Showing posts with label வஉசி. Show all posts
Showing posts with label வஉசி. Show all posts

Saturday, 17 June 2017

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!

வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி
அவரை சிறையில் தள்ளி
அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து
அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு

தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட   திராவிட வந்தேறிகள்தான் வீர(?)வணக்கம் வைக்கவேண்டும்.

வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி
நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்,
பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதிவெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.

இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.
ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.

செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றுவிட்டு தானும் இறந்தபோது அவருக்கு வெறும் 25 வயது.
அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு
புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன்தான் வாஞ்சி.

அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை.
என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.

அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பிவந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசிவரை நம்பவில்லை.

இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.
இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.

ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.
இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.
அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.

ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளிவிட்டான்'
'குற்றாலம் அருவி தீண்டாமையை ஒழித்த ஆஷை மனுவாதிகள் கொன்றுவிட்டனர்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்.

அதெப்படி சேரிக்கு அக்கிரகாரம் தவிர்த்த வேறு வழியே இல்லாமல் இருக்கும்?
அதெப்படி திருவிதாங்கூர் கட்டுப்பாட்டில் இருந்த குற்றாலம் அருவியில் திருநெல்வேலி மாவட்ட உத்தரவு செல்லும்?

எதையும் யோசிக்காதவர்கள் :O

நன்றிகெட்டவர்கள் >.<

Wednesday, 15 July 2015

கையேந்திய தமிழன் கண்டுகொள்ளாத ஈ.வே.ரா

கையேந்திய தமிழன்
கண்டுகொள்ளாத ஈ.வே.ரா

வறுமை தாளாமல் வ.உ.சி,

ஈ.வே.ராவுக்கு கடிதம் எழுதி
'போலீஸ் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி என் மகனுக்கு அந்த
வேலையை வாங்கித்தாருங்கள்'
என்று கோரினார்.

ஈவேரா எதுவும் செய்யவில்லை.