Wednesday, 7 June 2023
மேல்பாதி கோவிலுக்கு சீல் வைத்தது சரியா?
Friday, 6 July 2018
யாரெல்லாம் திராவிடர்? -ஈ.வே.ரா விளக்கம்
யாரெல்லாம் திராவிடர்?
எத்தனைமுறை விளக்கம் அளித்தாலும் திராவிடவாதிகள் திரும்பத் திரும்ப கேட்கும் கேள்வி "யார் தமிழர்?" என்பது.
சரி "யார் திராவிடர்?" என்பதற்கு சரியான விளக்கம் உண்டா?
ஈ.வே.ரா இதுபற்றிக் கூறியதைப் பார்ப்போம்,
"தமிழர்களாகிய நாம், ‘திராவிட நாடு திராவிடருக்கே’ ஆக வேண்டுமென்பதில் முனைந்திருப்போம்.
சில நாட்களில் ஒரிசாக்காரன் தன்னையும் திராவிடன் என்றுணர்ந்து நம்முடன் சேர்வதாக இருந்தால் சேர்ந்து கொள்ளட்டும்;
இல்லையேல், மலையாளி தன் இனம் திராவிட இனமல்ல என்பதாக அறிந்து, நம்முடைய கூட்டிலிருந்து விலகிவிட விரும்பினால் ஒதுங்கிப் போகட்டும்’.
-- ஈ.வே.ரா (குடிஅரசு, 03.06.1944)
அதாவது தமிழர்கள் திராவிடர்களாக இருக்கவேண்டும்.
ஒரிசாக்காரரும் மலையாளிகளும் விரும்பினால் திராவிடர் இல்லையென்றால் இல்லை.
அதாவது தமிழர் மட்டும் திராவித்தின் பெயரால் யார்வந்தாலும் தமது நாட்டை பங்குபோட்டுக்கொள்ள வேண்டும்.
ஆனால் மற்றவர் என்று வரும்போது அவரவர் விருப்பம்.
என்னவொரு அநியாயம்...?
Thursday, 21 September 2017
நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
நாம்தமிழர் மீதான குற்றச்சாட்டுகள்
. . . . . . . . . . . . . . . . .
குற்றச்சாட்டு: நாம்தமிழர் தனித்தமிழ்நாடு பற்றி பேசுவதில்லை.
தமிழரசன், சுப.முத்துக்குமார் படங்களை பயன்படுத்துவதில்லை
பதில்: தனித்தமிழ்நாடு பேசினால் பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்பட்டு தேர்தலில் போட்டியிட முடியாதபடி தடை செய்யப்படுவார்கள்.
தமிழ்நாடு விடுதலை அடைய போராடிய தலைவர்களை அவர்கள் வெளிப்படையாக முன்னிறுத்த முடியாது.
அதனால் அவர்கள்
"இந்தியன் எனும் இனம் கிடையாது.
இந்திய ஒன்றியத்தை தேசிய இனங்கள் மாநில அதிகாரங்களுடன் ஆள வேண்டும்"
என்று மறைமுகமாக தேசியவாதத்தை வலியுறுத்துகிறார்கள்.
காஷ்மீர் போராளிகளுக்கு ஆதரவு, சீக்கியர்களுக்கு ஆதரவு என காய்நகர்த்துகிறார்கள்.
. . . . . . . . . .
கு: ஓட்டுக்கு அரசியல் செய்கிறார்கள்.
முதலமைச்சர் பதவிதான் தமிழ்தேசியம் என்று கூறுகிறார்கள்
ப: நடைமுறையில் தமிழகத்தின் முதலமைச்சர் பதவிதான் உலகத் தமிழர்களுக்கு தலைமையாக உள்ளது.
அதை வேற்றின வந்தேறிகளே ஆக்கிரமித்து வருகின்றனர்.
அதை கைப்பற்றுவது தமிழ்தேசியத்தின் முதல்படி ஆகும்.
ஓட்டுதான் ஒரு சாதரண குடிமகனின் பலம் அதை திரட்ட ஓட்டரசியல்தான் செய்யவேண்டும்.
. . . . . . . . . . .
கு: வேற்றின வேட்பாளர்கள் 15 பேரை நிறுத்தினர்
ப: ஜனநாயகத்தில் தமிழக குடிமக்களில் வேற்றினத்தார் எத்தனை சதவீதம் உள்ளனரோ அதற்கான பிரதிநிதித்துவத்தை கொடுத்துதான் ஆகவேண்டும்.
234ல் 15 என்பது கொஞ்சம் அதிகம் என்றாலும் ஏற்கக்கூடியதுதான்.
. . . . . . . . . . . . . .
கு: எந்த பிரச்சனையையும் கையிலெடுத்து இறுதிவரை போராடுவதில்லை
ப: நாம்தமிழரும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வசதியானவர்களோ பதவி உள்ளவர்களோ கிடையாது.
அவர்களால் முடிந்ததை அவர்கள் செய்தேவருகிறார்கள்.
. . . . . . . . .
கு: சீமான் பாதி-தெலுங்கச்சியை திருமணம் செய்துள்ளார்.
ப: சீமானுடைய மாமியார் தெலுங்கர் என்பது உண்மை கிடையாது.
அவர் தமிழ்க்குடியான கம்மாளர் சாதியைச் சேர்ந்தவர்.
அவரது மாமனார் ஒரு மறவர் குலத் தமிழர்.
தவிர எந்த தமிழரும் எந்த இனத்திலும் திருமணம் செய்யலாம்.
அப்படி வேற்றினத்தில் திருமணம் செய்தால் பிறக்கும் வாரிசை மீண்டும் தமிழினத்தில் மணமுடிக்க மட்டுமே தமிழ்தேசியம் வலியுறுத்துகிறது.
தூய்மையான ரத்தம், இனக்கலப்பின்மை போன்றவை நடைமுறையில் 100% சாத்தியமில்லை.
. . . . . . . . . . .
கு: சீமான் தமிழினப் பகைவர் ஈ.வே.ரா வை ஏற்றுக்கொண்டார்
ப: தற்போது அந்த நிலைப்பாட்டை அவர் கைவிட்டுவிட்டார்.
தொடக்கத்தில் திராவிட சிந்தனைகளின் தாக்கம் அவரிடம் இருந்தது.
தற்போது அவர் தெளிவாகிவிட்டார்.
. . . . . . . . . .
கு: சீமான் இனவெறி பிடித்தவர்.
தமிழன் ஆளவேண்டும் என்று ஏன் கூறுகிறார்.
ப: சீமான் கேட்பது ஒரு ஒன்றியத்தின் கீழ் வாழும் தேசிய இனத்திற்கான ஆகக்குறைந்த உரிமை ஆகும்.
இதைக் கூட தரமுடியாது என்பது ஒரு இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறைப் போக்கே ஆகும்.
சீமான் எந்த இனத்திற்கும் எதிரானவர் கிடையாது.
தன் இனத்திற்கான உரிமையைக் கேட்கிறார் அவ்வளவுதான்.
. . . . . . . . .
கு: சீமான் ஈழத்தை வைத்து அரசியல் செய்கிறார்.
ஆனால் ஈழத்திற்காக எதையும் செய்யவில்லை.
ப: சீமான் தமிழக முதலமைச்சராக ஆனாலும் கூட ஈழத்தில் நேரடியாக பெரிதாக எதையும் செய்யமுடியாது.
முதலில் ஈழத்திற்காக அரசியலுக்கு வந்தார்தான்.
ஆனால் தற்போது தமிழகமும் ஈழத்தைப் போலவே அடக்குமுறைகள் சுமத்தப்பட்டு ஒரு இனப்படுகொலையை எதிர்நோக்கியுள்ளதை அறிந்து அவர் தமிழக அரசியலில் முழு கவனத்தையும் செலுத்துகிறார்.
ஈழத்தமிழர்களும் சீமானை நம்பி இல்லை.
எம்.ஜி.ஆர் போல தமிழகத்திற்குள் ஈழத்தமிழருக்கு தேவையான ஆதரவை வழங்க சீமான் தயாராக இருக்கிறார்.
தமிழகத் தமிழருக்கு ஈழத்தின் நிலையை புரியவைத்ததில் சீமானின் பங்கு மறுக்கமுடியாது.
நாம்தமிழர் புலம்பெயர் தமிழகத் தமிழர்களிடம் நல்லதொரு கட்டமைப்பை உருவாக்கி ஈழத்தமிழரையும் சேர்த்துக்கொண்டு இயங்குகிறது.
அதற்குக்கூட விடாமல் அவரது பாஸ்போர்ட்டை முடக்கிவிட்டனர்.
. . . . . . . . . .
கு: சீமான் ஒரு கிறித்தவர் அவர் உண்மையான பெயரான சைமன் என்பதை மறைக்கிறார்.
ப: சீமானின் உண்மையான பெயர் 'செபாஸ்டியன் சீமான்' என்பதே.
அவரது தாய் பெயர் அன்னம்மாள்.
தந்தை பெயர் செந்தமிழன்.
அவரது குடும்பம் கிறித்தவத்திற்கு மாறியபிறகு செபாஸ்டியன் என்ற பெயர் சேர்க்கப்பட்டது.
மற்றபடி சைமன் என்பது அவரது பெயர் கிடையாது.
அவர் தொடக்கத்தில் திராவிடக் கட்சியில் இணைந்து கடவுள் நம்பிக்கையை கைவிட்டார்.
பைபிளை கூட விமர்சித்துள்ளார்.
. . . . . . . .
கு: நாத்திகரான சீமான் முருகனை தூக்கிப்பிடிக்கிறார்
ப: முருகன் உயிருடன் வாழ்ந்த மனிதன்.
தமிழர்களின் தலைவன்.
சீமான் முருகனை வணங்கச்சொல்லவில்லை.
முன்னோராக முப்பாட்டனாக ஏற்கும்படி சொல்கிறார்.
திருமாலையும் அவ்வாறே முன்வைக்கிறார்.
மற்றபடி அவர் இப்போதும் இறைமறுப்பாளர்தான்.
. . . . . . . . .
கே: சீமான் தலைவருடன் புகைப்படம் எடுத்ததைத் தவிர வேறு என்ன சாதித்தார்
ப: சீமான் தொடக்கத்தில் இருந்தே ஈழ ஆதரவாளர்.
புலிகளின் திரைத்துறை திரைப்படங்களை எடுத்தபோது சீமான் அங்கே பல நாட்கள் தங்கி இயக்குநராக பணியாற்றினார்.
தலைவர் பிரபாகரனின் 50வது பிறந்தநாளை ஒட்டி (2004ல்) புலிகள் வெளியிட்ட காணொளியில் பழ.நெடுமாறன், வைகோ, திருமாவளவன், சுப.வீ போன்றோருடன் சீமானின் பேட்டியும் இடம்பெற்றுள்ளது.
. . . . . . . . . .
கே: சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகருக்கும் சீமானுக்கும் என்ன பெரிய வேறுபாடு
ப: 1996 முதல் இயக்குநராக பல படங்களை இயக்கியிருந்தாலும்
2009 இராமேஸ்வரத்தில் தன் இனம் படுகொலை செய்யப்படுவதை பொறுக்கமுடியாமல் சீமான் பேசிய உணர்ச்சிமயமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவும்வரை சீமான் எப்படி இருப்பார் என்பதுகூட பலருக்குத் தெரியாது.
அவரது அடையாளம் திரையின் மூலம் மக்கள் மனதில் பதிந்தது கிடையாது.
சினிமா மூலம் பிரபலமாகி நன்றாக சம்பாதித்து நாடிநரம்பு அடங்கியபிறகு ஓட்டு அறுவடை செய்ய அரசியலுக்கு வரவிரும்பும் நடிகர் போல அவர் சுயநலவாதி கிடையாது.
. . . . . . . . . .
கே: சீமானை விட்டு பல இனவுணர்வாளர்கள் விலகியது ஏன்
ப: அவசரம்தான் காரணம். தமிழினத்தின் அரசியல் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது.
காலம் தேவை.
இனத்தின் மீது அதிக பற்று கொண்டோர் அந்த அளவு பொறுமையாக இருக்கமுடியவில்லை.
வெளியே வந்தவர்கள் பெரிதாக சாதிக்கவும் இல்லை.
. . . . . . . . . .
கே: சீமான் முதலமைச்சர் ஆகிவிட்டால் தமிழ்தேசியம் அமைந்ததாக ஆகிவிடுமா?
ப: சீமான் முதலமைச்சராவது தமிழ்தேசியத்தில் 5% ஐக் கூட பூர்த்தி செய்யாது.
ஆனால் முதல்படியாக அமையும்.
அதாவது மக்களிடம் இனவுணர்வும் மொழியுணர்வும் அரசியல் விழிப்புணர்வும் பொருளாதார பலமும் ஏற்படுவது முதல் அடி ஆகும்.
. . . . . . . .
கே: சீமான் பெரிதாக வாக்கு பெறவில்லையே!?
ப: இங்கே ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பத் தகுந்தவை கிடையாது.
அதிலும் ஊழல் நடக்கிறது.
ஒரு கட்சி 50% மக்களின் ஆதரவைப் பெற்றால்தான் அவர்களுக்கு 20% ஓட்டாவது விழும்.
அதாவது நாம்தமிழருக்கு போடப்பட்ட ஓட்டில் மூன்றில் ஒன்றுதான் நாம்தமிழருக்கு பதிவாகும்.
திரும்ப சரிபார்க்க எந்த வழியும் கிடையாது.
அதனால்தான் வளர்ந்த நாடுகள் போல வாக்குச்சீட்டு முறையை கொண்டுவர பல்வேறு கட்சிகள் கோருகின்றன.
. . . . . . . .
கே: சீமான் மலையாளி என்கிறார்களே?
ப: சீமான் தமிழர்தான்.
அவர் பிறந்த நாடார் குலம் கேரளாவிலும் உள்ளதால் அதைவைத்து குழப்புகிறார்கள்.
கேரளாவில் பாதி தமிழர் மண்.
அதில் வாழும் நாடார்கள் உட்பட பல்வேறு தமிழ் பேசும் சாதிகள் தமிழர்களே!
பிரபாகரனே மலையாளிதான் என்று கதைகட்டி அவரது உறவினர்கள் என்று சில மலையாளிகளைப் பேட்டி எடுத்து வடயிந்திய ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் பிரபாகரன் குடும்பம் வல்வெட்டித்துறையில் பாரம்பரியமான பிரபலமான குடும்பம் ஆகும்.
சீமான் மலையாளி என்பதும் அதுபோல எந்த அடிப்படையும் இல்லாத கட்டுக்கதை.
. . . . . . .
கே: சீமான் தமிழர் என்ற ஒரு தகுதி போதுமா?
ப: போதாதுதான்.
சீமான் மாநில உரிமைகள் மூலம் முன்வைக்கும் திட்டங்களும் தீர்வுகளும் இதுவரை எந்த முதலமைச்சர் வேட்பாளரும் முன்வைத்த ஆட்சிமுறையை விட சிறப்பாக உள்ளன.
யார் யாருக்கோ வாய்ப்பு கொடுத்துவிட்டோம்.
சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பதில் என்ன தவறு?
வாய்ப்பு கொடுக்குமுன்னே குற்றம்சாட்டுவது நிராகரிப்பது எந்தவகையில் நியாயம்?
. . . . . . . .
கே: சீமான் எந்த குறையுமே இல்லாதவர் என்கிறீர்களா?
ப: இல்லை. குறைகளை விட நிறைகள் அதிகம் எனலாம்.
குறையே இல்லாத சொக்கத் தங்கம்தான் முதலமைச்சராக வரவேண்டும் என்றால் அப்படி ஒருவர் வரவே போவதில்லை.
. . . . . . . . . .
கே: சீமான் மாவீரரான ஒரு ஈழப்போராளியின் மனைவிக்கு வாழ்க்கை கொடுப்பதாக இருந்ததே!
பிறகு ஏன் வசதியான வீட்டில் பெண் எடுத்தார்?
ப: சீமான் ஒரு ஈழத்தமிழரை மறுமணம் செய்வதற்கு பேச்சு நடந்தது. ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார்.
பேச்சு ஆரம்பத்திலேயே முறிந்துவிட்டது.
இதேபோல விஜயலட்சுமி என்ற பெண்ணும் சீமான் மீது புகார் கொடுத்து அது ஆதாரம் எதுவுமில்லாமல் தள்ளுபடி ஆனது.
சீமான் மீது அவதூறு சுமத்தவே இவை பெரிதாக்கப்படுகின்றன.
. . . . . . . . . . .
கே: சீமான் தனித்தமிழ்நாடு விடுதலைப் போராட்டம் தொடங்கினால் ஆதரிப்பாரா?
ப: சீமான்தான் இந்தியாவிற்கு நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு.
சீமான் பதவியில் அமர்ந்து ஜனநாயக வழியில் காவிரி பங்கீடு மறுப்பு , மீனவர் கொலை, பேரழிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு எதிராக போராடுவார்.
இந்தியாவில் ஜனநாயகம் பெரும்பாலும் நசுக்கவே படும்.
சீமான் முன்வைக்கும் மாநில உரிமைகள் மூலமான தீர்வு எடுபடாத பிறகு மக்கள் புலிகள் வழியில் ஆயுதம் தாங்கி விடுதலைக்காகப் போராடுவார்கள்.
ஈழத்தில் தந்தை செல்வா போல தமிழகத்திற்கு சீமான் அமையவுள்ளார்.
அவ்வளவுதான்.
(நான் நாம்தமிழர் கட்சியில் இல்லை. ஆதரவாளன் மட்டுமே)
Monday, 18 September 2017
தமிழர்நாடு - வரைபடங்களின் தொகுப்பு வரைபடம் (இறுதி செய்யப்பட்டது)
10.02.2017 அன்று இட்ட பதிவு
கீழே
---------------
தமிழர்நாடு - வரைபடங்களின் தொகுப்பு வரைபடம்
பல்வேறு வரைபடங்கள் வெளியிட்டதால் சிலருக்கு 'எது நம் நாட்டு எல்லை' என்று குழப்பம் உள்ளது.
எனவே ஒரே வரைபடத்தில் எல்லாவற்றையும் குறித்துள்ளேன்.
இப்போது நம் முன்னே இரண்டு வழிகள் உள்ளன.
ஒன்று போராடாமல் சிறிதுசிறிதாக வலி வேதனை எதுவுமில்லாமல் அழிந்துபோவது (இதில் அழிவு உறுதி).
மற்றொன்று வலியைப் பற்றி கவலைப்படாமல் விடுதலைக்காகப் போராடுவது
(இதில் அழிவு தடுக்கப்பட வாய்ப்பு உள்ளது).
இந்த இரண்டாவது வழியில் இரண்டு தீர்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.
முதலாவது தீர்வு தமிழர்நாடு.
இரண்டாவது தீர்வு அகன்ற தமிழர்நாடு.
மஞ்சள் நிறக் கோடு தமிழர்நாடு எல்லையைக் குறிக்கும்.
இது நமது குறைந்தபட்ச கோரிக்கை.
நமது தற்கால பெரும்பான்மைப் பகுதியை (பச்சை நிறம்) கருத்தில்கொண்டு முடிந்த அளவு விட்டுக்கொடுத்து நியாயமான நிலத்தைக் கேட்கிறோம்.
நாம் அறவழியிலும் அதேநேரம் ஆயுதவழியிலும் (கொரில்லா தாக்குதல் மட்டும்) போராடவேண்டும்.
நம் பக்கம் எப்படியும் உயிரிழப்பு ஏற்படும்.
நமது உயிரிழப்பு ஒரு லட்சம் ஆகும் முன்பு நமக்கு தமிழர்நாடு (மஞ்சள் நிறம்) கிடைத்துவிட்டால் நாம் பெற்றுக்கொள்ளவேண்டும்.
(பழங்குடிகள் வாழும் பகுதியில் எந்த பழங்குடிகள் நம்முடன் சேர விரும்புகின்றனரோ அதைப் பொறுத்து எல்லை மாறும்)
அப்படித் தராமல் ஒரு லட்சம் உயிர்களை நாம் இழந்தபின்னும் (ஈழப்போராட்டத்தை நசுக்கியது போல) நமது விடுதலைப் போராட்டம் நசுக்கப்பட முயற்சி நடந்தால் நாம் அறவழியைத் தூக்கியெறிந்துவிட்டு ஆயுத வழியில் முழுமூச்சாக இறங்கவேண்டும்.
கொரில்லா குழுவை முப்படை கொண்ட இராணுவமாக உருவாக்கவேண்டும்.
நமது வலிமைக்கேற்ற நிலத்தை நாமே எடுத்துக்கொள்ளவேண்டும்.
நாம் ஆய்தவழியில் இறங்கிய பிறகு தமிழர்நாடு தருவதாகச் சொன்னால் இணங்கக்கூடாது.
குறைந்தபட்ச தீர்வையும் பல லட்சம் உயிர்களை கொன்றுவிட்டு தருவதை ஏற்கமுடியாது.
ஆய்தமே வழி என்றான பிறகு நாம் நமது இனம் பாதுகாப்பாக வாழ நிரந்தரமான ஒரு தீர்வு தேவை.
அது நமது எல்லையின் நீளத்தைக் குறைப்பது.
தென்னிந்தியாவில் மிக ஒடுங்கிய பகுதியை நாம் வடக்கு எல்லையாகக் கொள்ளவேண்டும்.
இந்த எல்லை நீளம் குறைவாகவும் ஏற்ற இறக்கம் குறைவாகவும் இருக்கிறது.
இக்கோட்டிற்குத் தெற்கே இருக்கும் அனைத்தும் நமது.
இதுவே அகன்ற தமிழர்நாடு (சிவப்பு).
சங்ககாலத் தமிழகத்தின் மீள்நிறுவல்.
அகன்ற தமிழர்நாடு கால்பகுதி ஆந்திராவையும்
பாதி கர்நாடகாவையும்
முழு கேரளாவையும்
முழு சிறிலங்காவையும் உள்ளடக்கியது.
மலையாளிகள் நம்மிடம் இருந்து பிரிந்தவர்கள்.
அவர்கள் வாழ்வது நம் சேரநாடு.
எனவே அதை நாம் எடுத்துக்கொள்கிறோம்.
சிங்களவருக்கு குடியிருக்க நிலம் தந்தது நாம்தான் எனவே அதையும் எடுத்துக்கொள்கிறோம்.
கன்னடரும் தெலுங்கரும் சங்ககால எல்லையை (சாம்பல் நிறம்) ஆக்கிரமித்து வந்துள்ளனர்.
அதனால் அவர்களை தமிழர்நாட்டிலிருந்து வெளியேற்றவேண்டும்.
அகன்ற தமிழர்நாட்டின் எல்லையை இராணுவத்தால் வேலி அமைத்த பிறகு தமிழர்நாட்டின் உள்ளே நாம் அகன்ற தமிழகம் (அடர்நீலம்) அமைக்கவேண்டும்.
கன்னடர், தெலுங்கரை வெளியேற்றிய நிலத்தில் தமிழர்களைக் குடியேற்றவேண்டும்.
தற்போதைய கேரளாவில் வரைபடத்தில் காட்டியவாறு பாதியை எடுத்து அதில் தமிழரைக் குடிவைக்கவேண்டும்.
(தமிழர் மீது அடக்குமுறைகளை ஏவியவர்களை தண்டித்து, அவர்களது சந்ததிகளை வெளியேற்றிவிட்டு)
மீதியை மலையாள மாநிலம் ஆக்கவேண்டும்.
தற்போதைய சிங்களப் பகுதியிலும் வரைபடத்தில் உள்ளவாறு பாதியை எடுத்து தமிழரைக் குடிவைத்து (தமிழர் மீது அடக்குமுறைகளை ஏவியவர்களை தண்டித்து, அவர்களது சந்ததிகளை வெளியேற்றிவிட்டு) மீதியை சிங்கள மாநிலமாக ஆக்கவேண்டும்.
இதே போல பிறமொழிபேசும் பழங்குடி மக்களுக்கும் அவர்களது சிறிய தாய்நிலத்தை மாநிலங்கள் ஆக்கி அதற்கான அதிகாரங்களை வழங்கவேண்டும்.
(மலையாள மாநிலம் மிக விரைவில் தமிழுடன் இணைந்து காணாமல் போகும்.
ஆனால் சிங்கள மாநிலம் தனிநாடாக உருவாக வாய்ப்புள்ளது.
ஆகவே அனைவருக்கும் தேவையான உரிமைகளை அளித்து நல்லபடியாக வாழவைக்க வேண்டும்.
மக்கள் தன்னின ஆட்சியை விட நல்ல ஆட்சியையே விரும்புகின்றனர்.
நாம் நல்லாட்சி நடத்திய பிறகும் ஒரு மொழிவழி மாநிலங்களில் எதாவது ஒன்று விடுதலைக்காகப் போராடினால் நாம் அடக்கி ஒடுக்காது விடுதலை அளித்துவிடவேண்டும்.
ஆனால் நிலத்தை விட்டுத்தரக்கூடாது.
அகன்ற தமிழகம் தனிநாடு ஆனாலும் பெரிய பிரச்சனை இல்லை)
தமிழர்நாடு அமைந்தாலும் சரி, அகன்ற தமிழர்நாடு அமைந்தாலும் சரி, ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் இடையேயான கடலை (Flevo land போல) மண்போட்டு நிரப்பி நிலத்தொடர்பினை ஏற்படுத்தவேண்டும்.
உலகத்தமிழரையும் அவர்களது வாரிசுகளையும் மீண்டும் தமிழகத்திற்கு அழைத்துவந்து குடியமர்த்தவேண்டும்.
நாடு என்பது வரைபடத்தில் உள்ளதோ அல்லது ஐ.நா அளிக்கும் அங்கீகாரமோ கிடையாது.
உலகநாடுகளின் அங்கீகாரமே விடுதலை என்று எண்ணக்கூடாது.
அங்கீகாரமுள்ள நாடுகள் மீது கூட போரும் இனப்படுகொலையும் நடத்தப்படலாம்.
நாடு என்பது அதன் எல்லையை காக்கும் இராணுவம் உருவாக்கும் நிலப்பரப்பே ஆகும்.
உலக நாடுகளின் எல்லைகள் பெரும்பாலும் இராணுவங்களால் உருவாக்கப்பட்டவை.
எனவே உலகநாடுகளைப் பற்றிக் கவலைப்படாமல் நம் இனம் தனது எல்லையே தானே படைகொண்டு பாதுகாத்து தனியரசு செலுத்த வேண்டும்.
இங்கே இன்னொரு பிரபாகரன்தான் தேவை.
தலாய்லாமா தேவையில்லை.
----------
மேற்கண்ட வரைபடத்தில் தமிழர்நாட்டின் ஈழத்தின் எல்லை தவறாக வரையப்பட்டுள்ளது.
சரியான வரைபடம் கீழே,
Saturday, 9 September 2017
ஜிமிக்கி கம்மல் பாடலின் உண்மையான அர்த்தம்
மலையாளம் கற்போம்
என்டம்மெட ஜிமிக்கி கம்மல்!
என்டப்பன் கட்டொண்டு போயே!
என்டப்பன்டெ பிராந்தி குப்பி!
என்டம்மா குடிச்சு தீர்த்தே!
எங்கம்மா ஜிமிக்கி கம்மல்!
எங்கப்பன் எடுத்துட்டு போயிட்டான்!
எங்கப்பனோட பிராந்தி புட்டி!
எங்கம்மா குடிச்சு தீர்த்தா!
அதாவது அம்மாவோட ஜிமிக்கி கம்மல அப்பன் எடுத்துட்டு போய் வெச்சு சரக்கு வாங்கிட்டு வந்தான்
கடுப்பான அம்மா அந்த பாட்டில எடுத்து குடிச்சிட்டா
லல்லல்லா லால லல்லாலா
ஐய்ய்ய்ய் ஜாலிஈஈஈஈஈஈ
(ஜிமிக்கி கம்மல் பாட்ட ஏம்ப்பா திட்றீங்கனு கேட்ட அப்பாவிகள்,
அதோட அர்த்தம் புரியாமலே வைரலாக்கிய தமிழர்கள் கவனிக்கவும்)
Friday, 8 September 2017
பா.ரஞ்சித் அவர்களே!
பா.ரஞ்சித் அவர்களே!
'கபாலி படத்தில் பெரியாரைக் காட்டவில்லை' என்று சண்டித்தனம் செய்த திராவிட ஆண்டைகளிடம்
'என் படம், நான் எதையும் காட்டுவேன்' என்று கூற தைரியமில்லாமல் மன்னிப்பு கோரிய அடிமையாகிய உங்களுக்கு ஒரு தமிழ்தேசியவாதியின் மடல்.
"தமிழ், தமிழன் என்று எத்தனை நாட்களுக்கு ஏமாற்றுவீர்கள்?"
என்று சம்பந்தமே இல்லாமல் அனிதா தங்கைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலகம் செய்துள்ளீர்கள்.
உங்களது நோக்கம் அனிதா மரணத்திற்கு காரணமான, மாநில உரிமைக்கு எதிரான நீட்டுக்கு எதிராக திரளும் தமிழர்களை பழிப்பதன் மூலம் பறையர்களுக்கு எதிராக திருப்புவது.
அதாவது
'நான் ஒரு பறையன் மட்டுமே'
'தமிழனாக என்னை உணரவில்லை' என்று உங்களை பதிவுசெய்யவே இப்படி செய்துள்ளீர்கள்.
1000 ஆண்டு முன்பு ராஜராஜன் காலத்தில்கூட பார்ப்பனர்களும் சேரியில் தான் இருந்துள்ளனர்.
அவரது அண்ணனைக் கொன்றவர்கள் பார்ப்பன சேரியைச் சேர்ந்தவர்கள் என்று ராசரானின் கல்வெட்டும் உள்ளது.
வெறும் 500 ஆண்டுகளுக்கு முன்பு கோயிலுக்கு நிலமும் தானமும் அளித்த பூவன் பறையன் எனும் பாண்டிய மன்னனின் மெய்க்காப்பாளனுடைய கல்வெட்டு உள்ள அம்பாசமுத்திரம் எனது ஊர்.
அப்படி இருக்க அவர்கள் வீழ்ந்தது எப்படி என்று கேட்கிறீர்களா?
நான் கூறுகிறேன்.
700 ஆண்டுகளாக இங்கே தமிழர்கள் ஆளவில்லை.
வேற்றின ஆட்சிதான் இங்கே நடக்கிறது.
அதுவே சாதிய ஏற்றத்தாழ்வுக்குக் காரணம் என்கிறேன்.
நீங்கள் தலித் என்று குறிப்பிடும் 'தமிழினத்து பட்டியல் சாதியாரை' பிற தமிழர்கள் தம் உடன்பிறப்புகளாக நினைக்க வைக்கும் தமிழ்தேசியம் இதற்கான தீர்வு என்கிறேன் நான்.
ஆனால் நீங்கள் முன்வைக்கும் தலித்தியம் என்பது தலித் மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு அதிகாரத்தில் பங்கு கேட்பதன் மூலம் முன்னேற்றம் அடைந்து பிறருக்கு சமமாக வருவது.
எது சரியானது என்று மக்களே முடிவு செய்யட்டும்.
முதலில் பிரச்சனை என்ன என்பதை புரிந்துகொள்வோம்.
நீட் என்பது பொருளாதாரத்தில் பின் தங்கியோர் மற்றும் தாய்மொழியில் மாநில பாடத்திட்டத்தில் கல்வி கற்றோருக்கு எதிரானது.
அதாவது இது ஒரு பொருளாதார பிரச்சனை மற்றும் மொழி பிரச்சனை.
இதிலே எங்கிருந்து வந்தது சாதி?
இப்போது தலித் தலித் என்று ஒப்பாரி வைக்கும் ரஞ்சித் அவர்களே!
தங்கை அனிதா மரணமடையும் முன்பே நீட்டை எதிர்த்து வந்த தமிழ் இயக்கங்களை என்னால் காட்டமுடியும்.
உங்களால் அப்படியொரு தலித் இயக்கத்தைக் காட்டமுடியுமா?
அல்லது நீங்களாவது எங்கேயாவது நீட் பற்றி பேசியதுண்டா?
இந்தியா முழுக்க ஏன் தமிழகத்திலே கூட தலித்திய அரசியல் பேசும் எவரும் நீட் தேர்வுக்கு எதிரான எந்த முயற்சியும் இதுவரை செய்யவில்லையே?!
அதை விடுங்கள்.
தமிழகம் தாண்டி எந்த தலித் இயக்கமாவது தங்கைக்கு அஞ்சலியாவது செலுத்தியுள்ளனரா?
நீட்டை எதிர்ப்பது தமிழகம் மட்டுமே!
அனிதாவுக்காக போராடுவது தமிழகம் மட்டுமே!
அதற்காக கூடிய கூட்டம் தமிழ் தமிழன் என்று பேசாமல் அனிதா பற்றியோ நீட் பற்றியோ வாயே திறக்காத தலித்தியம் பற்றியா பேசும்?
ரஞ்சித் அவர்களே!
நீங்கள் சாதிய ஒடுக்குமுறையால் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவராக இருக்கவேண்டும்.
அதற்காக மேடை மேடையாகப் போய் குரல் எழுப்புங்கள்.
திரைப்படமாக எடுத்துத் தள்ளுங்கள்.
இயக்கமோ கட்சியோ தொடங்கி தமிழ்ச் சமூகத்திடம் நியாயம் கேளுங்கள்.
ஆனால் அனிதா தங்கையின் பிணத்தின் மீது நின்றுகொண்டு அதற்கான நியாயம் கேட்பது உங்களுக்கே அசிங்கமாக இல்லையா?
உங்களுக்கு விளம்பரம் தேட வேறு இடமே கிடைக்கவில்லையா?
அனிதா இறந்தது சாதிய ஒடுக்குமுறையால் அல்ல.
ஹிந்தியாவின் தமிழகத்தின் மீதான ஒடுக்குமுறையால்!
தமிழ்வழியில் பாடம் படித்ததால்!
வறுமை கூட இரண்டாவது காரணம்தான்.
ஒரு தாய் இறந்து நடுவீட்டில் கிடக்கும்போது இழவுக்கு வந்தவர்களிடம் நகைப் பங்கீடு சரியில்லை என நியாயம் கேட்கும் சுயநலகம்பிடித்த மகளைப்போல நடந்துகொள்கிறீர்கள்.
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
அனிதாவை தமிழர்கள் கைவிடமாட்டார்கள்!
பறையர்கள் உங்கள் பின்னால் வரமாட்டார்கள் !
Thursday, 17 August 2017
செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)
செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் நான் வாக்களித்தபடி செங்கோட்டை அக்கிரகாரத் தெருக்களில் நடப்பட்டுள்ள தடைக்கற்கள் பற்றி விளக்கம் அளிக்கவுள்ளேன்.
வாஞ்சிநாதன் எழுதிய இறுதி கடிதத்தில் உள்ள வார்த்தைகளை திரித்து
அவரது இந்துமத பற்றினை சாதிவெறியாக மாற்றி
அதற்கு வலுசேர்க்க ஒரு கற்பனைக் கதையையும் இணைத்து பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர் திராவிடர்கள்.
இந்த திரிப்பு வேலையை அம்பலப்படுத்தும் வகையில் வாஞ்சிநாதன் கடிதத்தின் உண்மையான பொருளையும்
அவர் காலத்தில் அவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருக்கவில்லை என்பதையும் பதிவாகப் போட்டபோது எழுந்த விவாதத்தில் அக்கிரகார வழிகள் கற்கள் நட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தீண்டாமையின் வடிவம் என்று ஒரு நண்பர் வாதிட்டார்.
அதற்கு நான் கோவில் வாசலுக்குச் செல்லும் வழியில் பெரிய வண்டிகள் நுழையாமல் இருக்கவே அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
மற்றபடி யாரும் சென்றுவர எந்தத் தடையும் இல்லை என்றும் வாதிட்டேன்.
பதிலுக்கு நண்பர் கற்கள் நடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் போட்டு அது பொதுமக்கள் வழி என்று கூறியிருந்தார்.
இன்று அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன்.
அந்த வழி பொதுவழி இல்லை என்பதும்.
அது நேரே கிருஷ்ணன் கோவிலுக்குப் போகும் வழி என்பதையும் புகைப்படத்துடன் இங்கே போட்டுள்ளேன்.
தவிர நடப்பட்டிருந்த 6 கற்களில் 2 கற்களை போன மாதம் அகற்றியும் விட்டனர்.
(அப்பகுதி எழுத்தாளர் ஒருவருக்கு இது பற்றி செய்தி அனுப்பியிருந்தேன்.
அல்லது நடந்த விவாதத்தை செங்கோட்டைக்காரர் யாராவது அப்பகுதி பெரியவர்களிடம் கூறியிருக்கலாம்)
அக்ரஹாரத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில்.
இதில் பெருமாள்கோவில் பிரதான வாசலுக்கு நேராக செல்லும் தெருவில் உயரம் குறைவான ஒரு கல் ஓரமாக உள்ளது.
அதே கோவிலின் வாசலுக்கு வந்துசேரும் இடப்பக்க (குறுகிய) தெருவில் இரு கற்கள் நடப்பட்டுள்ளன (வரைபடத்தில் சிவப்பு புள்ளிகளாகக் குறித்துள்ளேன்).
மேற்கண்ட எதுவும் பொதுவழி இல்லை.
தீண்டாமை எனுமளவுக்கு எதுவுமில்லை.
யார்வேண்டுமானால் போய்வரலாம்.
பல மாணவர்கள் டியூசன் படிக்க இங்கேதான் வருகிறார்கள்.
ஊர்மக்கள் அனைவரும் சாமி கும்பிடவும் வருகிறார்கள்.
எந்த தடையுமில்லை.
முகநூலில் சண்டைபோடுவதை விட அக்கிரகாரவாசிகளிடம் கற்களால் ஏற்படும் இடைஞ்சலை எடுத்துக்கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
Monday, 19 June 2017
வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்
" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.
அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "
இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.
'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.
இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்' பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.
மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)
நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.
ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.
அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.
வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.
ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.
சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?
ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)
வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!
சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.
என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?
வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.
இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.
இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!
திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.