Sunday 12 July 2015

தமிழகத்து அண்ணன் ஈழத்துத் தம்பி

தமிழகத்து அண்ணன்
ஈழத்துத் தம்பி

ஒரு விவாதம்

அண்ணன்: தம்பி நாம் இருவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள்
ஆனால் அண்ணன்-தம்பியே ஆனாலும் கணக்கு சரியாக இருக்கவேண்டும்
உடன்பிறந்தவன் என்பதை மனதில் வைத்து, உன் கேள்விகளைக் கேள்.

தம்பி: அண்ணா 2009ல் நாங்கள் கொல்லப் பட்டப்போது என்ன அண்ணா செய்துகொண்டிருந்தீர்கள்?

அண்ணன்: இதே கேள்வியை நானும் கேட்கலாம். புலிகளின் ஆட்சியில் இருந்தோர் 6லட்சம் மக்கள்தான்
மீதி 20லட்சம் தமிழர்கள் இலங்கை முழுவதும் இருக்கிறீர்கள்
நீங்கள் கொழும்பில் மட்டுமாவது தெருவில் இறங்கியிருந்தால் சிங்கள அரசு செயலிழந்திருக்கும்
தமிழக விடுதலைக்குழுக்களுடன் கைகோர்க்க ஈழ விடுதலைக் குழுக்கள் அக்கறை காட்டவில்லை.
தமிழக அரசியலில் அவர்கள் தலையிடுவதால் இந்தியாவைப் பகைக்கவேண்டிவருமோ என்று அஞ்சினர்.
ஈழத்தின் மீதான இந்திய ஆளுமை தமிழகத்தை பிரித்துவிட்டால் முடிவுக்கு வரும் என்பதை யோசித்திருக்கவேண்டும்.
இது சுயநலமன்றி வேறென்ன?

தம்பி: 2009ல் நீங்கள் எதுவுமே செய்யவில்லை என்பது கொஞ்சமாவது நியாயமாகுமா?

அண்ணன்: நாங்களும் போராடினோம்.
16பேர் தீக்குளித்தார்கள்.
அங்கே நடக்கும் அவலத்தை எங்கள் ஊடகங்களை கட்டுப்படுத்தும் வேற்றின வந்தேறி அரசுகள் எங்களுக்கு முழுதும் தெரியவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.
முரணான தகவல்களை வழங்கினார்கள்.
போராட்டத்தை முடிந்த அளவு ஒடுக்கினார்கள்.
இந்திய ஊடகங்களும் கட்சிகளும் அதையே செய்தன.
கோவை அருகே இலங்கைக்கு வந்த ஆயுத சரக்குகளை மறித்து தீவைத்து கொளுத்தினோம்.
இன்னும் எவ்வளவோ.
1983யூலைக் கலவரத்தின் போதும் தமிழக இளைஞர்கள் 5000 பேர் மதுரையிலிருந்து திரண்டு இராமேசுவரம் வந்து ஈழத்திற்கு செல்லத்துணிந்தது உனக்கு தெரியுமா?
1989ல் அமைதிப்படைக்கு  எதிர்ப்பு தெரிவிக்க கொடைக்கானல் அரச தொலைக்காட்சி முக்கியகோபுரத்தை குண்டுவைத்து தகர்த்தோம்.
ஆனால் நீங்கள்?
1991ல் காவிரிக் கலவரத்தில் பல தமிழர்களைக் கொன்றனர்.
மேலும் பல உண்டு.
அதற்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் அறிந்துவைத்திருக்கவாவது வேண்டாமா?

தம்பி: தமிழ்நாட்டில் நீங்கள் ஈழ அகதிகளைக்கூட மோசமாக நடத்துகிறீர்கள்.

அண்ணன்: இங்கே அகதிமுகாம்களை விட அதிகமான ஈழத்தமிழர்கள் தமிழகம் முழுவதும் வாழ்கிறார்கள்.
ஈழஅகதிகளைப் பற்றி பேசுமுன் தமிழக வம்சாவழி மலையகத் தமிழர் நிலை பற்றி உன்னால் பேசமுடியுமா?
தமிழக திரைத்துறையில் கூட பாலுமகேந்திரா, அருண்பாண்டியன், ஜெயபாலன் என்று ஈழவர் பலருண்டு.
நீங்கள் இங்கே வந்து இறங்கிவிட்டு இந்தியா வந்துவிட்டோம் என்கிறீர்கள்.
எங்களை இந்தியன் என்கிறீர்கள்.
இதுவும் உங்கள் தாய்மண்தான்.
நாம் இந்தியனோ சிறிலங்கனோ இல்லை.
நாம் தமிழர்கள்.
நாம் இணைந்து சிறிலங்காவிடமும் அண்டைய மூன்று மாநிலங்களிடமும் பறிபோன பகுதிகளையும் மீட்டு விடுதலை பெறும்வரை தமிழ்'நாடு' என்று பெயருக்குக்கூட அழைக்கவேண்டாம்.

தம்பி: இத்தனை அக்கறையுடன் பேசுகிறீர்களே
உங்கள் அரசியல்வாதிகள் பேச்சு அப்படி இல்லையே

அண்ணன்: நீங்கள் முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்த விக்னேஸ்வரன்கூட தமிழகத்தில் ஈழம் பற்றி பேசுவது எங்களுக்கு சிரமமாக உள்ளது என்று கூறினார்.
ஈழ அரசியல்வாதிகள் தமிழகத்தை பலவாறு இகழ்ந்துள்ளனர்.

தம்பி: புலிகள் மீதான தடையைக் கூட உங்களால் நீக்கமுடியவில்லையே

அண்ணன்: புலிகளை வளர்த்துவிட்டது தமிழகம்தான்.
புலிக்கொடியை வடிவமைத்ததும், புலிச் சீருடைகளை வடிவமைத்ததும் தமிழகத்து தமிழர்கள்தான்.
புலிகளுக்கு கோடி கோடியாகப் பணமும் பயிற்சியும் சரக்குக் கொள்வனவும் தமிழகம் கொடுத்ததுதான்.
புலிகளுக்கு இசையமைத்துக் கொடுத்ததுகூட தமிழகத்தமிழர்தான்.
ஈழத்தின் ஆயுதப் போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே 40%வரை தமிழகம் வழங்கியதுதான்.

தம்பி: என்ன 40 சதவீதமா? இது உங்களுக்கே அடுக்குமா?

அண்ணன்: உறுதியாகக் கூறுவேன். ஈழப்போராட்டத்தில் 40% தமிழகத்தின் பங்கு.
செல்வாவுடன் இணைந்து இலங்கைத்தீவின் முதல் தமிழ் பத்திரிக்கையைத் தொடங்கி தமிழர் உரிமைக்குக் குரல் கொடுத்தவர் ஒரு தமிழகத் தமிழர்.
ஈழமக்களின் உச்சகட்ட இழப்பு 2009ல் 1,75,000 உயிர்கள்.
சாஸ்திரி-பண்டாரநாயக ஒப்பந்தத்தின்போது 6லட்சம் தமிழக வம்சாவழித் தமிழர்கள் வெறும் உயிரை மட்டும் எடுத்துக்கொண்டு விரட்டியடிக்கப்பட்டு தமிழகம் வந்தார்கள்.
நாங்களும் இழப்புகளைச் சந்தித்துள்ளோம்.
500க்கு மேல் தமிழக மீனவர் சாவு.
புலிகளின் மாவீரர் பட்டியலில் தமிழக தமிழர்கள் பலருண்டு.
செங்கண்ணன் என்ற ஒரு கரும்புலி கூட உண்டு.
இணையத்தில் கூட அப்பட்டியல் கிடைக்கிறது.
முழுமை பெறாத அப்பட்டியலில் 12 தமிழக மாவீரர்கள் காணக் கிடைக்கின்றனர்.
முதல் மாவீரர் தமிழகத்தில் தமது மரணத்தைத் தழுவினார்.
தமிழகத்தில் பொன்னம்மானுக்கும் மாவீரர் நினைவில்லம் கூட உள்ளது.

தம்பி: தேசியத்தலைவர் சிலைகளையும் படங்களையும் நீங்கள் தற்போது பயன்படுத்துவது மகிழ்ச்சியளிக்கிறது.

அண்ணன்: தம்பி ஒரு விடயத்தை வெளிப்படையாகக் கூறுகிறேன்.
பிரபாகரனார் ஈழத்தின் தலைவர்தான்.
உலகத் தமிழர்களின் தலைவர் கிடையாது.
அவர் குரல்கொடுத்தது போராடியது அனைத்துமே ஈழத்தமிழருக்காக மட்டும்தான்.
உலகத் தமிழினம் முழுமைக்குமான தலைவர் இன்னும் உருவாகவில்லை.
இராசராச சோழனைக் கூட அந்த இடத்தில் வைக்கமுடியாது.
நம் தலைமுறையில் அப்படி ஒரு தலைவர் தோன்றுவார் என்று நம்புவோம்.

தம்பி: என்ன அண்ணா இப்படிக் கூறுகிறீர்கள்?
முப்படை கட்டியெழுப்பி தனியரசு ஆண்ட தேசியத்தலைவர்தானே நம் இனத்தின் தலைவர்

அண்ணன்: சாதனைகள் பல புரிந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்து இன்று உலகில் தமிழர்களின் அடையாளமாக விளங்குவது பிரபாகரனார்தான்.
தற்போதைக்கு அவரைத் தலைவராக ஏற்பதில் தவறில்லை.
ஆனால், இலங்கைத் தீவின் 30% பரப்பளவில் வாழும், 25% எண்ணிக்கையுள்ள ஈழத்தமிழர்கள் வெறும் ஒன்றரை கோடி சிங்களவரை அவர்களின் நவீனமில்லாத ராணுவத்தை அதுவும் 6கோடித் தமிழர்களின் பக்க ஆதரவுடன் தற்கொலைத் தாக்குதல் நடத்தி தோற்கடிப்பது பெரிய வீரமில்லை.
இந்திய துணைக்கண்டத்தில் வெறும் 5% நிலப்பரப்பில் வாழும், 6% தமிழகத் தமிழன் 100கோடி இந்தியனையும் உலகின் மூன்றாம் பெரிய ராணுவமான இந்தியப் படையையும் தோற்கடிப்பான்.நீங்கள் இதுவரை படைத்த சாதனைகளும் செய்த தியாகங்களும் தேசியத்தலைவர் பெயரும் மங்குமளவு எங்கள் வீரம் செறிந்த போராட்டம் அமையும்.
உங்கள் உதவியும் அதற்குத் தேவை.
எங்களுக்கும் ஒரு வீரப்பனார் இருந்தார். வன்னி அளவு காட்டை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
இருமாநில காவல் மற்றும் வனத்துறை மத்திய ரிசர்வு படை க்ளைடர் விமானங்கள் என்று தம்மை விட பத்துமடங்கு பெரிய படையை அவர் 30ஆண்டுகள் எதிர்த்துநின்றார்.
உனக்கு நினைவிருக்கிறதா தம்பி?
வேலூர் கோட்டை சிறையிலிருந்து புலிகளை தப்பிக்கவைத்து பத்திரமாக அனுப்பிவைத்தோமே அப்போது அவரும் உதவினார்.
நீங்கள் அறியாத கதைகள் ஏராளம்.
தமிழரசன், சுப.முத்துக்குமார் என்று நீங்கள் அறியாத தமிழகப் போராளிகள் ஏராளம்.

தம்பி: தமிழகத்தில் சாதியப் பிரச்சனைகள் பெரிதாக உள்ளதாக அறிகிறேன்.

அண்ணன்: ஒன்றை கூர்ந்து கவனித்தாயா?
இங்கே மதமோதல்கள் மிகமிக குறைவு.
ஈழத்தில் அப்படியில்லை.
ஈழத்தில் சாதியாகப் பிரித்தால் மிகவும் சிறிய கூட்டங்கள்தான் தேறும்.
பெரிய அரசியலை செய்யமுடியாது.
அதனால் மதமாக பிரித்து லட்சக்கணக்கான கூட்டம் தேறுவதால் அரசியல் செய்யமுடிகிறது.
இங்கே தமிழகத்தில் சாதியாகப் பிரித்தாலே லட்சக்கணக்கில் கூட்டம் தேறும்.பெரிய அளவில் அரசியல் செய்கிறார்கள்.
பிரித்தாளும் தந்திரம்தான் தம்பி

தம்பி: என்றால் ஈழத்தமிழர்கள் உங்களுக்கு எதுவும் செய்ததில்லை என்கிறீர்களா?

அண்ணன்: அப்படியில்லை. நீங்கள் வேறு நாங்கள் வேறு இல்லை.
இந்தி மொழி எங்கள் மீது திணிக்கப்பட்டபோது முதலில் எதிர்த்துப் போராடி சிறை சென்றவர் ஒரு ஈழத்தமிழர்தான்.
ஈழ விடுதலைப் போராளி நெப்போலியன் தமிழக விடுதலைப் போராளி தமிழரசனுடன் களமாடியுள்ளார்.
சுப.முத்துக்குமாருக்கு தலைவர் சிறப்பு பயிற்சி கொடுத்தார்.
நாம் ஒன்றிணைந்து கடலால் இரண்டு துண்டாகி சுருங்கிக்கொண்டேவரும் நமது தாய்நிலத்தை மீட்ட தமிழ்க்குடியரசு அமைக்கவேண்டும்.
உலகத்தமிழருக்கு முடிந்த உதவிகளைச் செய்யவேண்டும்.

தம்பி: காலம் அதைத்தான் விரும்புகிறது அண்ணா

(ஈழப்போரில் தமிழகம்
https://m.facebook.com/photo.php?fbid=392315390872120&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739&refid=13&__tn__=E  )

1 comment:

  1. தமிழராய் ஒன்றினைவோம்..💪

    ReplyDelete