Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts
Showing posts with label இட ஒதுக்கீடு. Show all posts

Friday, 15 November 2019

ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்




















ஒரு தற்கொலைக்கு எத்தனை சாயங்கள்

 பிற மாநிலங்களில் நேர்காணலில் நீங்கள் BC என்று கூறினால் அவனுக்கு புரியாது.
 OBC என்று கூறவேண்டும்.
ஏனென்றால் தமிழகத்தில் மட்டுமே 69% இடவொதுக்கீடு.

 மற்றபடி எல்லா மாநிலங்களிலும் 50% மட்டுமே!

 இதில் OC (other castes) என்பது 50%.
 இது இடவொதுக்கீடு என்று ஆகாது.

 அதாவது ஒரு கல்லூரியில் 100 சீட் இருக்கிறது என்றால்
 50 சீட் வரை மதிப்பெண் அடிப்படையில் நிரப்பபடும்.
 இதில் போதுமான மதிப்பெண் எடுத்த SC, ST யும் கூட இடம்பெறுவர்.

 மீதி 50% இடவொதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்படும்.
 அதாவது குறைந்த மதிப்பெண்  OBC, SC, ST இதில் இடம்பெறுவர்.

 மத்திய அரசு பின்பற்றும் இடவொதுக்கீடு
Scheduled Castes (SCs): 15%
Scheduled Tribes (STs): 7.5%
Other Backward Castes (OBCs): 27%
இது போக
புதிதாக 10% Reservation for Economically Weaker Sections (EWS)

 ஓசி என்று எந்த ஒதுக்கீடும் கிடையாது.
 இங்கே OC என்றாலே பார்ப்பனர் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது.

 ஐஐடி யில் இந்த இடவொதுக்கீடு சரியாக பின்பற்றப்படவில்லை.
 இது விதிமீறல்தான்.

 ஆனால் இதில் தமிழக அரசுக்கோ, தமிழக குடிமக்களுக்கோ, தமிழக பார்ப்பனருக்கோ எந்த தொடர்பும் இல்லை.

 தமிழகத்தின் கட்டுப்பாட்டிலேயே இல்லாத IIT முழுக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.
 பல மாநிலத்து மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

 அங்கே நடக்கும் கொடுமைக்கு நாம் எப்படி பொறுப்பாக முடியும்?!

 பாத்திமா லத்தீப் விடயத்தில் "தமிழகத்தை நம்பிதானே அனுப்பினோம்?" என்று பெற்றோர் புலம்புவது அப்பாவித்தனமா அல்லது உள்நோக்கமுடையதா என்று புரியவில்லை.

 இதுவே தமிழகத்தில் ஒரு பொது இடத்தில் பாத்திமா பாதிக்கப்பட்டிருந்தால் தமிழகம் பொறுப்பு.
 மற்றபடி பாத்திமா தற்கொலைக்கு தனிமனிதர்கள் தான் காரணம்.

தன் சாவுக்கு காரணமென அந்த மாணவி குறிப்பிட்ட மூன்று பேருமே வெவ்வேறு பின்னணி கொண்டவர்கள்

 1. சுதர்ஷன் பத்பநாபன், ஆரியத்துவ ஆதரவாளர்.
 (அறப்போர் இயக்கத்தை சார்ந்தவர் அல்ல என்று அந்த அமைப்பு மறுத்திருக்கிறது. )

2.ஹேமசந்திர காரா,
மாற்றுத்திறனாளி.

3. மிலிந்த் ப்ராமே,
அம்பேத்கர் பெரியார் வாசக வட்ட ஆலோசகர்.
 தலித்திய திராவிட ஆதரவாளர்.

 இந்த தற்கொலைக்கு இசுலாமிய இயக்கங்கள் மதச் சாயம் பூசி,
திராவிட இயக்கங்கள் சாதிச் சாயம் பூசி,
கேரள அரசு இனச் சாயமும் பூசி அரசியல் ஆதாயம் பார்க்கிறார்கள்.

 தனிமனிதர் மட்டுமன்றி கல்வி முறையும் கூட ஒரு முக்கிய காரணம்.
 இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை மிக அதிக அளவில் உள்ளது.
  3 இடியட்ஸ் (நண்பன்) மாதிரி சில படங்கள் கூட வெளிவந்துள்ளன.

 தற்கொலை கூட கோழைத்தனம்.
 ஆனால் தமிழகத்திலிருந்து இதே போல மத்திய அரசு நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு சென்ற தமிழகத்து மாணவர்கள் 4 பேர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலையாக மாற்றப்பட்டுள்ளது
 (தேடுக: தமிழக மாணவர்களைக் காவுவாங்கும் டெல்லி வேட்டொலி).

 தற்கொலைக்கு உண்மையான காரணத்தை ஆராய்ந்து தொடர்புள்ளோரை தண்டிக்கவேண்டும்.

 கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

 பாத்திமா லதீப் விடயத்தில் இதற்கு அரசியல் சாயம் பூசி திசைமாற்றி அந்த மாணவிக்கு மேலும் அநீதி இழைக்க வேண்டாம்.

Thursday, 28 September 2017

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...

அம்பேத்கர் ரசிகர்களுக்கு...


 அம்பேத்கர் பற்றிய மூட நம்பிக்கைகள் மற்றும் அதன் உண்மைத்தன்மை ஒவ்வொன்றாக ஆராய்வோம்.


* அம்பேத்கர் இடவொதுக்கீடு பெற்றுத் தந்தார்


1882ல் அதாவது அம்பேத்கர் பிறக்கும் முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்கு அடங்கிய கோல்ஹாப்பூர் அரசாட்சியில் பிராமணரல்லாத சாதிகளுக்கு முதன்முதலாக இடவொதுக்கீடு ஷாஹு எனும் அரசரால் வழங்கப்பட்டது.


 1893 ல் (அதாவது அம்பேத்கர் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோதே) அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான சென்னை மாகாணத்து தலைவர்கள் ஆங்கிலேயருக்கு கோரிக்கை வைத்து 49 சாதிகளைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலக் கல்வியில் இடவொதுக்கீடு வழங்கச் செய்தனர்.


 1927 லேயே இடவொதுக்கீடு அன்றைய தமிழர் பெரும்பான்மை மாநிலமான மெட்ராஸ் மாகாணத்தில் நடைமுறைக்கு வந்துவிட்டது.

 இதைப் பெற்றுத் தந்தது சுப்பராயக் கவுண்டர் மற்றும் முத்தையா முதலியார்.

 (அதாவது அம்பேத்கர் காந்தியுடன் பூனா ஒப்பந்தம் போட்டு தேர்தலில் 18% தனி தொகுதிகள் வாங்கித் தருவதற்கு 5ஆண்டுகள் முன்பே)


1935ல் எம்.சி.ராஜா அவர்கள் தெளிவாக வரையறுத்து அதை சட்டமாக்கினார்.

SC 14%, 

BC 14%, 

Non Brahmin 44%, 

Brahmin 14%,

Christian 7%,

Muslim 7% 

என்றவாறு 100% இடவொதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

(அதாவது அம்பேத்கர் ஆங்கில அரசுடன் பேசி 8.33% இடவொதுக்கீடு கொண்டுவந்ததற்கு 7ஆண்டுகள் முன்பே)


 தற்போதும் இந்திய ஒன்றியம் முழுவதும்

SC=15%

ST=7.5%

OBC=27.5

என 50% இடவொதுக்கீடு உள்ள நிலையில்,


 தமிழகத்தில் மட்டும்தான்

BC=26.5%

BCM=3.5% (பிற். இசுலாமியர்)

MBC=20%

SC=15%

SCA=3% (அருந்ததியர்)

ST=1%

என 69% இடவொதுக்கீடு உள்ளது.

 (இதற்கு முக்கிய காரணம் பா.ம.க முன்னெடுத்த போராட்டம் ஆகும்)

------------------


* அம்பேத்கர் தலித் என்ற அடையாளத்தின் கீழ் மக்களை ஒன்று திரட்டினார்


 அம்பேத்கர் ஓரிரு முறை தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி இருந்தாலும் அவர் 'தீண்டத்தகாதோர்' என்ற சொல்லாலேயே எப்பொதும் குறிப்பிடுவார்.

 ஆவணங்களில் 'சாதியற்ற இந்துக்கள்' என்று குறிப்பிட முன்மொழிந்தார்.

 தலித் என்ற வார்த்தை அவர் விரும்பாதது.


 (தமிழகத்தில் 'தலித்' என்ற வார்த்தையும் 'தாழ்த்தப்பட்ட' என்ற வார்த்தையும் 1981ல் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன)

----------------------


* அம்பேத்கர் சுதந்திரத்திற்காக போராடினார்


 அம்பேத்கர் இறுதிவரை ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்தவர்.

 காந்தியை எதிர்கொள்ள ஆங்கிலேயர் அவரை பயன்படுத்தினர்.

 ஆங்கிலேயர் வெளியேறியதும் அவர் இந்துத்துவத்திற்கு மாறினார்.

-----------

* அம்பேத்கர் இந்து மதத்தை அதன் சாதிய கட்டுமானத்தை எதிர்த்தார்


 தொடக்கத்தில் அவ்வாறு இருந்தாலும் பிறகு நிறம் மாறினார்.

 இசுலாமியரை நம்பமுடியாதவர்கள் என்றும் இந்துக்களின் எதிரி என்றும் கூறி பாகிஸ்தானை பிரிக்கவும் முழு ஆதரவளித்தார்(9).

ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்ற இந்துத்துவ - இந்திவெறி கொள்கையை முன்வைத்தார்(5)

 

 பௌத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்களை இந்துமதத்தின் பிரிவுகள் என்றாக்கி அவர்களை சட்டபடி இந்துக்களாக ஆக்கினார் (சட்டம்-25).


சமஸ்கிருதத்தை ஆட்சிமொழி ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார் (6,7,8).

---------------

 

* அம்பேத்கர் சாதி அடையாளத்தை உதறியவர்


 நிச்சயமாக இல்லை. 

தனது சாதி பட்டத்தை மறைத்து அம்பேத்கர் எனும் உயர்சாதி பட்டத்தைப் போட்டுக்கொண்டாலும்.

 இறுதிவரை தமது சாதியான மகர் சாதிக்கு முடிந்தவரை போராடினார்.

 அவருக்கு முதலில் கிடைத்த பெரிய பதவி 1941ல் 'பாதுகாப்பு ஆலோசனை வாரிய உறுப்பினர்' பதவியாகும்.

 அவர் செய்த முதல் வேலை ராணுவத்தில் மஹர் படையணி என்று ஒன்றை உருவாக்கியது ஆகும் (1941).

 அது இன்றும் உள்ளது.

------------------


* அம்பேத்கர் மொழி இன அடையாளங்களைக் கடந்தவர்


 இதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம் என்றாலும் முழுமையாக அப்படி கூறமுடியாது.

 பாம்பே (மும்பை) நகரம் குஜராத்தியர் கைக்கு போக இருந்தது.

 தன் இனத்தின் தலைநகரமான அதை தனது இனமான மராத்தியர்களுக்கே கிடைக்கச் செய்ததில் அம்பேத்கரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

 அப்போது அந்நகரம் குஜராத்திய பெரும்பான்மை மாநிலத்துடன் இணைந்திருந்தது.

 சொத்துகள் அனைத்தும் குஜராத்தியர் வசமிருந்தன.

 மராத்தியர் எண்ணிக்கை அந்நகரில் பாதி கூட இல்லை.

 அதற்கு முந்தைய மராத்திய பேரரசிலும் அந்நகர் இல்லை.

 மாநில எல்லைகள் புனரமைப்பின்போது மராத்திய மொழிவழி மாநிலம் அமைவது பற்றி அவர் சமர்ப்பித்த ஆவணம்(3) மராத்தியருக்கு மும்பையை பெற்றுத்தந்தது.

 அதன் வரலாற்றுப் பெயரான மகாராஷ்ட்ரா என்ற பெயரும் அவரால் பரிந்துரைக்கப்பட்டு சூட்டப்பெற்றது.

-----------


* அம்பேத்கர் தமிழ் மீதும் தமிழர் மீதும் அன்பு கொண்டிருந்தார்.


 இல்லை. தமிழ் மூத்தமொழி என்று கூறினார்தான்(4).

ஆனால் மூத்த குடி என நாகர் எனும் இல்லாத இனத்தைக் கூறினார்.

 தமிழகம் உட்பட மொழிவழி மாநிலம் அமையவிருந்தபோது எதிர்த்தார்.

 மொழிவழி மாநிலங்கள் இந்தியாவை துண்டுதுண்டாக உடைக்கும் என்று எச்சரித்தார்.

 மொழி உரிமைகளை அவர் வழங்கக்கூடாது என்று கூறினார்.

 காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்கும் சிறப்பு சட்டத்தை (பிரிவு- 370) நேரு சொல்லியும் எழுதித்தர அவர் மறுத்தார் (பிறகு கோபாலசாமி ஐயங்கார் எழுதினார்).

 தமிழ் ஆட்சிமொழி ஆக காயிதே மில்லத் அவர்கள் வாக்கெடுப்பு நடத்தி தமிழ் 72ம் இந்தி 73 வாக்குகளும் பெற்றதை அதிர்ச்சியுடன் குறிப்பிட்டு இந்தியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முழு ஆதரவு வழங்கினார்(2).

-----------


* அம்பேத்கர் இந்தியா முழுவதற்குமான தலைவர்


 அம்பேத்கர் அவரது வாழ்நாளில் மக்கள் செல்வாக்கு பெற்றவராக திகழ்ந்தது இல்லை.

 தேர்தலிலும் கூட தோற்றுதான் போனார்.

 அவர் தொடங்கிய இயக்கங்களும் பரவலான ஆதரவைப் பெறவில்லை.

 அவருக்கு கிடைத்த பதவிகள் ஆங்கிலேயரோ அல்லது காங்கிரசோ அளித்த வாய்ப்புதான்.

--------------


* அம்பேத்கர் ஒழுக்கமானவர்


 அம்பேத்கர் தமது 57 வயதில் தமக்கு மருத்துவம் பார்த்த தன்னை விட 19 வயது இளையவரான ஒரு பிராமணப் பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்துகொண்டவர்.

 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இறந்தும் போனார். 

------------


* அம்பேத்கர் சாதியொழிப்பில் முன்னோடி


 முதல் சாதி ஒழிப்பு மாநாடு தமிழகத்தில் 1891ல் அயோத்திதாசர் அவர்களால் நீலகிரியில் நடத்தப்பெற்றது.

 சாதி ஒழிப்பில் தமிழகமே முதலடி எடுத்துவைத்தது.


 எம்.சி.ராஜா 1927ல் எழுதிய 'ஒடுக்கப்பட்ட இந்துக்கள்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Untouchables' எனும் நூலாக 1948ல் வெளியிட்டார் அம்பேத்கர்.


 இதேபோல 1907 ல் அயோத்திதாசப் பண்டிதர் எழுதிய 'புத்தரும் அவரது ஆதிவேதமும்' எனும் நூலை அப்படியே நகலெடுத்து 

'The Buddha and his dhamma' என்ற புத்தகமாக அம்பேத்கர் எழுதி (அவர் இறந்த பிறகு அது) 1957ல் வெளிவந்தது.


 நகலெடுத்து தமது பெயரில் போட்டுக்கொண்டது கூட பரவாயில்லை.

 அந்த சிந்தனை எங்கே கிடைத்தது என்று பின்னிணைப்பில் கூட அவர் மேற்கண்ட தமிழர்களை மேற்கோள் காட்டவில்லை.

------------


* அம்பேத்கர் தீண்டாமையை எதிர்த்ததில் முதல் ஆள்


 வடயிந்தியா அளவு தமிழகத்தில் தீண்டாமை இல்லை என்றாலும்

 1923 ல் சென்னை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரெட்டமலை சீனிவாசன் பொது இடங்களில் பட்டியல் சாதியினர் நடமாட தடையில்லை என்று அரசாணை வெளியிட்டது தீண்டாமைக்கு எதிரான குறிப்பிடத் தகுந்த முதல் நடவடிக்கை ஆகும்.

-------------

 

* அம்பேத்கர் வந்தபிறகுதான் பறையர் முன்னேறினர்


 நிச்சயமாக இல்லை. 

அம்பேத்கர் அரசியலுக்கு வரும் முன்பே பறையர்கள் கல்வியிலும் அரசியலிலும் வேலைவாய்ப்பிலும் சிறந்து விளங்கினர்.

 சொல்லப்போனால் அம்பேத்கருக்கு முன் அவரது இடத்தில் இருந்தவர் எம்.சி.ராஜா எனும் பறையர்தான்.

--------------


* அம்பேத்கர் ஆரியர்களை எதிர்த்தார் 


 அம்பேத்கர் ஆரிய கட்டுக்கதையை நிராகரித்தவர்.

 பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து மனுஸ்மிருதி எரிப்பு போராட்டத்தை நடத்தியவர்.

 பிராமணர் ஆரியர் என்பதையோ வேற்றினம் என்பதையோ அவர் ஏற்றுக்கொள்ளவில்லை (4, தொகுதி 7, பக். 85)

--------------


* அம்பேத்கர் புத்தமதத்தை சாதியை ஒழிக்கும் தீர்வாக முன்வைத்தார்


 அம்பேத்கர் இயற்றிய சட்டப்படி புத்தமதம் இந்து மதத்தின் பிரிவே.

 ஒரு இந்து புத்தமதத்திற்கு மாறினாலும் சட்டப்படி அவரது சாதி மாறாது.

 ' உயர்சாதி இந்துக்களுடன் சண்டை போடுகிறேன் அதற்காக நான் இந்து இல்லை என்று ஆகாது.

 பாகிஸ்தான் முஸ்லீம்களால் ஆபத்து வந்தால் இந்தியாவிற்காக உயிரைக்கொடுத்து போராடுவேன்' என்றும் கூறியுள்ளார் (9).

 இறப்பதற்கு 50 நாட்கள் முன்பு அவர் லட்சக்கணக்கான மக்களோடு புத்த மதத்தைத் தழுவியபோது எடுத்த 22 உறுதிமொழிகளில் சாதி பற்றி எதுவுமே இல்லை. 

--------------------------


 அம்பேத்கருக்கு ஃபேர் அண்ட் லவ்லி போட்டு வெள்ளையாக்கி கோட்சூட்டுடன் வரைந்து,

 தம்மை உயர்த்திய தலைவர் அவரென்றும் தம்மை தலித் என்றும் கூறிக்கொண்டு,

வரலாறும் உண்மையும் தெரியாமல்,

 மற்ற எந்த சாதிவெறி கும்பலுக்கும் சளைக்காத அலப்பறை செய்யும் அம்பேத்கர் ரசிகர்களே !


இனியாவது திருத்துங்கள்!


இதிலுமா வடக்கத்திய மோகம்!

----------------


1. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 2.

2. Thoghts on linguistic states 

3. Maharashtra as linguistic 

4. Who were the untouchables? 

5. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 1. page: 213 & 214)

6. Statesmen, 11th September 1949

7. The National Herald (11.09.1949)

8. The Hindu (11.09.1949)

9. Dr. Babasaheb Ambedkar: writings and speeches, Vol, 15. page: 130 - 143))

Tuesday, 2 May 2017

நவீன வர்ணாசிரமம்

நவீன வர்ணாசிரமம்

"தமிழினத்தின் தலைமக்களே!
பெருமைமிகு பள்ளர் பெருமக்களே!

இடவொதுக்கீடு என்பது என்ன தெரியுமா?

10 பேருந்துக்கான நிதியை ஒதுக்கி  அதில் முக்கால் பாகத்தை ஆட்டையை போட்டுவிட்டு,

4 ஓட்டைப் பேருந்துகள் வாங்கி விட்டு,

அதில் நெருக்கடி ஏற்படும்போது
பெண்கள், முதியவர், நோயாளி என்று இருக்கைகளை ஒதுக்குவது போல
ஒரு ஏமாற்று வேலை ஆகும்.

இதனால் எவருக்கும் எந்த பலனும் இல்லை.

இறங்குங்கள் அந்த ஓட்டை உடைசல் பேருந்தில் இருந்து,
தனியே ஒன்றிணைந்தால் மகிழுந்து (கார்) கூட உங்களால் வாங்கமுடியும்"

"பார்ப்பனக் கைக்கூலி!
மனுதர்ம அடிமை!"

"யாருப்பா நீ ?"

"நான்தான் பெரியார் பேரன்"

"ஓகோ. உனக்கு புரியவில்லையா?
உதாரணம் கேள்.
தமிழகத்தில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க OC க்கு cut-off மதிப்பெண் 198/200
அதேநேரத்தில் SC க்கு 195/200
அதாவது வெறும் 3 மதிப்பெண் வித்தியாசம். இதுதான் அதிகபட்சம்.
பல கல்லூரிகளில் 1 மதிப்பெண் வித்தியாசம்தான்.
இப்படியான இடவொதுக்கீட்டால் என்ன பலன்?"

"எல்லாம் பாப்பான் செய்யும் வேலை.
அவன் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஆடுமாடு ஓட்டிக்கொண்டு கைபர் போலன் கணவாய் வழியாக வந்தான்.
ஆரியன் சமஸ்கிருதம் பேசிக்கொண்டு வந்தது செவ்வாய் கிழமை.
அன்று மழை பெய்தது.
பக்கத்தில் இருந்து பார்த்த மாக்ஸ்முல்லர் இதை எழுதியிருக்கிறார்.
அவன் ஒரு குகைக்குள் உட்கார்ந்து மனுதர்மம் எழுதி சாதியை உருவாக்கினான்.
அவன் வெள்ளையாக இருந்ததால் பொய்சொல்லமாட்டான் என்று நம்பி எல்லாரும் அவனுக்கு அடிமையாகிவிட்டார்கள்.
ஓசோனில் ஓட்டை விழுந்ததற்கே
பாப்பான்கள்தான் காரணம்.
அவர்கள் குடுமியை வெட்டி பூணூலை அறுத்துவிட்டால் நாட்டில் இருக்கும் எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும்."

"அப்படியாப்பா OC, BC, SC, ST என்று புதுப்பெயரிட்டு மனுதர்மத்தின் நால்வர்ணத்தை அப்படியே சட்டமாக்கி சலுகை வழங்குவது நவீன மனுதர்மமா? இல்லையா?"

"அது... வந்து.. பின்ன ஜாதி எப்டி ஒழியும்?"

"சாதிய ஏற்றத்தாழ்வுதானே ஒழியணும்.
சாதி ஏம்ப்பா ஒழியணும்?
சாதி அடையாளம் இல்லாமல் ஒருவன் தமிழனா என்று கண்டுபிடிக்க இப்போது வேறு  வழியில்லையே!
அதை ஒழித்தால் வேற்றினத்தார் அடையாளத்தை மறைத்து ஊடுருவ வசதியாகிவிடுமே!"

"நீ ஒரு சாதிவெறியன்!
பள்ளர்களை ஒழிக்க நினைக்கும் தேவர் சாதிக்காரன்"

"நான் தேவனே கிடையாது"

"நீ கிருஷ்ணசாமி அடிமை.
அவன் பார்ப்பனர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பேசுகிறான்"

"நான் கிருஷ்ணசாமி ஆதரவாளன் கிடையாது.
இந்த வெளியேற்றம் அவர் சிந்தனையும் கிடையாது.
பள்ளர்கள் பல மேடைகளில் பேசியதைத்தான் மிகத் தாமதமாக புரிந்துகொண்டு தற்போது அவர் பேசியுள்ளார்"

"நீ ஆதிக்க சாதிவெறியன்.
தமிழன் எல்லாருமே சாதி வெறியன்.
உலகத்திலேயே தமிழன் மட்டும்தான் சாதிவெறியன்.
1000 பெரியார் வந்தாலும் திருந்தமாட்டீர்கள்.
2 லட்சம் ஆண்டுகளாக அடிமையாக இருந்த ஆதி திராவிடரை மீண்டும் கீழே இறக்கும் முயற்சி இது"

"யாருடா திராவிடன்?
போடா வந்தேறி"

"நான் சுத்தத் தமிழன்லு!
தமிழு பேசுறவன்லு எல்லாரும் தமிழன்லு!

தமிழு வாழ்கலு!
தமிழ்பேசுமு மக்கள்லு வாழ்கலு!
பிரபாகரன்லு வாழ்கலு!
ஈழம் வாழ்கலு!
தந்தை பெரியாரு வாழ்கலு!

ஆனா தமிழ்நாட்டலு தமிழன் ஆளக்கூடாதுலு!
சீமான் நாம்டம்ளர்லு ஒழிகலு!
நீதான்லு ஆரிய அடிமைலு!
ஜாதி ஒழியணும்லு!
போங்கடா இன... சாரி.. சாதிவெறியன்லுகளே!"

"ஆமா, ஏன் இப்ப ஓ கால் கிடுகிடுகிடுனு ஆடுது?"

Saturday, 1 April 2017

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்

ஈ.வே.ராமசாமியும் சாதி ஒழிப்பும்
--------------------

வேலைக்கு சேர்க்கும் முன் சாதியைக் கேட்பார் ஈ.வே.ரா?

”1949-இல் அண்ணா ஆலோசனையின் பேரில் விடுதலையில் சேர மீரான்சாகிப் தெருவில் இருந்த விடுதலை அலுவலகத்தில் பெரியாரைச் சந்தித்தேன்.
அவர் கேட்ட முதல் கேள்வியே,
”நீ என்ன சாதி...?” என்று கேட்டார்.
( 'அண்ணாவின் வார்த்தை ஜாலம்'
-ஜே வி கண்ணன்
த சன்டே இந்தியன் 21.09.2010 )
--------------------

பட்டியல் சாதி மக்களையும் எதிரிகளாக எண்ணினார் ஈ.வே.ரா

"1.பார்ப்பனர்கள்
2.நம்மில் கீழ்த்தர மக்கள்
3.முஸ்லீம்கள்
4.கிறித்துவர்கள்
ஆக இன்று நமக்கு சமுதாய எதிரிகளாக இந்த நான்கு கூட்டங்கள் இருக்கின்றன"
_ ஈ.வே.ரா (தமது 85 வது பிறந்தநாள் விழா மலரில்)

இங்கே 'நம்மில்' 'நமக்கு' என்பது பிராமணல்லாத (ஆதிக்க) சாதிகள், 'கீழ்த்தர மக்கள்' என்பது பட்டியல் சாதிகள்.
-----------------

தனது இனமான தெலுங்கு நாயக்கர் சாதிக்கென வெளிப்படையாக குரல்கொடுத்துள்ளார் ஈ.வே.ரா

"ஜனத்தொகையும், பிரபலமும், செல்வாக்கும், அரசியலில் ஞானமும் ஊக்கமும் உடையவர்கள் ஆந்திர நாயக்கமார்கள்"

"கோயமுத்தூர் ஜில்லாவில் அசம்பளிக்கு உள்ள 8 ஸ்தானங்களிலும் ஒன்றுக்குக்கூட நாயக்கர்களில் யாரையும் நியமிக்காமல் காங்கிரஸ்காரர்கள் பட்டை நாமம் சாத்திவிட்டார்கள்"

" நாயக்கர்மார்கள் தலைஎழுத்து இவ்வளவுதானா என்று கேட்கின்றோம்.
அவனாசி கோயமுத்தூர் தாலூக்காக்களின் ஸ்தானத்தை ஏன் நாயக்கர்மார்களுக்கு விட்டுவிடக்கூடாது என்று கேட்கின்றோம்.
தோழர் வி.சி. பழனிச்சாமிக் கவுண்டர் அவர்களுக்கு ஜில்லாபோர்டு பிரசிடெண்டு ஒன்றுபோதாதா?"
_ ஈ.வே.ரா (குடியரசு 15.11.1936)
------------

புலையர் பெண்கள் ரவிக்கை போடுவதை தாங்கமுடியாத ஈ.வே.ரா

"புலைச்சியெல்லாம் ஐம்பர் போட ஆரம்பிச்சிட்டா அதனாலேதான் துணிவிலை உயர்ந்துவிட்டது"
_ ஈ.வே.ரா 1962 ஜனவரியில் மேடைப்பேச்சு
(இது 1962 முரசொலி பொங்கல் மலரில் கோட்டோவியமாக அதாவது கார்ட்டூனாக வந்தது)
----------------

தனது சாதித்திமிரால் பறையரை மிக மோசமாக வெறுத்தார் ஈ.வே.ரா

"பள்ளு பறையனுங்க படிக்க ஆரம்பிச்சிட்டானுக அதனாலதான் வேலை இல்லா திண்டாட்டம்"
_ ஈ.வே.ரா 1962 சனவரி  மேடைப்பேச்சு
(மேலது சான்று)

”தீண்டாமை விலக்கு என்பதும்
கோவில் பிரவேசம் என்பதும்
சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா?
பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால்,
அதற்காக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா?
இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள்.
ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது"
(நூல்: வைக்கம்போராட்ட வரலாறு
– வீரமணி)
------------------------

ஈ.வே.ரா தீண்டாமைக்கு எதிராக போராடியதில்லை

"தீண்டாமை விலக்கு விசயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால் அது எங்கள் நலத்திற்காகச் செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கென்று செய்ததாக மாட்டாது."
_ ஈ.வே.ரா (குடியரசு 16.6.1926.)

இதில் 'எங்கள்' என்பது பிராமணரல்லா ஆதிக்க சாதிகள்
'உங்கள்' என்பது தீண்டாமைக்கு ஆளாவோர்
-----------------------

ஆதி திராவிடர் அதாவது தமிழக பட்டியல் சாதியாருக்காக அவர் போராடியதில்லை

"ஆதி திராவிடர் நன்மை கருதிப் பேசப்படும் பேச்சுகளும் செய்யப்படும் முயற்சிகளும்,
'ஆதி திராவிடரல்லாத மக்களில்' 'பார்ப்பனரல்லாத எல்லோருடைய' நன்மைக்கும் என்பதாக உணருங்கள்"
(குடியரசு 11.10.1931)
-------------------
வைக்கம் போராட்டத்தில் ஈ.வே.ரா பங்கு கடுகளவு

ஈழவர், புலையர் இணைந்து டி.கே.மாதவன் தலைமையில் கேரளாவில் வைக்கம் கோயிலில் நுழைவதற்கான தடையைநீக்க முன்னெடுத்த போராட்டம் 30.03.1924 அன்று ஆரம்பித்தது.

17.11.1925 வரை ஒன்றரை ஆண்டு நடந்த வைக்கம் போராட்டத்தில்,
நடுவில் மூன்றுமாதம் கூட முழுமையாகக் கலந்துகொள்ளாத ஈ.வே ராவை 'வைக்கம் வீரர்' என்பது வேடிக்கையானது.

1925 ஏப்ரல்14 அன்று வைக்கம் சென்ற ஈ.வே.ரா இரண்டு வாரங்கள் அங்கே மேடையில் பேசினார்.
ஏப்ரல் 28ஆம் தேதி பேசிய பேச்சுக்காக ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.
ஒருமாதம் கழித்து விடுதலையாகி மறுநாள் ஜூன் 28ம் தேதியிலிருந்து மீண்டும் பத்து நாட்கள் பேசினார்.
கைதாகும் சூழ்நிலை வந்ததும் ஜூலை 5ல் வைக்கம் போராட்டக்களத்தை விட்டு காலி செய்தார்.
ஆயினும் இந்த வழக்கில், அவர் ஜூலை 28 கைது செய்யப்பட்டு, பின் செப்டம்பர்1ல் விடுதலை ஆனார்.
அதன்பிறகும் ஒரு ஆண்டு நடந்த அந்த போராட்டம் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை.

ஆக ஈ.வே.ரா வின் பங்கு வைக்கம் போராட்டத்தில்,
24 நாட்கள் பிரச்சாரமும்
இருமாத சிறையும் மட்டுமே.
(1927 வரை அவர் தன்னை 'ராமசாமி நாயக்கர்' என்றுதான் கூறிக்கொள்வார்)
-----------
கீழ்வெண்மணி படுகொலையாளிக்கு ஆதரவாக இருந்தார் ஈ.வே.ரா

கோபாலகிருஷ்ண நாயுடு என்ற பண்ணையார் அப்பகுதி பள்ளர், பறையர் மீது ஆதிக்கம் செலுத்திவந்தார்.
அதை அம்மக்கள் எதிர்த்ததன் விளைவாக பண்ணையாரின் அடியாட்கள்  44 பேரை (பெரும்பாலும் பள்ளர்) எரித்துக்கொன்றனர்.
கீழ்வெண்மணி படுகொலை ஒரு சாதியப் படுகொலை ஆகும்.

கம்யூனிஸ்ட் கட்சி கூலி உயர்வு கேட்க  தூண்டியதால் படுகொலை நடந்ததாக கூலித்தொழிலாளருக்கு ஆதரவாக இருந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது பழியைப் போட்டார் ஈ.வே.ரா.

"நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி.
அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர்"
_ஈ.வே.ரா (28.12.1968 அறிக்கை)

எந்த இடத்திலும் தன் இனமான தெலுங்கு வந்தேறி கோபால கிருஷ்ண நாயுடுவைக் குறிப்பிடவோ கண்டித்ததோ கிடையாது.
---------------------

இடவொதுக்கீடு ஈ.வே.ரா வின் கொள்கை கிடையாது.

இடவொதுக்கீடு சாதிவாரியாக வாய்ப்பு வழங்குவது.
ஈ.வே.ரா முதலிலிருந்தே போராடியது 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' அதாவது பிராமணர் ஒரு வகுப்பு பிராமணரல்லாதார் ஒரு வகுப்பு.
பிராமணர் 3% ஆக எல்லாவற்றிலும் 3% வாய்ப்புதான் வழங்கப்படவேண்டும்.

இதை இடவொதுக்கீட்டுடன் குழப்பி ஏதோ இடவொதுக்கீடே ஈ.வே.ரா போராடியதால் கிடைத்ததாகக் கூறுகின்றனர்.

இடவொதுக்கீடு அம்பேத்கர் ஆங்கிலேயருக்கு ஆதரவாக இருந்து அதன் பலனாக 1943லேயே மக்களுக்குப் பெற்றுத்தந்துவிட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர்களது வேலைக்காக படிப்புக்காக எந்த போராட்டமும் செய்யாத ஈ.வே.ரா.
"குழாய் தனித் தனியாக போட்டுவிட்டீர்கள் தொட்டியில் தண்ணீரே இல்லையே" என்று நக்கல் செய்த ஈ.வே.ரா.

1950ல் பிராமணர்கள் வழக்கு தொடுத்து சாதிவாரி இட ஒதுக்கீடு நீக்கம் செய்யப்பட்டபோது தெருவுக்கு வந்து போராடினார்.
அதாவது பிராமண வெறுப்பினால்.
ஈ.வே.ரா 'வகுப்புரிமை நாள்' என்றுதான் அறிவித்து போராடினார்.
பலரும் போராடினர்.

அவர் செய்த ஒரே ஒரு போராட்டத்தால் இடவொதுக்கீடு கிடைக்கவில்லை என்பது உறுதி.
------------

பலரும் ஈ.வே.ரா சாதி ஒழிப்பு போராளி என்று கூறுகிறார்கள்.
உண்மையில் அவர் பார்ப்பனரை கீழே இறக்கி ஆதிக்க சாதிகள் (அதிலும் வந்தேறிகள்) முதலிடம் பெற போராடிய சாதிவெறியரே ஆவார்.

அவர் எதிர்த்தது பார்ப்பனரையே பிராமணரை இல்லை.

  “உங்களுக்கு உறுதியாக இறுதியாக ஒன்றைக் கூறுகிறேன்.
மறந்தும் உங்கள் வாயில் பிராமணன் என்று வரக் கூடாது.
பார்ப்பான் என்று கூறுங்கள்.
கண்டிப்பாக பிராமணன் என்று கூறக் கூடாது.
கண்ணீர்த் துளிகள் (தி.மு.க.) பிராமணன் என்பதைத் தவிர வேறு வார்த்தையை உபயோகிக்க மாட்டார்கள்”
(விடுதலை 30.06.1957)

பார்ப்பனர் என்பார் தமிழ் பேசும் பூசாரகர் சாதியார் ஆவர்.

ஆக அவரது ஒட்டுமொத்த போராட்டமும் தமிழர்களை எதிர்த்தே அமைந்திருந்தது.

Monday, 15 August 2016

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

இடவொதுக்கீடு ஈ.வே.ரா பெற்றுத்தந்ததா?

1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.
ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை.
அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.
ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.
ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதிவாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.
அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.
அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.
இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்)

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.
சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.
அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசுவேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.
தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம்பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.
பிராமணர்கள் வெற்றிபெற்றதும் அது பொறுக்கமுடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப்பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசிவரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசிவரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசிநேரத்தில் புகுந்து முழு போராட்டவரலாறையும் ஆட்டையைப்போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.
_______________________

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.
(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)
இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டுவருகிறது.
அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்றுவிட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia
______________________

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில்தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.
1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர்.
குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.
தமிழர்கள் பதவிபெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.
அதனால்தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக்கூடாது' என்று கூறியது.
திராவிடம் கடைசிவரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

  வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்துகிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.
திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது.

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.
திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது.
அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.
அதன் ஒரு காட்சிதான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்.