சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்
%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%/%
யாழ் பல்கலையில் கண்டிய நடனமும் ஆடுவோம் என்று சிங்களவர் அடாவடி.
உண்மை என்னவென்றால்,
கண்டி தமிழர் மண் என்பதுடன் கண்டிய நடனமும் தமிழருடைய சொத்து என்பதுதான்.
சிங்களவர்களின் தேசிய நடனமான கண்டிய நடனத்தின் வேர்கள்,
அதன் சொற்கள்,
நாட்டியத்தின் விதிகள்
அனைத்தும் இன்றும் தமிழ் மொழியில்தான் இருக்கின்றன.
கண்டிய நடனத்தின் முக்கியமான பாகத்துக்குப் பெயர் ‘வண்ணம’ (தமிழில் வண்ணம்).
கண்டிய நடனத்தில் நாட்டிய விதிகளுக்கான தமிழ்ச் சொற்கள் இன்றும் தமிழாகவே இருப்பதை நாம் காணலாம்.
சிங்கள மொழி தமிழிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை இரவல் வாங்கியுள்ளது,
ஆனால் அந்த சொற்கள் எல்லாம் கடைசி எழுத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, சிங்கள உச்சரிப்புக்கேற்றதாக உருமாற்றப்பட்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக,
தமிழில் அம்பலம், சிங்களத்தில் அம்பலம;
தமிழில் எதிரி, சிங்களத்தில் எதிரிய;
தமிழில் கடிவாளம், சிங்களத்தில் கடிவாளம;
தமிழில் காப்பு, சிங்களத்தில் காப்புவ;
இப்படி ஒவ்வொரு தமிழ்ச் சொல்லும் இரவல் வாங்கப்பட்டு சிங்களமாக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
சிங்கள நடனத்தில் பதினெட்டு விதமான வண்ணங்கள் அதாவது நாட்டிய பாரம்பரியம் உண்டு.
சிங்களவர்களில் தாழ்த்தப்பட்ட சாதிபிரிவினர் இந்த நடனமாடுவதையும், பறை(சிங்களத்தில் 'பெற') அடிப்பதையும் அரசவையிலும் ஆலயங்களிலும், கிராமங்களிலும் செய்து வந்தனர்.
ஆனால் கண்டிய நடனத்துக்கும் தமிழுக்கும் தமிழர்களுக்குமுள்ள தொடர்பை திட்டமிட்டு மறைத்தவர்கள் அவர்களல்ல.
சுதந்திரத்துக்குப் பின்னால் சிங்களவர்களின் கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்க புறப்பட்ட, நகர்ப்புற, படித்த, உயர்சாதி சிங்களவர்களும், சிங்கள அரசியல்வாதிகளும் தான் திட்டமிட்டு, தமிழ் வேர்களை மறைத்து, கண்டி நடனத்தை சிங்களவர்களுடையது மட்டுமாக்கி, அதற்கு மகாவம்சத்துப் புராணக் கதையையும் இயற்றிவிட்டனர்.
கண்டி நாட்டியக்காரார்கள் வண்ணம், சிறுமருவு, அடவு, காத்திரம், மாத்திரை எனும் தமிழ் நாட்டிய மரபுகளை எந்த விதமான சிங்களமயப் படுத்தலுமில்லாமல் தமிழ்ச்சொற்களையே இன்றும் சிங்களத்திலும் பாவிப்பதைக் காணலாம்.
அடவு:
இந்தச் சொல் தமிழர்களின் பாரம்பரிய சதிராட்டத்தைப் (இன்றைய பாரத நாட்டியம்) போன்றே கண்டிய நடனத்திலும் பாதங்களின் அசைவுகளைக் குறித்தாலும்,
அது பாத அசைவுகளுடன் மட்டுப்படுத்தப்பட்டதல்ல.
தஞ்சாவூர் பாரம்பரியத்தில் 65 அடவுகள் உண்டு.
அவை பல்வேறு விதமான நாட்டிய அசைவுகளைக் குறிக்கின்றன.
சிங்களவர்களின் தேசிய நடனமாகிய கண்டிய நடனத்திலும் ஒவ்வொரு வண்ணம்(ம) நாட்டியத்தின் முடிவிலும் ஆடப்படுவது அடவு ஆகும்.
காஸ்திரம் அல்லது காத்திரம்:
இதுவும் ஒரு பலமான அல்லது கடுமையான நாட்டிய அசைவுகளைக் குறிக்கிறது.
கண்டிய நடனத்தில் காத்திரத்தை தொடர்ந்து ஆடப்படும் அடிப்படை நாட்டிய அசைவுகளும், அதற்கேற்ப மேளத்தின் அடியும் மாத்திரை என்றே அழைக்கப்படுகிறது.
இரண்டாவது, மூன்றாவது மாத்திரைகளின் பின்னர் காத்திரம் சிக்கலான நாட்டிய அசைவாக மாறுகிறது.
நாலாவது மாத்திரையின் பின்பு காத்திரம் நீண்ட நேரத்துக்கு ஆடப்படும்.
நாலாவது மாத்திரையில் நாட்டியமாடுபவர் சுதந்திரமாக, அவரது விருப்பப்படி துள்ளவும், சுழன்றாடவும் முடியும்.
ஆனால் மேளம் அடிப்பவர் அவரது அசைவுகளைக் கவனமாக அவதானித்து, அவரது நாட்டிய அசைவுகளுக்கேற்ப மேளத்தை ஒலிக்க வேண்டும்.
சிங்கள நடனத்தில் வண்ணம் என்றழைக்கப்படும் நடனத்தின் உச்சகட்டம் இது.
சிறுமருவு:
தமிழ்ச் சொல்லாகிய சிறுமருவு என்ற சொல்லை மென்மையாக, மெதுவாக ஆடப்படும் நாட்டிய அசைவுகளுக்கு சிங்களவர்கள் இன்றும் பாவிக்கிறார்கள் (பயன்படுத்துகிறார்கள்).
காத்திரத்தின் போது பலமான நாட்டிய அசைவுகளையும், சுழன்றும், துள்ளியும் ஆடிக் களைத்துப் போன நாட்டியக்காரரும், மேளகாரரும் சிறுமருவின் போது இளைப்பாறிக் கொள்ளுவர்.
நையடி (Naiadi) அல்லது நையாண்டி:
நையாண்டி பாரம்பரியம் இன்றும் தமிழ்நாட்டில் உண்டு.
இலங்கையிலும் சிங்களவர்களால் கதிர்காம முருகனை வேண்டி பம்பை, நையாண்டி மேளம் என்பவை ஆடப்பட்டன.
ஆனால் இன்று விஸ்ணு கோயில்களிலும் ஆடப்படுகிறது.
பம்பை, நையாண்டி என்று தமிழ் பெயர்களால் அழைத்துக் கொண்டே அது வட இந்தியாவிலிருந்து மகிந்த தேரோ அறிமுகப்படுத்தினார் என்று கூறும் சிங்களவர்களுமுண்டு.
பந்தெறு (சிங்களம்)/ பந்தெறி (தமிழ்):
பந்தெறு நடனம் கண்ணகி அல்லது பத்தினி தெய்வத்த்தின் (சிங்களத்தில் பத்தினித்தெய்யோ) அருளை வேண்டி ஆடப்படுகிறது.
இது போலத்தான் உடுக்கு(தமிழ்), உடெக்கி (சிங்களம்) ஆனது.
தம்பட்டம்(தமிழ்), தம்மெட்டம்(சிங்களம்) ஆனது.
முயலடி வண்ணம் முசலடி வண்ணமானது.
கண்டியின் மல்வத்தை விகாரையின் புத்தபிக்குகளுக்கு தமிழகத்துக் கவிஞர்கள் 18ம் நூற்றாண்டில் நாட்டியத்தின் ஒவ்வொரு வண்ணத்துக்கும் எழுதிக்கொடுத்த நாலடி கவிதைகள்தான் இன்றும் பாடப்படுகின்றன.
இதனை கவி என்றே அழைக்கின்றனர்.
வீரசோழியம் என்ற தமிழ் பவுத்த இலக்கண நூலைக் கொண்டே சிங்கள இலக்கணமும் வகுக்கப்பட்டது.
வந்தேறிக்கேது வரலாறு ??????
சிங்கள இனத்திற்கென்று தற்சார்பாக எதுவுமே கிடையாது.
அத்தனையும் தமிழர் போட்ட பிச்சை.
நன்றி: viyaasan வலைப்பூ
Monday, 18 July 2016
சிங்கள நடனமும் தமிழன் போட்ட பிச்சைதான்
Friday, 29 April 2016
கண்டி நாயக்கரும் கண்டி சிங்களவரும்
கண்டி நாயக்கரும்
கண்டி சிங்களவரும்
ஆண்டு 1814.
கொலைஞர்கள் உறுவிய வாளுடன் நின்றிருந்தனர்.
குமாரிஹாமி என்ற சிங்களப் பெண் மார்பில் பால் குடிக்கும் குழந்தையுடன் இழுத்துவரப்பட்டாள்.
கூடவே அவள் பெற்ற மூன்று சிறுவர்களும்.
கண்டியின் ராணிமாளிகை முன்னால் நாத தேவாலயம் மற்றறும் விஷ்ணு தேவாலயம் இரண்டிற்கும் மத்தியில் அவர்கள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர்.
மக்கள் அங்கே குழுமிவிட்டனர்.
கண்டியின் கடைசி (தெலுங்கு நாயக்க) மன்னனான கண்ணுச்சாமி நாயுடு (விக்கிரம ராஜ சிம்மன்) உத்தரவு நிறைவேற்றப்பட்டது.
முதலில் மூத்தமகன் பதினோரு வயது பாலகன் லொக்குபண்டாவை இழுத்து வந்து தலையை வெட்டினர்.
பிறகு இரண்டாவது மகன் ஒன்பது வயது சிறுவன் தானே முன்வந்து நின்றான்.
அவன் தலையையும் வெட்டப்பட்டது.
மூன்றாவது மகன் டிங்கிரி மெனிக்கே.
அக்குழந்தை தாயை இறுகப் பற்றிக்கொண்டு கதறி அழுதுகொண்டிருந்தது.
அதையும் இழுத்துவந்து தலையை வெட்டினார்கள்.
மார்பில் இறுக்கமாக அணைத்துக்கொண்டு இந்த குழந்தையையாவது விடும்படி கேட்டாள் அந்த தாய்.
வடுக மன்னன் மனம் இரங்கவில்லை.
பறித்து வந்து அதன் தலையையும் வெட்டினர்.
வெறியடங்காத மன்னன் தலைகளை எடுத்து உரலில் போட்டு இடிக்கச் சொன்னான்.
தெருவில் உருண்டுசென்று கிடந்த தலைகள் எடுத்துவரப்பட்டு உரலில் போட்டு இடித்து சிதைக்கப்பட்டன.
கூடியிருந்த மக்கள் மூச்சுவிட மறந்திருந்தனர்.
அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து சிலைகளாகினர்.
அடுத்து என்ன செய்வார்கள் என்று யோசிக்கும் நிலையில் யாரும் இல்லை.
"ராஜதுரோகத்திற்கு இதுதான் தண்டனை" என்று கூறினான் கண்ணுச்சாமி.
குமாரிஹாமியும் மேலும் இருபெண்களும் கைகால்கள் கட்டப்பட்டு வண்டியில் தூக்கிப்போடப்பட்டனர்.
கணமான கல்வைத்து கட்டப்பட்டு நுவரவாவியில் மூன்று பெண்களும் வீசப்பட்டதை மக்கள் கண்டார்கள்.
இந்த கண்ணுச்சாமி என்ற தெலுங்கனுக்குதான் தமிழகத்தில் தெலுங்கினத் தலைவன் கருணாநிதி மணிமண்டபம் கட்டியுள்ளான்.
--------------------
ஏன் இந்த கொடூரமான கொலைகள் நடந்தன என்றறிய வரலாற்றில் இன்னும் சற்று பின்னோக்கி சென்று பார்ப்போம்.
தமிழகத்தில் தெலுங்கு ஆட்சி வந்தபிறகு தெலுங்கு நாயக்க மன்னர்கள், கண்டி சிங்கள மன்னருக்கு தமது பெண்களை மணமுடித்துக் கொடுத்து வந்தனர்.
பெண்களுடன் சில உறவினர்களும் கண்டி சென்று தங்கினர்.
நாளடைவில் அவர்கள் மந்திரி சபையிலும் படையிலும் பதவிகள் பெற்றனர்.
இதன்மூலம் கண்டி அரசில் தெலுங்கர் ஆதிக்கம் தலைதூக்கியது.
சிங்களவருக்கும் தெலுங்கருக்கும் புகைச்சல் ஏற்பட்டது.
கண்டி தெலுங்கர்கள் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டு சிங்கள மொழியை பேசினாலும் சிங்களவர் அவர்களைத் தங்கள் இனமாக எண்ணவில்லை.
சிங்களம் பேசும் தெலுங்கர், "சிங்கள இனவெறி" என்ற முகமூடியை அணிந்துகொண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலையை ஏவும்வரை சிங்களவர்கள் அவர்களிடம் ஏமாறவில்லை.
மேலும் கண்டி தெலுங்கர் தமிழகத் தெலுங்கருடன் தொடர்பினைத் தொடர்ந்து பேணிவந்தனர்.
குறிப்பாக மதுரை மற்றும் தஞ்சை நாயக்கர்களுடன் தொடர்ச்சியாக கொடுக்கல் வாங்கல் இருந்தது.
திருமலை நாயக்கரின் உறவினர் நரேனப்பநாயக்கர் சிங்கள மன்னனுக்கு பெண் கொடுக்கும்போதே தன் மகன்களுடன் கண்டிக்கு வந்து அங்கேயே தங்கி இருந்தார்.
1708 ல் ஆண்வாரிசு இல்லாத கண்டி மன்னன், தமிழகத்திலிருந்து வந்திருந்த மைத்துனனை அரசனாக்கினான்.
இவனே சிங்களக் கலப்பில்லாத முழு தெலுங்கன்.
விஜயபாலன் என்ற இயற்பெயரை மறைத்து சிறீ விஜயராஜ சிம்மன் என்ற சிங்களப் பெயரை சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான்.
(அக்காவை வைத்து பேக்கரி வாங்கிய வடுக வீரபாகு என ஏற்கனவே முகநூலில் இது தொடர்பான பதிவு வளையவந்தது நினைவிருக்கலாம்)
சிங்கள அமைச்சர்கள் மன்னனின் வைப்பாட்டிக்குப் பிறந்த உனம்பு பண்டாரவுக்கு முடிசூட்ட வலியுறுத்தினர்.
இது நடக்கவில்லை.
சிங்களவரைச் சரிகட்ட தமிழர் மட்டுமே வணங்கிவந்த சிவனொளிபாத மலையை பௌத்தருக்கும் சொந்தம் என அறிவித்து சிங்களவருக்குத் திறந்துவிட்டான்.
நில நிர்வாக அதிகாரங்கள் நரேந்திரசிம்மன் என்ற தெலுங்கனுக்கு வழங்கப்பட்டது.
சிங்கள பிரதானிகள் இவருக்கு எதிராக ஒன்று திரண்டனர்.
இந்த நேரத்தில் மேற்கு இலங்கையை டச்சுக்காரர்கள் பிடித்திருந்தனர்.
இவனுக்கு அடுத்து அவனது சகோதரன் கீர்த்தி சிறீராஜ சிம்மன் அரியணை ஏறினான்.
இவனும் தமிழகத்தில் பிறந்த தெலுங்கனே.
தமிழக நடுகாட்டுச்சாமியார் என்ற வடுகரின் மகளை 1749 ல் திருமணம் செய்தான்.
நடுகாட்டு சாமி குடும்பமும் கண்டிக்கு வந்து தங்கியது.
கண்டியின் ஒரு பகுதியே தெலுங்கு மயமானது.
இந்த கீர்த்தி ராஜசிம்மனைக் கொல்ல சிங்கள மந்திரிகள் திட்டம் தீட்டினர்.
இது அரசனுக்குத் தெரிந்துவிட்டது.
மொலதந்த ரட்டராலே, கடுவெனராலே, மதினப்பொல திசாவ ஆகிய சிங்கள மந்திரிகள் தலைவெட்டி கொல்லப்பட்டனர்.
இவர்களுடன் சதியில் ஈடுபட்ட புத்த மதகுருவும் சங்கராஜா என்பவரும் தலைவெட்டிக்கொல்லப்பட்டனர் பிறகு அரியணை ஏறிய இரண்டாம் ராஜசிம்மன் என்பவனால்.
கண்டியில் தெலுங்கு ஆதிக்கம் உச்சநிலையை அடைந்தது.
1764 டச்சு படையெடுப்பு வானென்
என்பவன் தலைமையில் நடந்தது.
மன்னன் ஓடிப்போய் தலைமறைவு ஆனான்.
கண்டியை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
ஆனால் மழை பெருமளவில் பெய்து வெள்ளம் ஏற்பட்டது.
டச்சுக்காரர்களுக்கு மக்கள் எதிர்ப்பு இருந்தது.
1766 டச்சுக்காரர்கள் மன்னனுடன் ஒப்பந்தம் போட்டுவிட்டு பின்வாங்கினர்.
கீர்த்தி ராஜசிம்மன் மீண்டும் அரியணை ஏறினான்.
இவனுக்குப்பின் இவனது சகோதரன் ராஜாதி ராஜசிம்மன் என்ற தமிழகத்தில் பிறந்த தெலுங்கன் அரியணை ஏறினான்.
1795 திருகோணமலை டச்சுக்காரர்கள் பிடித்தனர்.
கண்டியுடன் சமாதானமாக இருக்க தூது அனுப்பினர்.
இது சிங்கள அமைச்சரான பிலிமத்தலாவை மூலம் நடந்தது.
மன்னனுக்கு அடுத்த செல்வாக்கு பெறலானார் பிலிமத்தலாவை என்னும் இந்த சிங்களர்.
கண்டி மன்னன் மரணமடைந்தான்.
இதுவரை காத்திருந்த சிங்களர்கள் காய்நகர்த்தினர்.
அரியணைக்கு வரவேண்டிய மூத்தவரான முத்துசாமி என்ற தெலுங்கரை கொலை செய்ய முயற்சித்தனர்.
பயந்துபோன முத்துசாமி ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தான்.
தெலுங்கு மந்திரிகள் ஆவேசம் கொண்டனர்.
இதைச் சரிகட்ட
மன்னனின் எட்டு வாரிசுகளில் கடைசியானவனும் வயதில் இளையவனுமான கண்ணுச்சாமியை அரியணையில் பெயருக்கு உட்காரவைத்துவிட்டு மூடிசூடா மன்னராக விளங்கினான் பிலிமத்தலாவை.
தனக்கு மைத்துன முறைகொண்ட எகலப்பொல என்ற சிங்கள இளைஞனை முக்கிய பொறுப்பில் நியமித்தான்.
முன்னாள் அரசியை சிறையிலிட்டான்.
மன்னனின் தெலுங்கு உறவினர் பலரையும் சிறையிலடைத்தான்.
கம்பளை நாயக்கர் என்ற செல்வாக்கு மிக்க தெலுங்கரையும் சிறையிலடைத்தான்.
அரவாளை என்பவரைக் கொலை செய்தான்.
பல மன்னர் குடும்ப உறவினர்கள் ஆங்கிலேயரிடம் தஞ்சம் புகுந்தனர்.
கண்டியில் மீண்டும் சிங்கள ஆதிக்கம் கை ஓங்கியது.
ஆங்கிலேயர் பிரட்ரிக் நோர்த் என்பவன் தலைமையில் கண்டிமீது படையெடுத்தனர்.
இந்த முறையும் மன்னன் ஓடி ஒளிந்தான்.
கண்டி ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.
தங்களிடம் தஞ்சமடைந்திருந்த முத்துசாமியை மன்னன் ஆக்கினர்.
டச்சுக்காரர்களைப் போல மக்கள் ஆங்கிலேயரையும் வெறுத்தனர்.
இந்த முறை மழை பெய்ததோடு நில்லாமல் காட்டு மலேரியா பரவியது.
இந்தநிலையை பயன்படுத்திக்கொண்டு பிலிமாத்தலாவை சிங்கள மக்களின் ஆதரவுடன் படையைத் திரட்டி ஆங்கிலேயரைத் தோற்கடித்தான்.
கண்டியை மீண்டும் கைப்பற்றினான்.
தெலுங்கன் முத்துசாமியை தலையை வெட்டிக் கொன்றான்.
இது நடந்தது 1803.
விக்கிரம ராஜசிங்கன் (கண்ணுசாமி) மீண்டும் அரியணை ஏற்றப்பட்டான்.
பிலிமத்தலாவை தெலுங்கர் வழியிலேயே சென்று தலைமையைக் கைப்பற்ற நினைத்தான்.
தன் மகளை மன்னனுக்கு மணமுடித்துவைத்தான்.
பிறகு மன்னனைக் கொல்ல சதி செய்தான்.
மூன்றுமுறை முயற்சி செய்தும் மருமகனை கொலை செய்யும் திட்டம் வெற்றிபெறவில்லை.
இதை அறிந்த கண்ணுச்சாமி பிலிமத்தலாவையை தலையை வெட்டிக் கொன்றான்.
கொதித்துப்போயிருந்த சிங்களவரைச் சரிகட்ட பிலிமத்தலாவை அரசு பதவியில் நியமித்த அவனது மைத்துனனான எகலபொல அவனது இடத்தில் நியமிக்கப்பட்டான்.
எகலபொல மன்னனுக்கு அடுத்த இடத்தில் இருந்தான்.
மன்னனை மதிக்காமல் மன்னனைப் போலவே நடந்துகொண்டான்.
அவனது அதிகாரமே எங்கும் கொடிகட்டிப்பறந்தது.
சிங்கள மந்திரி பிரதானிகள் இன்னொரு பிலிமத்தலாவையாக எண்ணி இவனுக்கு ஆதரவு தந்தனர்.
கண்ணுச்சாமிக்கும் எகலபொலவுக்கும் மோதல் அதிகரித்தது.
எகலபொல ஆங்கிலேயர் உதவியுடன் மன்னனைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்தான்.
இதையறிந்த மன்னன் எகலபொல குடும்பத்தை சிறையடைத்தான்.
ஆங்கிலேயருடன் படை திரட்டிக்கொண்டு கண்டி நோக்கி முன்னேறினான் எகலபொல.
தமிழக தெலுங்கு மன்னர்களும் வலு இழந்துவிட்ட காலம்.
இருந்தாலும் அவர்கள் 300 போர்வீரர்களையும் சில உதவிகளையும் அனுப்பினர்.
அப்போதுதான் எகலபொல குடும்பத்தைக் கொலை கொடூரமாகக் கொலை செய்தான் கண்ணுசாமி.
இதனால் இம்முறை மக்கள் ஆங்கிலேயரை ஆதரித்தனர்.
கண்ணுச்சாமி வழக்கம்போல ஓடிப்போய் தலைமறைவானான்.
ஒரு குகையில் தன் மூன்று மனைவிகளுடன் மறைந்திருந்தான்.
ஆங்கிலேயருடன் எகலபொல படையில் இருந்த சிங்கள படைவீரர்கள் அவனைக் கண்டுபிடித்து அடித்து துவைத்தனர்.
ஆங்கிலேயர் வந்து அவன் உயிரைக் காப்பாற்றினர்.
"தண்ணீர் வேண்டுமா?" எனக் கேட்டனர்.
"இல்லை மது வேண்டும்" என்றான். மது கொடுத்து பல்லக்கில் மரியாதையுடன் அழைத்துச் சென்று தமிழக சிறையில் அடைத்தனர்.
அவனை அழைத்துச் செல்லப்பட்ட கப்பலில் மன்னனுடன் ஏறத்தாழ முப்பது மனைவிகளும் மாமியாரும் உறவினருமாக பெரிய கூட்டம் ஏற்றப்பட்டது.
இது நடந்தது 1815.
எகலபொல தன்னை ஆங்கிலேயர் அரசனாக்குவர் என்று எதிர்பார்த்தான்.
ஆனால் அது நடக்கவில்லை.
ஆங்கிலேயர் தமது நேரடி ஆட்சியை அங்கே ஏற்படுத்தினர்.
17 ஆண்டுகள் சிறையில் முழு குடும்பத்துடனும் தாராளமான மதுவுடனும் இராஜவாழ்க்கை வாழ்ந்தான் கண்ணுச்சாமி.
சிறையில் அவனுக்கு குழந்தைகளும் பிறந்தன.
அளவுக்கதிமாக மது குடித்ததாலேயே இறந்தும் போனான்.
கண்டி நாயக்கர் கதையில் தெலுங்கருக்கு ஆதரவாகவும் விசுவாசமாகவும் இருந்த சிங்களர் இருக்கின்றனர்.
ஆனால் சிங்களுக்கு ஆதரவான ஒரு தெலுங்கர் கூட இல்லை.
சிங்களரை விடவும் இனப்பற்று உள்ளவராக தெலுங்கர்கள் இருக்கின்றனர்.
கண்ணுசாமியின் வீர(?)வரலாறு மறக்காமல் இருக்கத்தான் இலங்கையின் கடைசித் தமிழ்(?)மன்னன் என்று தெட்சிணாமூர்த்தி (கருணாநிதி) தமிழகத்தில் மணிமண்டபம் கட்டியுள்ளான்.
இதன் மூலம் இவன் சிங்களருக்குச் செய்த கொடுமைகள் தமிழர் தலையில் வந்து விழுந்தன.
கண்டியில் குடியேறிய தெலுங்கு குடும்ப வாரிசுகளே இன்று இலங்கையில் அரசு செய்யும் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும்.
பண்டாரநாயக, சேனநாயக, ராஜபக்ச ஆகிய குடும்பங்கள் சிங்களம் பேசும் தெலுங்கரே.
300 ஆண்டுகள் முன்பு இலங்கைக்கு வந்த இந்த வந்தேறிகள்,
2500 ஆண்டுகள் முன்பு குடிவந்த சிங்களவருக்குள் மறைந்துகொண்டு "இனவெறி" முகமூடியை அணிந்துகொண்டு
இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்களை இனவழிப்பு செய்துவருகின்றனர்.
Friday, 8 January 2016
அரசு வேலையும் இன எழுச்சியும்
அரசு வேலையும் இன எழுச்சியும்
1940களில் இலங்கையில் 60% அரசு பணியாளர்கள் தமிழர்கள்
அதிலும் குறிப்பாக யாழ் தமிழர்கள்.
இதை எதிர்த்து உருவானதுதான் சிங்களதேசியம்.
இலங்கையில் சிங்களவர் ஆட்சியைக் கைப்பற்றி சிங்களத்தைப் புகுத்தி 20 ஆண்டுகளில் 70% அரசு பணி சிங்களவர் கைக்கு மாற்றினர்.
அதன்பிறகு யாழ் தமிழர்கள் "ஈழம்" கருத்தியலை உருவாக்கினர்.
1920களில் மெட்ராஸ் மாகாணத்தில் 60% அரசுப் பணியாளர்கள் தமிழர்கள்
அதிலும் குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
இதை எதிர்த்து உருவானதுதான் திராவிடம்.
சென்னை மாகாணத்தில் 20 ஆண்டுகளில் திராவிடம் ஆட்சியைக் கைப்பற்றி இடவொதுக்கீட்டுக்காகப் போராடி தமிழ்ப் பார்ப்பனரை ஓரம்கட்டி தமிழ் வளர்ச்சியைத் தடுத்து வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகத்தை மாற்றியது.
இன்று அரசு வேலைகளில் தமிழர் 50%க்கும் குறைவு.
இந்தி திணிப்பை எதிர்த்து போராடியிராவிட்டால் இதுவும் இருந்திருக்காது.
தற்போது "தமிழ்தேசியம்" கருத்தியல் தமிழகத்தில் உருவாகியுள்ளது.
திராவிடம் பார்ப்பனரைத்தான் எதிர்க்கிறது பிராமணரை அல்ல
என்பதை அன்றே தமிழ்ப் பார்ப்பனர் கவனித்திருக்கவேண்டும்.
தமிழ் சார்ந்த ஒரு எதிர்க்கருத்தியலை உருவாக்கியிருக்க வேண்டும்.
அன்று கோட்டை விட்டது மட்டுமல்லாமல் இன்று வரை தமிழ்தேசியம் பக்கம் வராமல்
வெளிநாட்டில் குடியேறுவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
சிங்களம் நேரடியான எதிரி அதனால் குறுகிய காலத்தில் அதிகளவு அடக்குமுறையும் அதற்கெதிரான பெரிய போராட்டமும் வெடித்தது.
திராவிடம் மறைமுகமான எதிரி
மெல்ல மெல்ல சுரண்டல்கள் நடந்தது.
அதனால் தமிழர்கள் விழித்துக்கொள்ள நீண்ட இடைவெளி ஆனது.
----------------------------------------
Sunday, 13 December 2015
புலியும் சிங்கமும் மோதினால்?
சிங்கம்: ஓங்கியடிச்சா ஒன்ற டன் வெயிட்றா
புலி: நா சும்மா அடிச்சாலே ஒன்ற டன் வெயிட்றா
சிங்கம் புலியைவிட வேகமாக ஓடத்தான் முடியும்.
ஆனால், அறிவிலும் பலத்திலும் தன்னை மிஞ்சிய புலியுடன் மோதி வெல்லமுடியாது.
இது புலிகளின் செழுமையான மண்.
பாலை விலங்கான சிங்கம் அது நான்முகச் சிங்கமோ வாளேந்திய சிங்கமோ
இங்கே அடங்கித்தான் ஆகவேண்டும்.
Wednesday, 15 July 2015
இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு
இதுதான் ஈழக்கொலைக்குத் தீர்வு
==========================
சிங்களவரிடமிருந்து கொழும்பையும் கண்டி வரைக்குமான நிலத்தையும் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
இதுதான் அவர்கள் நடத்திய கொலைக்கும் குற்றங்களுக்கும் தரப்போகிற விலை.
மலையகத் தமிழரை நிலமில்லாமல் வைத்திருந்ததற்கும் விரட்டியடித்ததற்கும் தண்டனை.
மீனவரைச் சுட்டுக் கொன்றதற்காக அவர்கள் கடற்கரைப் பகுதி இல்லாமல் திண்டாடப்போகிறார்கள்.
ஐநா வை அண்ணாந்து பார்க்கிறவர்கள் பார்த்துக்கொண்டே இருங்கள்.
தமிழகப் போராளிகள் ஈழப்போராளிகளுடன் இணைந்து மேற்கண்ட தீர்வை நோக்கி நகர்வார்கள்.
எத்தனை ஆதாரங்கள்? படங்கள்? காணொளிகள்? சாட்சிகள்?
நியாயம் பெற்றுத்தர ஒரு நாதியில்லை.
நேர்மையாக ஒரு வாக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.
தீவிரவாதமே தடை என்று வயிற்றிலடித்தவர்கள் இன்று எங்கே?
இதுவொன்றும் அநியாயமான தீர்வு கிடையாது.
கண்டி எமது முப்பாட்டன் கோவில் கொண்டுள்ள எமது மண்.
கொழும்பு இன்றும் தமிழர் பெரும்பாண்மை நகரம்.
நடுப்பகுதி மலையகத் தமிழர் பகுதி.
இதை நாங்கள் எடுத்துக்கொள்வோம்.
போர் நடக்கும்போது சிங்களவர் மேலும் அப்பாவித் தமிழரைக் கொல்வார்களேயானால் மேலும் தாய்நிலத்தை இழப்பார்கள்.
மற்ற இனங்களும் நேர்மையாகப் போர்புரிந்தால் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நிலம் கிடைக்கும்.
அப்பாவி மக்களைக் கொன்றால் தாய்நிலத்தை இழக்கவேண்டிவரும்.