Monday, 11 September 2017

தலித் என்ற வார்த்தை அம்பேத்கர் விரும்பாதது

தலித் என்ற வார்த்தை அம்பேத்கர் விரும்பாதது

"இன்று தலித் என்று குறிப்பிடப்படும் சாதிகள் அந்த வார்த்தைக்கு மும்முரமாக உரிமை கோருகிறார்கள்.
இந்த வார்த்தை (தலித்) அவர்கள் தாழ்மையுள்ள மற்றும் நாதியற்ற சமூகம் எனும் தோற்றத்தை உருவாக்குகிறது.

ஆனால் உண்மையில் ஒவ்வொரு மாகாணத்திலும்,
இந்த சாதிகளைச் சேர்ந்த பலர் வசதியானவர்களாக மற்றும் நன்கு படித்தவர்களாக உள்ளனர்
மேலும் இம்முழு சமூகமும்  அதன் உரிமைகள் நனவாகும் வகையில் வளர்ந்து வருகிறது.

இந்திய சமுதாயத்தில் தங்களுக்கு ஒரு மரியாதையான நிலையை தக்கவைத்துக் கொள்வவதற்கு அவர்கள் உறுதியாக விரும்புகிறார்கள், அதற்காக முடிந்த எல்லா முயற்சிகளையும் செய்கிறார்கள்.

மேற்கண்ட அனைத்து காரணங்களினால்,

'தலித்' என்ற சொல்லைப் பயன்படுத்துவது பொருத்தமற்றது மற்றும் தவறானது.

தலித் வகுப்பினரின் பிரதிநிதி என்ற வகையில்,
நாம் வேறொரு நல்ல சொல்லைக் கண்டறியும் வரை,
எந்தத் தயக்கமும் இல்லாமல் தீண்டப்படாதவர்கள் தம்மை 'சாதியற்ற இந்துக்கள்' அல்லது 'வெளிச்சாதி இந்துக்கள்' என்று அழைத்துக்கொள்ள வேண்டும்.

“The castes that are today described as Dalits have serious reservations about the use of this word.

This word creates the impression that they are a lowly and helpless community,
whereas the fact is that in every province, many members of these castes are prosperous and well-educated and the entire community is growing conscious of its rights.

They have a strong desire to secure a respectable position for themselves in Indian society and they are making all possible efforts for it.

Due to all these reasons, the use of the word ‘Dalit’ is inappropriate and wrong.

As a representative of the Dalit classes, I can say without any hesitation that till we can find a better word, the Untouchables should be addressed as Non-Caste Hindus or Outcaste Hindus”.

(Dr Babasaheb Ambedkar
Sampoorna Vangmay, Volume 4,
published by 'Ambedkar Pratishthan')

(Ambedkar Pratishthan,
under the Ministry of Social Justice and Empowerment,
Government of India)
----------------
தலித் என்பது தல் எனும் சமஸ்கிருத வார்த்தையில் இருந்து எடுக்கப்பட்டது.
இதற்கு நசுக்கப்பட்ட, கிழிகின்ற அல்லது சிதறடிக்கப்பட்ட என்று பொருள்.
இதை அம்பேத்கர் சிலமுறை பயன்படுத்தியுள்ளார் என்றாலும் இந்த வார்த்தையை அவர் வெறுத்தார்.
------------
மேலும் ஒரு சான்றைப் பார்ப்போம்.

1938 ல் நடந்த விவாதத்தில் காந்தி பரிந்துரைத்த ஹரிஜன் வார்த்தையை அம்பேத்கர் நிராகரித்தார்.

"நான் ஒரு நல்லபெயரை பரிந்துரைக்கும் நிலையில் இல்லை.
ஆனால் ஒன்றை நான் கூறவேண்டும், 'ஹரிஜன்' என்ற பெயர் நடைமுறையில் 'அஸ்பருஸ்யா' (ஸ்பரிசம் என்றால் தொடுதல் அஸ்பரிஸ்யா என்றால் தீண்டத்தகாதோர்) என்ற பதத்திற்கு சமமாக ஆகிவிட்டது அதற்குமேல் வேறொன்றும் அதில் இல்லை.

அதோடு மாண்புமிகு பிரதமரும் நாங்கள் நினைப்பது போலவே 'ஹரிஜன்' எனும் வார்த்தை தற்போது 'பட்டியல் சாதி' என்பதைப் போலவே ஆகிவிட்டதாக உணர்வதாக எனக்குத் தோன்றுகிறது.
தற்போதைக்கு அந்த வார்த்தையை (ஹரிஜன்) பயன்பாட்டிலிருந்து விலக்குவது அவரது (பிரதமரது) கடமையாகும்.

இதற்கு பதிலாக வேறொரு வார்த்தையை தேடுவதில் அவர் எங்களுடன் கலந்து ஆலோசித்திருக்கலாம்.

எது எப்படியோ அவரது வாதங்கள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
எனவே நான் வெளிநடப்பு செய்கிறேன்"

" I am not in a position to suggest any better name,
but I must say that the name “Harijan” has now become practically equivalent to the term “Ashprisya”;
beyond that there is nothing remaining in that name,

and I would think that the honourable the Prime Minister had felt in the same way in which we feel that the word “Harijan” has now become identical with the expression “Scheduled Class”
then it is his duty, for the movement, to have withdrawn that word, and latter on he could have discussed the matter with us with a view to find out some alternative term.
His arguments, however, have not carried any conviction to us.
I  will, therefore, leave the Hall.”

(Dr. B.R. Ambedkar and other members of the Independent Labour Party then walked out of the House.)_ Vol, 2. writings and speeches.

இதிலும் வேறொரு வார்த்தையை தேடுவோம் என்றுதான் முடித்துள்ளார்.
-----------
மேலும் ஒரு சான்று தருகிறேன்.

1945 ல் அம்பேத்கர் எழுதிய புத்தகம் இவ்வாறு முடிகிறது.

"புத்தகத்தை வாசித்தவர்கள் ஒடுக்கப்பட்ட வர்க்கம், பட்டியல் சாதிகள், ஹரிஜன், அடிமைச்சேவக வர்க்கம் என பல பெயர்களை நான் தீண்டப்படாதோரை குறிக்க பயன்படுத்தியதை கண்டிருப்பார்கள்.
இது ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும், அதிலும் குறிப்பாக இந்தியாவின் நிலை பற்றிய அறிமுகமில்லாதோருக்கு ஏற்படுத்தக்கூடும் என்பதை நான் அறிவேன்.
ஒரு பொதுவான வார்த்தையை பயன்படுத்துவது எனக்கு வேறெதையும் விட மகிழ்ச்சி தருவதாகும்.
இந்த தவறு முழுக்க என்னுடையது இல்லை.
மேற்கண்ட பெயர்கள் அதிகாரப்பூர்வ மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தீண்டப்படாதோரைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 'பட்டியல் சாதியினர்' என்ற குறிப்பிடுகிறது.
இந்த வார்த்தை 1935ல் பயன்பாட்டுக்கு வந்தது.
அதற்கு முன்பு அவர்கள் 'ஹரிஜனம்' என்று காந்தி அவர்களாலும் 'ஒடுக்கப்பட்ட வர்க்கம்' என்று அரசாலும் குறிப்பட்டனர்.

"The reader will find that I have used quite promiscuously in the course of this book a variety of nomenclature such as Depressed Classes, Scheduled Castes, Harijan and servile Classes to designate the Untouchables.
I am aware that this is likely to cause confusion especially for those who are not familiar with the condition in India.
Nothing could have pleased me better than to have used one uniform nomenclature.
The fault is not altogether mine.
All these names have been used officially and unofficially at one time or other for the Untouchables.
The term under the government of India Act is “Scheduled Castes.”
But that came into use after 1935. Before that they were called “Harijans” by Mr. Gandhi and
”Depressed Classes” by Government.”
(Dr.Ambedkar, What Congress and Gandhi have done to the untouchables. 1945)

அதாவது 1945 லே கூட தலித் என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை.

அவர் எப்போதும் தீண்டப்படாதோர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அலுவல் ரீதியான பயன்பாட்டிற்கு முதலில் அவர் பரிந்துரைத்தது 'சாதியற்ற இந்துக்கள்' என்ற வார்த்தை.
சட்ட ரீதியான பயன்பாட்டிற்கு 'பட்டியல் சாதியினர்' என்ற பெயரை ஏற்றுக்கொண்டு 1942 ல் 'பட்டியல் சாதிகளின் கூட்டமைப்பு' என்ற பெயரில்தான் இயக்கத்தையும் (scheduled Castes
Federation) தொடங்கினார்.

ஆக, தலித் என்ற பெயரை அம்பேத்கர் பரிந்துரைக்கவில்லை.
தலித் என்று பட்டியல் சாதியினரைக் குறிப்பிடுவது கொள்கைக்கு எதிரானது.

தலித், தாழ்த்தப்பட்டோர் போன்ற வார்த்தைகள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டவையும் கூட.

தமிழகத்தில் 1981க்குப் பிறகு மேற்கண்ட வார்த்தைகளை பொதுவெளியில் பயன்படுத்துவது குற்றம்.

அப்படி பயன்படுத்துவோர் மீது வழக்கு தொடுத்து தண்டிக்கவும் முடியும்.

No comments:

Post a Comment