Wednesday, 25 June 2025
திரைப்படத்தில் வாஞ்சிநாதன் வரும் காட்சிகள்
Sunday, 19 June 2022
சிதம்பரனாரை மகிழ்வித்த ஆஷ் மரணம்
Thursday, 16 June 2022
ஈடில்லாத வீரன் வாஞ்சிநாதன்
Monday, 28 February 2022
குற்றாலம் தீண்டாமை பொய்க்கதை
குற்றாலம் தீண்டாமை பொய்க்கதை
1838 இல் வெளிவந்த புத்தகம் குற்றாலம் பற்றி விரிவாக விளக்குகிறது.
அதன் தலைப்பு The tinnevelly mission of the church missionary society என்பதாகும்.
அதில் 1835 காலகட்டத்தில் குற்றாலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து முழுநிலவு அன்று பல ஆயிரம் மக்கள் வருவதாகவும்
ஆகஸ்ட் மாத பௌர்ணமி அன்று 50,000 க்கும் அதிகமானோர் வந்திருந்தனர் என்றும்
அவ்வாறு புனித நீராட வருவோருக்கு குளிக்கும்போது மோதிரமாக கட்டிக்கொள்ள அருகம்புற்களை பிராமணர்கள் விற்றதாகவும் பதிவுசெய்துள்ளது.
குற்றாலத்தில் பிராமணர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதாகவும் அருவியில் குளிக்க தீண்டாமை நிலவியதாகவும் அதை ஆஷ் துரை நீக்கியதாகவும் ஒரு பொய்க்கதை பரப்பப்பட்டு வருகிறது.
இது பொய்யென்று இச்சான்று மூலம் நிறுவமுடியும்.
தகவலுக்கு நன்றி: கார்வேந்தன் அழகையா
மேலும் அன்று குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இல்லை. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த செங்கோட்டை மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆஷ்துரை உத்தரவு செல்லாது.
பின்னர் செங்கோட்டை மக்கள் குமரி மக்களுடன் இணைந்து எஸ்.எஸ். கரையாளர் தலைமையில் போராடி தமிழகத்துடன் இணைந்தது வரலாறு.
குற்றாலத்தில் தீண்டாமை இருந்த எந்த ஆதாரத்தையும் யாரும் காட்டியதாகத் தெரியவில்லை. இந்த புரளியை கிளப்பியது குற்றாலம் பகுதியில் வாழும் வந்தேறி சக்கிலியர்கள்.
இவர்கள் செய்துவரும் அட்டூழியம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன். அதிலும் திருநெல்வேலியின் பெருமையான பூலித்தேவரின் தளபதி ஒண்டிவீரன் என்றும் பொய்க்கதை பரப்பி வருகின்றனர்.
ஆங்கிலேய அடிமைகளால் ஏற்கனவே வாஞ்சிநாதனுக்கு எதிராகக் பரப்பப்படும் புனைவுகளில் மற்றொன்று கர்ப்பிணி பெண்ணை அக்கராகாரம் வழியாக செல்லவிடாமல் தடுத்ததை ஆஷ்துரை தட்டிக்கேட்ட புனைவுக்கதை.
இதற்கும் எந்த சான்றும் இல்லை. ஆங்கிலேயர் எங்கேயுமே சாதிக்கொடுமைகளைத் தடுத்த வரலாறு இல்லை.
அதோடு இது பற்றி மேலும் விளக்கி ஏற்கனவே இரண்டொரு பகுதிகளில் சான்றுகளுடன் எழுதியுள்ளேன்.
செங்கோட்டை அக்கரகாரம் செங்கோட்டை - தென்காசி முக்கிய சாலைக்கு ஒதுக்குப்புறமாக இருக்கிறது என்றும் அதில் கோவிலுக்கு செல்லும் பாதைகளில் உள்ள தடைகற்கள் தீண்டாமை நோக்கத்துடன் இல்லை என்றும் அவை வண்டிகளைத் தடுக்க போடப்பட்டிருப்பதையும் விளக்கியுள்ளேன்.
வந்தேறிகள் திரித்து பொருள்கூறும் வாஞ்சிநாதன் கடிதம் பற்றிய எனது பதிவையும் இங்கே குறிப்பிடலாம்.
Thursday, 17 August 2017
செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)
செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)
இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் நான் வாக்களித்தபடி செங்கோட்டை அக்கிரகாரத் தெருக்களில் நடப்பட்டுள்ள தடைக்கற்கள் பற்றி விளக்கம் அளிக்கவுள்ளேன்.
வாஞ்சிநாதன் எழுதிய இறுதி கடிதத்தில் உள்ள வார்த்தைகளை திரித்து
அவரது இந்துமத பற்றினை சாதிவெறியாக மாற்றி
அதற்கு வலுசேர்க்க ஒரு கற்பனைக் கதையையும் இணைத்து பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர் திராவிடர்கள்.
இந்த திரிப்பு வேலையை அம்பலப்படுத்தும் வகையில் வாஞ்சிநாதன் கடிதத்தின் உண்மையான பொருளையும்
அவர் காலத்தில் அவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருக்கவில்லை என்பதையும் பதிவாகப் போட்டபோது எழுந்த விவாதத்தில் அக்கிரகார வழிகள் கற்கள் நட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தீண்டாமையின் வடிவம் என்று ஒரு நண்பர் வாதிட்டார்.
அதற்கு நான் கோவில் வாசலுக்குச் செல்லும் வழியில் பெரிய வண்டிகள் நுழையாமல் இருக்கவே அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
மற்றபடி யாரும் சென்றுவர எந்தத் தடையும் இல்லை என்றும் வாதிட்டேன்.
பதிலுக்கு நண்பர் கற்கள் நடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் போட்டு அது பொதுமக்கள் வழி என்று கூறியிருந்தார்.
இன்று அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன்.
அந்த வழி பொதுவழி இல்லை என்பதும்.
அது நேரே கிருஷ்ணன் கோவிலுக்குப் போகும் வழி என்பதையும் புகைப்படத்துடன் இங்கே போட்டுள்ளேன்.
தவிர நடப்பட்டிருந்த 6 கற்களில் 2 கற்களை போன மாதம் அகற்றியும் விட்டனர்.
(அப்பகுதி எழுத்தாளர் ஒருவருக்கு இது பற்றி செய்தி அனுப்பியிருந்தேன்.
அல்லது நடந்த விவாதத்தை செங்கோட்டைக்காரர் யாராவது அப்பகுதி பெரியவர்களிடம் கூறியிருக்கலாம்)
அக்ரஹாரத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில்.
இதில் பெருமாள்கோவில் பிரதான வாசலுக்கு நேராக செல்லும் தெருவில் உயரம் குறைவான ஒரு கல் ஓரமாக உள்ளது.
அதே கோவிலின் வாசலுக்கு வந்துசேரும் இடப்பக்க (குறுகிய) தெருவில் இரு கற்கள் நடப்பட்டுள்ளன (வரைபடத்தில் சிவப்பு புள்ளிகளாகக் குறித்துள்ளேன்).
மேற்கண்ட எதுவும் பொதுவழி இல்லை.
தீண்டாமை எனுமளவுக்கு எதுவுமில்லை.
யார்வேண்டுமானால் போய்வரலாம்.
பல மாணவர்கள் டியூசன் படிக்க இங்கேதான் வருகிறார்கள்.
ஊர்மக்கள் அனைவரும் சாமி கும்பிடவும் வருகிறார்கள்.
எந்த தடையுமில்லை.
முகநூலில் சண்டைபோடுவதை விட அக்கிரகாரவாசிகளிடம் கற்களால் ஏற்படும் இடைஞ்சலை எடுத்துக்கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
Monday, 19 June 2017
வாஞ்சிநாதன் கடிதம் - உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் கடிதம்
- உண்மையான பொருள்
வாஞ்சிநாதன் பையில் கிடைத்த அந்த கடிதத்தின் வரிகளை சற்று நிதானமாகப் படியுங்கள்
" ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக்கொண்டு, அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்துவருகிறார்கள்.
ஒவ்வொரு இந்தியனும் தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்துவருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில்,
கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது.
அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும்பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்துகொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன்.
இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை.
இப்படிக்கு,
R. வாஞ்சி அய்யர்
R. Vanchi Aiyar of Shencotta "
இதிலே "அழியாத ஸனாதன தர்மத்தை" என்ற இடமும் "கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை" என்ற இடமும் தவறாகப் பொருள்கொள்ளப் படுகின்றன.
'சனாதன' என்றால் 'நிலைத்த' என்று பொருள்.
சனாதன தர்மம் என்பதே இந்து மதத்தின் பழைய பெயர்.
அதாவது உண்மையான பெயர்.
இதற்கும் சாதிக்கும் தொடர்பில்லை.
இதைத்தான் 'அழியாத சனாதன' என்று வாஞ்சி எழுதியுள்ளார்.
ஒருவேளை இரண்டிற்கும் ஒரே பொருள் என்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.
அதாவது பலர் 'நடுசென்டர்' என்று கூறுவது போல.
தவிர சனாதான தர்மத்தை ஆங்கிலேயர் மிதிப்பதாகக் கூறுகிறார்.
இது 'சாதி அமைப்பு' என்றால் ஆங்கிலேயர் சாதியமைப்பை ஒழிக்க எதாவது செய்திருக்கிறார்களா என்றால் ஆங்கிலேயர் சாதியொழிப்பு நடவடிக்கை எதையும் செய்யவில்லை.
இன்னொன்று 'கோமாமிசம் அதாவது மாட்டிறைச்சி தின்பது' பற்றிய திரிபு.
அதாவது மாட்டிறைச்சி தலித்துகளின் உணவாம் அதனால் பிராமணர்கள் வெறுக்கிறார்களாம்.
அதனால் அது சாதிவெறியின் வெளிப்பாடாம்.
உண்மை என்னவென்றால் தாய்க்கு அடுத்து நமக்கு பால் தருவது பசு.
அதனால் அதைக் கோமாதா என்று அழைத்து அதைக் கொல்வதை பிற்கால இந்துத்துவம் தடைசெய்தது.
(இந்துமத வேதங்களில் மாட்டிறைச்சி உண்பது ஊக்குவிக்கப் படுகிறது).
வெள்ளைக்காரர்கள் காலத்தில் 'மாட்டைக் கொல்லும் கூடங்கள்' பல ஏற்படுத்தப்பட்டு மாட்டிறைச்சி மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆங்கில கல்லூரிகளில் மாட்டிறைச்சியும் விஸ்கியும் உண்பது புகுத்தப்பட்டது.
பசுக்களைக் காப்பது ஆங்கிலேய எதிர்ப்பு நடவடிக்கையாக அப்போது எண்ணப்பட்டது.
இதற்கு பல இயக்கங்களும் நடத்தப்பட்டன.
மூன்றாவது 'மிலேச்சன்' என்பது.
இது கீழ்சாதியைக் குறிக்குமாம்.
ஆனால் மிலேச்சன் அந்நியன், வெளிநாட்டவன் என்றே பொருள்படும்.
மிலேச்சன் என்று ஆங்கிலேயரை வாஞ்சி குறிப்பிட்டுள்ளது அந்நியன் என்ற பொருளில்தான்.
(சீவக சிந்தாமணி 2216)
நான்காவது 'பஞ்சமன்' எனும் சொல்.
நால்வர்ணத்திற்கும் கீழானோர் பஞ்சமர் என்றழைக்கப்பட்டு அது கீழ்சாதி பெயர் ஆனது என்கின்றனர்.
ஆனால் 'பஞ்சம்' எனும் சொல் 'ஐந்தாவது' என்றே பொருள்படும்.
வாஞ்சிநாதன் 'ஐந்தாம் ஜார்ஜ்' என்பதை 'ஜார்ஜ் பஞ்சமன்' என்று எழுதியுள்ளார்.
அதாவது 1911ல் இந்தியாவிற்கு இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் வருவதாக இருந்தபோது அவரைக் கொல்லப்போவதாக வாஞ்சிநாதன் கூறுகிறார்.
ஆக இந்துமத பற்றாளராக இந்துதேசப் பற்றாளராகவே அவர் அக்கொலையைச் செய்துள்ளார்.
தனது இந்து மதத்தைப் புகழும் அதே நேரத்தில் ஆங்கிலேயரின் மதத்தை அவர் திட்டவில்லை.
ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்தையும் பழக்கவழக்கத்தையும் மட்டுமே திட்டியுள்ளார்.
ஆக அவரை பிற மதத்தை வெறுக்கும் மதவெறியர் என்றுகூட கூறமுடியாது.
அவரை சாதிவெறியர் என்று எப்படியெல்லாம் திரிக்கிறார்கள் பாருங்கள்.
வாஞ்சி வாழ்ந்த பகுதியான செங்கோட்டை மற்றும் குற்றாலம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1956 வரை இருந்தது.
ஆஷ் திருநெல்வேலிக்கு சப்-கலெக்டர் மட்டுமே.
அவரது அதிகாரம் தென்காசி தாண்டி செல்லாது.
இருவரும் சந்தித்திருக்கவோ தனிப்பட்ட பகை இருந்திருக்கவோ வாய்ப்பில்லை.
ஆஷ் வாஞ்சிநாதன் பகுதியில் செய்த சில தலித் ஆதரவு செயல்பாடுகளாக கூறப்படுபவை கட்டுக்கதைகள் என்பதற்கு இதுவே சான்று.
சரி வாஞ்சிநாதனின் கடிதத்தில் கொலைமிரட்டல் விடுத்த பிறகும் மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியா வந்தாரா?
ஆம் வந்தார்.
27.12.1911 அன்று ஐந்தாம் ஜார்ஜ் (George V) இந்தியா வந்தபோது அவரை வரவேற்கும் விதமாக ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடல்தான் 'ஜன கன மன' எனும் இன்றைய ஹிந்திய தேசிய கீதம்.
(search எழுந்து நில் வெள்ளையனை வாழ்த்து வேட்டொலி)
வாஞ்சிநாதன் காணாப்பிணமாகி சாதிவெறியனாக வரலாற்றில் பதிவானதும்
தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்து தேசியகவி ஆனதும் எப்படி என்று புரிகிறதுதானே?!
சரி, தமிழ்தேசியத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு?
அதாவது பார்ப்பனரை சாதிவெறியராக்குவது திராவிடம் தமிழருக்குள் ஊடுருவ வழிவகுக்கிறது.
என்றால் இந்துமதப்பற்று ஹிந்தியர் ஊடுருவ வழிவகுக்காதா?
வாஞ்சிநாதன் காலகட்டத்தில் இந்திய விடுதலை உணர்வு இந்து மதப்பற்றுடன் கலந்திருந்தது.
அப்போதும் வெறிபிடித்த இந்துவாக அல்லாமல் ஒரு பற்றுள்ள இந்துவாக இருந்தது அத்தனை பெரிய குற்றமில்லை.
இன்று தமிழ்தேசியத்தின் காலம்.
இப்போது தமிழ் இனவுணர்வே தேவை.
அவ்வுணர்வை சாதிவெறியாகத் திரிப்பது திராவிடத்தின் தலையாய வேலையாக உள்ளது.
இன்று தமிழ்தேசிய உணர்வாளனுக்கு முதலில் கிடைப்பது சாதிவெறியன் பட்டமே!
திரிப்புவேலைகளை புரிந்துகொள்ளத்தான் இந்த பதிவு.
Saturday, 17 June 2017
ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!
ஆஷ்துரைக்கும் வீரவணக்கம் வைக்கும் ஆட்டுமந்தை கூட்டமா நாம்?!
வ.உ.சி நடத்திய மாபெரும் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி
அவரை சிறையில் தள்ளி
அவரது கப்பல் கம்பெனியை இல்லாமல் செய்து
அந்த செம்மலை சவுக்கால் அடித்து செக்கிழுத்த வைத்த ஆஷ் துரை என்ற வெள்ளைக்காரனுக்கு
தமது அடிவருடவே ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட திராவிட வந்தேறிகள்தான் வீர(?)வணக்கம் வைக்கவேண்டும்.
வ.உ.சி ஏற்படுத்திய திருநெல்வேலி எழுச்சியை அடக்கி
நெல்லை மக்களை படாதபாடு படுத்திய ஆஷை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாதன்,
பிறப்பால் பார்ப்பனர் என்ற ஒரே காரணத்திற்காக சாதிவெறியோடு வெறுக்கும் மந்தை கூட்டமாக தமிழர்கள் மாறவேண்டாம்.
இந்தியா மறந்திருக்கலாம்.
தமிழகம் மறந்திருக்கலாம்.
ஆனால் நெல்லை மக்கள் அத்தனை நன்றி கெட்டவர்கள் இல்லை.
செங்கோட்டை மண்ணின் மைந்தன் வாஞ்சிநாதன் ஆஷ்துரையைக் கொன்றுவிட்டு தானும் இறந்தபோது அவருக்கு வெறும் 25 வயது.
அரசாங்க வேலையை உதறிவிட்டு நிறைமாத சூலியான தனது மனைவி பொன்னம்மாளை அப்படியே விட்டுவிட்டு
புதுச்சேரி போய் பாரதிதாசனிடம் துப்பாக்கி வாங்கி வந்து ஆஷ் துரையை சுட்டுக்கொன்று தனது உயிரையும் விட்டவன்தான் வாஞ்சி.
அவரது உடல்கூட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படவில்லை.
என்ன செய்தார்கள் என்று இன்றுவரை தெரியாது.
அதனால் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் போய்விட்டு திரும்பிவந்த பொன்னம்மாள் தன் கணவர் இறந்ததை கடைசிவரை நம்பவில்லை.
இறக்கும்வரை சுமங்கலியாகவே இருந்து இறந்தார்.
இன்றும் செங்கோட்டை அக்கிரகாரத்தில் சுமங்கலி மாமி வீடு எது என்று கேட்டால் சொல்வார்கள்.
ஒருவேளை வாஞ்சியின் குறி தவறினால் அடுத்ததாக இன்னொரு துப்பாக்கியுடன் நின்றவர் மாடசாமிப்பிள்ளை.
இவரை கடல்வழியாக தப்பிக்கவைத்தார் பாரதிதாசன்.
அவர் அதன்பிறகு என்ன ஆனார் என்றே தெரியவில்லை.
இதெல்லாம் நெஞ்சைத் தொடாது பார்ப்பனருக்கு எதிரான சாதிவெறி கொண்ட ஆட்டுமந்தைக் கூட்டத்திற்கு.
ஆனால் 'அக்கிரகாரத்தின் வழியாக தாழ்த்தப்பட்ட கர்ப்பிணியை அழைத்துச் சென்றதால் பார்ப்பான் கோபமாகி போட்டுத் தள்ளிவிட்டான்'
'குற்றாலம் அருவி தீண்டாமையை ஒழித்த ஆஷை மனுவாதிகள் கொன்றுவிட்டனர்' என்று திராவிடம் எழுதிய கற்பனை கதை மட்டும் நெஞ்சை வருடும்.
அதெப்படி சேரிக்கு அக்கிரகாரம் தவிர்த்த வேறு வழியே இல்லாமல் இருக்கும்?
அதெப்படி திருவிதாங்கூர் கட்டுப்பாட்டில் இருந்த குற்றாலம் அருவியில் திருநெல்வேலி மாவட்ட உத்தரவு செல்லும்?
எதையும் யோசிக்காதவர்கள் :O
நன்றிகெட்டவர்கள் >.<
Sunday, 12 July 2015
செங்கோட்டை வாஞ்சி
செங்கோட்டை வாஞ்சி
1911ல் ஆஷ் துரையை (Lord Ashe) சுட்டுக்கொன்றார் வாஞ்சி .
ஆஷ்துரையின் பேரனான ராபர்ட் ஆஷ் வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு கொடுத்தனுப்பிய கடிதம்...
"துயரமும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த இன்றைய தினத்தில் ராபர்ட் வில்லியம் ஆஷ் பேரனுமாகிய கொள்ளுப் பேரன் பேத்திகளுமாகிய நாங்கள் வாஞ்சி ஐயரின் குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலையும் நட்பையும் வெளிபடுத்தும் முகமாக இச்செய்தியை விடுக்கிறோம்.
லட்சிய நோக்கம் மிகுந்த அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சி.
வாஞ்சியின் விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது.
அரசியல் களத்தில் தீவிரமாக பாடுபடுபவர்கள் அவர்கள் ஆட்சியாளர்களானாலும் சரி ஒடுக்கப்படுபவர்களானாலும் சரி, பெரும் பிழைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகின்றது.
இன்றைக்கு உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்ற நாம், பழையவற்றை மறந்து சமாதானமாக உடன்வாழ்தல் இன்றியமையாதது.
அன்புடன்
ஆஷ் குடும்பத்தினர்,
அயர்லாந்து"
வ.உ.சிதம்பரனார் தமது தன்வரலாற்று நூலில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.
‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘எப்படி?’ என்றான்.
‘யான் இவண் ஏகியதற்கும் தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘
ஒருவன் அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான்’ என்றான்.
‘நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி,
தூத்துகுடி துறைமுகத்தில் கொடிகட்டிப்பறந்த ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்தை எதிர்த்து சொந்தமாகக் கப்பல் விட்டார்.
ஆங்கிலேய தொழிற்சாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் செய்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
இவற்றை சமாளிக்க ஆங்கில அரசு ஏவிவிட்ட அதிகாரிதான் ஆஷ்.
வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை
ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார்.
இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும்,
1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்.
1980களில் மணியாச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு வாஞ்சியின் பெயரை வைக்கவேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
(தற்போது நிறைவேறிவிட்டது)
உடனே திராவிட இயக்கங்கள் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள்.
அதில் வாஞ்சி தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர் சட்டைப்பையில் கிடைத்த கடிதத்தின் சில வரிகள் அளிக்கப்பட்டிருந்தன.
"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."
இந்துமத வெறியன் என்று கூறினால்கூட பொறுத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் வழக்கம்போல சாதிவெறி என்று ஆரம்பித்தது திராவிட இயக்கம்.
இதில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜை, பஞ்சமன் அதாவது கீழ்சாதிக்காரன் என்று சாதிவெறிபிடித்த பார்ப்பானாகிய வாஞ்சி கூறியுள்ளதாகவும்
ஆஷ் துரை நல்லவரென்றும்
அவர் குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டார் என்றும்
அவர் கடையத்தில் (தெலுங்கு)அருந்
ததிப்பெண் ஒருவர் பிள்ளைபேறு வலியால் துடித்தபோது அவரை அக்கிரஹாரம் வழியே பார்பனர்களை எதிர்த்து மருத்துவமனை கொண்டுசென்றார் என்றும் கூறப்பட்டிருந்தது.
'George V' என்பதை வடமொழியில் 'ஜார்ஜ் பஞ்(ச்)சம்' என்று எழுதுவர்,
வாஞ்சி அதைத்தான் எழுதியுள்ளார்.
ஆங்கிலேயருக்கு எதிரான திருநெல்வேலிக் கலவரத்தை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி ஒடுக்கிய ஆஷ் நல்லவனாம்,
வெள்ளையனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட எப்போதுமே பேசாத எழுதாத ஆங்கில அடிமைகளின் கூடாரமான திராவிட இயக்கம் கூறுகிறது.
குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டாராம் அதனால் கொன்றுவிட்டார்களாம்.
அருந்ததியப் பெண்ணை கடையம் அக்கிரஹாரம் வழியே கொண்டுசென்றாராம்.
அப்போது பார்ப்பனர்கள் தடுத்தார்கள்.
அங்கே 16வயது வாஞ்சி இருந்தாராம்.
அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் ஆஷ்துரையை சுட்டாராம்.
1906ல்தான் ஆஷ்துரை தென்தமிழம் வருகிறார்.
அப்போதே வாஞ்சிக்கு 20வயது.
அந்த துண்டுபிரசுரம் பல்வேறு வடிவங்களில் சுழன்று சுழன்று இன்று ஒரு சுவையான கதையாக மாறிவிட்டது,
"ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார்.
உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டிவரச்சொல்லிவிட்டு.நடந்துக
ொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது.
நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசைவந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடிவந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது" என்றும் சொல்லுகிறார்.
ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை,
ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார்.
"சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம்,
பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.
உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை.
ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.
அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும்.
சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள்.
வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் .
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.
இனி மறைந்திருக்கும் வரலாறுகள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை"
வழக்கம்போல கதையாக ஆரம்பித்து கட்டுரையாக விரிக்கும் அதே சத்தற்ற திராவிடக் கட்டுரை.
செங்கோட்டையில் பிறந்த வாஞ்சி கடையத்திற்கு எப்படி வந்தார்?
அந்த 16வயது இளைஞன்தான்
வாஞ்சி என்று வோனிஸ் நேரில் பார்த்திருப்பாரோ?
சேரியில் இருந்து மருத்துவமனை போக வேறுவழியே இல்லையாம்.
துண்டு பிரசுரத்தில் ஆஷ் கையில் துப்பாக்கி இருந்தது.
இப்போது அது சவுக்காக மாறிவிட்டது.
வாஞ்சி ஆஷ்துரையைச் சுடும்போது உடன் வந்த மாடசாமி பிள்ளை பார்ப்பனர்தானோ?
ஆஷ்துரை கொலைவழக்கில் பாரதியை தேடியபோது அவர் பாண்டிச்சேரிக்குள் சென்றார்.
ஏனென்றால் பாரதி சொல்லித்தான் வாஞ்சிக்கு பாரதிதாசன் பாண்டிச்சேரியில் இருந்து துப்பாக்கி வாங்கி அனுப்பியதாக 'சிரிக்கும் சிந்தனைகள்' நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதியேற்காததால் பாரிஸ்டர் பட்டத்தையே உதறித்தள்ளிய வ.வே.சு.ஐயர் தான் வாஞ்சிக்கு பாண்டிச்சேரியில் துப்பாக்கிப் பயிற்சி அளித்தார்.
ஆக அந்த காலகட்டத்தில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய தீவிரவாத இந்து மத பற்றாளர்கள் செய்ததுதான் ஆஷ் கொலை.
பார்ப்பனன் என்றால் பாய்ந்துவந்து சாதிப்பட்டம் கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக எதையாவது உருவி ஆதாரமாக்கி
திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி எப்படியெல்லாம் மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுபோடுவது என்று திராவிட இயக்கங்களிடம்தான் கற்கவேண்டும்.
நன்றி: http://www.kalachuvadu.com/issue-118/page12.asp
http://www.jeyamohan.in/4488 #.