Monday 13 July 2015

தமிழ் பேரரசு அதன் உச்சநிலையில்

தமிழ் பேரரசு அதன் உச்சநிலையில்

€±±||ZZZZZZZZZZZZZD>

ஒருவேளை தமிழர்கள் தம்மை விட பலம் குறைந்த நாடுகளை பணியவைத்து ஒரு பேரரசை எழுப்ப முயன்றால்,

மேலே தரப்பட்டுள்ள படம் அளவு ஒரு பேரரசை 40 ஆண்டுகளில் அமைக்கமுடியும்.

வேற்றுமண்ணை அடிமைப்படுத்தாமல் தமிழர்கள் தாய்மண்ணை மீட்டு அதிலேயே முழு ஆற்றலையும் பயன்படுத்தி ஒரு வல்லரசை எழுப்புவதே அறம்.
அதுவே நிலைக்கும்.

ஒருவேளை ஒரு பேரரசை எழுப்பவேண்டிவந்தால்,
நமக்கு கடினம்தான்.
ஏனென்றால் எந்தவொரு பேரரசும் கிழக்கு மேற்காகவே விரியும்.
நமக்கு கிழக்கு மேற்கே கடல் உள்ளது.
அதனால்தான் நாம் வரலாற்றில் பேரரசாக எழமுடியவில்லை.

இதற்கு என்ன செய்யவேண்டுமென்றால் வடக்கே எவ்வளவு கைப்பற்றுகிறோமோ அதே அளவைப் போல நான்கு மடங்கு அகலமான நிலத்தை கிழக்கு-மேற்காகவும் கைப்பற்றவேண்டும்.

படிநிலை 1:

முதலில் நாம் இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியின் ஒடுங்கிய பகுதியையும் இலங்கைத் தீவையும் முற்றுமுழுதாகக் கைப்பற்றி எதிர்ப்போரை இல்லாது ஒழிக்கவேண்டும்.
இதை எளிதில் சாதித்துவிடலாம்.

இதுதான் அடித்தளம்.
பிறகு மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிக்கவேண்டும்.
உணவு உற்பத்தியை பன்மடங்கு பெருக்கவேண்டும்.
புதிய போர்உத்திகளையும் ஆயுதங்களையும் உருவாக்கவேண்டும்.
இருக்கவே இருக்கிறது தமிழ்வீரம்.
அதை மேலும் உசுப்பிவிடவேண்டும்.

இத்தனைக்குள் வடக்கே நம்மீது பெரும்படையுடன் வல்லரசு நாடுகள் போருக்கு வந்திருக்கும்.

படிநிலை2:

முதல் பெரிய போர்.
இதுதான் மிகவும் சிறப்பான வெற்றியீட்டவேண்டிய போர்.
இது கொஞ்சம் கடினம் ஆனால் வெற்றிபெறுவது உறுதி.
அவர்களை வென்று இமயம் வரை கைப்பற்றவேண்டும்.
வெற்றி பெற்ற நிலத்தில் எதிர்ப்பவரை ஒழித்துகட்டிவிட்டு ஒவ்வொரு இனத்திற்கும் சிற்றரசுகள் அமைத்துக்கொடுத்து அவர்களிடம் ஆட்கள், உணவு, பொருள் ஆகியவற்றை வாங்கிக்கொள்ளவேண்டும்.
அவர்களில் போர் அறிவுகொண்டவர்களை மரியாதையாக நடத்தி வசதிகள் செய்துகொடுத்து பதவிகள் கொடுத்து தொலைதூரப் போர்களில் பயன்படுத்திக்
கொள்ளவேண்டும்.
தாய்நிலமும் அதனை ஒட்டிய அண்டை நிலமும் உற்பத்தி செய்து கொடுக்க கொடுக்க நம் அரசு பரவிக்கொண்டேயிருக்கும் இதை நினைவில் கொள்க.

படிநிலை3:

இந்திய துணைக்கண்டத்தைக் கைப்பற்றியதும் வளமான பகுதியான கிழக்கு நாடுகளை ஜப்பான் கடல்வரை கைப்பற்றவேண்டும்.
காடுகள் நிறைந்த பகுதிதான் ஆனாலும் இது எளிமையானது.
இதில் கப்பற்படை உதவி தேவைப்படும் அதற்காக கப்பல்படை ஒன்றை அனுப்பி அந்தமான் நிகோபரைக் கைப்பற்றி தளமமைக்கவேண்டும்

இதன்பிறகு கப்பல்படையைக் கட்டமைத்து தென்கிழக்கு நாடுகளில் ஆஸ்திரேலியா கண்டம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளைத் தவிர மற்றதைக் கைப்பற்றவேண்டும்.

இப்போது நம் பாட்டனான அரசேந்திர சோழன் வழியில் அவனையும் மிஞ்சிவிட்டோம் என்றாகும்

படிநிலை4:

தாய்நிலத்தில் இருந்து புதுப்படை திரட்டி மேற்குநோக்கி (பாகிஸ்தானுக்குள்) அனுப்பவேண்டும்.
வான்வழி தாக்குதலைக் கலந்து நடத்தி அரேபிய நாடுகள் இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளையும்
ஆப்பிரிக்காவின் வடக்கையும் கைப்பற்றவேண்டும்.

இலங்கையில் ஆயத்தம் செய்யப்பட்ட கடற்படை கடல்வழி தென்னாப்பிரிக்காவிலும்  மடகாஸ்கரில் வந்து இறங்கவேண்டும்.
ஆப்பிரிக்காவை வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்து படை இருமுனைகளில் முன்னேற்றவேண்டும்.

இதற்கு 40 முதல் 80 ஆண்டுகள் ஆகும்.

இதுதான் படத்தில் அடர்சிவப்பு பகுதி.
இப்போதுநாம் உலகின் மூன்றாவது பெரிய பேரரசு.

சிறிது ஓய்வு.

பத்துஆண்டுகள்.
இந்த காலத்தில் கைப்பற்றிய நிலத்தில் எதிர்க்க தலைதூக்கியவரை ஒழித்து சிற்றரசுகள் சண்டித்தனம் செய்தால் அவற்றுக்கு பாடம் புகட்டி அடங்கமறுத்தால் அந்த சிற்றரசையே படையெடுத்து ஒழித்து மாற்று அரசை அமைத்துக்கொடுக்கவேண்டும்.
இதன்மூலம் நமது ஆதிக்கத்தை  நிலைநிறுத்தவேண்டும்.
நிர்வாகத்தை சிறப்பாக நடத்தி எல்லா பொருட்களின் உற்பத்தியையும் பெருக்கி
நம்மால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவேண்டும்.

அதாவது முதலில் இருந்தே ஆதரவைச் சம்பாதிக்காவிட்டாலும் வெறுப்பை சம்பாதிக்காத அளவு பார்த்துக்கொள்ளவேண்டும்.
வெறுப்படைந்தோரை இவ்வோய்வு காலத்தில் மனம்குளிர செய்யவேண்டும்.

எந்த இனமக்களும் தன் இனம் ஆளவேண்டும் என்பதை விட அமைதியான வாழ்க்கையையே விரும்புகின்றனர்.

படிநிலை 5:

இதன்பிறகு ஆப்பரிக்காவை முழுதாகக் கைப்பற்றவேண்டும்.
அம்மக்கள் நம்மோடு தொடர்புடைய குடிகள் ஆவர்.
கடல் படையை அதிகப்படுத்தி இந்தியக்கடல் தீவுகள் அனைத்தையும் கைப்பற்றி ஆஸ்திரேலியாவைத் தனிமைப்படுத்தி அக்கண்டத்தைப் பிடிக்கவேண்டும்.
பிறகு
தென்னாப்பிரிக்காவிலிருந்து படையனுப்பி கடல்கடந்து தென்னமெரிக்க நாடுகளைக் கைப்பற்றலாம்.
இது கொஞ்சம் கடினம்.
இதை சாதித்தால் உலகின் முதல்பேரரசு நாமே.
இதுதான் படத்தில் நிறமிடப்பட்ட மொத்தபகுதி.

படிநிலை 6:

பிடித்த பகுதிகளில் நல்லாட்சி செலுத்தி உற்பத்தியை பெருக்கி மக்களை மகிழ்ச்சியாக வைத்திருந்து படையை பலமடங்கு பெருக்கி முதல்வல்லரசாக ஆனபிறகு
(இதற்கு இன்னொரு 40ஆண்டுகள் ஆகலாம்)
வலிய நாடுகள் இருக்கும் ஐரோப்பா, அதன்பிறகு சீனா வரை அதன்பிறகு வட அமெரிக்கா கடைசியில் இரஷ்யா என்று உலகத்தையே கூட பிடிக்கமுடியும்.
ஆனால் இது கடினம்.

ஏனென்றால் நமக்கும் குளிருக்கும் ஆகாது.
தவிர குளிர்நாடுகள் மாபெரும் வல்லரசுகள்.
அவற்றையெல்லாம் வெல்ல இதுவரை (படிநிலை5 வரை) நாம் சேர்த்த அத்தனையையும் செலவிடவேண்டிவரும்.

இதற்கு உலகம் முழுவதும் இருக்கும் தேசியவாதிகளை (nationalist) நாம் திரட்டவேண்டும்.
அதற்கு எல்லாவகையிலும் சிறந்த ஒரு தேசிய இனமாக நாம் அவர்களுக்குத் தோன்றவேண்டும்.
அவர்கள் நாட்டை பிடிக்க அவர்கள் உதவுவார்கள்.
பிடித்தபிறகு இனவழி தேசியஅரசை நிறுவி அவர்களிடம் (nationalist) அளித்து அவர்களை நமக்கு கீழே வைத்துக்கொள்ளவேண்டும்.
ஆனால் மரியாதையாக நடத்தவேண்டும்.
எல்லா மக்களுக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்தளிக்கவேண்டும்.
மக்கள் பிரச்சனைகளை முக்கியத்துவம் கொடுத்து தீர்க்கவேண்டும்.
சாதி,மத,இன,மொழி சகிப்புத்தன்மை மற்றும் சமநலம் கண்ணும்கருத்துமாகப் பேணவேண்டும்.
உளவுத்துறை விழிப்பாக இருக்கவேண்டும்.
யார் எதிராக சிந்தித்தாலும் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

ஒரே நாணயம், எதிர் எதிர் மூலைகளை இணைக்கும் போக்குவரத்து.
நாம் ஒரே நாடு எல்லா இனமும் இங்கே சமம் என்ற பரப்புரை.
இவையும் தேவை.
இது முடியாது என்று கேலி செய்வோர் பிரிட்டிஷ் பேரரசும், மங்கோலிய பேரரசும், இரசிய பேரரசும் தொடக்கத்தில் எத்தனை சிறிதாக இருத்தன என்பதை அறிந்தபிறகு கேலியாக சிரிக்க முயன்று பாருங்கள்.

இத்தனையும் செய்தாலும் நம்மால் 150ஆண்டுகளுக்கு மேல் நமது பேரரசைக் கட்டியாள முடியாது.
கொஞ்சம் கொஞ்சமாக தாய்நிலத்திற்குள் சுருங்கிவிடுவோம்.
அதனால் பெரிய பலனில்லாத இந்த திட்டத்தை முடிந்தவரை தவிர்ப்பதே நல்லது.

இதற்குப் பதிலாக நாம் நமது தாய்நிலத்தைக் கைப்பற்றி படைவலிமையைப் பெருக்கி உற்பத்தியைப் பெருக்கி ஆற்றலை தாய்நிலத்திலேயே தேக்கிவைத்து நமது தாய்நிலத்தை எந்த அரசையும் தோற்கடிக்கும் வல்லரசாக கட்டியெழுப்பினால் உலகம் அழியும்வரை வீழமாட்டோம்.

அதுவே நிலையான பேரரசு.

…………………………………

மேலும் அறிய,
தமிழியத்தின் பிரித்தாளுதல்
https://m.facebook.com/photo.php?fbid=509316365838688&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

2 comments:

  1. அருமையான கட்டுரை,,,

    நாம் வெல்வோம் உறுதியாக தோழா

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை,,,

    நாம் வெல்வோம் உறுதியாக தோழா

    ReplyDelete