Thursday 21 September 2017

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்

நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
. . . . . . . . . . . . . . . . .
குற்றச்சாட்டு: நாம்தமிழர் தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதில்லை.
தமிழரசன், சுப.முத்துக்குமார் படங்களை பயன்படுத்துவதில்லை

பதில்: தனித்தமிழ்நாடு பேசினால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்களை அவர்கள் வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது.
அதனால் அவர்கள்
"இந்தியன் எனும் இனம் கிடையாது.
இந்திய ஒன்றியத்தை தேசிய இனங்கள் மாநில அதிகாரங்களுடன் ஆள வேண்டும்"
என்று மறைமுகமாக தேசியவாதத்தை வலியுறுத்துகிறார்கள்.
காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவு, சீக்கியர்களுக்கு ஆதரவு என காய்நகர்த்துகிறார்கள்.
. . . . . . . . . .

கு: ஓட்டுக்கு அரசியல் செய்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிதான் தமிழ்தேசியம் என்று கூறுகிறார்கள்

ப: நடைமுறையில் தமிழகத்தின் முதலமைச்சர் பதவிதான் உலகத் தமிழர்களுக்கு தலைமையாக உள்ளது.
அதை வேற்றின வந்தேறிகளே ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதை கைப்பற்றுவது தமிழ்தேசியத்தின் முதல்படி ஆகும்.
ஓட்டுதான் ஒரு சாதரண குடிமகனின் பலம் அதை திரட்ட ஓட்டரசியல்தான் செய்யவேண்டும்.
. . . . . . . . . . .

கு: வேற்றின வேட்பாளர்கள் 15 பேரை நிறுத்தினர்

ப: ஜனநாயகத்தில் தமிழக குடிமக்களில் வேற்றினத்தார் எத்தனை சதவீதம் உள்ளனரோ அதற்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துதான் ஆகவேண்டும்.
234ல் 15 என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் ஏற்கக்கூடியதுதான்.
. . . . . . . . . . . . . .

கு: எந்த பிரச்சனையையும் கையிலெடுத்து இறுதிவரை போராடுவதில்லை

ப: நாம்தமிழரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வசதியானவர்களோ பதவி உள்ளவர்களோ கிடையாது.
அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தேவருகிறார்கள்.
. . . . . . . . .

கு: சீமான் பாதி-தெலுங்கச்சியை திருமணம் செய்துள்ளார்.

ப: சீமானுடைய மாமியார் தெலுங்கர் என்பது உண்மை கிடையாது.
அவர் தமிழ்க்குடியான கம்மாளர் சாதியைச் சேர்ந்தவர்.
அவரது மாமனார் ஒரு மறவர் குலத் தமிழர்.
தவிர எந்த தமிழரும் எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்.
அப்படி வேற்றினத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் வாரிசை மீண்டும் தமிழினத்தில் மணமுடிக்க மட்டுமே தமிழ்தேசியம் வலியுறுத்துகிறது.
தூய்மையான ரத்தம், இனக்கலப்பின்மை போன்றவை நடைமுறையில் 100% சாத்தியமில்லை.
. . . . . . . . . . .

கு: சீமான் தமிழினப் பகைவர் ஈ.வே.ரா வை ஏற்றுக்கொண்டார்

ப: தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் கைவிட்டுவிட்டார்.
தொடக்கத்தில் திராவிட சிந்தனைகளின் தாக்கம் அவரிடம் இருந்தது.
தற்போது அவர் தெளிவாகிவிட்டார்.
. . . . . . . . . .

கு: சீமான் இனவெறி பிடித்தவர்.
தமிழன் ஆளவேண்டும் என்று ஏன் கூறுகிறார்.

ப: சீமான் கேட்பது ஒரு ஒன்றியத்தின் கீழ் வாழும் தேசிய இனத்திற்கான ஆகக்குறைந்த உரிமை ஆகும்.
இதைக் கூட தரமுடியாது என்பது ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போக்கே ஆகும்.
சீமான் எந்த இனத்திற்கும் எதிரானவர் கிடையாது.
தன் இனத்திற்கான உரிமையைக் கேட்கிறார் அவ்வளவுதான்.
. . . . . . . . .

கு: சீமான் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆனால் ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை.

ப: சீமான் தமிழக முதலமைச்சராக ஆனாலும் கூட ஈழத்தில் நேரடியாக பெரிதாக எதையும் செய்யமுடியாது.
முதலில் ஈழத்திற்காக அரசியலுக்கு வந்தார்தான்.
ஆனால் தற்போது தமிழகமும் ஈழத்தைப் போலவே அடக்குமுறைகள் சுமத்தப்பட்டு ஒரு இனப்படுகொலையை எதிர்நோக்கியுள்ளதை அறிந்து அவர் தமிழக அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
ஈழத்தமிழர்களும் சீமானை நம்பி இல்லை.
எம்.ஜி.ஆர் போல தமிழகத்திற்குள் ஈழத்தமிழருக்கு தேவையான ஆதரவை வழங்க சீமான் தயாராக இருக்கிறார்.
தமிழகத் தமிழருக்கு ஈழத்தின் நிலையை புரியவைத்ததில் சீமானின் பங்கு மறுக்கமுடியாது.
நாம்தமிழர் புலம்பெயர் தமிழகத் தமிழர்களிடம் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கி ஈழத்தமிழரையும் சேர்த்துக்கொண்டு இயங்குகிறது.
அதற்குக்கூட விடாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.
. . . . . . . . . .

கு: சீமான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான பெயரான சைமன் என்பதை மறைக்கிறார்.

ப: சீமானின் உண்மையான பெயர்  'செபாஸ்டியன் சீமான்' என்பதே.
அவரது தாய் பெயர் அன்னம்மாள்.
தந்தை பெயர் செந்தமிழன்.
அவரது குடும்பம் கிறித்தவத்திற்கு மாறியபிறகு செபாஸ்டியன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.
மற்றபடி சைமன் என்பது அவரது பெயர் கிடையாது.
அவர் தொடக்கத்தில் திராவிடக் கட்சியில் இணைந்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டார்.
பைபிளை கூட விமர்சித்துள்ளார்.
. . . . . . . .

கு: நாத்திகரான சீமான் முருகனை தூக்கிப்பிடிக்கிறார்

ப: முருகன் உயிருடன் வாழ்ந்த மனிதன்.
தமிழர்களின் தலைவன்.
சீமான் முருகனை வணங்கச்சொல்லவில்லை.
முன்னோராக முப்பாட்டனாக ஏற்கும்படி சொல்கிறார்.
திருமாலையும் அவ்வாறே முன்வைக்கிறார்.
மற்றபடி அவர் இப்போதும் இறைமறுப்பாளர்தான்.
. . . . . . . . .

கே: சீமான் தலைவருடன் புகைப்படம் எடுத்ததைத் தவிர வேறு என்ன சாதித்தார்

ப: சீமான் தொடக்கத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.
புலிகளின் திரைத்துறை திரைப்படங்களை எடுத்தபோது சீமான் அங்கே பல நாட்கள் தங்கி இயக்குநராக பணியாற்றினார்.
தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாளை ஒட்டி (2004ல்) புலிகள் வெளியிட்ட காணொளியில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீ போன்றோருடன் சீமானின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
. . . . . . . . . .

கே: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகருக்கும் சீமானுக்கும் என்ன பெரிய வேறுபாடு

ப: 1996 முதல் இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும்
2009 இராமேஸ்வரத்தில் தன் இனம் படுகொலை செய்யப்படுவதை பொறுக்கமுடியாமல் சீமான் பேசிய உணர்ச்சிமயமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவும்வரை சீமான் எப்படி இருப்பார் என்பதுகூட பலருக்குத் தெரியாது.
அவரது அடையாளம் திரையின் மூலம் மக்கள் மனதில் பதிந்தது கிடையாது.
சினிமா மூலம் பிரபலமாகி நன்றாக சம்பாதித்து நாடிநரம்பு அடங்கியபிறகு ஓட்டு அறுவடை செய்ய அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர் போல அவர் சுயநலவாதி கிடையாது.
. . . . . . . . . .

கே: சீமானை விட்டு பல இனவுணர்வாளர்கள் விலகியது ஏன்

ப: அவசரம்தான் காரணம். தமிழினத்தின் அரசியல் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது.
காலம் தேவை.
இனத்தின் மீது அதிக பற்று கொண்டோர் அந்த அளவு பொறுமையாக இருக்கமுடியவில்லை.
வெளியே வந்தவர்கள் பெரிதாக சாதிக்கவும் இல்லை.
. . . . . . . . . .

கே: சீமான் முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழ்தேசியம் அமைந்ததாக ஆகிவிடுமா?

ப: சீமான் முதலமைச்சராவது தமிழ்தேசியத்தில் 5% ஐக் கூட பூர்த்தி செய்யாது.
ஆனால் முதல்படியாக அமையும்.
அதாவது மக்களிடம் இனவுணர்வும் மொழியுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் பொருளாதார பலமும் ஏற்படுவது முதல் அடி ஆகும்.
. . . . . . . .

கே: சீமான் பெரிதாக வாக்கு பெறவில்லையே!?

ப: இங்கே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பத் தகுந்தவை கிடையாது.
அதிலும் ஊழல் நடக்கிறது.
ஒரு கட்சி 50% மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர்களுக்கு 20% ஓட்டாவது விழும்.
அதாவது நாம்தமிழருக்கு போடப்பட்ட ஓட்டில் மூன்றில் ஒன்றுதான் நாம்தமிழருக்கு பதிவாகும்.
திரும்ப சரிபார்க்க எந்த வழியும் கிடையாது.
அதனால்தான் வளர்ந்த நாடுகள் போல வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் கோருகின்றன.
. . . . . . . .

கே: சீமான் மலையாளி என்கிறார்களே?

ப: சீமான் தமிழர்தான்.
அவர் பிறந்த நாடார் குலம் கேரளாவிலும் உள்ளதால் அதைவைத்து குழப்புகிறார்கள்.
கேரளாவில் பாதி தமிழர் மண்.
அதில் வாழும் நாடார்கள் உட்பட பல்வேறு தமிழ் பேசும் சாதிகள் தமிழர்களே!
பிரபாகரனே மலையாளிதான் என்று கதைகட்டி அவரது உறவினர்கள் என்று சில மலையாளிகளைப் பேட்டி எடுத்து வடயிந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் குடும்பம் வல்வெட்டித்துறையில் பாரம்பரியமான பிரபலமான குடும்பம் ஆகும்.
சீமான் மலையாளி என்பதும் அதுபோல எந்த அடிப்படையும் இல்லாத கட்டுக்கதை.
. . . . . . .

கே: சீமான் தமிழர் என்ற ஒரு தகுதி போதுமா?

ப: போதாதுதான்.
சீமான் மாநில உரிமைகள் மூலம் முன்வைக்கும் திட்டங்களும் தீர்வுகளும் இதுவரை எந்த முதலமைச்சர் வேட்பாளரும் முன்வைத்த ஆட்சிமுறையை விட சிறப்பாக உள்ளன.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துவிட்டோம்.
சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு?
வாய்ப்பு கொடுக்குமுன்னே குற்றம்சாட்டுவது நிராகரிப்பது எந்தவகையில் நியாயம்?
. . . . . . . .

கே: சீமான் எந்த குறையுமே இல்லாதவர் என்கிறீர்களா?

ப: இல்லை. குறைகளை விட நிறைகள் அதிகம் எனலாம்.
குறையே இல்லாத சொக்கத் தங்கம்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அப்படி ஒருவர் வரவே போவதில்லை.
. . . . . . . . . . 

கே: சீமான் மாவீரரான ஒரு ஈழப்போராளியின் மனைவிக்கு வாழ்க்கை கொடுப்பதாக இருந்ததே!
பிறகு ஏன் வசதியான வீட்டில் பெண் எடுத்தார்?

ப: சீமான் ஒரு ஈழத்தமிழரை மறுமணம் செய்வதற்கு பேச்சு நடந்தது. ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.
பேச்சு ஆரம்பத்திலேயே முறிந்துவிட்டது.
இதேபோல விஜயலட்சுமி என்ற பெண்ணும் சீமான் மீது புகார் கொடுத்து அது ஆதாரம் எதுவுமில்லாமல் தள்ளுபடி ஆனது.
சீமான் மீது அவதூறு சுமத்தவே இவை பெரிதாக்கப்படுகின்றன.
. . . . . . . . . . .

கே: சீமான் தனித்தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் தொடங்கினால் ஆதரிப்பாரா?

ப: சீமான்தான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.
சீமான் பதவியில் அமர்ந்து ஜனநாயக வழியில் காவிரி பங்கீடு மறுப்பு , மீனவர் கொலை, பேரழிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவார்.
இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பாலும் நசுக்கவே படும்.
சீமான் முன்வைக்கும் மாநில உரிமைகள் மூலமான தீர்வு எடுபடாத பிறகு மக்கள் புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடுவார்கள்.
ஈழத்தில் தந்தை செல்வா போல தமிழகத்திற்கு சீமான் அமையவுள்ளார்.
அவ்வளவுதான்.

(நான் நாம்தமிழர் கட்சியில் இல்லை. ஆதரவாளன் மட்டுமே)

No comments:

Post a Comment