழகத்துடன் இணைய தனது தினமலர் பத்திரிக்கை மூலம் ஊடகபலம் அளித்தது ஒரு பார்ப்பனரான டி.வி.ஆர்.
[தடையுத்தரவை மீறி குமரிக்கும் தமிழகத்திற்கும் தகவல் பரிமாற்றம் நடந்தது]

இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து "உங்களுக்கு முழு இந்தியாவும் வேண்டுமா அல்லது இந்தி பேசும் இந்தியா மட்டும் போதுமா?" என்று கேட்டவர் ஒரு பார்ப்பனரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

காவிரி உரிமையில் முதன்முதலாக வழக்கு போட்டு நியாயம் பெற்றுத் தந்தது ஒரு பார்ப்பனரான மன்னார்குடி ரங்கநாதன்.
[அடுத்த பதினொறு ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வந்தது]

இந்த வரிசையில் தற்போது டி.கே.ரங்கராஜன், குளறுபடியான 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்குப் பெற்றுத் தந்துள்ளார்.

No comments:

Post a Comment