Sunday 12 July 2015

செங்கோட்டை வாஞ்சி

செங்கோட்டை வாஞ்சி

1911ல் ஆஷ் துரையை (Lord Ashe) சுட்டுக்கொன்றார் வாஞ்சி .

ஆஷ்துரையின் பேரனான ராபர்ட் ஆஷ் வாஞ்சிநாதன் குடும்பத்துக்கு கொடுத்தனுப்பிய கடிதம்...

"துயரமும் பெருமிதமும் ஒருங்கே அமைந்த இன்றைய தினத்தில் ராபர்ட் வில்லியம் ஆஷ் பேரனுமாகிய கொள்ளுப் பேரன் பேத்திகளுமாகிய நாங்கள் வாஞ்சி ஐயரின் குடும்பத்திற்கு எங்கள் ஆறுதலையும் நட்பையும் வெளிபடுத்தும் முகமாக இச்செய்தியை விடுக்கிறோம்.
லட்சிய நோக்கம் மிகுந்த அரசியல் செயல்பாட்டாளர் வாஞ்சி.
வாஞ்சியின் விடுதலை வேட்கை எங்கள் தாத்தா ஆஷைக் கல்லறைக்கு அனுப்பியது.
அரசியல் களத்தில் தீவிரமாக பாடுபடுபவர்கள் அவர்கள் ஆட்சியாளர்களானாலும் சரி ஒடுக்கப்படுபவர்களானாலும் சரி, பெரும் பிழைச் செய்யும் சூழல் ஏற்பட்டு விடுகின்றது.
இன்றைக்கு உயிர் வாழும் வாய்ப்பைப் பெற்ற நாம், பழையவற்றை மறந்து சமாதானமாக உடன்வாழ்தல் இன்றியமையாதது.
அன்புடன்
ஆஷ் குடும்பத்தினர்,
அயர்லாந்து"

வ.உ.சிதம்பரனார் தமது தன்வரலாற்று நூலில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்.

‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
‘நன்றாகத் தெரியும்’ என்றேன்.
‘எப்படி?’ என்றான்.
‘யான் இவண் ஏகியதற்கும் தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக் கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும் அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘
ஒருவன் அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில் சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச் செத்தான்’ என்றான்.
‘நல்லதோர் செய்தி நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி,
தூத்துகுடி துறைமுகத்தில் கொடிகட்டிப்பறந்த ஆங்கிலேயரின் வணிக ஆதிக்கத்தை எதிர்த்து சொந்தமாகக் கப்பல் விட்டார்.
ஆங்கிலேய தொழிற்சாலைத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி போராட்டம் செய்து உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
இவற்றை சமாளிக்க ஆங்கில அரசு ஏவிவிட்ட அதிகாரிதான் ஆஷ்.
வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை
ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார்.
இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும்,
1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்.

1980களில் மணியாச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு வாஞ்சியின் பெயரை வைக்கவேண்டுமென்று கோரிக்கை எழுந்தது.
(தற்போது நிறைவேறிவிட்டது)
உடனே திராவிட இயக்கங்கள் ஒரு துண்டு பிரசுரத்தை வெளியிட்டார்கள்.
அதில் வாஞ்சி தற்கொலை செய்துகொண்ட பிறகு அவர் சட்டைப்பையில் கிடைத்த கடிதத்தின் சில வரிகள் அளிக்கப்பட்டிருந்தன.
"எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜுனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்துவந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ் பஞ்சமனை முடிசூட்ட உத்தேசம் செய்துகொண்டு, பெருமுயற்சி நடந்துவருகிறது. அவன் (George) எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம்.
அதைத் தெரிவிக்கும்பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்யவேண்டிய கடமை."

இந்துமத வெறியன் என்று கூறினால்கூட பொறுத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் வழக்கம்போல சாதிவெறி என்று ஆரம்பித்தது திராவிட இயக்கம்.
இதில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜை, பஞ்சமன் அதாவது கீழ்சாதிக்காரன் என்று சாதிவெறிபிடித்த பார்ப்பானாகிய வாஞ்சி கூறியுள்ளதாகவும்
ஆஷ் துரை நல்லவரென்றும்
அவர் குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டார் என்றும்
அவர் கடையத்தில் (தெலுங்கு)அருந்
ததிப்பெண் ஒருவர் பிள்ளைபேறு வலியால் துடித்தபோது அவரை அக்கிரஹாரம் வழியே பார்பனர்களை எதிர்த்து மருத்துவமனை கொண்டுசென்றார் என்றும் கூறப்பட்டிருந்தது.

'George V' என்பதை வடமொழியில் 'ஜார்ஜ் பஞ்(ச்)சம்' என்று எழுதுவர்,
வாஞ்சி அதைத்தான் எழுதியுள்ளார்.

ஆங்கிலேயருக்கு எதிரான திருநெல்வேலிக் கலவரத்தை மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி அடக்கி ஒடுக்கிய ஆஷ் நல்லவனாம்,
வெள்ளையனை எதிர்த்து ஒரு வார்த்தைகூட எப்போதுமே பேசாத எழுதாத ஆங்கில அடிமைகளின் கூடாரமான திராவிட இயக்கம் கூறுகிறது.
குற்றாலத்தில் அனைத்து சாதியினரும் குளிக்க உத்தரவிட்டாராம் அதனால் கொன்றுவிட்டார்களாம்.
அருந்ததியப் பெண்ணை கடையம் அக்கிரஹாரம் வழியே கொண்டுசென்றாராம்.
அப்போது பார்ப்பனர்கள் தடுத்தார்கள்.
அங்கே 16வயது வாஞ்சி இருந்தாராம்.
அந்த கோபத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் ஆஷ்துரையை சுட்டாராம்.

1906ல்தான் ஆஷ்துரை தென்தமிழம் வருகிறார்.
அப்போதே வாஞ்சிக்கு 20வயது.

அந்த துண்டுபிரசுரம் பல்வேறு வடிவங்களில் சுழன்று சுழன்று இன்று ஒரு சுவையான கதையாக மாறிவிட்டது,
"ஆஷ் துரை மாலை நேரத்தில் காலாற நடைபயிற்சி மேற்கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
அப்படி ஒருநாள் வழக்கமாக போகும் ராஜபாட்டைவிட்டு விலகி வேறு பாதையில் போகிறார்.
உடன் தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தரை பின்னால் தனது சாரட்டை மெதுவாக குதிரைகளை நடத்தி கூட்டிவரச்சொல்லிவிட்டு.நடந்துக
ொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் கேட்கிறது.
நடைப்பயிற்சியில் இருந்தவர் ஓசை வந்த திசை நோக்கினார் . நாலைந்து குடிசைகள் கொண்ட குடியிருப்பு பகுதியில் இருந்து ஓசைவந்ததை உணர்ந்த ஆஷ் துரை அங்கு போவதற்காய் பாதையிலிருந்து இறங்கி குடிசை நோக்கி நடந்தார்.
பின்னால் குதிரகளை நடத்தி அழைத்துவந்த ராவுத்தர் ஓடிவந்து "துரை அங்கு போகாதீர்கள்" என்று தடுக்கிறார்.
ஏன் என்று வினவிய துரைக்கு "அது தாழ்த்தபட்டவர்களின் குடிசை என்றும் நீங்கள் அங்கு போகக்கூடாது" என்றும் சொல்லுகிறார்.
ஓரளவு தமிழ்நாட்டு ஜாதிய சூழல் விளங்கிய ஆஷ் துரை,
ராவுத்தரை பார்த்து நீ போய் பார்த்து வருவாயா எனக்கேட்கிறார்.
"சரி துரை நான் போய் பார்க்கிறேன் என்றபடி சேரிக்குள் போன முத்தா ராவுத்தர் திரும்பி வந்து சொன்னார் " மொத பிரசவம் துரை சின்ன பொண்ணு ரெண்டுநாள கத்திட்டு இருக்காளாம்,
பிள்ளை மாறிக்கிடக்காம்" எங்கிட்டு துரை பொழைக்கபோகுது என்றார்.
ஏன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாமே என்று துரைக்கேட்க , அவங்க ஊருக்குள்ளேயே வரக்கூடாதுங்க அய்யா பின்ன எப்படி வண்டி கட்டி டவுணுக்கு கொண்டு போறது என்றார் முத்தா ரவுத்தர்.
இதனிடையே சாரட்டில் அமர்ந்திருந்த திருமதி.ஆஷ் துரை இறங்கி அக்குடிசை நோக்கி போனார்.
அவரை தடுக்க முனைந்த ராவுத்தரின் முயற்சி தோல்வியில்தான் முடிந்தது.
உள்ளே சென்று பார்த்து வந்த துரையின் மனைவி உடனே மருத்துவமனை கொண்டு சென்றால் ஒரு உயிரையெனும் காப்பாற்றலாம் என்று துரையிடம் சொன்னார்.
அருகிலிருக்கும் ஊருக்குள் சென்று உடனே ஒரு மாட்டுவண்டியை கொண்டு வருமாறு குதிரையொட்டியை பணித்தார் துரை.
ஓடிப்போன ராவுத்தர் ஊரின் மேற்குபகுதியில் உள்ள அக்கிரஹாரம் தாண்டிய பொழுது துரையின் வண்டியொட்டி எனத்தெரிந்த ஒரு பார்ப்பணர் வழிமறிக்கிறார். என்ன விடயம் என்வென்று சொல்லி ஒரு குடியானவனின் வீட்டிலிருந்த மாட்டு வண்டியை ஒட்டி வந்தார்.
அந்த வழியாய் வண்டிப்பாதை அக்கிரஹாரத்தை தாண்டிதான் சென்றாகவேண்டும்.
சரியாய் அக்கிரஹாரத்துக்குள் மாட்டுவண்டு மறிக்கப்படுகிறது.
ஒரு சேரிப்பெண்ணை ஏற்றப்போகும் வண்டி இப்பாதை வழியே போகக்கூடாது என்று பார்ப்புகள் வழிமறித்து விடமறுக்கிறார்கள்.
வண்டி கொடுத்த குடியானவனையும் ஊர் நீக்கம் செய்துவிடுவோம் என எச்சரிக்கிறார்கள்.
வண்டி கொண்டு வர சொன்னது துரையும் அவரின் மனைவியும்தான் என்று விபரம் சொன்ன பிறகும் ஏற்க மறுக்கிறார்கள் .
இந்த விபரத்தை துரையிடம் போய் சொல்லுகிறார் ராவுத்தர்.
இதைக்கேட்ட ஆஷ் துரை அவர்கள், தனது வண்டியில் அந்த பெண்ணை ஏற்றுமாறு உத்தரவிட்டார்.
குதிரையோட்டியின் பக்கதிலேறி அமர்ந்து கொண்டார்.
வண்டி அக்கிரஹாரம் நுழைகிறது.
பார்ப்புகள் கூட்டமாய் வழிமறிக்கிறார்கள்
"ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை ஏற்றிக்கொண்டு இந்த அக்கிரஹாரத்துக்குள் வருவது யாராய் இருந்தாலும் அனுமதிக்கமுடியாது" என்கிறார்கள்.
வழிவிட சொல்லிப்பார்த்தார் மறுக்கவே வண்டியைக்கிளப்ப
ு என்று உத்தரவிடுகிறார்.
மீறி மறித்த பார்ப்புகளின் முதுகுத்தோல் துரை அவர்களின் குதிரைசவுக்கால் புண்ணாக்கபடுகிறது.
அந்த பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டு காப்பாற்றப்பட்டாள்.
ஆஷ் துரை அவர்களிடம் அடிவாங்கிய கும்பலில் ஒரு 16 வயது இளைஞனும் இருந்தான் அவன் பெயர் வாஞ்சிநாதன். அப்போது எடுத்த சபதம்தான் வாஞ்சிநாதனை கொலைசெய்ய தூண்டியது.
சனாதான காவலனாக , மனித உயிரைவிட அக்கிரஹார புனிதம் காக்க புறப்பட்ட வரலாறு இன்று வரை மறைக்கபட்டு வருகிறது.
இதுவும் ழான் வோனிஸ் எழுதிய Ash Official Notes எனும் குறிப்புகளில் அரசு ஆவனக்காப்பகங்களில் தெரிந்தே உறங்கிக்கொண்டிருக்கிறது.
இனி மறைந்திருக்கும் வரலாறுகள் ஒவ்வொன்றாய் வெளிக்கிளம்பும் காலம் வெகுதூரத்தில் இல்லை"

வழக்கம்போல கதையாக ஆரம்பித்து கட்டுரையாக விரிக்கும் அதே சத்தற்ற திராவிடக் கட்டுரை.

செங்கோட்டையில் பிறந்த வாஞ்சி கடையத்திற்கு எப்படி வந்தார்?
அந்த 16வயது இளைஞன்தான்
வாஞ்சி என்று வோனிஸ் நேரில் பார்த்திருப்பாரோ?
சேரியில் இருந்து மருத்துவமனை போக வேறுவழியே இல்லையாம்.
துண்டு பிரசுரத்தில் ஆஷ் கையில் துப்பாக்கி இருந்தது.
இப்போது அது சவுக்காக மாறிவிட்டது.
வாஞ்சி ஆஷ்துரையைச் சுடும்போது உடன் வந்த மாடசாமி பிள்ளை பார்ப்பனர்தானோ?
ஆஷ்துரை கொலைவழக்கில் பாரதியை தேடியபோது அவர் பாண்டிச்சேரிக்குள் சென்றார்.
ஏனென்றால் பாரதி சொல்லித்தான் வாஞ்சிக்கு பாரதிதாசன் பாண்டிச்சேரியில் இருந்து துப்பாக்கி வாங்கி அனுப்பியதாக 'சிரிக்கும் சிந்தனைகள்' நூலில் கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதியேற்காததால் பாரிஸ்டர் பட்டத்தையே உதறித்தள்ளிய வ.வே.சு.ஐயர் தான் வாஞ்சிக்கு பாண்டிச்சேரியில் துப்பாக்கிப் பயிற்சி அளித்தார்.
ஆக அந்த காலகட்டத்தில் ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கிளம்பிய தீவிரவாத இந்து மத பற்றாளர்கள் செய்ததுதான் ஆஷ் கொலை.

பார்ப்பனன் என்றால் பாய்ந்துவந்து சாதிப்பட்டம் கட்டி அங்கொன்றும் இங்கொன்றுமாக எதையாவது உருவி ஆதாரமாக்கி
திரைக்கதை வசனம் எல்லாம் எழுதி எப்படியெல்லாம் மொட்டைத் தலைக்கும் முழங்காலும் முடிச்சுபோடுவது என்று திராவிட இயக்கங்களிடம்தான் கற்கவேண்டும்.

நன்றி: http://www.kalachuvadu.com/issue-118/page12.asp
http://www.jeyamohan.in/4488 #.

No comments:

Post a Comment