ஒரே தீர்வு?
சோதிடத்தை நம்புபவருக்கு
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு சோதிடம்தான் என்றுதோன்றும்.
உடற்பயிற்சி செய்வோருக்கு
எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உடல்வலுவுடன் இருப்பதுதான் என்று தோன்றும்.
இசுலாமிய பற்றாளருக்கு
எல்லா பிரச்சனைக்கும் தீர்வு இசுலாம்தான்
என்றுதான் தோன்றும்.
பணக்காரர்களுக்கு
எல்லா பிரச்சனைகளையும் பணத்தின் மூலம் தீர்க்கமுடியும் என்று தோன்றும்.
ஆனால் ஒரே ஒரு கொள்கை எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக முடியாது.
தமிழர் நாடமைப்போர் (தமிழ்த் தேசியவாதிகள்) தமது கொள்கையே எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று கருதக்கூடாது.
தமிழர்களுக்கான நாடு அமைவது தமிழ்மக்களுக்கான தனிப்பட்ட பிரச்சனைகளை 90% வரை தீர்க்கும்.
மற்ற பிரச்சனைகள் அதனதன் வழியில் தீர்க்கப்படும்.
அதற்கு தனிநாடாக இருப்பது பெரும் உதவியாக இருக்கும்.
No comments:
Post a Comment