Thursday, 17 August 2017

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

செங்கோட்டை அக்ரகாரம் (விளக்கம்)

இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு விவாதத்தில் நான் வாக்களித்தபடி செங்கோட்டை அக்கிரகாரத் தெருக்களில் நடப்பட்டுள்ள தடைக்கற்கள் பற்றி விளக்கம் அளிக்கவுள்ளேன்.

  வாஞ்சிநாதன் எழுதிய இறுதி கடிதத்தில் உள்ள வார்த்தைகளை திரித்து
அவரது இந்துமத பற்றினை சாதிவெறியாக மாற்றி
அதற்கு வலுசேர்க்க ஒரு கற்பனைக் கதையையும் இணைத்து பொய்ப் பரப்புரை செய்துவருகின்றனர் திராவிடர்கள்.

இந்த திரிப்பு வேலையை அம்பலப்படுத்தும் வகையில் வாஞ்சிநாதன் கடிதத்தின் உண்மையான பொருளையும்
அவர் காலத்தில் அவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்திலேயே இணைந்திருக்கவில்லை என்பதையும் பதிவாகப் போட்டபோது  எழுந்த விவாதத்தில் அக்கிரகார வழிகள் கற்கள் நட்டு அடைக்கப்பட்டுள்ளதாகவும் இது தீண்டாமையின் வடிவம் என்று ஒரு நண்பர் வாதிட்டார்.

அதற்கு நான் கோவில் வாசலுக்குச் செல்லும் வழியில் பெரிய வண்டிகள் நுழையாமல் இருக்கவே அவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதாகவும்
மற்றபடி யாரும் சென்றுவர எந்தத் தடையும் இல்லை என்றும் வாதிட்டேன்.

பதிலுக்கு நண்பர் கற்கள் நடப்பட்டிருந்த ஒரு புகைப்படத்தைப் போட்டு அது பொதுமக்கள் வழி என்று கூறியிருந்தார்.

இன்று அந்த இடத்தைப் போய்ப் பார்த்தேன்.
அந்த வழி பொதுவழி இல்லை என்பதும்.
அது நேரே கிருஷ்ணன் கோவிலுக்குப் போகும் வழி என்பதையும் புகைப்படத்துடன் இங்கே போட்டுள்ளேன்.
தவிர நடப்பட்டிருந்த 6 கற்களில் 2 கற்களை போன மாதம் அகற்றியும் விட்டனர்.

(அப்பகுதி எழுத்தாளர் ஒருவருக்கு இது பற்றி செய்தி அனுப்பியிருந்தேன்.
அல்லது நடந்த விவாதத்தை செங்கோட்டைக்காரர் யாராவது அப்பகுதி பெரியவர்களிடம் கூறியிருக்கலாம்)

அக்ரஹாரத்தில் மொத்தம் மூன்று கோவில்கள் உள்ளன.
அழகிய மணவாளப் பெருமாள் கோவில், சிவன் கோவில், கிருஷ்ணன் கோவில்.

இதில் பெருமாள்கோவில் பிரதான வாசலுக்கு நேராக செல்லும் தெருவில் உயரம் குறைவான ஒரு கல் ஓரமாக உள்ளது.
அதே கோவிலின் வாசலுக்கு வந்துசேரும் இடப்பக்க (குறுகிய) தெருவில் இரு கற்கள் நடப்பட்டுள்ளன (வரைபடத்தில் சிவப்பு புள்ளிகளாகக் குறித்துள்ளேன்).

மேற்கண்ட எதுவும் பொதுவழி இல்லை.

தீண்டாமை எனுமளவுக்கு எதுவுமில்லை.
யார்வேண்டுமானால் போய்வரலாம்.
பல மாணவர்கள் டியூசன் படிக்க இங்கேதான் வருகிறார்கள்.
ஊர்மக்கள் அனைவரும் சாமி கும்பிடவும் வருகிறார்கள்.
எந்த தடையுமில்லை.

முகநூலில் சண்டைபோடுவதை விட அக்கிரகாரவாசிகளிடம் கற்களால் ஏற்படும் இடைஞ்சலை எடுத்துக்கூறியிருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.

No comments:

Post a Comment