Wednesday 15 July 2015

கட்டுப்பாட்டுப் பகுதி வைத்திருக்கும் குழுக்கள்

கட்டுப்பாட்டுப் பகுதி வைத்திருக்கும் குழுக்கள்

//- //- //- -######=]
   ¡±±±± ÷÷÷÷÷÷÷÷÷
777//
//////

இன்றைய நவீன காலத்தில் ஆயுதப்போராட்டம் கடினமானது சிலர் கூறுகின்றனர்.

தற்காலத்தில் குறிப்பிட்ட பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆயுதக்குழுக்களின் பட்டியல் இதோ

1) AQAP & Al-Sharia :-
"அரேபியத் தீபகற்பத்தின் அல்-கெடா" என்ற பெயரில் இயங்கிவரும் "அல்-கெடா" குழுவின் ஒரு பிரிவானது 2009ல் தொடங்கப்பட்ட குழு.
அல்-ஷரியா என்ற குழுவும்  2011லிருந்து இயங்கிவருகிறது.
இவ்விரு குழுக்களும் இணைந்து ஏமன் நாட்டில் கடற்கரையோரப் பகுதிகளை (முதல் படத்தில் சாம்பல் நிறம்) 2009லிருந்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

2) Houthis :-
1994ல் தொடங்கப்பட்டு 2004ல் ஆயுதம் தூக்கிய குழு.
ஏமன் நாட்டில் மேற்கு பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(முதல் படத்தில் மஞ்சள் பகுதி).

3) Hadi :-
ஏமன் நாட்டின் அதிபராக இருந்த ஹெடி என்பவரைப் பின்பற்றுவோர் குழு Houthi குழு 2014 தலைநகரைக் கைப்பற்றிய பிறகு கடந்த 22ம் தேதி அதிபர் பதவியை விட்டு விலகிய ஹெடி தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஏமன் நாட்டுப் படை மூலம் தென்மேற்கு பகுதி, நடுப்பகுதி, கிழக்குப் பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்
(முதல் படத்தில் சிவப்பு பகுதி).

3) Al-Shabaab :-
2006லிருந்து இயங்கிவரும் குழு.
சோமாலியாவில் மூன்று வெவ்வேறு பகுதிகளைத் தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(இரண்டாம் படத்தில் கரும்பச்சை நிறம்)

4) Boko Haram :-
2002லிருந்து இயங்கிவரும் குழு. ஆப்பிரிக்கநாடான நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
(மூன்றாவது படம்)

5) Donetsk people's republic &
Lugansk people's rupublic
இவ்விரு அமைப்புகளும் உக்ரைன் நாட்டில் கிழக்கே இரு மாநிலங்களை தமது  தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.
2014 ல் தத்தமது விடுதலையை அறிவித்துக்கொண்டன.
(நான்காவது படத்தில் சிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு)

6)Forces nouvelles :-
2002லிருந்து ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்டின் வடக்குப்பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(ஐந்தாவது படத்தில் சிவப்பு)

7) General national congress:-
2014லிருந்து லிபியாவின் வடமேற்குப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
(ஆறாவது படத்தில் பச்சை)

8) ISIS :-
1999ல் தொடங்கப்பட்டது.
சிரியா மற்றும் ஈராக் ஆகிய இருநாடுகளிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
(ஏழாவது படத்தில் சாம்பல்)

9) Kurdistan :-
நான்கு நாடுகளில் வாழும் குர்த் மக்கள் ஒரே நாடு கேட்டு நடத்திவரும் இனவிடுதலைப்போரில் ஈராக்கில் வடகிழக்கே பெரியதொரு பகுதியையும் (ஏழாவது படத்தில் இளம்பச்சை) சிரியாவில் வடக்கே ஆங்காங்கே மூன்று சிறுசிறு பகுதிகளையும் (அடர்மஞ்சள்) தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

10) Kachin army :-
மியான்மர்(பர்மா) நாட்டில் 1961லிருந்து ஆயுதம் தாங்கிப் போரிட்டுவரும் குழு.
வடகிழக்குப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(எட்டாவது படத்தில் கறுப்பு)

11) Wa state :-
மியான்மரில் 1989ல் தொடங்கப்பட்ட குழு.
கிழக்குப்பகுதில் உள்ள ஷான் மாநிலத்தில்  வட மற்றும் தென்திசையில் எல்லையோரமாக இரண்டு கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் எல்லையோரமாகக் கொண்டுள்ளது .
(எட்டாவது படத்தில் சிவப்பு)

12) Sudan revolutionary front
சூடான் நாட்டில் தெற்கே ஒரு பகுதியை 2011லிருந்து தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(ஒன்பதாவது படத்தில் ஊதா)

13) SPLM- IO
2011ல் தனிநாடான தென்சூடானின் வடக்கில் ஒரு சிறிய பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது
(ஒன்பதாவது படத்தில் பச்சை)

14) Zapatistas
மெக்சிகோ நாட்டின் தெற்கே ஒரு மாயிலத்தைக் 1994லிருந்து கட்டுப்படுத்துகிறது
பத்தாவது படத்தில் கருப்பு.

( புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி
https://m.facebook.com/photo.php?fbid=415463378557321&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739  )
.

No comments:

Post a Comment