Monday 13 July 2015

ஆஸ்திரீழம் -ஒரு நக்கல் பதிவு

ஆஸ்திரீழம் -ஒரு நக்கல் பதிவு

6666666666666666666666666

ஆஸ்திரீழம் (அடுத்த ஈழம்)?

சிறுலங்காவில் தனித்த தமிழ் தாயகக் கனவு கலைந்துவிட்டதால்,

தமிழ் அறிவாளிகள் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் புதிய ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்,

அவர்கள் கூறுதாவது,
அங்கே முன்னொரு காலத்தில் ஒரு தமிழ் அரசாட்சி ஒன்று இருந்தது.
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதி அபாரிஜின் மக்கள் அதிக தொகையில் வசித்த தாயகம் ஆகும்.
அந்த வடக்குப் பகுதியில் 40,000 ஆண்டுகள் பழமையான கலாச்சாரம் இருந்தது.
கூடை பின்னுதல், ஈட்டிமூலம் மீன்பிடித்தல், கதை அளத்தல் போன்றவை அக்காலச்சாரத்தில் அடங்கும்.

மலையேறும் ஒருவர் ஒரு குகையில் கண்டெடுத்த நன்கு பதப்படுத்தப்பட்ட வடை மற்றும் தோசை பார்சல் நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ளது.
அதை ஜெர்மனியில் ஆய்வு செய்ததில் அந்த பார்சலின் கார்பன் வயது கணக்கீடு 27,000 ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இருக்கும் தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள், கறுப்பாக குட்டையாக ஆண்களும் பெண்களும் பாறை ஓவியங்களில் வரையபபட்டுள்ளவர்கள் தமிழர்களே என்று கூறுகின்றனர்.
அந்த குகை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

ககடு தேசிய பூங்காவானது ககடுதுறை என்று தமிழ் அரசாட்சி நடந்தபோது அழைக்கப்பட்டது.
அதே போல உலுரு என்பது உலுருப்பாலம் என்ற புனித நகரமே என்றும் கூறுகின்றனர்.

வடக்கு ஆஸ்திரேலியாவில் ஒரு தமிழ் தாய்நிலத்தை நிறுவும் பொருட்டு தமிழெழுச்சி பரப்புரை நடத்த திட்டங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
மேலும் முழு ஆஸ்திரேலியாவையும் பிடித்துக்கொள்ள தேவையான ஆதாரங்கள் பரவலாக ஆங்காங்கு கிடைக்குமாறு செய்யப்படும்.

ஏற்கனவே இருக்கும் கொடியில்,
விரைவில் ஒழிக்கப்படவிருக்கும் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற வார்த்தைக்குப் பதிலாக ஒழியப்போகும் 'டாஸ்மானிய புலி' என்ற வார்த்தை சேர்க்கப்பட்டு புதிய கொடியாக அறிவிக்கப்படும்.

ஆஸ்திரேலியாவில் பேச்சு வழக்கில் இனி ர மற்றும் ட அழுத்தி உச்சரிக்கப்படும் அதனால் உலகின் மற்ற மக்கள் புரிந்துகொள்ள கடினமாக இருக்கும்.

அதேபோல வெள்ளையின ஆஸ்திரேலியர்கள் அகதிகளாக சிறிலங்காவில் வந்து இறங்குவதும் ஒரு உலகளாவிய பிரச்சனையாக இருக்கும்

ஆஸ்திரேலிய நகரங்களின் பெயர்கள் பின்வருமாறு,

சிட்னியிருப்பு
டார்வின்குளம்
அடிலெய்டதளை
மெல்போர்னொச்சி
ஹோர்பர்தப்புரம்
கேன்பற்றைக்கல்
பெர்த்தாளம்

http://answers.yahoo.com/question/index?qid=20090522032026AA9G2C4

(இது 2008 வாக்கில் எழுதப்பட்ட ஒரு சிங்களவனின் நக்கல் பதிவு,
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது)

No comments:

Post a Comment