Wednesday 15 July 2015

பிள்ளைகளை வந்தேறிகள் ஆக்காதீர்கள்

பிள்ளைகளை வந்தேறிகள் ஆக்காதீர்கள்

நான் இருக்கும் ஹிஸார் நகரம் நம் நாட்டுத் தலைநகரான சென்னையிலிருந்து
2350கி.மீ தொலைவில் உள்ளது.

இங்கே பிழைப்பு தேடி வந்த என்னைப் போன்ற தமிழர்கள் சிலரை அவ்வப்போது காண்பேன்.
விரல்விட்டு எண்ணுமளவு தமிழர்கள் இங்கே இருக்கிறார்கள்.

ஒரு முறை ஒரு தமிழ்நண்பரோடு பேசிக்கொண்டு நடந்துபோகும்போது ஒரு
சாராயக்கடை அருகே சரக்கு வாங்கவந்த தமிழர்கள் இருவர் நாங்கள் தமிழில்
பேசுவதைக் கேட்டு எங்களிடம் வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.

அவர்கள் இங்கே 20,25 வருடங்கள் முன்பு வந்தவர்கள்
இப்போது பத்து குடும்பங்கள் சேர்ந்து வாழ்கிறார்கள்.
இங்கே இருந்து மதுரைக்குப் போக (தொடர்வண்டியில்) 50மணிநேரம் ஆகும்.
இவ்வளவு தொலைவு ஏன் வந்தார்கள் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.

அவர்கள் ஹரியானா அரசு ஊழியர்கள்.
என்ன வேலை என்றால்
தெரு கூட்டும் வேலை, தண்ணீர் அனுப்புவது, குப்பை மேலாண்மை
அதாவது கார்ப்பரேஷன்.

இங்கேயிருந்து  175கிமீ தொலைவில் இருக்கும் ஹிந்தியத் தலைநகரான
டில்லியில் 8லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.
பெரும்பாலும் சேரிப் பகுதியில்தான் அவர்களும் வாழ்கிறார்கள்.

(தமிழகத்திற்கு வெளியே ஹிந்தியாவில் வாழும் தமிழர்கள் எண்ணிக்கை
கிட்டத்தட்ட 90லட்சம், எல்லாரும் உழைத்துப் பிழைப்பவர்கள்தான்).

இங்கே இருக்கும் வந்தேறு குடிகளில் தமிழர்களையும் பீகாரிகளையும்
தவிர்த்து மற்ற பஞ்சாபிகள், ராஜாஸ்தானிகள், உத்தராஞ்சலிகள், மலையாளிகள்
ஆகியோர் நல்லவேலையிலும் சொத்துபத்து உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

இந்த மண்ணின் மைந்தர்களுக்கு அம்முதலாளி வந்தேறிகள் மீது எரிச்சல் கிடையாது.
உழைப்பாளி வந்தேறிகள் மீதுதான் எரிச்சல்.

அவர்களைச் சொல்லி குற்றமும் இல்லை.
நான் இங்கே எனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டால் என் சந்ததிகள் இங்கே
வந்தேறிகள் ஆவார்கள்.

இதற்குக் காரணம் எனக்கு முந்தைய தலைமுறை உரிமைகளைக் கோட்டைவிட்டதே ஆகும்.

நாம் நமது மண்ணை மீட்கவேண்டும்.
வந்தேறிகளை வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவேண்டும்.

சொந்த வீட்டை அடுத்தவனுக்கக் கொடுத்துவிட்டு பக்கத்துவீட்டுத் திண்ணையில்
படுப்பது நல்லதுசெய்வது என்றாகாது.

தமிழ் வந்தேறிகள் எண்ணிக்கை உலக நகரங்களில், அவற்றின் சேரிப்பகுதிகளில்
கூடிக்கொண்டே போகிறது. இதை உணருங்கள்.

உலகம் முழுவதும் பரவுதல் என்பது பெருமை ஆகாது.
அது கேவலம், அவமானம், வலுக்கட்டாயம், அரைகுறைவாழ்க்கை.

தாய்நிலத்தை விட்டு வெளியேறவேண்டிய அவசியமில்லாத நிலையை உருவாக்கி
சொந்தபந்தங்களோடு சேர்ந்து வாழ்வதுதான் முழுமையான வாழ்வு.

நீங்கள் இப்படியே கோட்டைவிட்டுக்கொண்டு இருந்தால் நாளை உங்கள்
சந்ததிகளும் வந்தேறிகளாகலாம்.

விழித்துக்கொள்ளுங்கள்.

இராணுவம் இல்லாத இனம் அனாதை இனமே
-ஹிட்லர்.

No comments:

Post a Comment