Friday 8 September 2017

பா.ரஞ்சித் அவர்களே!

பா.ரஞ்சித் அவர்களே!

'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.

"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.

உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.

அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.

1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.

வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?

நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.

நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.

ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.

எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.

முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.

நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.

அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.

இதிலே எங்கிருந்து வந்தது சாதி?

இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!

தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?

அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?

இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!

அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?

நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!

அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!

அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?

ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.

ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?

உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?

அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.

ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!

தமிழ்வழியில் பாடம் படித்ததால்!

வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.

ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.

ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!

பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !

No comments:

Post a Comment