Showing posts with label அனிதா. Show all posts
Showing posts with label அனிதா. Show all posts

Friday, 8 September 2017

நீட் போராட்டம் கூடாது - தே.மு.தி.க வுக்கு ஆதரவாக தீர்ப்பு

தெலுங்கனை தெலுங்கனாகப் பாருங்கள் !

தேமுதிக நிர்வாகி ஜி.எஸ்.மணி நீட் போராட்டத்திற்கு எதிராக தொடர்ந்த  வழக்கில், 
"இனி  நீட்  தேர்வுக்கு  எதிராக  தமிழக  மக்கள் போராடக்கூடாது" என்று  உச்சநீதிமன்றம் உத்தரவு!

'அனிதாவின் இறுதிச்சடங்கில்  சுடுகாடு வரை வந்து கண்ணீர் விட்ட விஜயகாந்த்' என்று அந்த அரைமெண்ட்டல் தெலுங்கு நாயுடுவை அன்னை தெரசா அளவுக்கு புகழ்ந்து எழுதி நெஞ்சை நக்கியோர் கவனிக்கவும்.

பா.ரஞ்சித் அவர்களே!

பா.ரஞ்சித் அவர்களே!

'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.

"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.

உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.

அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.

1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?

நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.

நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.

எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.

முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.

அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.

இதிலே எங்கிருந்து வந்தது சாதி?

இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!

தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?

அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?

இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!

அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?

நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!

அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!

அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?

ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.

ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?

உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?

அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.

ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!

தமிழ்வழியில் பாடம் படித்ததால்!

வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.

ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!

பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !

Wednesday, 6 September 2017

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர் (சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி எனும் சுயநலத் தெலுங்கர்
(சான்றுகளுடன்)

கிருஷ்ணசாமி ஒரு தெலுங்கர் என்பதற்கான சான்றுகள் வருமாறு...
-----------------
முதல் படம்,

14 மார்ச் 2014 தினமணி
டாக்டர் கிருஷ்ணசாமி சாதிச் சான்று விவகாரம்:
உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைப்பு
by Venkatesan

புதியதமிழகம் கட்சி நிறுவனரும் சட்டப்பேரவை உறுப்பினருமான டாக்டர் கிருஷ்ணசாமியின் சாதிச் சான்று தொடர்பான உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டபோது டாக்டர் கிருஷ்ணசாமி சமர்ப்பித்த சாதிச் சான்று போலியானது என நெல்லை மாவட்டம் கொடியங்குளத்தைச் சேர்ந்த குமார் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஜி எம் அக்பர் அலி அண்மையில் விசாரித்தார்.
கிருஷ்ணசாமியின் தந்தை கொண்டா ரெட்டி சமூகத்தையும் தாய் அருந்ததியர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
ஆனால் வேட்பு மனுவில் தேவேந்திர குலத்தைச் சேர்ந்தவர் என கிருஷ்ணசாமி குறிப்பிட்டுள்ளார்.
-------------
அடுத்த படம்,

Mallar Advocates Association (MAA)
No.138, Thambu Chetty street,
Chennai 600001.

நாள்: 06.09.2017

அனுப்புநர்,
பெ.இராமராஜ் வழக்குரைஞர்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை 104
தொ.எண். 9176067906

பத்திரிக்கையாளர் சந்திப்பு

உயர்திரு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். எமது வழக்குரைஞர் சங்கம் சார்பில் வருகின்ற வியாழன் (07.09.2017) அன்று காலை 11 மணியளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கவுள்ளோம்.

சந்திப்பின் நோக்கங்கள்:
1.ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள்விரோதத் திட்டங்களுக்கு ஆதரவளித்து தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து வரும் டாக்டர் கிருஷ்ணசாமியைக் கண்டிப்பது.
2. தேவேந்திர குல வேளாளர் சாதியில் பிறக்காமல் பொய்யான சாதிச்சான்றிதழ் பெற்று அப்பாவி மக்களை ஏமாற்றும் டாக்டர் கிருஷ்ணசாமியின் போக்கை அம்பலப்படுத்துவது.
3. நீட் தேர்வுமுறையில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அனிதாவின் மரணத்தைக் கொச்சைப்படுத்திப் பேசுவதோடு தொடர்ந்து மக்கள் நலன்களுக்கு எதிராகச் செயல்படும் டாக்டர் கிருஷ்ண சாமியிடமிருந்து தேவேந்திர குல வேளாளர் சமுதாயக் கொடியாகிய சிவப்பு பச்சைக் கொடியை மக்களை அணிதிரட்டுவதற்கான அறைகூவல் விடுப்பது.

இதர முக்கிய பிரச்சனைகள் தொடர்பாகவும் சந்திப்பு நடைபெற உள்ளதால் தங்களது பிரதிநிதிகளை அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
பெ.இராமராஜ்
---------------
மேற்கண்ட இரண்டு போக கிருஷ்ணசாமி குடும்பம் பற்றி விரிவாக கூறுகிறது தற்போதைய செய்தி ஒன்று:-

டாக்டர் திரு. கிருஷ்ணசாமியின் “தேவேந்திரகுலத்தான்” என்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய கோவை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு

(ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழியாக்கம்)

பொருள்:
டாக்டர்.கே.கிருஷ்ணசாமி மோசடி செய்து “தேவேந்திரகுலத்தான்” என்று பெற்ற சாதிச் சான்றிதழை ரத்து செய்ய விண்ணப்பம்.

பார்வை:
கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் 09-1-1998 அன்று டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு வழங்கப்பட்ட நிரந்தர சாதிச் சான்றிதழ் எண் 1063899,
SL.NO. .10 / 98

ஐயா,
டாக்டர்.கே.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்ற சாதிச் சான்றிதழை கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட்டுள்ளது.

இது தவறானது, இது ஏமாற்றிப் பெற்ற சதான்றிதழாகும் அவர் தனது செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி “தேவேந்திரகுலத்தான்” என்ற போலியான சாதிச்சான்றிதழை ஏமாற்றிப் பெற்றுள்ளார்.

எனவே மோசடிமூலம் பெறப்பட்ட அவரது சாதிச் சான்றிதழை G.O.Ms(2D) 108,dated 12th September 2007இன்படி ரத்து செய்ய வேண்டும்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை தாலுகாவின் கீழ் வரும் அவரது சொந்த கிராமத்தில் இருந்து தனது சாதிச் சான்றிதழைப் பெறுவதற்குப் பதிலாக அவர் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் தேவேந்திரகுலத்தான் என்ற போலியான சாதிச் சான்றிதழை நிலையான சான்றிதழாகப் பெற்றுள்ளார்.

டாக்டர்.கே.கிருஷ்ணசாமி பிறந்த சொந்த கிராம நிர்வாக அலுவலரால் முறையாக விசாரிக்கப்பட்டு நிலையான சாதிச்சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இது வருவாய்த் துறையின் ஆணை எண். Go.Ms.No.781 dtd 2nd May 1988 –என்பதற்கு எதிரானதாகும்.

திரு.கிருஷ்ணசாமிக்கு 09-01-1998 அன்று நிரந்தர சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அச்சான்றிதழில் அவரது முகவரி "கே கிருஷ்ணசாமி த/பெ கருப்பசாமி,
சங்கீதா மருத்துவமனை,
பாலக்காடு மெயின்ரோடு,
குனியமுத்தூர்"
என உள்ளது.
இச்சான்றிதழ் குனியமுத்தூர் கிராமநிர்வாக அலுவலரால் அவர்பிறந்த ஊர் உள்ள ,உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் நேரடியாக விசாரிக்கப்படாமல் கோயம்புத்தூர் தெற்கு தாலுகா அலுவலகம் மூலம் விசாரிக்கப்படாமல் வழங்கப்பட்ட்டுள்ளது.
இது மேற்படி வருவாய்த்துறையின் ஆணைக்கு எதிரானதாகும் திரு.கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் என்ற தனது போலியான சாதிச்சான்றிதழை வைத்துக்கொண்டு இரண்டு முறை ஓட்ப்பிடாரம் SC தொகுதியில் MLA ஆகி உள்ளார் இதன் மூலம் உண்மையான தேவேந்திரகுலமக்கள் இத்தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை இழந்தோம்.

இவர் தனது மகன் திரு.சியாம், மகள் திருமதி. சங்கீதா, இவர்களுக்கு தேவேந்திரகுலத்தான் என்று போலிச் சான்றிதழ் பெறுவதன் மூலமாக ஒட்டப்பிடாரம் MLA தொகுதி மற்றும் தென்காசி MP தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட வைக்க விரும்புகிறார்.
இச்செயல் உண்மையான தேவேந்திரகுல மக்கள் அங்கே போட்டியிடும் வாய்ப்பை இழக்கச் செய்வதாகும்.
ஏனெனில் திரு.கிருஷ்ணசாமி அருந்ததியர்(மாதாரி,சக்கிலியர்) சாதி இவரது மனைவி கேரளா OBC சாதி.
இவ்விருவரும் தேவேந்திரகுலமல்ல.
எனவே அவரது மகனும் மகளும் தேவேந்திர குலமல்ல..

மேலும் திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுல சாதி அல்ல.  ஏனெனில் அவரது தாயார் திருமதி தாமரை தாழ்த்தப்பட்ட அருந்ததியர் (சக்கிலியன்-12,மாதாரி சாதி)
மற்றும் கிருஷ்ணசாமியைப் பெற்ற தந்தை கருப்பக்குடும்பன் அல்ல,
கருப்பக்குடும்பன் அவரது காப்பாளர் மட்டுமே.

திரு.கருப்பக்குடும்பன் அவரது தாயார் தாமரைக்கு இரண்டாவது கணவர் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி 8 வயது மற்றும் அவரது சகோதரி பாக்கியம் 6 வயது இருக்கும்போது தமது தாயார் தாமரையுடன் மசக்கவுண்டன் புதூரிலுள்ள திரு.கருப்பக்குடும்பன் வீட்டிற்கு வந்து அவருடன் சேர்ந்துள்ளார்.
அதற்குப் பின்னர் கருப்பக் குடும்பனுக்கும் தாமரைக்கும் தங்கம் என்ற ஒரு பெண் பிறந்துள்ளது.

இவ்வாறு இருக்கும்போது எப்படி கிருஷ்ணசாமி தன்னை கருப்பக்குடும்பனின் மகன் என்று கூறமுடியும்?

அரசின் விஜிலென்ஸ் குழுதான் அவரைப் பெற்ற தந்தை எந்த சாதியைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும்.
திரு. கிருஷ்ணசாமி தேவேந்திரகுலத்தான் அல்லது குடும்பன் சாதியைச் சார்ந்தவர் அல்ல.

எனவே, தாசில்தார் கோயம்புத்தூர் தெற்கு அவர்கள் டாக்டர் திரு.கிருஷ்ணசாமிக்கு தேவேந்திரகுலத்தான் என்று வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்.

அத்தோடு டாகடர் கிருஷ்ணசாமியின் மகள். திருமதி.கே.சங்கீதா மற்றும் அவரது மகன் திரு. சியாம் இவர்களுக்கும் தேவேந்திரகுலத்தான் என்று போலியாகச் சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பின் அவைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் மற்றும் Tribal நலத்துறை GO.MS.No.106 நாள் 15-10-12 ஆணைப்படி,
கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தமது விஜிலன்ஸ் குழுமூலம் இவ்வாறு போலியாகச் சான்றிதழ் பெற்ற டாகடர் கிருஷ்ணசாமியின் மீது நடவடிக்கை எடுத்து எமது சாதியை காப்பாற்றுவது கடமை.

திருநெல்வேலி,15-8-2017.

அனுப்பப்படும் நகல்கள்:
(1). Principal Secretary to Govt State of Tamil Nad ,
Revenue Department, Secretariat, Fort St George.
Chennai -600009,
(2). Principal Secretary to Govt State

தேதி: 15-8 -2017
அனுப்புநர்,
S. சிவ ஜெயப்பிரகாஷ், A.D.S.P. (ப.நி),
செல் எண்: 9442219159
செயலாளர்: மள்ளர் பாரதம் சங்கம் (பதிவு எண் .85 / 2013)
செயலாளர்: அகிய இந்திய குடும்பர் சத்திரிய மகாசபாவின் தமிழ்நாட்டுக் கிளை,
தலைமை அலுவலகம்: வாரணாசி,
உத்தரப்பிரதேசம்.
Regd. எண் .1894 (882/1910),
ஆசிரியர்: மள்ளர் பாரதம்.

முகவரி:
எண்:C-32/86H,
ஆசாத்தெரு,
மனகாவலம் பிள்ளை நகர்,
பாளையங்கோட்டை & அஞ்சல்,
திருநெல்வேலி மாவட்டம்,
தமிழ்நாடு - 627 002.

பெறுநர்,
மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்,
கோயம்புத்தூர் மாவட்டம்,
ஸ்டேட் பாங்க் சாலை,
கோபாலபுரம்,
கோயம்புத்தூர் -641018
-----------
மேற்கண்ட மூன்றும் பள்ளர் பெருமக்களே கொடுத்த புகார் ஆகும்.
சில பள்ளர் உடன்பிறப்புகள் அவரது வளர்ப்புத் தந்தையை உண்மையான தந்தை என்று நம்பி அவருக்கு ஆதவாக செயல்படுகின்றனர்.
இவர் பூர்வீகம் கோவை காமராசர் வீதி (கோவை புரூக்பீட்ஸ் அருகே இருக்கும் அருந்ததியர் வசிக்கும் பகுதி).
இவர் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர் என்பது அங்கே போய் விசாரித்தால் தெரியும்.
--------
இவரது அரசியல் நுழைவே மக்களைக் காவுகொடுத்த தாமிரபரணிப் படுகொலை மூலம் நடந்தது.
1999ல் மாஞ்சோலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பணியாற்றிய கிருஷ்ணசாமி,
அவர்கள் பிரச்சனை முடிந்து வேலைக்குத் திரும்பிய பிறகு நான்கைந்து நாட்கள் கழித்து எங்களை மிரட்டி கையெழுத்து வாங்கிவிட்டனர் என்று பொய்யாக பேட்டி கொடுக்க,
ஏற்கனவே அதிருப்தியில் இருந்த நிர்வாகம் உடன்படுக்கையை ரத்து செய்து வேலையை நிறுத்தியது.
அடுத்த நடந்த திருநெல்வேலி பேரணியின்போது தி.மு.க முன்பே திட்டமிட்டு தாமிரபரணி ஆற்று நீரை அதிகமாகத் திறந்து வைத்து போராடிய மக்கள் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தி  ஆற்றில் தள்ளியதால் விக்னேஷ் எனும் ஒரு வயது குழந்தை உட்பட 17 பேர் (பெரும்பாலும் பள்ளர்) இறந்தனர். 500 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த சூடு ஆறுவதற்குள்ளே 2001 ல் திமுகவுடன் கூட்டணி வைத்து பத்து எம்.எல்.ஏ. சீட்
வாங்கியவர்தான் இந்த கிருஷ்ணசாமி.

இவருக்காக உயிரைவிட்ட எவரையும் இவர் நினைவுகூர்ந்ததோ மரியாதை செலுத்தியதோ ஒருபோதும் கிடையாது
-------------
இது போக இவர் ஹிந்துத்வா கையாள் என்பதற்கும் இரண்டு சான்றுகள் உண்டு.

குமுதம் 16.1.1998
'என் குரு சங்கராச்சாரியார்தான்' என்று கிருஷ்ணசாமி அளித்த பேட்டிக்கான அட்டைப்பட விளம்பரம்.

இது இவரது ஆரம்பகால இந்துத்துவ சார்புக்கு சான்று ஆகும்.
மேலும், நேற்று அனிதா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும்
அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும்
அதை விசாரிக்க முதல்வரையும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்திக்கவுள்ளதாகவும் பேட்டி கொடுத்தார்.
நேற்று மாலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலமாக சென்று இரவு டெல்லியில் (மிக உயர்தர ஆடம்பரமான) ஹோட்டல் ஷெரட்டனில் தங்கிவிட்டு
இன்று (06.09.2017) காலை 11மணிக்கு எந்த (அப்பாயின்ட்மென்ட்) முன் அனுமதியும் இல்லாமல் நேரடியாக பிரதமருக்கு அடுத்தநிலையில் உள்ள உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அனிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரிக்க மனு கொடுத்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

எந்த பதவியிலும் இல்லாத ஒருவரால் நினைத்த மாத்திரத்தில் உயர்மட்ட பா.ஜ.க அமைச்சரை சந்திக்க முடிகிறதென்றால் அவர் அந்த கட்சிக்கு எவ்வளவு நெருக்கமானவராக இருக்கவேண்டும் என்று யூகிக்கமுடிகிறது.

மேலும் நீட் தேர்வினை ஆதரிக்கும் இவர் எண்ணூற்றி சொச்சம் மதிப்பெண் மட்டுமே எடுத்த தனது மகளுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் கெஞ்சி சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான இட
ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வியில் இடமும் வாங்கிக்கொடுத்தவர் ஆவார்.
இதனை பாலா பாரதி (கன்னடர்) அம்பலப்படுத்தியுள்ளார்.

இவர் தற்போது மத்திய அரசிடம் எதிர்பார்ப்பது தனது மகளுக்காக திருவனந்தபுரத்தில் கட்டிவரும் மிகப் பிரம்மாண்டமான மருத்துவமனைக்கு எந்த தடங்கலும் வரக்கூடாது என்பதுதான்.

எங்கெங்கு நோக்கினும் உருமறைப்பு வந்தேறிகள் !

Monday, 4 September 2017

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!

எனக்கு தோன்றுகிறது....

திருமாவளவனின் ஏதோவொரு அசிங்கமான ரகசியம் திமுக கைவசம் உள்ளது.

இல்லையென்றால் எந்த ஒரு மனிதனும் திருமா போல கணக்கில்லாத அவமானத்தையும் அசிங்கத்தையும் கேவலத்தையும் சகித்துக்கொண்டு அடிமையாகவே காலில் விழுந்து கிடக்கமாட்டான்,
பதிலுக்கு எத்தனை பெரிய பணமோ பதவியோ கிடைப்பதாக இருந்தாலும் சரி.

ஆனால் திருமா செய்யும் தரகர் வேலைக்கு  பெரிதாக எதுவும் கிடைப்பதாகத் தெரியவில்லை.

தமிழ்தேசியம் பற்றிய புரிதல் இல்லாத ஒரு தமிழர் இப்படி ஒரு அடிமைச் சேவகம் செய்தால் கூட மனதை தேற்றிக்கொள்ளலாம்.

ஆனால் தமிழ்க்குடியில் பிறந்து தமிழ்தேசியம் பற்றி நல்ல புரிதலுள்ள ஒருவர் இவ்வாறு வந்தேறிகள் தூக்கியெறியும் எச்சிலுக்கு வாலாட்டும் நாயாக இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

திருமாவளவன் இந்த பிழைப்பு பிழைப்பதை விட பேசாமல் செத்துத்தொலையலாம்.

நான் எப்பொதும் ராஜபக்சவிடம் பல்லிளித்த திருமாவை ஆதரித்ததில்லை.
எதிர்க்கவே செய்கிறேன்.
ஆனாலும் சிலர் இனப்பற்றினால் அவர் மீது இன்னமும் நம்பிக்கையுடன் உள்ளனர்.

முத்துக்குமார் உயிரைக் கொடுத்து ஏற்படுத்திய எழுச்சியை தானே முன்னின்று ஊற்றிமூடியது போல
தற்போது தங்கை அனிதா மரணத்தால் ஏற்பட்ட உணர்ச்சி அலையையும் சத்தமில்லாமல் அவர் முடித்துவைத்ததைக் கண்கூடாகக் கண்டாயிற்று.

இனியும் யாராவது 'அவர் தமிழர்' என்ற இனப்பாசத்தினால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதாக இருந்தால்,
அந்த எண்ணத்தை விட்டுவிட்டு அவரை வேற்றினத்தவர் போல முற்றாக புறக்கணிக்க வேண்டும்.

தமிழர்கள் அதிலும் குறிப்பாக அவரைத் தாங்கிநிற்கும் பறையர்கள் வி.சி.க விலிருந்து விலகவேண்டும்.

இங்கு திருமா மட்டுமே தமிழரல்ல!

Sunday, 3 September 2017

நீட் பழியும் பார்ப்பனர் மீதா?!

நீட் கொண்டுவந்தது ஆரிய பார்ப்பான் என்று அலறும் குருடர்களுக்கு,

நீட் தேர்வு முறையை கொண்டு வந்த மன்மோகன் சிங் பிராமணர் இல்லை,

அதை அமல்படுத்திய மோடி பிராமணர் இல்லை,

அதை கொண்டுவந்தபோது அதை எதிர்க்காத ஸ்டாலின் பிராமணர் இல்லை,

இன்றைக்கும் நீட் வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றிபெற்ற நளினி சிதம்பரம் பார்ப்பனர் இல்லை ,

அதை ஏற்று இப்பொழுது கையெழுத்திட்ட எடப்பாடி பழனிச்சாமி பார்ப்பனர் இல்லை,

அதற்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வரும் தமிழிசையும் கிருஷ்ணசாமியும் பார்ப்பனர் இல்லை,

தான் உயிருடன் இருந்த கடைசி நொடி வரை தமிழகத்தில் அந்த நீட்டை எதிர்த்த ஜெயலலிதா மட்டுமே பிராமணர்...!

ஆனால் நீங்கள் திட்டுவது பார்ப்பனர்களையும் பிராமணர்களையும்....!
------------------------------- 
சிந்தனை: உமாமகேஷ்வரன் அதங்குடியான்

மேலும் அறிய,
search நீட் ஏன்? வேட்டொலி

அனிதா இடத்தில் மலையாள மாணவி

அனிதா இடத்தில் மலையாள மாணவி
×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×,×

கேரள மாநில கொல்லம் அருகே எலமேடு பகுதியைச் சேர்ந்தவர் மாணவி ரேவதி.
இவர் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்றார்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில், மாணவி ரேவதிக்கு சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைத்தது.
அனுமதி கடிதத்துடன் கல்லூரிக்கு சென்ற மாணவியிடம் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட சில ஆவணங்கள் இல்லை.
விரைவில் சான்றிதழ்களைச் சமர்ப்பிப்பதாக மாணவியின் பெற்றோர் கூறியதை கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்க மமறுத்துவிட்டனர்.
இந்த விஷயம் தொடர்பான தகவல், தொழிலதிபர் ஒருவரின் மூலம் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனின் கவனத்துக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து, கேரள முதல்வர் பினராயி விஜயன், செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மாணவியின் சான்றிதழ்கள் ஒப்படைக்கப்படும் என்று அம்மாநில அதிகாரிகளின் மூலமாக கல்லூரி நிர்வாகத்துக்கு உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து மாணவி ரேவதி கல்லூரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஏழையாகப் பிறந்தாலும் மலையாளியாகப் பிறக்கவேண்டும்.
இருப்பிட சான்றிதழோ சாதி சான்றிதழோ இல்லாமல் போனாலும்
கடைசி தேதி முடிந்த பிறகும்கூட தமிழகத்தில் இடம் கிடைக்கும்.
அதற்கு துணையாக தமிழகத்தில் மலையாள தொழிலதிபர்களும் கேரள முதலமைச்சரும் இருப்பார்கள்.

ஏதோ தன் பரம்பரை சொத்தில் பங்கு கொடுத்தது போல 'ஏழை மாணவிக்கு உதவிய கேரள முதலமைச்சர்' என பாராட்டி எழுத தமிழ் ஊடகங்களும் இருக்கும்.

தமிழ் இனத்தில் ஏழைகள் உட்பட அனைவரும் மாணவி அனிதா போல சாவதைத் தவிர வேறு வழியில்லை.