Showing posts with label வாஞ்சி நாதன். Show all posts
Showing posts with label வாஞ்சி நாதன். Show all posts

Thursday, 17 August 2017

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் நான் வாக்களித்தபடி செங்கோட்டை அக்கிரகாரத் தெருக்களில் நடப்பட்டுள்ள தடைக்கற்கள் பற்றி விளக்கம் அளிக்கவுள்ளேன்.

  வாஞ்சிநாதன் எழுதிய இறுதி கடிதத்தில் உள்ள வார்த்தைகளை திரித்து
அவரது இந்துமத பற்றினை சாதிவெறியாக மாற்றி
அதற்கு வலுசேர்க்க ஒரு கற்பனைக் கதையையும் இணைத்து பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர் திராவிடர்கள்.

இந்த திரிப்பு வேலையை அம்பலப்படுத்தும் வகையில் வாஞ்சிநாதன் கடிதத்தின் உண்மையான பொருளையும்
அவர் காலத்தில் அவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருக்கவில்லை என்பதையும் பதிவாகப் போட்டபோது  எழுந்த விவாதத்தில் அக்கிரகார வழிகள் கற்கள் நட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தீண்டாமையின் வடிவம் என்று ஒரு நண்பர் வாதிட்டார்.

அதற்கு நான் கோவில் வாசலுக்குச் செல்லும் வழியில் பெரிய வண்டிகள் நுழையாமல் இருக்கவே அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
மற்றபடி யாரும் சென்றுவர எந்தத் தடையும் இல்லை என்றும் வாதிட்டேன்.

பதிலுக்கு நண்பர் கற்கள் நடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் போட்டு அது பொதுமக்கள் வழி என்று கூறியிருந்தார்.

இன்று அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன்.
அந்த வழி பொதுவழி இல்லை என்பதும்.
அது நேரே கிருஷ்ணன் கோவிலுக்குப் போகும் வழி என்பதையும் புகைப்படத்துடன் இங்கே போட்டுள்ளேன்.
தவிர நடப்பட்டிருந்த 6 கற்களில் 2 கற்களை போன மாதம் அகற்றியும் விட்டனர்.

(அப்பகுதி எழுத்தாளர் ஒருவருக்கு இது பற்றி செய்தி அனுப்பியிருந்தேன்.
அல்லது நடந்த விவாதத்தை செங்கோட்டைக்காரர் யாராவது அப்பகுதி பெரியவர்களிடம் கூறியிருக்கலாம்)

அக்ரஹாரத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில்.

இதில் பெருமாள்கோவில் பிரதான வாசலுக்கு நேராக செல்லும் தெருவில் உயரம் குறைவான ஒரு கல் ஓரமாக உள்ளது.
அதே கோவிலின் வாசலுக்கு வந்துசேரும் இடப்பக்க (குறுகிய) தெருவில் இரு கற்கள் நடப்பட்டுள்ளன (வரைபடத்தில் சிவப்பு புள்ளிகளாகக் குறித்துள்ளேன்).

மேற்கண்ட எதுவும் பொதுவழி இல்லை.

தீண்டாமை எனுமளவுக்கு எதுவுமில்லை.
யார்வேண்டுமானால் போய்வரலாம்.
பல மாணவர்கள் டியூசன் படிக்க இங்கேதான் வருகிறார்கள்.
ஊர்மக்கள் அனைவரும் சாமி கும்பிடவும் வருகிறார்கள்.
எந்த தடையுமில்லை.

முகநூலில் சண்டைபோடுவதை விட அக்கிரகாரவாசிகளிடம் கற்களால் ஏற்படும் இடைஞ்சலை எடுத்துக்கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

Saturday, 17 June 2017

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி
அவரை சிறையில் தள்ளி
அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து
அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு

தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட   திராவிட வந்தேறிகள்தான் வீர(?)வணக்கம் வைக்கவேண்டும்.

வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி
நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்,
பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதிவெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.

இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.
ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.

செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றுவிட்டு தானும் இறந்தபோது அவருக்கு வெறும் 25 வயது.
அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு
புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன்தான் வாஞ்சி.

அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை.
என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.

அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பிவந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசிவரை நம்பவில்லை.

இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.
இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.

ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.
இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.
அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.

ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளிவிட்டான்'
'குற்றாலம் அருவி தீண்டாமையை ஒழித்த ஆஷை மனுவாதிகள் கொன்றுவிட்டனர்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்.

அதெப்படி சேரிக்கு அக்கிரகாரம் தவிர்த்த வேறு வழியே இல்லாமல் இருக்கும்?
அதெப்படி திருவிதாங்கூர் கட்டுப்பாட்டில் இருந்த குற்றாலம் அருவியில் திருநெல்வேலி மாவட்ட உத்தரவு செல்லும்?

எதையும் யோசிக்காதவர்கள் :O

நன்றிகெட்டவர்கள் >.<