சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?
1994 ல் இந்தியாவில் ஆன பிரசவங்களில் 61.6% பிரசவங்கள் வீட்டில் நடந்துள்ளன.
பிரசவமானோரில் டாக்டர் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டோர் 21.6 சதவீதம் மட்டுமே.[9]
பிரசவ மரணங்கள் (தாய் உயிரிழப்பு) அப்போது லட்சத்திற்கே 437 தான் இருந்தது.
அதாவது 'மொத்த பிரசவங்களின்' எண்ணிக்கையில் 'தாயின் மரணத்தில் முடிந்த பிரசவங்களின்' எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது 0.43% ஆகும்.
இந்த அரைசதவீத மரண வாய்ப்பும் இந்தியாவின் நிலைதான்.[9]
பேறுகால கவனிப்பில் (Antenatal care) தமிழகம் அப்போது மூன்றாம் இடத்தில் இருந்தது.
அதாவது 94% தமிழக கர்ப்பிணிகள் பேறுகால கண்காணிப்பு மற்றும் கவனிப்பு பெற்றிருந்தனர்.
37% இந்திய கர்ப்பிணிகளின் மட்டுமே பிரசவ கால கண்கானிப்பு பெற்றிருந்தனர்.[9]
எனவே தமிழகத்தில் பிரசவ மரணங்கள் மூன்று மடங்கு குறைவாக இருந்திருக்க வேண்டும்.
அதாவது லட்சத்திற்கு 180 வரை இருந்திருக்கும் என அனுமானிக்கலாம்.
புரிந்துகொள்ளும் வகையில் கூறினால் பிரசவமான ஆயிரம் தாய்மார்களில் (தோராயமாக) இருவர் இறந்துள்ளனர்.
நியாயப்படி இந்த ஆயிரத்தில் இருவரைக் காப்பற்றத்தான் சிசேரியன் செய்யப்படவேண்டும்.
ஆனால் தற்போதைய நிலை என்ன?
அதிகரித்து வந்த சிசேரியன் கலாச்சாரத்தைக் கருத்தில் கொண்டு அதை நெறிப்படுத்தும் விதமாக World health organisation (WHO) 1985 இல் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதிலுள்ள பரிந்துரைப்பின்படி[1] பிரசவங்களில் சிசேரியனின் சதவீதம் 10-15% க்குள் இருக்கவேண்டும்.
ஆனால் 2005 லேயே தமிழ்நாட்டில் "பிரசவத்தில் சிசேரியன் சதவீதம்" 20% ஆகிவிட்டிருந்தது. [2]
2015 ல் இது 34% ஆக உயர்ந்து இந்தியாவில் நான்காம் இடத்தைப் பிடித்தது தமிழ்நாடு.[3]
2015 நிலவரப்படி தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆன பிரசவங்களில் 10 ல் 2 சிசேரியன் ஆகும்.
ஆனால் தமிழக தனியார் மருத்துவமனைகளில் 10 ல் 6 சிசேரியன் ஆகும்.[4]
ஆயிரத்தில் இரண்டு எங்கே?!
பத்தில் ஆறு எங்கே?!
(இத்தனைக்கும் தமிழகத்தின் தற்போதைய பிரசவ மரணங்கள் லட்சத்திற்கு 62)
மாவட்ட வாரியாகப் பார்த்தால் தமிழகத்தின் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இந்திய அளவில் 2 வது மற்றும் 3 வது இடத்தில் உள்ளன.[4]
இதிலிருந்து சிசேரியன் பெரும்பாலும் தேவையற்றது என்பதும் அதில் தமிழகம் முன்னணியில் உள்ளதையும் அறிகிறோம்.
இதுமட்டுமல்லை,
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் பால் மிக முக்கியமானதாகும்.
தமிழகத்தில் 2015 ல் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளில்,
பிறந்த ஒருமணி நேரத்தில் பால் கொடுப்பெற்ற குழந்தைகள் 54.7% சதவீதம் ஆகும். [3]
இதற்கு முக்கிய காரணம் சிசேரியன்.
பிரசவத்தின்போது, தாயின் உடலில் சுரக்கும் திரவத்தில் இருக்கும் (நல்ல)பாக்டீரியாக்கள் குழந்தைக்கு போராடும் சக்தியையும் நோயெதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.
இந்த சக்தி ஓராண்டு வரை குழந்தை நோய்களிலிருந்து பிழைத்துவாழ உதவுகிறது.
ஆனால் சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைக்கு இது கிடைப்பதில்லை.
எனவே அது விரைவில் நோயாளி ஆகிறது.
(மேலைநாடுகளில் இதை சமன் செய்ய தாயின் பிறப்புறுப்பில் சுரக்கும் திரவத்தை சிசேரியன் குழந்தைக்கு பூசும் vaginal seeding செய்கிறார்கள்.
ஆனால் இது தற்காலத் தீர்வுதான்). [10]
தொப்புள்கொடி அறுப்பதும் கூட உடனடியாகச் செய்யப்படுவதால் குழந்தைக்கு பிரசவத்திற்குப் பிறகு தொப்புள்கொடி மூலம் இறங்கவேண்டிய அந்த ஸ்டெம் செல்கள் நிறைந்த ரத்தம் கிடைப்பதில்லை.
(மேலை நாடுகளில் இதை சேமித்து பத்திரமாக வைக்கின்றனர்).
அதாவது சிசேரியன் குழந்தை நலனையும் பெறுமளவு பாதிக்கிறது.
தமிழகத்தில் நிலை மட்டும்தான் இப்படியா என்றால் இல்லை.
உலகளாவிய கருத்துக்கணிப்பும் புள்ளிவிபரங்களும் சிசேரியன் பற்றி எச்சரிக்கின்றன.
பிரசவத்தின்போது அரிதாக நிகழும் தாயின் மரணத்தைக் காரணம் காட்டி பயமுறுத்தி பெரும்பான்மையான சிசேரியன்கள் தேவையில்லாமல் செய்யப்படுகின்றன.
சிசேரியன் மூலம் பிரசவ மரணங்கள் குறைந்தது என்பது முற்றிலும் தவறான கருத்து ஆகும்.
இந்த உண்மையை 2006 நவம்பரில் WHO வெளிப்படுத்தி உள்ளது.
119 நாடுகளில் 1991 முதல் 2003 வரையான தரவுகளைத் திரட்டி வெளியிடப்பட்ட ஆவணத்தில் சிசேரியனுக்கும் பிரசவ மரணங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளது. [6]
2011 இலும் இதேபோல 193 நாடுகளில் 2000 - 2009 வரையான தரவுகளை வைத்து தேவையற்ற சிசேரியன்கள் அதிகரித்து வருவதை எச்சரித்தது. [8]
2015 இலும் இதேபோல 194 நாடுகளில் 2005 - 2012 வரையான தரவுகளை வைத்து சிசேரியன் செய்வது பிரசவ மரணங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என்றும்
அது பெரும்பாலும் தேவையற்ற நிலையில் செய்யப்படுவதாகவும் அடித்துக் கூறியுள்ளது உலக சுகாதார அமைப்பு (WHO). [7]
உலகளாவிய தரவுகளுடன் இந்த உண்மையை பல அறிஞர்களும் ஐ.நா நிறுவனஙகளும் சேர்ந்து 24.08.2015 அன்று உலகிற்கு அறிவித்துள்ளன. [5]
சிசேரியன் கலாச்சாரம் அதிகரித்து வருவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, பெண்களின் உடல்வலு குன்றியமை, தேவையற்ற பயம், கர்ப்பிணிகளின் கவனக்குறைவு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் கார்ப்பரேட் மயமான மருத்துவமனைகளின் லாபவெறி இந்த அவல நிலைக்கு முக்கிய காரணம் ஆகும்.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் உறவினர்கள் கூடுமானவரை சிசேரியனுக்கு மறுப்பு தெரிவித்து
சுகப்பிரசவத்தை எதிர்கொண்டு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
1. Robson classification, 1985
2. National family health survey 3 (2005 - 2006)
3. National family health survey 4 (2015 - 2016)
4. Live Mint 06.01.2016
5. Association between rates of caesarean section and maternal and neonatal mortality in the 21st century: a worldwide population based ecological study with longitudinal data.
6. Cesarean section rates and maternal and neonatal mortality in low-, medium-, and high-income countries: an ecological study.
7. Relationship Between Cesarean Delivery Rate and Maternal and Neonatal Mortality.
8. Correlation of Cesarean rates to maternal and infant mortality rates: an ecol
9. National family health survey 1 (1992 - 1993)
10. ஜேம்ஸ் காலகெர், பிபிசி - அறிவியல் மற்றும் சுகாதாரப் பிரிவு
Monday, 6 August 2018
சிசேரியன் பிரசவ மரணங்களைக் குறைத்ததா?
நோகாமல் தாய்மை
நோகாமல் தாய்மை
பிரசவ அறுவை நடந்த மறுநாள்.
நன்கு பிதுக்கிப் பார்த்தும் தாய்க்குப் பால் வரவில்லை.
குழந்தையோ தாயின் வாசமறிந்து வீறிட்டு அழுகிறது.
முகத்தோடு சேர்த்துவைத்தால் அந்த ஏதுமறியாப் பிஞ்சு தாயின் கன்னத்தை உறிஞ்சி இழுக்கும்.
கண்ணீரைப் பாலெனக் குடிக்கும்.
இந்த வேதனையான காட்சியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
நான் பார்த்திருக்கிறேன்.
அதுவும் அந்த உயிரின் தந்தையாக.
இப்போது நினைத்தாலும் கண்ணீர் முட்டும்.
நீங்கள் என்னதான் துணிச்சலான ஆள் என்றாலும் "ஆபரேசன் பண்ணாவிட்டால் இருவருக்கும் ஆபத்து" என்று பதறவைப்பார்கள்.
நீங்கள் "செத்தாலும் கேள்வி கேட்கமாடேன்" என்று கையெழுத்து போடுவதைத் தவிர வேறுவழியில்லை அதிலும் இயற்கைக்குப் புறம்பான ஒரு தலைமுறையை வைத்துக்கொண்டு.
பணத்தைக் கொட்டி அழுது தாயையையும் குற்றுயிராக்கி குழந்தையையும் குறைப் பிறப்பாக்கி மெல்ல மெல்ல சீரழிவதைத் தவிர வேறு வழியில்லை.
ஆம்.
தாய்க்கு முதலில் முதுகெலும்பில் மஜ்ஜையில் இரத்த அணுக்கள் உற்பத்தியாகும் இடத்தில் ஒரு மருந்தைச் செலுத்துவர்.
இதற்குப் பிறகு அந்தப் பெண் 'குறுக்கு விளங்காதவள்' ஆகிவிடுவாள்.
வாழ்நாள் முழுவதும் அவளால் 10 நிமிடம் தொடர்ச்சியாக நேராக நிற்கவோ நிமிர்ந்து உட்காரவோ முடியாது.
குழந்தை பிறந்தவுடன் சுரக்கும் மெய்யான அமுதமான சீம்பால் சிசேரியனில் பிறந்த அந்த குறைபிறப்புக்கு கொடுத்துவைக்காது.
பின்னே! அது ஆரோக்கியமாக வளர்ந்துகொண்டு போனால்,
அலோபதி மருத்துவன் எப்படி 8×8 சதுர அடி க்ளினிக்கில் தொழில் தொடங்கி பத்தே ஆண்டுகளில் கோடி பெறுமானமுள்ள மருத்துவமனை கட்டமுடியும்?!
தாய்ப்பால் வராமைக்கு உடல் காரணமல்ல.
மயக்க ஊசி போட்டு அல்லது மரத்துபோக வைத்து வயிற்றின் பல அடுக்குகளைக் கிழித்து குழந்தையை வெளியே எடுப்பார்கள்.
அறுந்த அடுக்குகள் இயற்கையாக பழையபடி ஒன்றுசேராது.
காலம் முழுவதும் அவள் பெருத்த வயிற்றில் தழும்போடுதான் அலையவேண்டும்.
இதிலே எங்கிருந்து காமம் பிறப்பது அடுத்த குழந்தை பெறுவது...?!
சுகப்பிரசவம் என்றால் மட்டும் சும்மா விடுவார்களா?!
குழந்தை வெளிவரும்போது பிறப்புறுப்பை வெட்டிவிடுவார்கள்.
அதன் பிறகு இறுக்கமற்ற கலவிதான்.
நெருக்கமற்ற வாழ்க்கைதான்.
படிதாண்ட தேவைதான்.
எங்கே விட்டேன்....?
ஆம். அறுத்த பிறகு...
அறுந்துகிடக்கும் உடல் விழிக்கும்போது அதற்கு ஒன்றும் புரியாது.
தான் சீராட்டி வளர்த்த கரு எங்கே போனது...?!
எப்படி இவ்வளவு பெரிய காயம்?!
தூசியைவிட சிறிய விந்தணுவையும் அண்ட அணுவையும் சேர்த்து இரத்தம் கொடுத்து தசை கொடுத்து வெப்பம் கொடுத்து உணவு கொடுத்து எலும்பு கண் இதயம் என என்னென்னவோ பொருத்தி ஒரு ஆறறிவு உயிராக உருவாக்கத் தெரிந்த அறிவுள்ள பெண்ணுடலுக்கு,
நமது நவீன, மிகமுன்னேறிய, அதிமுற்போக்கு, வெகுதொலைநோக்கு, அலோபதி அறுவைக் கத்தி மருத்துவத்தைப் புரிந்த கொள்ள அறிவு போதவில்லையப்பா..!
2,3 நாட்களுக்குப் பிறகுதான் உடலுக்குப் புரியும் அதன் கரு உயிருடன் பாலுக்கு ஏங்குவது.
மெல்ல மெல்ல தாய்க்கு பால் ஊறத் தொடங்கும்.
கரைத்த மாவை முகம் சுளித்து குடித்துவந்த குழந்தை இப்போது தாய்ப்பாலைச் சுவைக்கும்.
உண்ட மயக்கத்தில் இதழ்கூட்டி சிரிக்கும்.
'இப்போதுதான் நிம்மதி' என்று அயரும் முன் வற்றத் தொடங்கும் அந்த முலைகள்.
6 மாதத்திற்கு பிறகு பால் அறவே இருக்காது.
பால் சுரக்க மருந்து குடிக்க சொல்வார்கள்.
நீர்த்த பால் வரத் தொடங்கி பின் அதுவும் நின்று வற்றிய விளைநிலமாக இருந்த மார்பு இப்போது பாலைவனமாகிவிடும்.
சுகப்பிரசவமான பெண்களுக்குமே பால் வராதபடி செய்துவிடுவார்கள்.
இனி வரும் காலத்தில் குழந்தை பெற்றவளுக்கு பால் வந்தால்தான் அதிசயம்!
பிறகென்ன மாதம் ஒருமுறை மருத்துவமனைக்கு அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அலையவேண்டியதுதான்.
குழந்தை உண்டாகும்போது ஆற்றலுக்கென சர்க்கரை ஏறும்,
குழந்தை உடல் உருவாக இரத்த அளவு குறையும்.
உடனே சுகர் ஏறிவிட்டது. அனீமியா வந்துவிட்டது என மருந்து மாத்திரை கொடுத்து இல்லாத நோயை புகுத்துவோரும் உண்டு.
"ப்ரெக்ணன்ட் ஆனதுல இருந்து சுகர் வந்துருச்சு" என்போர் இன்று கணிசம்.
யாரோ ஹீலர் பாஸ்கராம்.
"உன் குழந்தையை நீயே பெறு" என்றாராம்.
"என்ன அநியாயம்!" என்று பிடித்து உள்ளேவைத்துவிட்டார்கள் உடலுறுப்பு வியாபாரிகள்.
சிட்டி ரோபோ பழங்கால முறையை பின்பற்றி பிரசவம் பார்த்தால் கைதட்டுவோம்.
வேக்குவம் கிளினரால் குழந்தையை வெளியே இழுத்தால் கைதட்டுவோம்!
அதையே நிஜத்தில் செய்தால் தூக்கி உள்ளே வைப்போமா?!
மருத்துமனையில் மரணமே நிகழ்ந்தது இல்லையா?!
சிறுவனான தன் மகனை விட்டு ஆபரேசன் செய்து விளையாடிய டாக்டரை என்ன செய்தார்கள்?!
கார்ப்பரேட் ஆஸ்பத்திரிகள் அடித்த கொள்ளை பற்றி படங்கள் வந்ததில்லையா?
ஆஸ்பத்திரிக்கு உள்ளே என்ன நடக்கிறதென்று தெரியாமல் முதலமைச்சரையே பூட்டிவைத்த வரலாறு அறியோமா?!
நான் கேட்கிறேன் உலகில் உள்ள கோடானு கோடி உயிரினங்கள் பிள்ளைபெறுவது மருத்துவமனையில்தானா?
டிஸ்கவரியில் கூட காட்டுகிறார்களே?!
தன்னந்தனியாகத் தானே குட்டிகளை ஈன்ற பெண்சிறுத்தை உடனே வேட்டைக்குப் போய்விட்டு வருகிறதே?!
8 மாத கர்ப்பத்தோடு ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் ஓடிய ஆப்பிரிக்கப் பெண்மணி பற்றி செய்தி வந்ததே!?
தாய்மை என்ன சுமையா?!
உலகத்திலேயே மிக மிக சோம்பேறித்தனமாக குறைந்த வலியுடன் பலரது உதவியுடன் நோகாமல் எளிமையாக தாய்மையை அடைவது மனித இனம்.
நான் சொல்வது 50 ஆண்டுகளுக்கு முந்தைய நிலையை.
இப்போது பெண்கள் குனிந்து நிமிராமல் வலியேயில்லாமல் வயிற்றைக் கிழித்துக்கொண்டு அடைவதற்குப் பெயர் தாய்மையல்ல.
சிசேரியன் செய்த எவளும் தாயில்லை!
குறுக்குவழியில் பதவியுயர்வு அடைந்த குற்றவாளி!
பயந்தாங்கொள்ளி! சுயநலவாதி! நோயாளி!
இதைச் செய்யும் மருத்துவர் இயற்கைக் கொலையாளி!
நாமோ கடவுளாகப் பார்க்கிறோம்.
தாயையும் சேயையும் காத்த கடவுள் என்று கும்பிடுகிறோம்.
அவர்கள் ஆபத்து என்றால்தான் கத்தி வைப்பார்களாம்!
அதெப்படி நல்ல நாள் நட்சத்திரம் நேரம் பார்த்து பலருக்கு அந்த 'ஆபத்து' வருகிறது?!
அதெப்படி 10% கூட இல்லாத 'பிரசவத்தில் அறுவையின் சதவீதம்' பத்தே ஆண்டுகளில் 37% ஆனது?!
கத்தி வைத்திருந்தால் கிழித்துவிடுவார்களா?!
சவரக்கத்தி வைத்திருக்கும் நாவிதரின் மனைவிதான் ஊருக்கு மருத்துவச்சி.
அவள் கிழித்துதான் பிரசவம் பார்த்தாளா?!
அவர்கள் காலத்தில் 37% பிரசவ இறப்பு நடந்ததா?!
இன்று அவர்கள் எங்கே?!
அலோபதி டாக்டர் சாக்கடையில் போடும் தொப்புள்கொடியை
இன்று பத்திரமாக சேமித்துவைக்கும் மேற்குலகம் "ஸ்டெம் செல்" மருத்துவம் என்ற பெயரில் ஏதோ அவர்கள்தான் முதலில் கண்டறிந்தது போல பீற்றிக்கொள்கிறார்களே?!
குறவர் செய்து தரும் தொப்புள்கொடி தாயத்தின் அருமையை இன்றுவரை நாம் அறிந்து நடந்தோமா?!
முதலில் கருத்தரிப்பது என்ன நோயா?
நோயில்லை என்றால் மருத்துவமனை ஏன் போகவேண்டும்?!
ஏன் "பேஷண்ட்" ஆகவேண்டும்?!
பிரசவத்தில் அதிக வலியைக் கட்டுப்படுத்தவும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தவும் இயற்கையான வழியைத் தேடிக்கொண்டு
ஒரு பயிற்சி பெற்ற மருத்துவரின் அல்லது ஆலோசகரின் கண்கானிப்பில் வீட்டிலேயே பிரசவம் நடக்கவேண்டும்.
கல்லூரி பட்டப் படிப்பில் இதற்கான பயிற்சியும் வழங்கப்படவேண்டும்.
இல்லை. கார்ப்பரேட் டாக்டர்தான் கடவுள்.
அதுவே வேதவாக்கு என்ற போக்கு தொடர்ந்தால்.....
"சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்றோர்" கின்னஸ் சாதனையில் இடம்பெறும் நாள் வெகுதொலைவில் இல்லை.
(04.08.2018 அன்று இரவு 10:01 நேரத்தில் முகநூலில் இட்டது)
Thursday, 12 July 2018
ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!
ஓகோ! கோர்ட்டு கேசுனு போவோம்கறேள்!
மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு இருந்தனர்.
மற்றவர்கள் வாய்கிழிய பேசிக்கொண்டு இருந்தனர்.
ஆனால் செயலில் இறங்கியதோ ஒரு பார்ப்பனர்!
நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வழக்குப் போட்டு மதிப்பெண் (நியாயம்) பெற்றுத் தந்த டி.கே.ரங்கராஜன் அவர்கள் பார்ப்பனர் குலத் தமிழர் ஆவார்.
கம்யூனிஸ்ட் என்றாலும் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் இனப்பற்றாளர் இவர்.
பார்ப்பனர் தமிழுக்கு உழைத்த வரலாறு போல தமிழர் உரிமைக்காக உழைப்பதிலும் சளைத்தவரில்லை.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் முன்பே 1921லேயே காங்கிரஸ் கட்சியை மொழிவாரி கிளைகளாகப் பிரித்தது ஒரு பார்ப்பனரான சத்தியமூர்த்தி ஐயர்.
[திருப்பதி சித்தூர் வரை தமிழகத்திற்கு கேட்டவர்]
இலங்கையின் முதல் தமிழ் பத்திரிக்கை தொடங்கி மலையகத் தமிழருக்காக்க் குரலெழுப்பியது ஒரு பார்ப்பனரான கோதண்டராம நடேசையர்.
[தமிழகத்தைச் சேர்ந்தவர்]
குமரி தமிழகத்துடன் இணைய தனது தினமலர் பத்திரிக்கை மூலம் ஊடகபலம் அளித்தது ஒரு பார்ப்பனரான டி.வி.ஆர்.
[தடையுத்தரவை மீறி குமரிக்கும் தமிழகத்திற்கும் தகவல் பரிமாற்றம் நடந்தது]
இந்தியை தேசிய மொழியாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது பாராளுமன்றத்தில் அதை எதிர்த்து "உங்களுக்கு முழு இந்தியாவும் வேண்டுமா அல்லது இந்தி பேசும் இந்தியா மட்டும் போதுமா?" என்று கேட்டவர் ஒரு பார்ப்பனரான டி.டி.கிருஷ்ணமாச்சாரி.
காவிரி உரிமையில் முதன்முதலாக வழக்கு போட்டு நியாயம் பெற்றுத் தந்தது ஒரு பார்ப்பனரான மன்னார்குடி ரங்கநாதன்.
[அடுத்த பதினொறு ஆண்டுகள் தடையில்லாமல் தண்ணீர் வந்தது]
இந்த வரிசையில் தற்போது டி.கே.ரங்கராஜன், குளறுபடியான 49 கேள்விகளுக்கு 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்களை தமிழில் நீட் தேர்வு எழுதியோருக்குப் பெற்றுத் தந்துள்ளார்.
Thursday, 14 June 2018
உடலுறுப்பு வியாபாரம்
உடலுறுப்பு வியாபாரம்
இப்படித்தான் மூளைச்சாவு அடைந்த ஹிதேந்திரன் எனும் இளைஞனின் துடித்துக்கொண்டிருந்த இதயத்தை அறுத்தெடுத்து ஒரு சிறுமிக்கு சாலைகளில் போக்குவரத்தை நிறுத்தி அனுப்பினார்கள்.
இதை ஊடகங்களில் பெரிய சாதனையாகக் காட்டினர்.
இதைத் தழுவித்தான் "சென்னையில் ஒருநாள்" படம் எடுக்கப்பட்டது.
இதற்குப் பிறகு இந்தியாவில் தமிழகம் உடலுறுப்பு தானத்தில் தொடர்ந்து முதலிடத்திலும் உள்ளது.
மூடிமறைக்கப்பட்ட ஒரு விடயம் என்னவென்றால் ஹிதேந்திரன் இதயத்தை வாங்கிய அந்த சிறுமி ஒரே ஆண்டிற்குள் இதயம் பழுதடைந்து இறந்துவிட்டார் என்பது.
எடுக்கப்படும் உறுப்புகளில் 25% தான் சரியாக பயன்படுத்தப் படுவதாக வினோபா (பா.ம.க) அவர்கள் விவாதத்தில் கூறியதாகக் கேள்விப்பட்டபோது மேலும் அதிர்ச்சியாக இருந்தது.
எது மலிந்துகிடக்கிறதோ அதற்கு மதிப்பிருக்காது.
ஹிந்தியாவில் அது மனிதர்கள்!
Thursday, 25 January 2018
மருத்துவ மாணவி (படக்கதை)
Sunday, 3 September 2017
நீட் பழியும் பார்ப்பனர் மீதா?!
நீட் கொண்டுவந்தது ஆரிய பார்ப்பான் என்று அலறும் குருடர்களுக்கு,
நீட் தேர்வு முறையை கொண்டு வந்த மன்மோகன் சிங் பிராமணர் இல்லை,
அதை அமல்படுத்திய மோடி பிராமணர் இல்லை,
அதை கொண்டுவந்தபோது அதை எதிர்க்காத ஸ்டாலின் பிராமணர் இல்லை,
இன்றைக்கும் நீட் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற நளினி சிதம்பரம் பார்ப்பனர் இல்லை ,
அதை ஏற்று இப்பொழுது கையெழுத்திட்ட எடப்பாடி பழனிச்சாமி பார்ப்பனர் இல்லை,
அதற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தமிழிசையும் கிருஷ்ணசாமியும் பார்ப்பனர் இல்லை,
தான் உயிருடன் இருந்த கடைசி நொடி வரை தமிழகத்தில் அந்த நீட்டை எதிர்த்த ஜெயலலிதா மட்டுமே பிராமணர்...!
ஆனால் நீங்கள் திட்டுவது பார்ப்பனர்களையும் பிராமணர்களையும்....!
-------------------------------
சிந்தனை: உமாமகேஷ்வரன் அதங்குடியான்
மேலும் அறிய,
search நீட் ஏன்? வேட்டொலி
அனிதா இடத்தில் மலையாள மாணவி
அனிதா இடத்தில் மலையாள மாணவி
×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×
கேரள மாநில கொல்லம் அருகே எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ரேவதி.
இவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்றார்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில், மாணவி ரேவதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
அனுமதி கடிதத்துடன் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்கள் இல்லை.
விரைவில் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதாக மாணவியின் பெற்றோர் கூறியதை கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்க மமறுத்துவிட்டனர்.
இந்த விஷயம் தொடர்பான தகவல், தொழிலதிபர் ஒருவரின் மூலம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மாணவியின் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில அதிகாரிகளின் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து மாணவி ரேவதி கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஏழையாகப் பிறந்தாலும் மலையாளியாகப் பிறக்கவேண்டும்.
இருப்பிட சான்றிதழோ சாதி சான்றிதழோ இல்லாமல் போனாலும்
கடைசி தேதி முடிந்த பிறகும்கூட தமிழகத்தில் இடம் கிடைக்கும்.
அதற்கு துணையாக தமிழகத்தில் மலையாள தொழிலதிபர்களும் கேரள முதலமைச்சரும் இருப்பார்கள்.
ஏதோ தன் பரம்பரை சொத்தில் பங்கு கொடுத்தது போல 'ஏழை மாணவிக்கு உதவிய கேரள முதலமைச்சர்' என பாராட்டி எழுத தமிழ் ஊடகங்களும் இருக்கும்.
தமிழ் இனத்தில் ஏழைகள் உட்பட அனைவரும் மாணவி அனிதா போல சாவதைத் தவிர வேறு வழியில்லை.
Tuesday, 13 June 2017
சோழர் ஆட்சியில் மருத்துவம்
சோழர் ஆட்சியில் ஆதுலர் சாலை எனும் இலவச மருத்துவ முகாம் இருந்துள்ளது.
மற்றும் மருந்து எழுதிக் கொடுக்கும் பணியாளரும் சல்லியக் கிரியை என்றழைக்கப்பட்ட அறுவை சிகிச்சை மருத்துவர் பற்றியும் கல்வெட்டு உள்ளது.
மருந்து இட பெண்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.
கல்வியோடு மருத்துவமும் கற்றுக்கொடுத்த கல்லூரியும் இருந்துள்ளது.
மேற்கண்ட பணிகளுக்கு அளிக்கப்பட்ட கூலி விபரங்கள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.
நன்றி: Lokan K Nathan
Tuesday, 9 May 2017
நீட் ஏன்?
நீட் ஏன்?
இந்திய ஒன்றியத்தின்
டெல்லி - அரசியல் தலைநகர்
மும்பை - பொருளாதாரத் தலைநகர்
சென்னை - மருத்துவத் தலைநகராக அறியப்படுகின்றன.
அதாவது இந்தியாவிலேயே சென்னையில்தான் நவீன மருத்துவமனையும்
திறமையான மருத்துவர்களும் இருக்கின்றனர்.
செலவும் குறைவு என்பதால் பல வெளிநாட்டினர் மருத்துவம் பார்க்க சென்னைக்கு வருகின்றனர்.
இந்தியாவிற்கு மருத்துவம் பார்க்கவருவோரில் முக்கால்வாசிப்பேர் சென்னைக்குத்தான் வருகிறார்கள்.
இங்கே வரும் வெளிநாட்டவர் சுற்றிப்பார்க்கவும் செய்வர்.
அவர்களுக்கு தமிழகத்தின் கோயில்கள் மிகவும் பிடித்து தமிழகத்தின் புகழ் உலகம் முழுவதும் பரவி சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகின்றனர்.
இந்தியாவில் தமிழகம் சுற்றுலாவில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதையெல்லாம் பார்த்து வயிறெரிந்த ஹிந்தியர்கள் இதற்கு அடிப்படையான தமிழர்களின் மருத்துவ அறிவுக்கு வைத்த ஆப்புதான் நீட்.
மத்திய அரசின் பாடத்திட்டமான CBSC படித்தோர் தமிழகத்தில் 1.6% மட்டுமே.
இந்த பாடத்திட்டத்தில் இருந்துதான் கேள்வி கேட்போம் என்கிறது மத்திய அரசு.
இதற்கு உறுதுணையாக இணைந்து வழக்கை வாதாடி வென்றது தெலுங்கர் நடத்தும் சங்கல்ப் அமைப்பு.
தமிழகத்தின் 98.4% மாணவர்களின் மருத்துவக் கனவு கனவாகவே ஆகிவிட்டது.
இது மத்திய ஹிந்தி அரசின் மாநிலங்களின் உரிமை மீதான தாக்குதல்.
இது தமிழகத்தைக் குறிவைத்தே நடத்தப்படுகிறது.
ஆனால் திராவிடம் ஊட்டிய பார்ப்பனவெறுப்பு விசம் யாரையும் சரியான திசையில் சிந்திக்கவிடவில்லை.
1930ல் சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டர் ஆகலாம்.
அதைத்தான் இப்படி மீண்டும் கொண்டுவந்துவிட்டான் பார்ப்பான்.
செயினை கழட்ட சொன்னீர்களே பூணூலை ஏன் கழட்ட சொல்லவில்லை?
என்றெல்லாம் முகநூல் பதிவர்கள் விளாசித் தள்ளுகிறார்கள்.
இது தமிழக அரசின் பாடத்திட்டத்தை ஒழித்து ஹிந்தி அரசின் பாடத்திட்டத்தைக் கொண்டுவர நடக்கும் நவீன மொழித்திணிப்பு.
தமிழகத்தின் மீதான பிற இனத்தாரின் எரிச்சல்.
இது தெரியாமல் கண்ணைமூடிக்கொண்டு பார்ப்பனரை எதிர்த்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பது முட்டாள்த்தனம் மட்டுமல்லாது திராவிடத்தின் வெற்றி எனவும் கூறலாம்.
உண்மையான எதிரியை மறைத்து இல்லாத ஒன்றை நோக்கி நம்மை திசைதிருப்ப உருவாக்கப்பட்டதே திராவிடம்.
சரி. பார்ப்பன வெறுப்பாளர்கள் எக்கேடும் கெட்டு ஒழியுங்கள்.
மாணவர்களே!
இந்த ஆண்டு நீட் நடந்து ஆடை களைந்து அவமதிப்பு வரை உங்களுக்கு நடந்தாயிற்று.
அடுத்த ஆண்டு இரண்டு மாதம் முன்பே திட்டமிட்டு பெரிய போராட்டம் நடத்துங்கள்.
இந்த முறை நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதை திட்டமிடுங்கள்.
அடுத்த தலைமுறை மாணவர்களிடம் விளக்கிச் சொல்லுங்கள்.
பொதுத்தேர்வை மொத்தமாகப் புறக்கணிப்பது சரியான பதிலடியாக இருக்கும்.
இது மருத்துவர் ஆக நினைக்கும் 'நன்றாகப் படிக்கும் மாணவர்களின்' பிரச்சனை மட்டும் இல்லை.
இன்று அவர்களுக்கு நடந்தது நாளை ஒவ்வொரு மேற்படிப்பிற்கும் நடக்கும்.
ஏற்கனவே எல்லா அரசுவேலைகளிலும் வடயிந்தியனை நிரப்பிவருகிறார்கள்.
கல்வியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் பொதுமக்கள் போராட்டத்திற்காகக் களத்தில் இறங்கினீர்கள்.
உங்கள் போராட்டத்திற்கு பொதுமக்கள் கட்டாயம் வருவார்கள்.
அவர்களுக்கும் தரமான மருத்துவம் வேண்டும்தானே?!
ஆனால் போராட்டம் மட்டுமே இறுதித்தீர்வு கிடையாது.
ஹிந்தியாவோடு நாம் இணைந்திருக்கும் வரை தமிழன் ஒருவன் கூட நிம்மதியாக வாழமுடியாது என்பது உறுதி.
நீட் போனால் இன்னொன்று அது போனால் மற்றொன்று என கொண்டுவந்துகொண்டே இருப்பார்கள்.
நாம் போராடி போராடி சாகவேண்டியதுதான்.
தமிழர்நாடு விடுதலையே இறுதியான தீர்வு.
இளைய தலைமுறை மாணவர்களே!
இதை எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.